செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

woody allen காதலின் முன்னோடி 


இன்று 83 வயதான வூடி ஆலன் இயக்கிய cafe society படம் பார்த்த பின் எப்படி இவர் இந்த வயதிலும் காதலின் ஆழத்தை இவளவு நேர்த்தியாக காட்டுகிறார் என தோன்றியது .




நான் முதலில் அந்த திரைப்படத்தை பற்றி மட்டும் தான் எழுத வேண்டும் என நினைத்தேன் .ஆனால் நம்மில் பலர் ஏன் சினிமாவில் இருக்கும் நண்பர்கள் சினிமாவிற்கு செல்ல துடிப்பவர்கள் உலக சினிமா ரசிகர்கள் இவர்கள் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கும் இயக்குனர்களில் முதன்மையாக ஸ்பீல்பெர்க் மற்றும் நோலன் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து வேறு இயக்குனர்கள் சொல்ல சொன்னால் ஓரளவு ஸ்கார்சசி, குப்பிரிக் போன்றாரை சொல்லலாம் சரி கிளாசிக் டைரக்டர் யாரவது சொல்லுங்கள் என்றால் உடனே ஹிச்காக் மற்றும் குரசோவாவை சொல்வார்கள் 


  வூடி ஆலன் என்றால் யார் என்றோ அவரின் படங்கள் பற்றியோ தெரிந்து வைத்து இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .


ஆனால் வூடி அலனை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தலைப்பில் சொன்னது போல் அவர் காதலின் முன்னோடி காதல் படங்களை தொடங்கி வைத்தது அவர் தான் .
வூடி அலனின் தாக்கம் தான் மணி ரத்ணம் ,கவுதம் மேனன் ,மற்றும் செல்வ ராகவன் எல்லாம் .


எப்படி ஒரு திரில்லர் படம் எடுக்க போவதற்கு முன் ஹிச்காக் படங்கள் பாருங்கள் என சொல்வார்களோ அதே போல் ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு வூடி அலனின் படங்கள் கண்டிப்பாக பார்த்து இருக்க வேண்டும் .சரி வூடி ஆலன் அப்படி என்ன செய்தார் அவரின் படங்களில் வரும் காதல் எப்படி திரைத்துறையில் மாற்றத்தை கொண்டு வந்தது என பார்க்கலாம் .அதற்கு முன் இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவின் காதல் எப்படி கொண்டு செல்லப்பட்டது படுகிறது என பார்ப்போம் 


சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஹாலிவுட் ஆக இருந்தாலும் சரி கோலிவுட் ஆக இருந்தாலும் சரி இல்லை பாலிவுட் ஆக இருந்தாலும் சரி எந்த விதமான மொழியாக இருந்தாலும் சரி அந்த படங்களில் எல்லாம் காதல் காட்சிகளை காட்டும் போது ஒன்று பட்டும் படமால் காட்டுவார்கள் .இல்லை அதிக எமோஷனலாக காட்டுவார்கள் .அதாவது அன்பே ஆருயிரே கண்ணே கணியமுதே இப்படி கவிதையாக காதலித்து விட்டு பிரியும் போது இரண்டு காதலர்களும் லிட்டர் கணக்கில் அழுது கண்ணீர் வடிப்பது போல் காட்டுவார்கள் .


இது தான் வூடி ஆலன் வருகைக்கு முன் இருந்த காதல் .ஆனால் எதார்த்த வாழ்க்கையில் காதல் என்பது அதிக உணர்வு பூர்வமுடையதாக இருந்தாலும் காதலர்கள் அதை எளிதில் வெளிப்படுத்திவிடுவதில்லை மேலும் பிரியும் போது தனிமையில் தான் அழுவார்களே தவிர நேருக்கு நேர் இந்த ஜென்மத்துல நம்மளால சேர் முடியில அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா சேருவோம் .இப்படி எல்லாம் எல்லா காதலர்களும் சொல்லி கொண்டு இருப்பதில்லை .


அதே போல்  இந்திய  சினிமாவில் வரும் காதலில் எப்போதுமே ஆணின் பார்வையில் இருந்தே கொண்டு செல்வது வழக்கம் .பெண் மனதில் இருப்பதையோ இல்லை பெண்ணுக்குரிய நடைமுறை சிக்கல்களையோ யாரும் காட்டுவதில்லை .

எல்லா தமிழ் சினிமாவிலும் வேலை இல்லாத இளைஞன் காதலிப்பதை மட்டுமே வேலையாக வைத்து கொண்டு இறுதியில் அந்த பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்து குடித்து விட்டு பிப் பாடலாகவும் கொலைவெறி பாடலஆக டாஸ்மார்க்கில் உக்காந்த்து பாடி அந்த பெண்ணை எளிதில் கேவலப்படுத்தி விட்டு இவன் நல்லவனாக விடுவான் .


எனக்கு தெரிந்து என்ன தான் நாம் இன்று விக்ரமன் படங்களை கேலி செய்தாலும் விக்ரமன் பட நாயகர்களாவது தன் காதலிக்காக உழைக்கிறார்கள் வேலை தேடுகிறார்கள் முன்னேறுகிறார்கள் .


சரி காதலில் பெண்ணுக்கு உரிய உணர்வுகளை எப்போதுமே காட்டப்படுவதில்லை . எவ்வளவு சிறப்பு மிக்க குணங்களை கொண்டு இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி இல்லை சாதாராண பெண்ணாக இருந்தாலும் சரி அவளுக்கு என்று காதலை பற்றிய பார்வை காமத்தை பற்றிய பார்வை சமுதாயத்தை பற்றிய பார்வை என எல்லாமே மாறுபடும் .




காதலிக்கும் போது பெண் தான் உண்மையிலே அதிக சிக்கல்களை சந்திப்பவள் .அது எந்த காலமாக இருந்தாலும் சரி புறா மூலம் கடிதம் பெற்ற காலமாக சரி இல்லை ஜியோ சிம் மூலம் இலவச கால் அட்டென்ட் பண்ணும் போதும் சரி அதை முதலில் அட்டென்ட் பண்ணுவதற்கே அவர்கள் ஒரு பெரிய போராட்டம் போராட வேண்டும் ஆனால் நம் சினிமாவிலோ பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு காதலர்களிடம்   மாறி மாறி பேசுவது போல் காட்டத்தான் மட்டும் தான் காட்டுகிறார்கள்.


உடனே சிலர் சொல்லாம் அப்படி தானே சில பெண்கள் இருக்கின்றனர் என .அப்படி சொல்லும் நாம் பல ஆண்கள் அப்படி இருப்பதை திரையில் காட்டுவதிலில்லை திரையில் ஆண்களை மிகவும் நல்லவர்களாக காட்டுவது தான் உள்ளது .காதல் தோல்விக்கு முழு காரணமும் பெண்ணையும் பெண்ணின் பெற்றோர்கள் மீது எளிதில் சுமத்தி விட்டு நாயகன் எளிதில் என்னமா இப்படி பண்றிங்களேம்மா என பாடி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்று விடுகிறான் .


இதே தான் எல்லா மொழியிலும் என்ன பாடல் மட்டும் தான் மாறுமே தவிர இடம் குடிக்கும் இடமாக தான் இருக்கும் .


சரி பெற்றோர் எதிர்ப்பை தவிர்த்து விட்டு ஒரு பெண்ணின் மனநிலை இல்லை ஆணின் மனநிலையே எடுத்து கொள்வோம் யாராக இருந்தாலும் சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு விட்டோமோ என தோன்றுவது எதார்த்த வாழ்வில் ஆண் பெண் இருபாலார்க்குமே தோன்றும் ஆனால் அவர்கள் அதை சொல்ல சிரமப்பட நாம் திரையில் காட்டப்பட்டு இருக்கும் காதல் கதைகளும் கதாபாத்திரங்களும் கூட ஒரு காரணமாகும் .

உண்மை காதல் ,காதலில் புனிதம் ,கலாச்சாரம் இப்படி தான் நம் சினிமாக்களில் சொல்லி கொண்டு வருகிறோம் எங்க காதலில் எதற்கு கலாச்சரமும் புனிதமும் வருகிறது காதலில் மன உணர்வுகளுக்கு மட்டும் தான் இடம் அளிக்க வேண்டும் அதை நாம் எந்த படத்திலும் காட்டுவது இல்லை அதை முதன் முதலில் மணி ரத்தினம் மவுன ராகத்தில் காட்டியதால் தான் கொண்டாடப்படுகிறார் .


சரி வூடி ஆலனுக்கு வருவோம்


ஹாலிவுட்டிலும் இது போன்று புனிதம் உண்மை என பேசி கொண்டு இருந்த காலத்தில் தான் வூடி ஆலன் தன் படங்களில் காதலுக்குரிய எதார்த்த முகத்தை திரையில் காட்டினார் . எதார்த்த வாழ்வில் பெண் காதல்  உணர்வுகளை திரையில் காட்டினார் .

உண்மையில் பெண் முரட்டு தனமாகவும் சுதந்திரமாகவும் ஒரு அழகான திமிருடன்  இருப்பது தன் காதலனிடம் மட்டும் தான் அதை தான் வூடி ஆலன் 1977ல் வெளிவந்த annie hall படத்தில் காட்டினார் .




அந்த படத்தில் அப்படியொரு கதாபாத்திரமாக தான் ஆனி இருப்பாள் .அதுவரை வந்த ஹாலிவுட் காதலிகளில் இருந்து அவள் மாறுபட்டும் மேலும் எதார்த்த வாழ்வில் இருக்கும் அவரவர் காதலிகளை பிரதிபலிப்பதாலும் ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி தீர்த்தனர் .


மேலும் அந்த படத்தில் தான் வூடி ஆலன் காதல் ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் என  காட்டி இருப்பார் .இன்று அவ்வாறு காட்டுவது எளிது (இப்பொழுதும் தென்னக சினிமாக்களில் கஷ்டமே )

4த் வால்  பிரேக் எனப்படும் புதிய யுக்தியை அணி ஹாலில் வூடி அலன் புகுத்தி இருப்பார் அதாவது படம் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகனிடிம் நேரடியாக திடீர் திடீர் என்று பேசி விடுவார் .


மேலும் அனி ஹால் காதலர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மற்ற உளவியல் சிக்கல்களை அருமையாக விவரித்த படமாகும் .


இன்றும்  சில உளவியல் கல்லூரிகளில் சைக்கோ ,சைலன்ஸ் அப் தி லெம்பஸ் ,குட் வில் ஹாண்டிங் இந்த படங்களுடன் அதிகமாக திரையிட்டு உளவியல் சிக்கல்களை பற்றி விவாதிக்கும் படமாக annie hall உள்ளது .இந்த படம் சிறந்த படம் ,சிறந்த நடிகை என இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் சிறந்த திரைக்கதை சிறந்த இயக்குனர் என இரண்டு விருதுகளை வூடி ஆலன் பெற்றார் .(30 வருடங்கள் கழித்து அணி ஹாலை பாலாஜி மோகன் காதலில் சொதப்புவது எப்படி என பிரதி எடுத்து இருக்கிறார் )


வூடி ஆலன் அதிகமாக காதல் படங்களை தான் எடுத்தார் .காதலில் இருக்கும் நெருக்கம் பிரிவு ,தோரகம் ,வருத்தம் ,உளவியல் சிக்கல்கள் என எல்லாமே அவர் படங்களில் அருமையாக காட்டப்பட்டு இருக்கும் .

மேலும் முக்கோண காதல் ,அதிக வயது குறைந்த வயது காதல் ,சொல்லா காதல்,சேரா காதல் ,காதலில் பேண்டஸி என காதலில் எல்லா வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தவர் வூடி ஆலன் தான் .


இன்று செல்வ ராகவன் படத்திலும் கவுதம் மேனன் படத்திலும் வரும் காதல் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறதே என கொண்டாடுகிறோமே அது எல்லாமே வூடி அலன் தாக்கமே .


ஆம் வூடி அலனின் படத்தில் வசனங்கள் எல்லாம் நேருக்கு நேர் கேட்டு விடுவது போல் இருக்கும்  எனக்கு பிடித்து இருக்கிறது உனக்கு பிடித்து இருக்கிறதா என உடனடியாக கேட்டு விடுவார்கள் .பிடிக்கவில்லை என்றாலும் உடனே சொல்லி விடுவார்கள் .

உதாரணத்திற்கு cafe society படத்தையே எடுத்து கொண்டால் அதில் நாயகன் நாயகியிடம் காதலை சொல்லும் போது அவள் எனக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறான் என்பாள் .



நாயகன் ஓகே என்று சாதாரணமாக தான் மீண்டும் இருப்பான் அதே போல் சிறிது நாள் கழித்து அதே நாயகி என் காதலன் என்னை பிரேக் அப் செய்து விட்டான் என சொன்ன அடுத்த வினாடியே நாயகன் கேப்பான் அப்படி என்றால் நாம் இருவரும் காதலிப்போம் என்று .இது தான் எதார்த்தம் எதார்த்தத்தில் உலகில் எந்த மூலையில் இருக்கும் ஆணுக்கும் அந்த சூழ்நிலையில் அப்படி தான் நினைக்க தோணும் ஆனால் நம் படங்களில் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் என்ன சொல்வான் கவலைப்படாதீங்க உங்க காதலை நான் சேர்த்து வைக்கிறேன் என்பான் .


cafe society யில் இன்னொரு இடத்தில் நாயகி மீண்டும் தான் முதல் காதலனோடு  திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்னால் அவனை மறக்க முடியவில்லை என சொல்லும் போது நாயகன் சரி போ என அவளை திட்டமால் அவன் வேலையை பார்க்க அவன் சென்று விடுவான் .

இதுவே நம் சினிமாவாக இருந்தால் ஏன் ஹாலிவுட்டிலே வேற இயக்குனர் இயக்கிய சினிமாவாக இருந்தாலும் கூட அடுத்த வினாடியே அந்த பெண்ணை அசிங்கமாக திட்டும் வசனம் ஒன்று வைக்கப்பட்டு இருக்கும் ஆனால் வூடி ஆலன் அப்படி செய்வதில்லை .


அதையே தான் இங்கு கவுதம் மேனன் பின்பற்றுகிறார் கவுதம் மேனன் நாயகர்களும் காதலி பிரிந்து விடலாம் என்று சொன்னால் அவளை பிடித்து திட்டுவதில்லை  அசிங்க அசிங்கமாக பாடுவதில்லை (மின்னலே தவிர்த்து )

 இதனால் தான் கவுதம் மேனின் காதல் டீசண்ட் காதல் எனவும் நாயகர்கள் டீசண்ட் காதலர்கள் எனவும் போற்றப்படுகிறார்கள் .பெண்கள் இதனால் தான் கவுதம் மேனன் காதல் படங்களை அதிகம் ரசிக்கிறார்கள் .அதே போல் வூடி அலனின் ஹீரோக்கள் அனைவரும் வூடி அலனை பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள் அதே போல் தான் கவுதம் மேனன் நாயகர்களும் அது உலக நாயகன் கமல் ஆகட்டும் இல்லை அல்டிமேட் அஜித் ஆகட்டும் இளைய நாயகர்கள் சிம்பு தனுஷ் ஆகட்டும் எல்லாரும் கவுதம் மேனன்  மேனரிசத்தோடு தான் இருப்பார்கள்

சரி பெண்களை திட்டுவதை தொடங்கி வைத்த செல்வராகவனிடம் வூடி ஆலன் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினார் என்றால் எதார்த்த வசனங்கள் மற்றும் வூடி ஆலன் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களை தான் செல்வா அப்படியே இங்கு கொண்டு வந்துள்ளார் .வூடி ஆலன் படத்தில் வருவது போலெ சிரிக்காத கதாநாயகிகள் திமிர் மற்றும் முரட்டு தன்மை இவை எல்லாமே செல்வ ராகவன் படத்தில் வெளிப்படும் .

முன்பே சொன்னது போல் உடனே பட் என போட்டு உடைக்கும் வசனங்கள் அதாவது ஒரு முக்கோண காதல் கதை என இருக்கும் போது அதை ஜவ்வாக இழுக்கமால் உடனே என்னை பிடிக்குமா இல்லை அவனை பிடிக்குமா என வெளிப்படையாக கேட்டு விட்டு அதன் பின் வரும் பிரச்னைகளை எதிர்கொள்வது .


மேலும் இன்று தனுஷ் என்று ஒரு நடிகர் நம்மிடம் இருக்கிறார் என்றால் அதற்கு வூடி அலன் தான் முன் உதாரணம் என சொல்லாம் .


ஆம் வூடி அலன்  ஆரம்ப கால படங்களில் அவர் தான் நாயகர் . வூடி ஆலன் உருவமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால்  குட்டை  கண்ணாடி அணிந்து இருப்பார் மெலிந்த தேகம் அவர் நாயகன் என முதன் முதலில் சொன்ன போது ஹாலிவுட்டில் எல்லாரும் அவரை  கேலி தான் செய்தார்கள் .கிளின்ட ஈஸ்ட்வுட் போன்ற மச்சோ மேன்களும் ,ராபர்ட் ரெட்போர்ட் போன்ற ஹாண்ட்ஸேம் மேன்களும் ஹீரோக்களாக இருக்கும் இடத்தில் இந்த உருவத்தோடு ஒரு நடிகரா என்றும் இல்லை அல்பசினோ போன்றோ டஸ்டின் ஹாப்மென் போன்று சிறந்த நடிகர்கள் இருக்கும் இடத்தில் இவரா என எல்லாரும் கிண்டல் செய்தனர்








மேலும் டயனா கீட்டோன்( காட்பாதர் படத்தில் நடித்து புகழ் பெற்று இருந்தவர் )

 அந்த கால ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்தவர் அவரோடு இப்படி ஒரு ஜோடியா என ரசிகர்கள் எல்லாம் வருத்தப்பட செய்தனர் ஆனால் பல கேலி பேச்சுக்களையும் கிண்டல்களையும் தன் திரைக்கதையால் மறக்க வைத்து இந்த படத்திற்கு இவர் தான் சரியானவர் என பாராட்ட வைத்தவர் .

யோசித்து பாருங்கள் இதே நிலையை தான் ஆரம்ப காலத்தில் தனுஷ்ம் எதிர்கொண்டார் .அன்று செல்வ ராகவன் தனுசை அறிமுகப்படுத்தும் போது வூடி ஆலநை நினைத்து தான் அதே போலெ தன் இரண்டாம் படத்தில் கண்ணாடியோடு நடிக்க வைத்து இருப்பார் .

(இது போன்ற நிலையை வூடி ஆலன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்பொழுது அதே நிலையை cafe society படத்தில் சந்தித்தார் அதாவது வூடி அலன் படத்தில் நடிகைகள் எப்பொழுதும் சிறந்த நடிகைகளாக இருப்பர் இந்த முறை அவர் நாயகியாக தேர்வு செய்தது ஹாலிவுட்டில் சுத்தமாக நடிக்கவே தெரியாத நடிகை என பெயர் எடுத்து நடிகை கிறிஸ்டின் ஸ்டூவர்ட் இவரை ஏன் வூடி ஆலன் தேர்வு செய்தார் என பல விமர்சகர்களும் கேள்வி எழுப்பினார் .ஆனால் வூடி ஆலன் ஸ்டூவர்ட்க்கு வைக்கப்பட்ட எதிர்மறை குணத்தையே அதாவது எப்பொழுதும் ஒரே மாதிரி வைத்து இருக்கும் முகபாவம் அதையே நேர்மறையாக மாற்றி காட்டினார் )


மேலும் வூடி ஆலன் மணி ரத்னமிடம் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று கேட்டால் நேட்டிவிட்டி அதாவது வூடி ஆலன் மிட் நைட் இன் பாரிஸ் படத்தை தவிர எல்லா படங்களையும் நியுயார்க்கிலே எடுத்து முடித்து இருப்பார் .வேறு நாட்டிற்கு இல்லை வேறு நகரத்திற்கு கூட செல்ல மாட்டார் .இதை தான் நம் மணிரத்தணும் செய்கிறார் .முன்பே சொன்னது போல் உளவியல் சிக்கல்கள் இதுவும் வூடி அலனிடிம் இருந்து வந்தது தான் .


சரி ஏன் வூடி ஆலன் ஸ்பீல்பெர்க் ,நோலன் போன்று  ஹாலிவுட் தவிர்த்து அதிகம் அறியப்படவில்லை என்றால் வூடி ஆலன் படங்கள் மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை அதிகமாக வசனங்கள் கொண்டவை .இதனாலே எவ்வளவு பெரிய உலக சினிமா ரசிகனாக இருந்தாலும் 15 நிமிடத்தில் இன்செப்ஷநோக்கோ இல்லை ட்ரான்ஸஸ்பார்மர்ஸ்க்கு கூட போயி விடுகிறான் .


ஆனால் என்னை பொறுத்தவரையில் இயக்குனராக நினைக்கும் அனைவரும் வூடி ஆலன் படங்கள் குறைந்தது மூன்று படங்களாவது பார்த்து இருக்க வேண்டும் .


வேணாம் நான் எடுக்க போறது மாஸ் மூவி இல்லை விஜய் அஜித் சூர்யா இவர்களை வைத்து தான் எடுக்க போகிறேன் என சொல்பவர்களும் சிவ கார்த்திகேயன் ,ஆர்யா வைத்து காமெடி படம் எடுக்க போகிறேன் என சொன்னாலும் சரி


தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவை பொறுத்தவரையில் நாம்  துளி கூட காதலே இல்லாமால் சேஷங் ரிடெம்ப்டேஷன் போன்ற படத்தை  எடுத்து விட முடியாது (காக்கா முட்டை மட்டும் விதிவிலக்கு )

எனவே யார் படமாக இருந்தாலும் எந்த ஜெனர் ( எல்லாமே இங்கு மாஸ் ஜெனர் தான் ) ஆக இருந்தாலும் சரி  60 வயது ரஜினி கமலை வைத்து எடுத்தாலும் சரி 40 வயது அஜித் ,விஜய் வைத்து எடுத்தாலும் சரி இல்லை 20 வயது கவுதம் கார்த்தி ,அதர்வாவை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் சரி

காதல் காட்சிகள் உங்கள் படத்தில்  வைத்தே ஆக வேண்டும் அப்படி வைக்கும் போது உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் சரி இல்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக வூடி ஆலன் படம் பாருங்கள் விண்ணை தாண்டி வருவாயா அலைபாயுதே காதல் சொல்லும் இடம் வித்தியசமாக பட்டது பிடித்து இருந்தது அது போல் ஒரு காட்சி வைக்க வேணும் என்றால் வூடி அலன் படங்கள் பாருங்கள் .


காதல் பிரேக் அப் பண்ண ஒரு வித்தியாசமான காட்சி வேண்டும் என்றாலும் வூடி அலன படங்கள் பாருங்கள் .இல்லை எனக்கு நாயகி கதாபாத்திரம் மவுன ராகம் ரேவதி போன்றோ இல்லை மயக்கம் என்ன ரிச்சா போன்றோ நல்ல வலுவான கதாபாத்திரமாக அமைக்க வேண்டுமா அதற்கும் வூடி ஆலன் படங்கள் பாருங்கள் .

கொஞ்சம் பொறுமையோடு சகித்து கொண்டு வூடி ஆலன் படங்களில் இருந்து காதலை கற்று கொள்ளுங்கள் அப்பொழுது தான் உங்கள் படம் மணி ரத்தினம் ,கவுதம் மேனன் ,செல்வ ராகவன் போன்றோர் படங்கள் போல் காதல் நன்றாக இருக்கும் .

இல்லை எனக்கு  சந்தானமோ சூரியோ சதீசோ போதும் அவர்களை நாயகர்களோடு இணைத்து விட்டு அவர்களை கோமாளியாகவோ   நாயகனை நல்லவனாக காட்டினால் போதும் அவன் வேலை இல்லாதவனாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி சிவப்பாக இருந்தாலும் சரி குட்டையாக இருந்தாலும் சரி கண்ணாடியை கழட்டினாள் முகம் பார்க்க சகிக்கத்தவனாக இருந்தாலும் சரி அவனை தான் நாயகி காதலிக்க வேண்டும் என எளிதில் திரைக்கதை எழுதுபவர்களுக்கு வூடி ஆலன் தேவை இல்லை .ஒரு அழகான நாயகி ,சூரி கால்ஷீட் ,இமான் இல்லை சந்தோஷ் நாரயணன் ,அனிருத் இடம் இருந்து அருமையாக ஒரு 5 பாடல்கள் பழைய திலீப் படங்களில் இருந்து சில நகைச்சுவை காட்சிகள் இதே போதுமானது மிகவும் எளிதானது அருமையாய் ஓட கூடியது


முடிவாக காதலர் தினமான இன்றைய நாளில் நம் தமிழ் நாட்டில் கலாச்சாரம் பண்பாடு சாதி மதம் என்று காதல் என்பதையே ஒரு பேண்டஸி பொருளாக மாற்றி விட்டார்கள் .

இன்றைய காலகட்டத்தில் காதல் தோல்வியோடு வாழ்பவனை  விட காதல் என்பதையே தெரியமால் காதலே இல்லமால் வாழ்பவர்கள் தான் அதிகம் எனவே சினிமா எடுக்க போகும் நண்பர்கள் 80 சதவீதம் பேருக்கு சொந்த வாழ்வில் காதல் இருக்க போவதில்லை அப்படியே இருந்தாலும் அது ருசியான ஒன்றாக இருந்து இருக்க போவதில்லை எனவே வூடி ஆலனிடம் இருந்து காதலை கற்று கொண்டு அதை நம் சினிமாவிலோ திரைக்கதையிலோ புகுத்தி விட்டு இன்று பல இயக்குனர்கள் சொல்வது போல் இது என் ரியல் லைப் லவ் இன்ஸ்பிரசன் என்று பொய் சொல்லி கொள்ளுங்கள் ஒன்னும் பிரச்னை இல்லை .


ஆதலால் வூடி ஆலன் படங்கள் மூலம் காதலை கற்று கொள்ளுங்கள் அழகான காதல் படமாக எடுங்கள்


சனி, 11 பிப்ரவரி, 2017

it's a wonderful life(1946) ( ஹாலிவுட் ) வாழ்வை வெறுக்காதீர்கள் 






மனிதனாக பிறந்த எல்லாரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏதோ ஒரு தோல்வியோ ஏமாற்றோமோ அவனை தற்கொலைக்கு தூண்டுவது உண்டு எல்லாரும் தற்கொலை முயற்சி செய்யாவிட்டாலும் அந்த எண்ணத்தை மனதிலாவது நினைத்து பார்த்து இருப்பார்கள் .

என்னடா வாழ்க்கை இது இப்படி தோற்கிறமே நமக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது நம் பிறந்து என்ன பயன் இருந்து என்ன பயன் வாழ்ந்து என்ன பயன் நம் இருப்பதால் யாருக்கு என்ன லாபம் நாம இல்லாமலே போயிடுவோம் என்று ஒரு எதிர்மறை எண்ணம் நம்மில் பல பேருக்கு தோன்றுவது உன்டு அப்படி தோன்றாதவார்கள் அதிர்ஷ்டசாலிகள் .


சரி அப்படி பட்ட எண்ணம்  உங்களில் யாருக்குமெனில் இருந்தால் இல்லை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இப்படி எண்ணம் வைத்து இருந்தால் உடனே இந்த படத்தை காட்டுங்கள் .

சரி இட்ஸ் வொண்டர்புல் லைப்பின் கதையை பற்றி பார்ப்போம்

கதை 


1945ல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் உலகெமெ கிறிஸ்துமஸை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராக உள்ள நிலையில் அமெரிக்காவின் பெட் போர்ட் பால்ஸ் எனும் சிறிய நகரத்தில் உள்ள மக்கள் மட்டும் எல்லாரும் ஜார்ஜை காப்பாற்றுங்கள் ஜார்ஜை காப்பாற்றுங்கள் அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் அவன் எதுவும் செய்து கொள்ளாமல் அவனை காப்பாற்றுங்கள் என்று வருத்தத்தோடு கடவுளிடிம் பிரார்த்தனை செய்ய 

கடவுளும் ஜார்ஜை காப்பாற்ற  கிளாரன்ஸ் எனும் தேவ தூதனை அழைக்கிறார் .கிளாரன்ஸ் ஜார்ஜை காப்பற்றினால் தேவதை போல் இறக்கைகள் கிடைக்கும் என்பதால் உடனே செல்ல முற்பட அவரை தடுத்து கடவுள் கிளாரன்ஸ்க்கு ஜார்ஜ் பெயிலியின் வாழ்க்கையை விவரிக்க அதன் மூலம் நமக்கு ஜார்ஜின் வாழ்க்கை காட்சி படுத்த படுகிறது .

12 வயதில் சிறுவனாக நாயகன் ஜார்ஜ் பெயிலி இருக்கும் போது நண்பர்களோடும் தன் தம்பி ஹாரி பெயிலியோடும் பனி சறுக்கில் விளையாடும் போது எதிர்பாராவிதமாக பனி உடைந்து அதில் தம்பி ஹாரி விழுந்து உயிருக்கு போராட  ஜார்ஜ் அந்த பனிக்குளத்தில் குதித்து தன் தம்பியை காப்பாற்றுகிறான் .ஆனால் நீண்ட நேரம் பனிக்குளத்தில் இருந்ததால் ஜார்ஜின் ஒரு பக்க காது முழுதுமாக பழுது அடைந்து விட ஜார்ஜால் ஒரு காதால் மட்டும் கேட்கும் நிலை ஏற்படுகிறது .


அதன் பின் சிறுவன் ஜார்ஜ் பெயிலி பகுதி நேர ஊழியனாக ஒரு மருந்து கடையில் வேலை பார்க்கிறான் .ஒரு நாள் அந்த கடையின் முதலாளியின் மகன் போரில் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டு அவர் மனமுடைந்து இருக்கிறார் இந்த நிலையில் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் ஒரு மருந்து அவசரமாக கொண்டு வர சொல்கிறார் வருத்தத்தில் இருந்த அவர் மருந்திற்கு பதிலாக அவர் வைத்து இருந்த விஷத்தை மாற்றி பேக் பண்ண அதை ஜார்ஜ் பார்த்து சொல்ல அப்பொழுது அவர் அதை கேட்கும் நிலையில் இல்லை .

ஆனால் ஜார்ஜ் அந்த மருந்தை வீட்டிற்கு கொடுக்க செல்லமாலே அந்த மருந்தை வைத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல்  தெருவில்  சுற்றி விட்டு வர அவனின் முதலாளி ஏன் இன்னும் மருந்தை கொடுக்க வில்லை என்று அவனை அடிக்க அப்போது ஜார்ஜ் அழுது கொண்டே உண்மையை சொல்ல தன்னையும் மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றியது எண்ணி சந்தோஷமடைகிறார் .


பின் இருபது வருடங்களுக்கு பின் இளைஞன் ஆன ஜார்ஜ் பெயிலி கல்லூரி மேற்படிப்புக்கு செல்ல ஆயுத்தமாகின்றான் .இந்த நிலையில் வெளியூர் படிக்க செல்லும் முன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறான் அங்கு தன் சிறு வயது தோழியான மேரியை சந்திக்கிறான் அவள் மீது காதல் கொள்கின்றான் .

இந்நிலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன் ஜார்ஜ்ஜின் தந்தை  எதிர்பாராத முறையில் இறந்து விட வேறு வழி இல்லாமல் ஜார்ஜ் தன் தந்தை பார்த்த வியாபாரத்தை எடுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .பின் ஜார்ஜ்க்கு பதில் ஜார்ஜின் தம்பி கல்லூரி மேற்படிப்பு செல்கிறான் .

ஜார்ஜ் உள்ளுரிலே தந்தை கம்பெனியை பார்த்து கொள்ள அந்த கம்பெனிக்கு எப்போதும் அந்த ஊரிலே இருக்கும் பெரிய செல்வந்தரான பாட்டர் என்பவர் எப்போதுமே ஜார்ஜிற்கு வியாபாரத்தில் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறார் .

பின் கல்லூரி படிப்பை தம்பி முடித்து வந்த உடன் சிறிது காலம் தம்பியிடம் வியாபாரத்தை கொடுத்து விட்டு சிறிது காலம் நாமும் மேற்படிப்பு படிக்கலாம் என ஜார்ஜ் நினைக்க படிப்பை முடித்து விட்டு வரும் ஜார்ஜின் தம்பி திருமணம் செய்து கொண்டு வருகிறான் .மேலும் அவன் எனக்கு சொந்த தொழில் பார்க்க விருப்பம் இல்லை மனைவியோடு நகரத்திலே இருக்க போகிறேன் என சொல்ல ஜார்ஜெ மீண்டும் வியாபாரத்தை பார்க்கும் நிலை ஏற்படுகிறது .


இதற்கு இடையே ஜார்ஜ் தன் காதலி மேரியை திருமணம் செய்து கொள்கிறான் .திருமணம் செய்த பின் ஜார்ஜ் அவனுக்கு என்று வைத்து இருந்த பணத்தை கொண்டு ஒரு சிறிய வீட்டிற்கு மேரியோடு வசிக்க நினைத்த ஜார்ஜ்ஜிற்கு பாட்டரின் தூண்டுதலால் ஜார்ஜ் தொழிலார்கள் அனைவரும் ஊதிய உயர்வு கேட்க ஜார்ஜ் தான் தனியாக குடி போகவும் புது வீடு வாங்கவும் வைத்து இருந்த பணத்தை ஊழியர்களுக்கு தந்து விட்டு மேரியுடன் ஒரு பழைய வீட்டிற்கு செல்கிறான் .மேரியோடு அமைதியான எளிய  வாழ்வை  வாழ்ந்து வருகிறான் .


இருப்பினும் பாட்டர் எப்பொழுதும் ஜார்ஜ்ஜிற்கு தொல்லை தந்து கொண்டே இருக்கிறார் .அவர் ஜார்ஜின் கம்பெனியை தன்னுடன் இணைத்து விட்டு ஜார்ஜ்ம்  உதவியாளனாக சேர சொல்கிறார் ஆனால் ஜார்ஜ் தன் அப்பாவின் கம்பெனியின் பெயர் என்றும் போய் விடக்கூடாது என மறுக்கிறான்




இந்நிலையில் உலக போர் வர அதற்கு அமெரிக்கா சார்பில் நிறைய ஆண்கள் போருக்கு செல்ல ஜார்ஜ்ற்கும் போரில் சென்று நாட்டிற்கு சேவை செய்தார் போலவும் மேலும் அரசு வருமானம் மூலம் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் ராணுவம் போக நினைக்கிறான்

ஆனால் ஜார்ஜின்  இடது செவி திறன் கேட்கும் குறைபாடு உள்ளதால் உடல் தகுதி அடிப்படையில் ஜார்ஜால் ராணுவத்தில் சேர இயலாமல் போகிறது . மீண்டும்  ஜார்ஜிற்கு ஒரு ஏமாற்றம் வருகிறது .அதே நேரம் ஜார்ஜின் தம்பி ராணுவத்தில் சேர்ந்து 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீர்ரகள் உயிரை காப்பாற்றியதால் அவனுக்கு அரசு பதக்கம் வழங்குகிறது  மேலும் எல்லாரும் அவனை  ஒரு பெரிய ஹீரோவாக பார்க்கின்றனர் .


இந்நிலையில் ஜார்ஜிற்கு வியாபரம் ஓரளவு லாபம் தர அதன் மூலம் வங்கியில் வாங்கி இருக்கும் கடன்களை அடைக்க நினைக்கிறான் .ஆனால் எதிர்பாராத விதமாக வங்கியில் ஜார்ஜின் மாமா பணத்தை இழந்து விட விடிந்தால் கிறிஸ்துமஸ் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்திற்க்காக சிறை செல்ல போவதை நினைத்து ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து போகிறான் .


இதனால் சக ஊழியர்கள் மனைவி குழந்தை என எல்லாரையும் திட்டி விட்டு  மிகுந்த மன வருத்தத்தோடு வெளியே செல்லும் ஜார்ஜ் வாழ்க்கையில் தோல்விகளும் ஏமாற்றமும் இருக்கிறதே  நம் வாழ்ந்து என்ன பயன் என ஆற்றில் குதித்து தற்கொலை பண்ண நினைக்கும் போது விண்ணில் இருக்கும் சிறகு இல்லாத தேவ தூதன் கிளாரன்ஸ் மனித உருவில்  குதிக்க ஜார்ஜ்  அவரை காப்பற்ற தான் தற்கொலை முயற்சி எண்ணத்தை மறந்து விடுகிறான் .

பின்னர் அவரிடிம் உன்னால் தான் நான் தற்கொலை பண்ண முடியமால் போயி விட்டது என ஜார்ஜ் சொல்ல கிளார்ன்ஸ்ம் ஒரு வயது முதிர்ந்து முதியவர் போல தற்கொலை வேண்டாம் தவறு அப்படி இப்படி என அறிவுரை சொல்லியும் ஜார்ஜ் எதையும் கேட்கமால் நான் பிறந்து என்ன பயன் ஒன்றும் இல்லை எதையும் சாதிக்கவில்லை  இதற்கு நான் பிறக்கமாலே இருந்து இருக்கலாம் என ஜார்ஜ் சொல்ல

அதையே கிளாரன்ஸ் பிடித்து கொண்டு ஜார்ஜ் இல்லாத உலகத்தை ஜார்ஜ்ஜிற்கு காட்டுகிறார் .ஜார்ஜ் இல்லாத உலகம் எப்படி பட்டது ஜார்ஜ் திருந்தினானா தற்கொலை எண்ணத்தை விட்டானா என்பதை எல்லாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் .


சரி இந்த படத்தை பற்றி

இட்ஸ் ஏ வொண்டர்புல் லைப் படத்தை  பற்றி பார்க்கும் போது இது ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் .இதில் சிட்டிசன் கென் போன்று தொழில் நுட்பத்திற்காக  பார்க்க வேண்டிய படம் இல்லை .

இதன் திரைக்கதைக்காக பார்க்க வேண்டிய படம் இதன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வரும் ஒரு காட்சிகளும் தேவை இல்லாத காட்சிகளோ தேவை இல்லாத கதாபாத்திரங்களோ இதில் இல்லை .


இப்படத்தை முதன் முதலில் பார்க்கும் எவருக்கும் முதல் ஒரு அரை மணி நேரம் பார்க்கும் போது ஏதோ சாதாராண படம் போலவும் மெதுவாக செல்வது போலவும் தோன்றி படத்தை பாதியில் நிறுத்தலாம் .ஆனால் முழுதாக பார்க்கும் போது தான் ஒவ்வொரு காட்சியும் எதற்காக வைத்து இருக்கிறார் படத்தின் ஆரம்ப காட்சிகளை இறுதியில் கிளைமாக்சிற்கு எப்படி பயன்படுத்தி உள்ளார் என திரைக்கதை எழுத நினைக்கும் எவரும் இதை வைத்து கற்று கொள்ளலாம் .மேலும் சஸ்பென்ஸ் இல்லமால் ஒரு படத்தை எப்படி சுவாரசியமாக கொண்டு செல்வது என்பதையும் இதில் இருந்து கற்று கொள்ளலாம் .


இப்படத்தை இயக்கிவர் பிராங்க் கேப்ரா இந்த படம் பார்த்த பின்பு இவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன் .இவரின் படங்கள் அனைத்துமே நேர்மறை எண்ணங்களை  விதைப்பவையாக இருக்கும் .இவர் படங்களின் சாயல்கள் ஆரம்ப கால எம் ஜி ஆர் படங்களில் காணலாம் மேலும் இவரை முழுமையாக பின்பற்றி தான் விக்ரமன் அவர்களின் படங்கள் எல்லாம் இருக்கும் .


சரி இப்படத்தை தனியாக எடுத்து ஒரு  பாடமாக கூட முழுவதுமாக ஆராய்ச்சி செய்யலாம் அந்த அளவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போல உள்ள படம் இது .நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது அல்ல நம்மோடு பலரையும் சார்ந்து உள்ளது இதை நான் இப்படி பிளாக்கில் சொல்வதை விட இப்படத்தை முழுமையாக பார்க்கும் போது நமக்கே சரி நாம் ஏதோ ஒரு விதத்தில் யாருக்கோ பயன்பட்டு இருக்கிறோம் என உணர்த்தும்



 எனவே  இப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .பார்த்ததோடு மட்டும் அல்லமால் மற்றவர்களையும் பார்க்க சொல்லுங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதன் கதையை மட்டுமாவது சொல்லுங்கள் .


ஏன் என்றால் நம்மில் பலரும் நாம் பிறந்து இருக்கவே வேண்டாம் நம்மால் யாருக்கு என்ன லாபம் என நினைக்கிறோம் ஆனால் நம் எங்காவது யாருக்காவது செய்த சிறிய உதவி கூட மிக பெரிய பலனை அவருக்கு தந்து இருக்க கூடும் .அதே போல் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் இந்த படத்தை விட வேறு எதுவும் சிறப்பாக சொல்லிவிட முடியாது


முடிவாக நான் ஏற்கனவே little miss sunshine படத்தை பற்றி சொல்லும் போது நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் இரண்டு என சொல்லி இருந்தேன் அதில் ஒன்று little miss sunshine இன்னொன்று its a wonderful life .


இந்த இரண்டு படங்களுமே என்னை ஓரளவு நடமாட வைத்து கொண்டு இருக்கின்றன .நீங்களும் உடனே இந்த படத்தை முழுமையாக பாருங்கள் வாழ்க்கை சிக்கல்கள் இருந்தாலும் அதில் நம் இடத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள்




வியாழன், 19 ஜனவரி, 2017

திரைக்கதையும் வழிமுறைகளும் -2


குற்றமும் திரைக்கதையும் 


குற்றங்கள் என்பது நிஜ வாழ்வில் பயமுறுத்தும் ஒன்றாக இருந்தாலும் திரை வாழ்வில் உலகம் எங்கும் குற்றவியல் சார்ந்த படங்கள் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது .

குற்றவியல் சார்ந்த கதைகளை நாம் கையில் எடுக்கும் போது அதன் திரைக்கதையை வேகப்படுத்துவது என்பது எளிதான ஒன்றாக அமைக்கிறது . சரி இந்த பதிவில் குற்றவியல் சார்ந்த கதைகளின் திரைக்கதைகளை எவ்வாறு அமைத்து இருந்தார்கள் எப்படி நாமும் அமைக்கலாம் என பார்க்கலாம் .அதற்கு முன் குற்றவியலில் என்ன என்ன கான்செப்ட்களில் படம் எடுக்க படுகிறது என பார்க்கலாம் .

1.கொலை களங்கள் 

2.கொள்ளை .திருட்டு ,

3.கடத்தல் (ஆள் ,பணம் ,விலையுர்ந்த பொருட்கள் )

4.பண மோசடி ,சூதாட்டம் 

சரி இவை தவிர இன்னும் சில இருந்தாலும் இவற்றை பார்த்து விட்டு அதை இறுதியாக பார்க்கலாம் .


கொலை களங்களும் திரைக்கதையும் 


ஒரு கதையில்  கொலையை ஒரு முக்கிய மைய பொருளாக வைத்து எழுதும் போது அதன் திரைக்கதையை நம்மை அறியமால் எளிதில் அதே வேகப்படுத்தி விடும் ,

சில லாஜிக்குகள் மட்டும் சரியாக நம் வைத்து விட்டால் போதும் திரை கதை சிறப்பாக அமைந்து விடும் .

கொலைகளை வைத்து எடுக்க பட்ட படங்கள் அனைத்தும் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்துவிடும் .அதற்கு அந்த கால ரெஸோமென் தொடங்கி இந்த காலம் துருவங்கள் பதினாறு வரை சான்றாகும் .


அதே நேரத்தில் நான் சொல்லும் கொலை களம் என்பது ராம்போ பட பாணியில் திரையில் வருபவர்கள் எல்லாரையும் நாயகன் தேசத்திற்காக கொள்கிறேன் என்ற பெயரில் எல்லாரையும் பட பட வென கொன்று குவிப்பது கிடையாது .


இது ஒரு கொலையை மட்டும் இல்லை ஒரு இரண்டு அல்லது  3 கொலைகளை மட்டும் ஒரு மைய பொருளாக வைத்து அதை சுற்றி பின்னப்படும் திரைக்கதை தான் .

சரி கொலையை வைத்து என்ன என்னவாறு எல்லாம் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம் .


1.கொலை செய்தவனை கண்டு பிடித்தல் 

2.கொலை செய்து விட்டு அதில்  இருந்து தப்பித்தல் 

3.கொலை பழியை அகற்ற போராடுதல் 

4.கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடுதல் அல்லது காப்பாற்றுதல் .

5.நாயகனே கொலையாளி

இவை தவிர வேற எதுவும் இருந்தாலும் பார்க்கலாம் முதலில் பார்க்க போவது


1.கொலையாளியை கண்டுபிடித்தல்


துப்பறியும் கதைகள் எப்பொழுதுமே விறுவிறுப்பை கொடுப்பன .
உலகம் முழுதுமே துப்பறிதலை வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுபவையாகவே உள்ளன .


அதன் காரணம்


ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது அந்த கொலையை செய்தவனை கண்டுபிடிப்பது நாயகனின் முக்கிய குறிக்கோள் எனில் அதன் திரைக்கதை எளிதில்  விறுவிறுப்பாக அமைந்து விடும்

கொலை  செய்தது யார் எதற்காக செய்தார்கள் ஏன் செய்தார்கள் இப்படி யார் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை காட்சிகளாக மாற்றி நாயகனையும் குழப்பி படம் பார்க்கும் ஆடியன்ஸையும் குழப்பி விட்டாலே போதும் படம் பார்க்கும் பார்வையாளனும் ஒரு துப்பறிவாளனாக மாறி இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ அவனோ இருக்குமோ இவனா இருக்குமோ என யோசிக்க ஆரம்பிக்கும் போதே  படம் விறுவிறுப்பாக சென்று விடும் .

ஆனால் போட்ட மர்ம  முடிச்சுக்களை எல்லாம் சரியாக அவிழ்க்க வேண்டும் . கொலைக்கான சரியான காரணத்தை கொலையாளி கொண்டு இருக்க வேண்டும்  கொலையை துப்பறியும் கதாபாத்திரம் சரியான ஆதாரங்களுடன் கொலையை கண்டுபிடிக்க வேண்டும் .
இப்படி ஒரு சில லாஜிக் மட்டும் போதும் கொலையாளியை கண்டுபிடிக்கும் கதைகளுக்கு .


சரி கொலைகளை கண்டுபிடிக்கும் கதைகளில் இரண்டு வகை உள்ளன .


ஒன்று ஒரே ஒரு கொலையை வைத்து கொண்டு படம் முழுதும் அந்த கொலையாளி யார் என்று கண்டு பிடிப்பது .

இப்படி ஒரு கொலையை வைத்து கொண்டு செல்லும் படத்தை பொறுத்த வரையில் முதன் பாதியை எளிதில் வேகமாக கொண்டு சென்று விடலாம் யார் கொலையாளி யார் கொலையாளி என்ற கேள்வியுடன் ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை உடனே முடிக்க வேண்டும் ஏன் என்றால் இரண்டாம் பாதியிலும் கொலையாளியை காட்டாமல் இழுத்து கொண்டு இருக்கும் போது சில ஆடியன்ஸ் எரிச்சல் அடைந்து விடுவார்கள் .அதனால் ஒரு கொலையை  வைத்து கொண்டு  செல்லும் கதைகளில் சரியான நேரத்தை வைத்து கொண்டு செல்ல வேண்டும் குறைந்த பச்சம் ஒரு கொலையை வைத்து கொண்டு கண்டுபிடிக்கும் கதைகள் எல்லாம் ஒரு 2 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் வரை தான் செல்ல வேண்டும் .


சரி ஒரு கொலையை மட்டும் வைத்து கொண்டு திரைக்கதை அமைத்த படங்களில் எனக்கு தெரிந்த சில


1.Rashomon




இந்த படத்தை பற்றி தெரியாத உலக சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது .

அகிரா குரோசாவா இயக்கிய இப்படம் 
 திரைக்கதையில் புதிய யுக்தியை புகுத்திய படம் இது .சினிமாவிற்கு என்று இருந்த பல விதிகளை உடைத்து புதிய வழியை ஏற்படுத்தியது .

இந்த படத்தின் ஆரம்பத்தில் சாமுராயின் சடலத்தை வழி போக்கர் ஒருவர் கண்டுபிடிக்க அவர் அந்த கொலையை செய்தது யார் எதற்க்கு ஆக செய்தார்கள் என மூன்று பேரின் பார்வையில் வெவ்வேறு விதமாக சொல்வார்கள் .

ஒவ்வொரு முறையும் இவர் தான் செய்து இருப்பாரோ இவர் தான் செய்து இருப்பாரோ என ரசிகனை யோசிக்க வைத்து இறுதியில் ரசிகனின் பார்வைக்கே பதிலை விட்டுவிடுவார் .


ஒரு கொலையை மட்டுமே வைத்து கொண்டு திரைக்கதை வேகமாக கொண்டு செல்லா விட்டாலும் மூன்று பேர் பார்வையிலும் வெவேறு விதமாக கொண்டு சென்ற புதிய யுக்தி ரசிகனை யோசிக்க விடமால் அதுவாகவே வேகமாக கொண்டு சென்று விட்டது .

இந்த படத்தில் புதிய திரைக்கதை யுக்தியை தவிர்த்து கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் படத்தின் ஓட்ட நேரம் .இந்த படத்தின் மொத்த ஓட்ட நேரம் 88 நிமிடங்கள் அகிரா குரோசோவாவின் மற்ற படங்களை எல்லாம் எடுத்து நீங்கள் பார்த்தல் அதன் ஓட்ட நேரம் பெரும்பாலும் 2மணி நேரத்தை தாண்டி தான் இருக்கும் .

ஆனால் இந்த படம் குறுகிய நேர ஓட்டத்தை வைத்து இருப்பார் காரணம் ஒரு கொலையை புலன் விசாரணை செய்வதை நீண்ட நேரம் எடுத்தால் அது ரசிகனின் பொறுமையை சோதித்து விடும் என்பதை குரோசவா சரியாக கணித்து இதன் நேரத்தை சரியான அளவில் வைத்து இருப்பார் .


இந்த படத்தை தழுவி சிவாஜி கணேசன் அவர்களின் அந்த நாள் படமும் ஒரு கொலையை வைத்து கொண்டு மட்டும் செல்லும் .

2.MYSTIC RIVER




கிளின்ட ஈஸ்ட்வுட் இயக்கிய இந்த படமும் 

ஒரு கொலையை வைத்து கொண்டு அதை புலன் விசாரணை செய்யும் படமாகும் .இதில் படத்தின் ஆரம்பத்திலே நாயகனின் மகள் கொல்லப்பட்டு விட  நாயகன்  தன் நண்பர்களுடன் மகளை கொலை செய்தது யார் என தேடுவான் .

இன்னொரு பக்கம் காவல்துறையும் அதன் பாணியில் கொலையை விசாரிக்கும் .

இவ்வாறு இரு வேறு பாணியில் செல்வதால் படம் விறுவிறுப்பாக செல்லும் .அதே நேரம் இதில் கதாபாத்திர வடிவமைப்பு (charactor development ) என்பதும் சிறப்பாக இருக்கும் .

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதன் கிளைமாக்ஸ் .இதன் கிளைமாக்சில் தவறான நபரை கொலை செய்தவர் என்று நாயகன் கணித்து அவரை கொன்று விடுவார் .

இதை போன்ற ஆன்டி கிளைமாக்ஸ் என்பது ஹாலிவுட் படத்திற்கு பொருந்தும் ஆனால் நம் சினிமாவிற்கு பொருந்தாது

3.mumbai police (மலையாளம் )




36 வயதினிலே படம் இயக்கிய ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிய மலையாள படமான மும்பை போலீஸ் படமும் ஒரு கொலையை விசாரணை செய்யும் படமாகும் .

இதில்  படத்தின் ஆரம்ப காட்சியிலே நாயகன் பிரிதிவிராஜ்  காரில் சென்று கொண்டு இருப்பார் போனில்   தன் சக அதிகாரியை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்துவிட்டதாக தன் மேலாதிகாரியிடிம் சொல்லி கொண்டு இருக்கும் போதே விபத்துக்குள்ளாகி தன்  நினைவை இழந்து விடுவார் .

இதனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை தொடங்குவர் .எனவே ஏற்கனவே ஒரு பாதியில் விபத்துக்கு முன் எப்பொழுதும் திமிரோடு யாரையும் மதிக்காத ஒரு போலீசாக கொலையை துப்பு துளங்குவது ஒரு பாதியாகவும் .

இன்னொரு பாதி  தன் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதற்காகவே கொலையை விசாரிக்கும் பாணி .இப்படி இரண்டு விதமாக கொலையை கண்டு பிடிக்கும் பாணியில் இயக்குனர் இறுதியில் தான் கொலையாளியை கண்டுபிடிப்பது போல் வைத்து இருப்பார் .இதனால் இரண்டு விதமாக சென்றாலும் யார் கொலையாளி என்று தெரியமால் ரசிகர்கள் படத்தின் இறுதி வரை யோசிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம் .





மேலே சொன்ன மூன்று படங்களை தவிர்த்து இன்னும் பல படங்கள் இருக்கலாம் .அதே நேரத்தில் மெமண்டோ ,கஜினி இந்த படமும் ஒரு கொலையை விசாரணை செய்யும் படம் என்றாலும் இதன் முக்கிய நோக்கம் பழி வாங்குவது என்பதால் பழி வாங்கும் படங்களின் கேட்டகிரியில் சேர்ந்து விடும் .

அதே போல் The fugative ,திரிஷ்யம் போன்ற படங்களும் ஒரு கொலை சேர்ந்த படங்கள் என்றாலும் இதுவும் ஒரு கொலை விசாரணையில் சேராது அது கொலை செய்து விட்டு தப்பித்தல் வகையில் சேரும் .கொலை பழியில் இருந்து தப்பித்தல் வகையில் சேரும் .

சரி அடுத்த பதிவில் தொடர் கொலை அதாவது சீரியல் கில்லிங் அந்த வகை  படங்களுக்கான திரைக்கதை மற்றும் அதை சார்ந்த படங்களையும் பற்றி பார்ப்போம் 








திங்கள், 9 ஜனவரி, 2017

திரைக்கதையும் பல  வழி முறைகளும் 


இது முழுதும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கான கட்டுரை என்பதால் கதை என்றால் என்ன திரைக்கதை என்றால் என்ன பிரேம் என்றால் என்ன ஷாட் என்றால் என்ன என்று சினிமா வரலாறுகளை ஆரம்பத்தில் இருந்து சொல்வதை விட நேரடியாக நான் திரைக்கதை  விசயத்திற்கு வருகிறேன் .


இந்த கட்டுரை முழுதும் நான் பார்த்த படங்களை வைத்தும் ஏதோ எனக்கு இருக்கும் அறிவுக்கும் வைத்து தான் எழுதி உள்ளேன் .இது எந்த புத்தகத்தையும் தழுவி எழுத வில்லை .மேலும் இந்த கட்டுரையில் வரும் உதாரண படங்கள்  அனைத்தும் அதிகமாக  ஹாலிவுட் மற்றும் மற்ற மொழி படங்கள் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும் .தமிழ் படங்கள் அந்த அந்த இடத்திற்கு ஏற்ப வரும் .அது போல் சில வார்த்தைகள் தமிழ் படுத்த முயற்சித்த போது வேறு ஒரு அர்த்தமாக மாறி வருவதால் சில வார்த்தைகள் ஆங்கிலத்திலே வரும் .அதையும் புரிந்து கொள்ளவும் .

அது போல இதில் திரைக்கதை எழுதுவது எப்படி என்று முழுதுமாக எல்லாம் நான் சொல்ல போவதில்லை .திரைக்கதை வகைகள் மற்றும் சிறிய விளக்கங்கள் சில உதாரணங்கள் வைத்து மட்டும் தான் சொல்லி உள்ளேன் .



மேலும்  முன்பே சொன்னது போல்  இது முழுவதும் சினிமா எழுத்தாளர்களுக்கான கட்டுரை என்பதால் சினிமாவிற்கு திரைக்கதை எழுதுபவர்கள் இல்லை எழுத நினைப்பவர்கள் மட்டும் படித்து கொண்டு புரிந்து கொள்ளவும் .

மற்றபடி எங்க ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே போதும் கதையாவது திரைக்கதையாவது என கூறும் ரசிகர்கள் இதை படிப்பதை விட்டு  உங்கள் ஹீரோக்களுக்கு புகழ் பாடும் பல கட்டுரைகள் உள்ளன அதை போயி படித்து கொள்ளவும் .



திரைக்கதையின் வகைகள் .


கதைக்கும் படத்திற்கும் தானே வகைகள் உண்டு இது ஆக்சன் படம் இது காமெடி படம் என்று அது என்ன திரைக்கதை வகைகள் என்று கேட்கிறீர்களா .சரி என்னுடைய அறிவுக்கு ஏற்றவாரு அதை வகைப்படுத்தி உள்ளேன் அதை இங்கு வகைப்படுத்தி விட்டு பின் விரிவாக பார்ப்போம் .

1.வேக  திரைக்கதை 

2.மெதுவான திரைக்கதை 

3.சுவாரசிய திரைக்கதை 

4.நகைச்சுவை திரைக்கதை .

5.சோக திரைக்கதை

 6. சூப்பர் ஸ்டார் திரைக்கதை

7.பீல் குட் மூவிஸ் திரைக்கதை 

சரி இப்படி ஸ்குள் பையன் போல வகை பிரித்து எழுதி இருக்கிறான் என எண்ணலாம் .ஆனால் இதை தவிர்த்து விட்டு பார்த்தல் எந்த ஒரு திரைக்கதையையும் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம் அது ஒன்று வேகமாக செல்லும் திரைக்கதை இன்னொன்று மெதுவாக செல்லும் திரைக்கதை .


இதில் நான் முதலில் எடுத்து கொள்வது எல்லாருக்கும் பிடித்தமான வேகமான திரைக்கதையை எடுத்து கொள்கிறேன் .


வேகமான திரைக்கதை .


வரலாறு சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு வரலாறு சொல்கிறேன் என யாரும் கோபிக்க வேண்டும் .சரி கதைகளை  திரைக்கதையாக நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது நாடாக மேடையில் தான் .

நம்மூரில் பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் நாடங்கங்கள் போடுவார்கள் . மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும்  நாடகம் மறுநாள் காலை 6 மணிக்கு தான் முடியும் .இந்த முறையை ஏன் அவர்கள் கொண்டு வந்தார்கள் என்றால் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் இரவு சாமிக்காக அந்த விசேஷ நாளில் விடிய விடிய முழிக்க வேண்டும் என்றும் அதிகாலை 6 மணிக்கு சாமியை ஊர்வலம் கொண்டு செல்வதாற்காகவும் இப்படி விடிய விடிய நாடகம் நடத்துவார்கள் .

அந்த நாடங்களை எல்லாம் பார்த்தால் உடனே கதை ஆரம்பிக்கவே ஆரம்பிக்காது ஒரு 7 மணிக்கு நாடக குரூப் வரும் ஒரு 10 மணி வரையாவது ஜோக்கர் எனும் கதாபாத்திரம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி சிரிக்க வைத்து கொண்டே இருக்கும் அதன் பின் நாடகம் ஆரம்பித்தால் காட்சிகளில் வசனங்கள் குறைவாகவும் பாடல் நிறையாகவும் இருக்கும் ஏன் என்றால் பாடல்கள் வேகத்தை எளிதில் மட்டுப்படுத்தி விடும் (இதனால் தான் உலக சினிமாக்கள் பல பாடல்கள் இல்லமால் இயங்குகின்றன )


சரி கதை சொல்லல் என்பது நாடகத்தை தாண்டி கேமிரா கண்டுபிடிக்கப்பட்ட போது சினிமாவக மாறிய போது ஆரம்ப கால மவுன படங்களை தவிர்த்து விட்டு ஓரளவு எல்லாம் உள்ள படங்களாக மாறிய போது நாடகங்கள் போலவே சினிமாவையும் வெறும் பாடல்கள் நிறைந்த படங்களாகவே எடுத்தனர் .

இது ஹாலிவுட் ஆகட்டும் இல்லை நம்மூர் சினிமாவாகட்டும் ஆரம்பத்தில் இப்படி தான் சினிமா இருந்தது .பாடல்களால் மட்டுமே சினிமா இயங்கியது .அதன் திரைக்கதை மெதுவாக தான் நகரும் .

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மெதுவாக செல்லும் திரைக்கதைகளை ரசிகர்கள் ஒதுக்கியதால் வேகமான திரைக்கதையை கொண்டு வந்தார்கள் .படம் பார்க்கும் ரசிகன் கதை வேகமாக செல்வதாக உணர வேண்டும் 2.30 மணி நேரம் போனது தெரியமால் இருக்க வேண்டும் இந்த ஒரே நோக்கத்திற்காக தான் தற்போது பல இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் .

ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் படம் எப்படி இருக்கு என்று ஒரு 6 வது படிக்கும் சிறுவனிடம் கேட்டால் கூட அவன் ரெண்டே வார்த்தையில் படத்தை அருமையாக விமர்சனம் செய்து விடுவான் .

நன்றாக இருக்கிறது என்றால் படம் செம ஸ்பீடா போகுது என்பான் இல்லை அவனுக்கு பிடிக்கவில்லை என்றால்  ஸ்லோவாக போகுது என்பான் .

அதற்கு என்று மெதுவாக நகருபவை மோசமான படங்கள் அல்ல இன்னும் சொல்ல போனால் மெதுவாக நகரும் திரைக்கதை கொண்ட படங்கள் தான் சிறந்த படங்களாக நிறைய உள்ளன.

ஆனால் பெரும்பான்மையானோர் விரும்புவது எல்லாவிதமான ஆடியன்ஸையும் ஈர்ப்பது என்று பார்த்தல் அது வேகமான திரைக்கதை தான் .

சரி வேகமான திரைக்கதைகளை எதை எல்லாம் கொண்டு ஆரம்பிக்கலாம் எந்த கான்செப்ட் வேகமான திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும் என இன்றைய பதிவில் பார்த்து விட்டு அடுத்த பதிவில் விரிவாக பாப்போம் .

வேகமான திரைக்கதைக்கான கான்செப்ட்கள்

1.குற்றமும் குற்றம் சார்ந்தவைகளும்

2.மர்மமங்கள் (சஸ்பேன்ஸ் மற்றும் மிஸ்டரி )

3.cat & mouse chase

4.புதையலை தேடு (tresure hunting )

5.பழி வாங்குதல்

6.பணம் மற்றும் பதவியை அடைய எடுக்கும் முயற்ச்சி

இன்னும் பல கான்செப்ட்கள் திரைக்கதை வேகப்படுத்த உள்ளன .ஆனால் அவற்றை எல்லாம்  இவற்றுற்குள் அடக்கி விடலாம் இதை தாண்டி சில விதி விளக்குகள் இருக்கலாம் .

சரி அடுத்த பதிவில் இருந்து உதாரணங்களோடு விளக்கமாக பார்க்கலாம்













வியாழன், 3 மார்ச், 2016

LITTLE MISS SUNSHINE (2006)-( வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல )

LITTLE MISS SUNSHINE (2006) ஹாலிவுட் 


பொதுவாகவே எனக்கு எப்போது எல்லாம் மனசு சரி இல்லமால் போகிறாதோ இல்லை எப்பதொல்லாம் எதையாவது இழப்பதை போல் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் ஒரு 3 படங்களில் ஏதாவது ஒன்றை பார்ப்பேன் ,அவற்றில் ஒன்று நம் தமிழ் சினிமாவான அன்பே சிவம் அடுத்த இரண்டில் ஒன்று 1946ல் வெளி வந்த Its a wonderful life ஹாலிவுட் திரைப்படம் (இதை பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பெரிய பதிவாக எழுதுகிறேன் )

அடுத்த ஒன்று  2006ல்   little miss sunshine  திரைப்படம் .

முதலில் படத்தை பற்றி சொல்வதற்கு முன் வழக்கம் போல் சில விசயங்கள் 

பொதுவாகவே நம் சமூகத்தில் ஏன் இந்த உலகம் முழுதும் எடுத்து கொண்டாலும் எப்போதுமே எல்லாரும் வெற்றி மட்டுமே வாழ்க்கை என்பார்கள் .நீ பள்ளியில் படிக்கிறியா நீ முதல் ரேன்க் வாங்கினால் தான் நீ படித்தவன் என்று அர்த்தம் ,நீ விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறயா கண்டிப்பாக அதில்  வெற்றி பெற வேண்டும் .கல்லூரியிலும் இதே நிலைமை தான் அதை முடித்தால் வேலை அதுவும் கவுரவாமான வேலை இப்படி நம் எடுக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவன் மட்டுமே வாழ தகுதியானவன் என்ற முத்திரையை குத்துகிறார்கள் ,

ஏன் நாமே டோனி கேப்டானாக இருந்து தொடர்ந்தாவரு ஒரு மூன்று தொடரை இழந்தால் இனி டோனி கேப்டனாக இருக்க லாயாக்கு இல்லை கோலியை கொண்டு வாங்கப்பா என்கிறோம் ,இங்கு தோற்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்று தான் சமூகம் சொல்கிறது .

சரி அடுத்த இரண்டாவது விசயம் கடந்த சில வருடங்காலகவெ நடக்கும் ரியலாட்டி ஷோக்கள் குறிப்பாக சிறுவர்களுக்கு நடக்கும் ரியாலட்டி ஷோக்கள் 

10 வயது 15 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு நடக்கும் பாட்டு போட்டிகளும் நடன போட்டிகளும் 

பொதுவாகவே தோல்வியை பெரியவர்களாலே தாங்க முடியாது ,ஆனால் துள்ளி குதிக்கும் குழந்தைகளுக்கு இந்த தோல்வியை அருமையாக தந்து வாழ்க்கையை அந்த வயதிலே வெறுக்க வைக்கின்றது .

சரி மேலே பேசியவற்றிற்கும் Little miss sunshineக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறிர்களா வாங்க பாப்போம் 



இந்த படத்தின் கதையை எப்போதும் போல் இல்லமால் வேறு மாதிரியாக சொல்கிறேன் ,

இந்த படத்தில் மொத்தம் ஆறே கதாபாத்திரங்கள் அந்த 6 கதாபாத்திரங்களும் ஒவ்வொரு வகையில் ஒரு தோல்வியை தான் சந்திக்கின்றன ஆனால் அதையும் கடந்து ஒரு செல்கின்றன .

இந்த படத்தின் மைய கதாபாத்திரம் ஆலிவ் என்ற சிறுமி கதாபாத்திரம் தான் அவளை வைத்து தான் கதை நகர்கிறது 



ஆலிவுக்கு லிட்டில் மிஸ் சன்சைன் என்ற சிறுமிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் அந்த லிட்டில் மிஸ் சன்சைன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது ஆசை அதற்காக தினமும் தன் தாத்தா துணையோடு பயிற்சி எடுத்து கொள்கிறாள் .

முதல் தோல்வி 
படத்தின் ஆரம்பத்தில் ஆலிவின் மாமா பிராங்(ஓரின சேர்க்கையாளர் ) காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்து மருத்துவ மனையில் அனுமதிக்க படுகிறார் ,அவரை தனியாக விட வேண்டாம் என்று சொல்லி அவரின் சகோதரியை (ஆலிவின் அம்மா ) வர வைத்து டாக்டர் சிறிது காலம் அவரை பார்த்து கொள்ளுமாறு அனுப்புகிறார் 


அடுத்து ஆலிவின் தந்தை
 ஆலிவின் தந்தை ரிச்சார்ட் இவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை  பற்றி வகுப்புகளை எடுத்து கொண்டும் அதை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதி கொண்டு இருக்கிறார் ,இவருக்கு வெற்றி பெறுபவர்களை மட்டும் பிடிக்கும் .அதே நேரத்தில் இவருக்கு பேங்கில் வாங்கிய கடன்கள் நிறைய இருக்கிறது இந்த நிலையில் இவர் எழுதிய தன்னபிக்கை புத்தகம் வெளி வந்தால் எல்லாம் கிடைத்து கடன்களை அடைத்து விடலாம் என நினைக்கிறார் ,

ஆலிவின் தாய் 


ஆனால் ஆலிவின் தாய்க்கோ தன் கணவரோடு வாழ பிடிக்கமால் இருப்பதால் விவாகாரத்து வாங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் .

ஆலிவின் தாத்தா 


இவர் தான் ஆலிவிற்கு தினமும் அழகி போட்டிக்காக டான்ஸ் சொல்லி கொடுப்பது அதே நேரத்தில் தினமும் இவர் போதை பொருள் எடுத்து கொண்டு தான் தூங்குவர் 

ஆலிவின் சகோதரன் 



ஆலிவின் சகோதரன் டுவைன் .இவனுக்கு குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது .அதே நேரத்தில் பைலட் ஆன பின்பு தான் பேசுவேன் என்று சபதம் எடுத்து கொண்டு 7 மாதங்கள் பேசமால் இருக்கிறான் .

இப்படி ஒரு வழக்கமான நடுத்தர அமெரிக்கா குடும்பத்தோடு கதை செல்கிறது ,இந்த நிலையில் ஆலிவிற்கு லிட்டில் மிஸ் சன்சைன் அழகி போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது ,ஆனால் அதில் கலந்து கொள்ள அவர்கள் கலிபோர்னியா செல்ல வேண்டும் அது அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் இதனால் தனக்கு புத்தகம் வெளியிடும் பதிப்பகத்தரிடிம் பேச வேண்டிய சூல்னிலையால் தன்னால் ஆலிவை அதற்கு அழைத்து செல்ல முடியாது என்று சொல்கிறார் .பின்பு ஆலிவிர்காக சரி என்று சொல்கிறார் ,ஆனால் அதே நேரத்தில் அலிவின் தந்தை ரிச்சர்ட் கலிபோர்னியா போகும் வழியில் புத்தக பதிப்பாளரை பார்த்து விட வேண்டும் எனவும் நினைக்கிறார் .

அதே போல் டுவைனும் முதலில் மறுத்து பின் சரி என்கிறான் ,பிராங்கை தனியாக வீட்டில் விட முடியாது என்று அவரையும் அழைத்து கொண்டு எல்லாருமாக ஒரு பழைய வேனை எடுத்து கொண்டு கலிபோர்னியா பயனிக்கிறனர் .ஒரு சாதாரண பயணமாக செல்கிறது .இடை இடையே பேச்சுக்கள் சிறு சிறு வாக்குவாதங்கள் என்று செல்கிறது

முதல் தடையாக

அவர்கள் பயணிக்கும் வேன் பாதிலே ரிப்பர் ஆகி விடுகிறது ,இதனால் அதை எல்லா நேரமும் தள்ளி விட்டு ஒட்ட வேண்டி இருக்கிறது .ஒரு நாள் செல்லும் வழியில் உள்ள ஹோட்டலில் அனைவரையும் தங்க வைத்து விட்டு ஆளிவின் தந்தை ரிச்சர்ட் மட்டும் அந்த புத்தக பதிப்பாளரை பார்க்க செல்கிறார் .

இரண்டாம் தோல்வி

ரிச்சார்ட் எழுதிய புத்தகம் வெளியிடும் அளவுக்கு மதிப்பு இல்லை என்றும் புதிய எழுத்தாளர்கள் புத்தகங்கங்களை வாசகர்கள் அவளவாக ரசிக்க மாட்டார்கள் என்று சொல்லி அவரின் புத்தகத்தை வெளியிட முடியாது என்று பதிப்பாகத்தார் சொல்லி விடுகிறார் ,இதனால் மீண்டும் கடனில் இருந்து மீள முடியாத சூல்னிலை ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறார் .

ஒரு இழப்பு

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் ஆலிவின் தாத்தா இறந்து விடுகிறார் ,இதனால் ஆலிவ் அழகி போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது .ஆனால் ரிசார்ட் தன்  மகள் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ,ஏன் என்றால் தன் தந்தை வயதான காலத்திலும் தன் பேத்தி கலந்து கொள்வதை பார்க்க 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இருக்கிறார் எனவே அவரின் ஆசையும் ஆலிவ் போட்டியில் கலந்து கொள்வதாக தான் இருக்கும் எனவே ஒரு நாள் கழித்து உடலை வாங்கி கொள்கிறேன் என்கிறார் ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் அதை ஏற்க மறுக்கிறது .எனவே அவர்களுக்கு தெரியாமல் தன் தந்தையின் உடலை எடுத்து கொண்டு பயணிக்கிறார் .

மூன்றாவது தோல்வி



மீண்டும் பயணிக்கும் போது ஆலிவ் எதார்த்தமாக தன் அண்ணன் டுவைட் இடம் ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து வந்த கலர் பிளைன்ட் அட்டையை வைத்து விளையாட்டாக கேட்கும் போது தான் தெரிகிறது டுவைட்க்கு நிற குருடு என்று இதனால் அவனால் பைலட் ஆக முடியாது இதை தெரிந்த உடன் அத்தனை நாள் பேசமால் இருந்த மவுனம் வீணாகி விட்டது என்று  வருத்தத்துடன் வேனை நிப்பாட்டி கத்தி கொண்டு கோபமாக ஓடுகிறான் .அவன் அம்மா சமாதானபடுத்தியும் அவன் வர மாட்டேன் என்கிறான்

நீங்கள் எல்லாரும் வாழ்க்கையில் தோற்றவர்கள் உங்களோடு சேர்த்து நான் இருக்க விரும்ப வில்லை என்கிறான் .பின் தன் குட்டி தங்கை ஆலிவிர்காக மனதை தேற்றி கொண்டு வண்டியில் ஏறுகிறான் .

ஒரு வழியாக எல்லாரும் ஆலிவ் போட்டியில் கலந்து கொள்ளும் இடத்திற்கு வருகிறார்கள் ,போட்டி நடந்து கொண்டு இருக்கிறது .அப்போது அங்கு இருக்கும் சிறுமிகள் எல்லாம் அதித திறமையாகவும் அழகாகவும் பாடவும் ஆடவும் செய்கின்றன .ஒரு கட்டத்திற்கு மேல் ரிசார்ட்ற்கு இந்த குழந்தைகளோடு போட்டி போட்டு ஆலிவால் ஜெயிக்க முடியாது என நினைக்கிறார் .

அதே போலவே டுவைட்ம் இந்த இடம் ஆலிவை தோற்றவள் ஆக்கி மனதை நொருங்க செய்து விடும் இவர்கள் யார் என் தங்கையை அழகு அழகு இல்லை என சொல்ல  எனவே ஆலிவ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என சொல்கிறான் .தந்தையும் சகோதரனும் ஆலிவை பாதுகாக்க விரும்பினாலும் ஆலிவ் கலந்து கொள்ள ஒரு வருடமாக ஆசை பட்டால் கலந்து கொள்ளட்டும் என ஆலிவின் தாய் சொல்கிறாள் ,

ஆலிவும் கலந்து கொள்கிறாள் .ஆலிவ் முறை வருகிறது அவள் தன் தாத்தா சொல்லி கொடுத்தப்படி நடனம் ஆடுகிறாள் .கீழே இருப்பவர்கள் எல்லாம் அந்த நடன அசைவுகள் எல்லாம் முகம் சுழிக்கும் படி இருக்கிறது என கத்துகிறார்கள் ,எனவே போட்டி நடத்துபவர் பாடல் ஓடி கொண்டு இருக்க பாதிலே ஆலிவை மேடையை விட்டு இறக்க முயற்சி செய்ய ஆலிவின் தந்தை அவளை முழுமையாக அதில் கலந்து கொள்ள விடுங்கள் என்று தடுக்கிறார் .

ஆனால் இறங்கியே ஆக வேண்டும் என்று சொல்ல அவர் தன் மகளையும் விழா அமைப்பாளரையும் பார்க்கிறார் ,பின் ஆலிவை உற்சாக படுத்த தானும் சேர்ந்து ஆட தொடங்குகிறார் ,பின் ஆலிவின் மாமா அண்ணன் அம்மா என்று எல்லாரும் அவளுடுன் அந்த பாடல் முடியும் வரை ஆடுகிறார்கள்,ஆடி ஆலிவை உற்சாக படுத்துகிறார்கள் .ஆலிவிற்கு தோல்வியை காட்டாமல் செய்கின்றனர் ,

இறுதியாக ஆலிவ் இனி மேல் அழகி போட்டியிலே கலந்து கொள்ள முடியாது என்று அனுப்பினாலும் அதையும்  சாதாரண ஒன்றாக அவளும் கருதி கொண்டு அவள் குடும்பமும் கருதி விட்டு மீண்டும் வீட்டிற்கு பயணிக்கின்றனர் ,


இனி படத்தை பற்றி

பொதுவாகவே சில படங்களை மட்டும் பார்த்தே சே என்ன படம்டா சான்சே இல்ல செம பீல் குட் மூவி என்று சொல்லுவோம் அந்த பீல் குட் வகை படம் தான் இந்த LITTLE MISS SUNSHINE

இந்த படம் இவளவு சிறப்பாக அமைவதற்கு இதில் உள்ள காட்சி அமைப்புகளும் கதாபாத்திரங்களும் திரைக்கதையும் தான் காரணம் ,

இதில் வரும் 6 கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் நம் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திகிறது .அதே போல் இதில் வரும் பல காட்சிகள் நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பவையாக உள்ளன .

குறிப்பாக ஒரு காட்சியில் ஆலிவிற்கு தன் அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்று நினைத்து தன் தாத்தாவிடிம் தன் அழகாக இருக்கிறேனா என கேட்கிறாள்




அவர் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்கிறார் ,அடுத்ததாக ஆலிவ் அழுது கொண்டே நான் தோற்று போவானோ என்று பயமாக இருக்கிறது என்கிறாள் .அதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று தாத்தா கேட்கும் போது அப்பாவிற்கு தோற்றால் பிடிக்காது என்கிறாள் .

(இந்த ஒரு வசனத்தின் மூலமெ நம் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம் என்று காட்டி விடுகிறது )

அதற்கு அவர் நீ எப்போது போட்டியில் கலந்து கொண்டாயோ அப்போதே நீ வெற்றி பெற்றவள் தான் உண்மையான தோல்வியாளன் யார் என்றால் கலந்து கொள்ளாதவன் தான் என்று சொல்லி சமாதான படுத்துகிறார் (இந்த வசனம் எங்கோ என் புத்தியில் செருப்பால் அடித்தது போன்று இருந்தாலும் திருந்த முடியவில்லை )


அடுத்ததாக டுவைட் திரும்ப பேச ஆரம்பித்த பின்பு தன் மாமாவிடம் பேசும் காட்சி ,அவன் சொல்வான் வாழ்க்கையில் ஒன்று போனால் கண்டிப்பாக இன்னொன்று வரும் ,அது போல் எனக்கு பறக்க வேண்டும் என நினைக்கும் போது நான் பறப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்பான் ,

எல்லாவற்றிற்கும் மேலாக கிளைமாக்ஸ் காட்சி ஆலிவை எல்லார் முன்னாலும் அசிங்க பட வைக்க கூடாது என்றும் முழுமையாக போட்டியில் குடும்பமே சந்தோசத்துடன் அவளுடுன் இணைந்து ஆடும் காட்சி இருக்கிறதே


ஒரு அருமையான கவிதை போன்று ,இது போன்ற கிளைமாக்ஸ் காட்சிகள் சில படங்களில் மட்டும் தான் கிடைக்கும் ,எனக்கு தெரிந்து மறக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சிகள் என்றால் இரண்டை சொல்வேன் ஒன்று அன்பே சிவம் படத்தில் கமல் கதாபாத்திரம் நாயுடுன் தனிமையாக நடந்து செல்லும் காட்சி
அடுத்து Dead poets society படத்தில் ராபின் வில்லியம்ஸ்க்கு மாணவர்கள் Farwell கொடுக்கும் காட்சி ,

இவை இரண்டும் கூட சோகமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனால் LITTLE MISS SUNSHINE உற்சாகமூட்டும் கிளைமாக்ஸ் காட்சி ,இன்று காக்கா மூட்டையில் வந்த உற்சாகமான சந்தோசமான கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னோடியே இந்த LITTLE MISS SUNSHINE தான் .

இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள் இரண்டு ஒன்று தாத்தாவாக வரும் ஆலன் ஆர்கின் கதாபாத்திரம்



30 நிமிடங்களே வந்தாலும் நல்ல ஒரு நிறைவான பெர்போமான்ஸ் கொடுத்து நம் மனதில் இடம் பிடித்து மட்டும் இல்லமால் அந்த வருடத்திற்க்கான சிறந்த துணை நடிகர்க்கான விருதை பெற்று விட்டார் ,

அடுத்ததாக மாமாவாக வரும் ஸ்டீவ் காரல் கதாபாத்திரம்




ஸ்டீவ் காரல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்திற்கு முன்பு எனக்கு ஸ்டீவ் காரல் சுத்தமாக பிடிக்காது ,ஏன் என்றால் அவர் ஹாலிவுட் சிவ கார்த்திகேயன் ,டிவி ஹோஸ்ட் ஆக இருந்து பின்பு சிரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் ,இவரின் நகைச்சுவை எல்லாம் ரொம்ப மொக்கையாகவும் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவாதகவும் இருக்கும் ,இதனாலே நான் ஆரம்ப கால ஸ்டீவ் காரல் படங்கள் எதுவும் பார்க்க மாட்டேன் ,

ஆனால் இந்த படத்தில் தான் முதன் முதலாக எனக்கு நகைச்சுவை மட்டும் அல்ல நடிப்பும் வரும் என்று நிருபித்து இருப்பார் ,மேலும் இந்த படம் வந்த கால கட்டத்தில் அவர் தனி கதாநாயகனாக இருந்து வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து கொண்டு இருந்தார் ,ஆனால் இந்த படத்தின் கதைக்காக இதை ஒத்து கொண்டார் ,மேலும் நல்ல புகழ் பெற்ற பிறகு ஓரின சேர்க்கை காதல் தோல்வி பாத்திரத்தில் நடித்த இவரின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும் ,இவர் டுவைட் உடன் பேசும் ஒரு காட்சி போதும் இவர் நடிப்பு திறமையை பாராட்ட ,

இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்ட கதாபாத்திரம் ஆலிவ் கதாபாத்திரம்



அழகி போட்டியில் தேர்வானதுகாக அவள் குதிப்பதாகட்டும் .ஹோட்டலில் அழுது கொண்டே தாத்தாவிடம் தன் தோற்க விரும்ப வில்லை என்று சொல்வதாகட்டும் அழகி போட்டிக்கு செல்லும் முன் தன் குண்டாகி இருக்கிறோமோ என்று கண்ணாடியில் பார்ப்பது ஆகட்டும்



நடன போட்டியில் தன் தாத்தா சொல்லி கொடுத்த படி ஆடுவாதாகட்டும் என ஆலிவ் அந்த அழகி போட்டியில் தோற்றலும் நம் மனதில் அழகியாக இடம் பிடிக்கிறாள் .

மேலும் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் மேலே சொன்ன ஆலன் அர்கின் ,ஸ்டீவ் காரல் தவிர யாரும் பெரிய நடிகர்களோ பெரிய டெக்னிசியன்களோ இல்லை,ஆனால அதை எல்லாம் தாண்டி கதையாலும் திரைகதையாலும் படம் நம்மை ஆக்கிரமிக்கிறது ,

இப் படத்தை இயக்கியது Jonathan dayton மற்றும் valrie faries என்ற கணவன் மனைவி இணைந்து இயக்கி இருக்கிறார்கள் ,இவர்கலுக்கு இது தான் முதல் படம் ,முதல் படமே முழு நிறைவான படமாக கொடுத்து இருக்கிறார்கள் ,

இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும் அப்போது வென்றது ,

நான் முதன் முதலில் இந்த படத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது .என்னடா நம்ம ஹாலிவுட் படம் தான் பாக்கிரோமோ என்று ஏன் என்றால் பொதுவாக ஹாலிவ்ட் படங்களில் சிறந்த படங்கள் என்று சொல்லும் படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் கமர்சியல் ஆக இருக்கும் அது லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றோ இல்லை அவதார் போன்றோ ஒன்று பிரமண்டமாக இருக்கும் ,

இல்லை புதுமையான திரைக்கதை என்று இன்செப்சன் போன்று நம் முளையை குழப்பி விடுவார்கள் ,இல்லை இது யுத்தம் பற்றிய படம் அதனால் நீங்கள் கண்டிப்பாக இதை சிறந்த படமாக ஒத்து கொள்ள வேண்டும் என்பது போல் வரும் பல யுத்தம் தழுவிய saving private rayan மற்றும் the hurt locker மற்றும் பல யுத்த படங்களும் நாசி மூகாம் படங்காலான பியானிஸ்ட் சின்லர்ஸ் லிஸ்ட் இது போன்ற படங்களை சொல்வார்கள் அதையும் மீறி பீல் குட் மூவி என்று சொல்லப்படும் பாரஸ்ட் கம்ப் போன்ற படங்களும் ஓவர் செண்டிமெண்ட ஆக இருக்கும்

எந்த ஒரு ஹாலிவுட் படமும் ஒரு இரானிய படம் போன்றோ இல்லை பிரஞ்சு ஜெர்மன் படம் போன்றோ எதார்த்தாமகாவும் உண்மையான பீல் குட் கொடுப்பதாகவும் இருக்காது ,ஆனால் இந்த லிட்டில் மிஸ் சண் சைன் எதார்த்தமும் உண்மையான பில் குட் கொடுக்கும் .இதில் பெரிய சண்டை காட்சிகளோ இல்லை முத்தம் ஆபாச காட்சிகளோ என்று ஹாலிவுட்டிற்கு உரிய எந்த கமர்சியல் அம்சமும் இல்லை ,

படத்தை முழுமையாக பார்த்து முடித்த பின் தோன்றிய ஒன்று .இன்று பல தொலைகாட்சிகளில் குழந்தைகளை கூப்பிட்டு வந்து அவர்களை பாட வைத்தும் ஆட வைத்தும் அவர்களுக்கு மார்க் போட்டு நீ சரியா ஆடல நீ சரியா பாடலா என்று சொல்கிறார்கள் ,

வேண்டாம் அவர்களுக்கு பள்ளி மட்டும் மார்க் போடட்டும் அவர்களை விட்டு விடுங்கள் .பாவம் 7 வயது பையனை டாடி மாமி வீட்டில் இல்லை என்று பாட வைத்து விட்டு அதில் சரியான ஏற்றம் இறக்கம் இல்லை என்று சொல்வதும் 8 வயது சிறுமியை கல்யாணம் தான் கட்டி கிட்டு ஓடி போவோமா என்று சிறிய ஆடைகளை போட்டு ஆட வைத்து விட்டு அதில் சரியான மூவ் மெண்ட் இல்லை என்று சொல்வதும் வேண்டாம் விட்டு விடுங்கள் அவர்களை தோல்வியை அவர்கள் சந்திக்க வேண்டிய வயதில் சந்திக்கட்டும் இப்போதே அவர்களுக்கு தோல்வியை கொடுக்காதிர்கள் ,வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்லாதிர்கள் .தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதி தான் அதை தாண்டி போக வேண்டும் என்று தட்டி கொடுங்கள் .


இறுதியாக மீண்டும் லிட்டில் மிஸ் சன்சைன் பற்றி ஹாலிவுட் ரசிகர்கள் பலருக்கு அடிக்கடி பார்க்கும் படங்கள் என்றால் சிலர் இன்செப்சனையும் இல்லை அவதார் டைட்டானிக் இல்லை ஏதாவது மிகவும் புகழ் பெற்ற இயக்குனர் படங்கள் எதையாவது ஒன்றை திரும்ப திரும்ப பார்க்கும் படமாக சொல்வார்கள் முன்பே சொன்னது போல்

ஆனால் எனக்கு எப்போதுமே All time favourite movie என்றால் அது லிட்டில் மிஸ் சன்சைன் ஆக தான் இருக்கும்  இந்த படத்தை பல முறை பார்த்து விட்டேன் ,எல்லா முறையும் ஒரு ரசிகனாக பார்த்து ரசிக்கின்றேன் ,ஒரு முறை கூட சலிக்க வில்லை ,எப்போது பார்த்தாலும் அந்த பீல் குட் பீலிங்கை எனக்கு இது தருகிறது ,

எனவே இதை பற்றி நான் சொல்லி கொண்டு போனால் அது இன்னும் போயி கொண்டே இருக்கும் அதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் ,உங்களுக்கு ஒரு நல்ல ஒரு அனுபவத்தையும் நல்ல பீலையும் கொடுக்க கூடிய படம் இது ,எனவே எல்லாரும் கண்டிப்பாக பாருங்கள் ,

(எப்படி இருந்தாலும் என் தளத்தை வாசிப்பவர்கள் குறைவு தான் இருந்தாலும் அவர்களுக்காக நீண்ட நாட்கள் கழித்து எழுதி இருப்பாதால் நான் சரியாக எழுத வில்லை என்று தோன்றினாலோ இல்லை பிழை இருந்தாலும் மன்னித்து விடுங்கள்  )








திங்கள், 5 அக்டோபர், 2015

TRAINSPOTTING (1996)- போதையும் ஏழ்மையும்

TRAINSPOTTING (1996)(english movie) 

போதை பொருள் இதற்கு அடிமையாகி இது தான் வாழ்க்கை என்று இந்த உலகில் பலர் வாழந்து கொண்டு இருக்கின்றனர் .அதிலும் நம் தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை .மாலை வீட்டிற்கு ஒழுங்காக செல்கிறார்களோ இல்லையோ பலர் பாருக்கு சென்று விடுகின்றனர் .தமிழ் நாட்டு போதை பழக்கத்தை பற்றி பேசினால் அது அரசியல் ஆகி விடும் .அதனால் அது வேண்டாம் .


சரி முன்பே சொன்னது போல பொதுவாக போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் பற்றி பேசுவோம் .போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எப்போதும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் .அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அந்த போதை பொருள் மட்டும்தான் ,அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள் .

அவர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு ,உடை ,இருப்பிடம் கிடைக்கமால் இருந்தால் கூட கவலை பட மாட்டார்கள் .அதே நேரத்தில் சரியான வேளையில் அவரகளுக்கு அந்த போதை பொருள் கிடைக்காவிட்டால் அவர்கள் வெறி பிடித்த மிருகமாக மாறி விடுவார்கள் .அந்த அளவு அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பனர் .சரி இந்த பதிவில் நம் பார்க்க போகும் திரைப்படமான TRAINSPOTTING  படமும் ஒரு போதை பழக்கத்துக்கு ஆளான நாயகன் வாழ்வும் அவன் எவ்வாறு அந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபடுகிறான் என்பதே கதை .



கதை 

மார்க் ரெண்டன் ஹெராயின் போதை பழக்கத்திற்கு ஆளான ஸ்காட்லான்ட் இளைஞன் .அவனும் அவன் நண்பர்கள் சிலரும் எப்போதுமே போதை ஊசி போட்டுக்கொண்டும் ஹெராயின் எடுத்து கொண்டும் மட்டும் வாழ்பவர்கள் .இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது போதை மட்டும் தான்

ரெண்டன் போதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன் .அவர்களோடு எப்போதும் ஒரு பெண்ணும் அவளின் குழந்தையும் அவர்களோடு இருக்கும் .அவளும் போதை எடுத்து கொள்பவள் .இந்த நிலையில் ரெண்டனும் அவன் நண்பர்களும் போதை பொருள் எடுத்து கொள்வதும் பப் பார்டி என்று இருப்பதுமாக இருக்கினறனர் .

அவர்களுக்கு தேவையான பணத்தை அவர்கள் அவ்வப்போது போதை பொருள் விற்று பெற்று கொள்கின்றனர் .இந்த நிலையில் ஒரு நாள் அவர்களோடு இருந்த அந்த பெண்ணின் குழந்தை கீழே இருக்கும் ஹெராயின் போதை பொருளை தெரியாமல் சாப்பிட அதனால் அந்த குழந்தை இறந்து விடுகிறது .அப்போதும் கூட ரெண்டன் மற்றும் அவன் நண்பர்கள் போதை பழக்கத்தை கை விடவில்லை மேலும் அதிகமாகத்தான் போதை பொருளை எடுத்து கொள்கின்றனர் .

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரெண்டனக்கு சரியாக பணம் கிடைக்கமால் போக அவனால் போதை பொருள் வாங்க முடியாத சூழநிலை ஏற்படுகிறது .இதனால் அவன் மிகவும் சிரமபடுகிறான் .பின் அவன் நண்பன் ஒருவனோடு சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு போதை பொருள் வாங்குகிறான் .ஒரு முறை திருடும் போது ரெண்டனும் அவன் நண்பனும் போலீசில் மாட்டி கொள்கின்றனர் .

ரெண்டனின் நண்பனுக்கு சிறை தண்டனையும் ரெண்டனை ஒரு மூன்று மாத காலம் மறுவாழ்வு மையத்திற்கும் போகுமாறு நீதிபதி திர்ப்பளிக்கிறார் .ஆனால் ரெண்டன் மறுவாழ்வு மையம் சென்றாலும் போதை பொருள் எடுத்து கொள்வதை விடவில்லை .இதனால் ரெண்டனின் பெற்றோர் அவனை வெளியே எங்கும் செல்லாதபடி வீட்டிற்குள் அவன் பெற்றோரால் சிறை வைக்க படுகிறான் .

இதனால் அவன் போதை பொருள் எடுத்த கொள்ள முடியமால் மிகவும் சிரம படுகிறான் .நரக வேதனை அனுபவிக்கிறான் .ஒரு சில நாட்களுக்கு பின் மனம் திருந்தி வெளியே வந்து ஒரு ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறான் .அதன் பின் அவன் ஒரு சாதாரண வாழ்கை வாழ பழகி கொள்கிறான் .அவனுக்கும் அது ஓரளவு பிடித்து போகிறது .ஒரு மாதம் அப்படி சாதரணமாக வாழ்ந்து வந்து கொண்டு இருக்கும் போது

ரெண்டனின் பழைய நண்பன் ஒருவன் போலிசிடிம் இருந்து தப்பி இவனிடிம் அடைக்கலம் புகுகிறான் .அவன் ரெண்டனை உள்ளே இருந்து கொண்டே அதிக வேலை வாங்குகிறான் .அது ரெண்டனுக்கு பிடிக்கவில்லை .அவனால் ரெண்டன் அதிகம் எரிச்சலடைகிறான் .ஆனால் அவனை வெளியே போக சொல்ல முடியவில்லை காரணம் அவன் ரெண்டனை விட வழுவானவன் .

இந்த நிலையில் ரெண்டனிடிம் ஓரளவு பணமும் இருக்க இடமும் இருப்பதை அறிந்து கொண்டு அவனுடைய இன்னொரு நண்பனும் அவனோடு வந்து தங்குகிறான் இருவரும் இருப்பது ரெண்டனுக்கு மிகவும் எரிச்சலாக உள்ளது .மேலும் இருவரும் அடிக்கடி போதை பொருள்கள் பற்றி பேசியும் போதை பொருள் எடுத்து கொண்டும் ரெண்டனுக்கு மீண்டும் போதை பொருள்களை ஞாபக படுத்துகின்றனர் .இந்த நிலையில் ரெண்டனை ஒரு போதை கடத்தலில் ஈடுபட அழைக்கின்றனர் .

அவன் மறுக்கிறான் .ஆனால் அவர்கள் அவனை விடவில்லை காரணம் ரெண்டனிடிம் மட்டுமே பணமும் பாஸ் போர்ட்ம் இருக்கிறது .எனவே இதை அவனால் மட்டும் பண்ண முடியும் அதனால் பண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர் .இதனால் ரெண்டன் அவர்களிடிம் சொல்லமால் அவர்களை ஹோட்டலில் தனியாக விட்டு விட்டு தப்பி விடுகிறான் .

அதன் பின் ரெண்டன் மீண்டும் அவர்களிடிம் மாட்டி கொள்கிறான் .சரி கடைசியாக அதை பண்ணி விடுவோம் என்று  ஒத்துக்கொள்கிறான்.அந்த போதை பொருள் கடத்தலை நண்பர்களோடு சேர்ந்து சரியாக பண்ணி பணமும் நிறைய பெற்று விடுகிறான் .

அன்றைய இரவு அவன் நண்பர்கள் அனைவரும் தூங்கிய பின் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிடுகிறான் .முடிவில் அந்த பணத்தை வைத்து கொண்டு  நானும் மற்றவர்கள் போல வாழ போகிறேன் என்று சொல்லி முடிக்கிறான் .

படத்தை பற்றி

இப்படம் போதை எப்படி இளைஞர்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அருமையாக காட்டுகிறது .போதையால் திருடுவது எப்போதும் போதை பொருள் தயாரித்து கொண்டு இருப்பது போதை பொருள் எடுத்து கொண்டதால் தெரியமால் பள்ளி சிறுமியோடு உடலுறவு வைத்து கொள்வது போதை பொருளுக்காக எப்போதும் தன் 3 மாத குழந்தையை கூட கண்டு கொள்ளாத பெண்மணி போதை எடுத்து கொள்ள முடியாமல் நாயகன் படும் அவ்சத்தை என்று போதை  வாழ்வை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை எடுத்து  காட்டுகிறது .

இப்படத்தை பற்றி மேலும்  சொல்ல வேண்டுமென்றால் இப்படத்தின் பலமே இதன் வசனங்களும் ஒளிப்பதிவும்தான் .குறிப்பாக வசனங்கள் .சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் மூடர் கூடத்திற்கு அடுத்து இப்படத்தில்தான் வசனங்கள் வழுவாக இருப்பதாக உணர்கிறேன் .இன்னும் சொல்ல போனால் மூடர் கூடமும் இந்த படத்தின் வசனங்களும் பல காட்சிகளில் ஒரு பொருளை பேசுவதை உணர முடிகிறது 

உதாரணமாக படத்தின் ஆரம்ப காட்சியில் நாயகன் பேசும் வசனங்கள் 

"எல்லாரும் ஒரு நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க விரும்பின்றனர் .நல்ல வேலையில் சேர விரும்புகின்றன்ர் .குடும்பத்தை நல்ல விதமாக அமைக்க விரும்புகின்றனர் .அதன் பின் அவர்கள் டிவி ,பிரிட்ஜ் ,வாசிங் மெசின் ,சிடி பிளேர் மற்ற பல மின் சாதனங்கள் எல்லாம் வாங்க விரும்புகின்றனர் .ஒரு நிம்மதியான ஞாயிற்று கிழமையில் பொழுது போக்க விரும்புகின்றனர் .

ஆனால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை விருப்பமும் இல்லை நான் தேர்ந்துடுத்து உள்ளது எல்லாம் ஹெராயின் மட்டுமே அதற்கு என்ன காரணம் என்று தெரியாது .ஆனால் இதான் என் வாழ்க்கை "

எவ்வளவு  எதார்த்தமாக நம் வாழும் வாழ்கையை எள்ளி நகையாடும் வசனம் இது .

அடுத்ததாக எனக்கு பிடித்த இன்னொரு வசனமும் உள்ளது .ஒரு மலை அடிவாரத்திற்கு ரெண்டனும் ரெண்டனின் நண்பர்களும் போவார்கள் .அங்கே போயி கொண்டு எல்லாரும் இயற்கையை ரசித்து கொண்டு இருக்கும் போது ரெண்டன் மட்டும் அந்த பக்கம் திரும்பி இருப்பன் .அவனை வா இயற்கையை ரசிக்கலாம் என்று அவன் நண்பன் ஒருவன் கூப்பிடும் போது சொல்வான் .நமக்கு இயற்கையை ரசிக்க என்ன தகுதி இருக்கிறது .நம் எல்லாம் அடிமட்டதிற்கும் கீழே உள்ளவர்கள் நாம் இயற்கையை ரசித்து என்ன ஆக போகிறது (we are the lowest of the low)


ஏழ்மை இயற்கை கூட ரசிக்க விடாமல் செய்கிறது என்பதை காட்டும் வசனம் .இதே போல் மூடர் கூடம் படத்தில் வரும் வசனத்தை நினைவிருத்துகிறது .காதல் தோல்வியை பற்றி சொல்லும் போது நாயகன் நவீன் சொல்லும் வசனம் நமக்கு எதற்கு இந்த தேவை இல்லாத காதல் என்று .ஏழ்மை பலவற்றையும் புறக்கணிக்கிறது என்பது போன்ற வசனம் .

அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் பேசும் வசனம் "எல்லாரும் என்னை கெட்டவன் என நினைக்கின்றனர் ..நான் நல்லவனாக மாற வேண்டும் அதற்கு நானும் எல்லாரையும் போல நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க போகிறேன் .உங்களை போல் ஒரு குடும்பம் அதன் பின் டிவி ,பிரிட்ஜ் வாசிங் மெசின் என்று மற்றும் பல பொருள்களை சொல்லி கொண்டே போவான் .இதலாம் இருப்பது தான் நல்ல வாழ்க்கை என்றால் அதை நான் வாழ்கிறேன் என்பான் .

இதுவும் வாழ்கையை பற்றி எல்லாரும் ஒரு கோட்பாட்டை உருவாக்கி இருப்பதை பற்றி எள்ளி நகையாடும் வசனம் .

அதற்கு அடுத்து இந்த படத்தின் மற்றொரு பலம்  ஒளிப்பதிவு இதில் பல விதாமான வித்தியாசமான கேமரா மூவ்மெண்ட்களும் வித்தியசமான சாட்களும் பயன்படுத்தபட்டிருக்கிறது .அவை எல்லாம் நாயகனின் மன நிலையை எடுத்து காட்டுவது போல அமைக்கப்பட்டு உள்ளது .

அடுத்ததாக படத்தின் இயக்குனர் டேனி பாயல் (Danny boyle)

ஆம் அதே slumdog millionaire படத்தை இயக்கிய டேனி பாயல்

  DannyBoyle08.jpg


அந்த படத்திற்கு A.R.ரகுமானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கியது நினைவு இருக்கலாம் slumdog millionaire படம் பலரால் பாராட்டப்பட்டாலும் ஆஸ்கார் வாங்கினாலும் பலர் அந்த படத்தை விமர்சித்தார்கள் .இந்தியாவை மிக ஏழ்மை நாடாக காட்டி உள்ளார் .அவர் இந்தியாவை ஏழ்மை நாடாக காட்டவில்லை ,இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதி ஏழைகளை மட்டும் காட்டி உள்ளார் .

இந்த படத்திலும் அப்படிதான் லண்டனில் இருக்கும் ஸ்காட்லான்ட் பகுதி ஏழை இளைங்கர்கள் வாழ்வு எப்படி ஏழ்மையோடும் போதையோடும் இருப்பதை காட்டி உள்ளார் .slumdog millionaire படத்தில் சிறுவன் மலத்தில் விழுந்து அதோடு போயி அங்கு ஷூட்டிங் வந்து இருக்கும் அமிதாப் பச்சனிடம் ஆட்டோ கிராப் வாங்குவது போல் அமைத்த காட்சியை பலர் இப்படி எல்லாம் காட்சி வைப்பதா என்று பலர் திட்டினார்கள் .

இதிலும் ஒரு காட்சி வரும் கழிவறைக்கு செல்லும் நாயகன் தெரியமால் போதை மாத்திரையை அந்த மல குழியில் விழுந்து விட அவன் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த மல குழியிலே முழ்கி தேடுவான் .அந்த அளவு அவன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளான் என்பதை காட்டும் ஒரு முக்கியாமான காட்சி .இந்த காட்சியை slumdog millionaire படத்தில் மலத்தில் விழுந்து நடிகனிடிம்  ஆட்டோகிராப் வாங்கும் காட்சியோடு ஒப்பிடும் போது சினிமாவும் ஒரு போதை பொருள் என்பதை சொல்லமால் சொல்கிறார் .

போதை பொருளுக்கு அடிமையான்வனவனும் சினிமாவின் தன் விருப்பமான சாகச நாயகனுக்கு ரசிகனாக உள்ளவனும் அதற்காக எது வேண்டும்னாலும் செய்வான் என்பதை சொல்கிறது இந்த ரெண்டு காட்சிகளும் .

முடிவாக வழக்கம் போல சினிமாவை விரும்பவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் .அடுத்த படியாக  இப்படத்தை யார் பார்க்கிறிர்களோ இல்லையோ ஒளிப்பதிவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .ஏன் என்றால் இதில் வரும் பல வித்தியாசமான் சாட்களை பார்த்து கொண்டு அதை reference ஆக எடுத்து கொள்ளாலாம் எனவே ஒளிப்பதிவு துறை சேர்ந்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் .மற்றவர்களும் பார்க்கலாம் .

(பி .கு )சமிபத்தில் இப்படத்தின் இயக்குனர்  டேனி பாயல் 20 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கூறியுள்ளார் .முதல் பாகம் கொடுத்த தாக்கத்தை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று பொறுத்து பார்ப்போம் .





ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

SHAHID (2012)(hindi)

SHAHID (2012)(hindi)

இந்த  முறை ராபர்ட் ட்வேனி ஜூனியர் நடித்த the judge (2014) படத்தை பற்றிதான் பதிவாக எழுதாலம் என்று முடிவு செய்து இருந்தேன் ,ஆனால் அதை விட SHAHID படம் ஒரு எதார்த்தமான கோர்ட் ரூம் டிராமாவாக இருப்பதால் இந்த படத்தை பற்றி எழுதுகிறேன் 

Shahid Poster (2013).jpg

சாஹித் படத்தை பார்க்கும் முன் கோர்ட் ரூம் டிராமா  வகை பற்றி பாப்போம் .அதன் பெயரிலே நமக்கு ஓரளவு புரிந்தாலும் மேலும் பார்ப்போம் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் என்பவை நீதிமன்றங்களை கதை களமாகவும் வக்கீல்களையும் நீதிபதிகளையும் முக்கிய கதாபாதிரங்களாக கொண்டு  எடுக்கப்படும் படம் .
இந்த வகை படங்களில் பெரும்பாலும் ஒரு அறை அதாவது நீதிமன்ற அறை அதில் மட்டும் காட்சிகளை வைத்து கொண்டு திரைக்கதையை விறுவிறுப்பாக்கலாம் .சேசிங் காட்சிகளோ  சண்டை காட்சிகளோ அவளவாக தேவைப்படாது .இரண்டு வக்கீல்களுக்கு இடையே நடைபெறும் வாத காட்சிகளே படத்தை விறுவிறுப்பாக்கி விடும் .மேலும் பார்வையாளர்களும் கோர்ட்டில் இருப்பதை போல் உணர்வார்கள் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் ஹாலிவுட்டில்  பல சிறப்பான படங்கள் வந்துள்ளன .அதற்கு தொடக்கப்புள்ளியாக நம்மில் பலர் சிறப்பாக இன்றும் பேசும் சிட்னி லுமேண்ட்டின் 12 angry man படத்தை சொல்லலாம் .அதன் பின் 1962ல் வெளிவந்து பல ஆஸ்கார் விருதுகளை வென்ற To Kill a Mockingbird  படத்தை சொல்லலாம் . இன்றும் இப்படங்கள் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் சிறந்த படங்களாக உள்ளன .அதன் பின் பல சிறந்த படங்கள் இந்த வகையில் உள்ளன   The verdict ,I am sam,Amisted,my cousin vinny, போன்று பல படங்கள் உள்ளன .
சரி இனி தமிழுக்கு வருவோம் ஓரளவு நன்றாக யோசித்து பார்த்தால் நம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது ஒரு கோர்ட் ரூம் டிராமா  வகை  படம்தான் .ஆம் அது 1952ல் வெளிவந்த சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் .ஒரு வகையில் இது முழுவதும் கோர்ட் ரூம் டிராமா  வகையை சார்ந்த படம் இல்லை.இருப்பினும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சில் வரும் கோர்ட் ரூம் காட்சிகளும் சிவாஜி கணேசன் பேசும் கருணாநிதியின் வசனங்களும் தான் இதை கோர்ட் ரூம் டிராமா  வகை படமாக்கியது .மேலும் அது வரை காதல் படங்களிலும் மன்னர் கால படங்களிலும் முழுதும் பாடல்களால் ஆக்கப்பட்ட படங்களில் இருந்தும்  பராசக்தி காப்பற்றி தமிழ் சினிமாவிற்கு வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது ,மேலும் இப்படத்திற்கு பின்தான் பாடல்கள் குறைந்து வசனங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன .
இந்த படத்தில் நீதிமன்றங்களில் வரும் காட்சிகளில் சிவாஜி கணேசன் நடிப்பும் அவருடைய வசன உச்சரிப்பும் யாராலும் இனி எப்போதும் பண்ண முடியாத ஒன்றாகும் .ஏன் பல வட்டார மொழிகள் பேசும் நம் உலக நாயகனால் கூட இந்த அளவு தமிழை ஆக்ரோசமாக உச்சரிக்க முடியுமா எனபது சந்தேகமே .

பராசக்திக்கு பின் அவளவாக கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் சிறிது காலம் வரவில்லை .ஆனால் அதையும் சிவாஜி கணேசன்தான் தீர்த்து வைத்தார் .1973ல் அவர் நடிப்பில் வெளிவந்த கெளரவம் படம்தான் அது வியட்நாம் வீடு சுந்தரம் இப்படத்தை இயக்கி இருந்தார் .ஒரு வகையில் இதுதான் தமிழில் வந்த முதல் முழு நீள கோர்ட் ரூம் டிராமா திரைப்படமாக இருக்க வேண்டும் .
Gauravam.jpg

இதிலும் இரு கதாபாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார் .மேலும் இதில்தான் தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகளை பார்த்தனர் .என்னை பொறுத்த வரையில் ஹாலிவுட்டிற்கு 12 angry man இருக்கிறதோ தமிழுக்கு இந்த படம் .
அதன் பின்னும் தமிழில் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் வர சிறிது காலம் ஆகியது .
அதன் பின் 1984ல் வெளிவந்த மோகன் ,பூர்ணிமா மற்றும் சுஜாதா  நடிப்பில் வெளிவந்த விதி (நியாம் கவாலி  தெலுங்கு படத்தின் ரீமேக் ) திரைப்படம்தான் அடை பூர்த்தி செய்தது .இதுவும் முழு நீள கோர்ட் ரூம் டிராமா படமாகும் இதிலும் கெளரவம் படத்திற்கு இணையான விவாத காட்சிகள் இருக்கும் .மேலும் இப்படத்தின் வெற்றிக்கு பின் இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .
அதன் பின் ஜெயராம் ,ரேவதி மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த பிரியங்கா படமும் ஒரு சிறப்பான கோர்ட் ரூம் டிராமா படமாகும் .அதே போல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த மௌனம் சம்மதம் திரைப்படம் கோர்ட் ரூம் டிராமாவை வைத்து ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாக்கபட்ட படம் .
ஓரளவு நம் காலத்தில் வந்துள்ள படங்களை எடுத்தால் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படம் . இவர் முதல்வன் படத்தின் வாய்ப்பை இழந்ததற்காக அதே போல இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன் .முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுன் முதல்வன் ஆக இருந்து செய்ததை இதில் விஜய் வக்கீல் ஆக இருந்து செய்வார் .உண்மையில் ஒரு வக்கீலால் இவளவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான் எனவே இந்த படம் முழுதும் நீதிமன்றத்தை வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும் சிறந்த கோர்ட் ரூம் டிராமா படமாக அமையவில்லை .
அதே போல் சிட்டிசன் திரைப்படம் விஜய் எப்படி முதல்வன் படத்தை நினைத்து கொண்டு தமிழன் படத்தை எடுத்தாரோ அதே போல் அஜீத்தும் இந்தியன் திரைப்படத்தையும் பராசக்தி திரைப்படத்தையும் நினைத்து இப்படத்தை எடுத்து இருப்பார் போல .இருப்பினும் தமிழன் திரைப்படம் போல இது மோசம் அல்ல முதல் பாதி விறுவிறுப்பான திரைக்கதையும் இரண்டாம் பாதி உணர்ச்சி பூர்வாமன flashback காட்சிகளும் ஓரளவு இப்படத்தை சிறப்பாக கொண்டு போயிருக்கும் .ஆனால் இதில் கிளைமாக்ஸ் இல் வரும் நீதிமன்ற காட்சிகள்தான்  இதன் குறை .  அஜீத்  பராசக்தி படத்தில்  சிவாஜி உணர்ச்சிபுர்வமாகவும்  ஆக்ரோசமாகவும் நீதிமன்றத்தில் பேசுவது போல இதில் பேச முயன்று இருப்பார் .ஆனால் அவர் தமிழ் உச்சரிப்பும் அவரே கொண்டு வரும் புது சட்டங்களும் என்று இப்படத்தை சொதப்பியது
அடுத்து தெய்வ திருமகள்  I am Sam படத்தின் காப்பி என்பதை தாண்டி இப்படத்தை பார்த்தால் இதிலும் நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அதிலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் எதிர்த்தரப்பு வக்கீல் ஆக இருக்கும் நாசர் விக்ரம் மன வளர்ச்சி குன்றியவர் என்றும் அவரால் குழந்தையை முறையாக வளர்க்க முடியாது என்று நீருபித்து விடுவார் .ஆனால் குழந்தை அவரடிம் வளர்வதில் எனக்கு எந்த ஆச்சபனையும் இல்லை என்பார் .இது எனக்கு புரியவில்லை எல்லாம் நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ? இதை பற்றி எனக்கு தெரிந்த ஒரு சிலரிடம் கேட்ட போது எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் போதும் விட்டுவிடுவார்கள் என்றார்கள் .(ஒரு வேலை கொலை குற்றவாளி ஒருவனின் குற்றங்களை நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னாலும் விட்டுவிடுவார்களா ?) ஒரு வேளை எனக்குத்தான் பொது அறிவு  சட்ட அறிவும் பத்தவில்லை போல .
அடுத்து இந்த வருடம் வெளியான விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் இதில் கதைப்படி நாயகனும் நாயகியும் வக்கீல்கள் அப்படி இருக்கும் போது  நீதிமன்ற காட்சிகள் எப்படி வந்து இருக்க வேண்டும் ஆனால் இந்த படத்தில் நீதி மன்ற காட்சிகள் மொத்தமே பத்து நிமிடங்கள் தான் வரும் .சச்சின் படத்தில் விஜய் கல்லூரி மாணவர் என்பார்கள் .ஆனால் அப்படத்தில் கடைசி வரை கல்லூரியையும் வகுப்புகளையும் காட்டவே மாட்டார்கள் அது போலத்தான் இந்தியா பாகிஸ்தான் படமும் ஒழுங்காக நீதி மன்ற காட்சிகளை வைத்து இருக்க மாட்டார்கள் .
என்னை பொறுத்த வரையில் தமிழில் கெளரவம்,விதி படங்களுக்கு பின்பு ஒரு சிறந்த கோர்ட் ரூம் டிராமா படங்கள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுப்பதில் உள்ள சிக்கல் சட்ட அறிவு நன்கு தெரிந்திருக்க வேண்டும் .மேலும் நேற்று வந்த நடிகர்களாகட்டும் இன்று உள்ள நடிகர்களாகட்டும் நாளை வரப்போகிற நடிகர்களாகட்டும் அனைவரும் இரண்டு படங்கள் நடித்த பின் போலீஸ் வேடத்தில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் வக்கீல் வேடத்தை யாரும் விரும்புவதில்லை .
சரி மேலே குறிப்பிட்ட படங்களிலும் வரும் நீதிமன்ற காட்சிகளுக்கும் இயக்குனர் பாலா அவர்களின் படத்தில் நீதிமன்ற காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் .இது பற்றி நண்பன் ஒருவனிடம் கேட்ட போது அவன் சொன்னது பாலா படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நீதிமன்றங்கள் நடக்கும் என்று சொன்னான் வக்கீல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வாதாடுவார்கள் என்றும் சாட்சிகளை விசாரிக்கும் போது மட்டும்தான் தமிழில் பேசுவார்கள் .நீதிபதியும் தீர்ப்பை வழங்கும் போதும் ஆங்கிலத்தில்த்தான் சொல்வார்கள் என்றான் .அப்போதுதான் தெரிந்தது நம் சினிமாவில் பார்ப்பது எல்லாம் ரசிகர்களுக்கு ஆக வைக்கப்பட்டது .எது எப்படி இருந்தாலும் கோர்ட் ரூம் டிராமா வகை படங்களுக்கு நல்ல விவாத காட்சிகள் மட்டும் போதும் .
சரி சாஹித் படத்தை பற்றி
இது உண்மை கதை தழுவி எடுக்கப்பட்ட படம் .ஷாஹித் ஆஸ்மி என்ற வக்கீல் ஒருவரின் வாழ்கையை எடுத்து கொண்டு அவர் எப்படி வக்கீலாக இருந்து பலரை காப்பாற்றினார் என்பதை படமாக ஆக்கியுள்ளனர் .
படத்தின் கதை
ஷாஹித் ஆஸ்மி என்பவர் காஸ்மீரில் தாய் மற்றும் 3 சகோதரர்களுடன் வாழ்பவர் .ஆரம்பத்தில் காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தில் சிறிது காலம் இருக்கிறார் ,ஆனால் அங்கு உள்ள வன்முறை பிடிக்கமால் பாதிலே ஊருக்கு திரும்பி விடுகிறார் .ஆனால் இவரை போலீஸ் பிடித்து செல்கிறது .சிறைக்கு செல்லும் ஷாஹித் அங்கு ஏற்கனவே சிறையில் இருக்கும் வார் சாஹிப் என்பவரின் அறிவுரையின் மூலம் திருந்தி வாழ நினைக்கிறார் .மேலும் அவரின் உதவியால் சட்டம் படிக்கிறார் .
விடுதலை ஆன பின் வக்கீலாகிறார் .ஒருவரிடம் ஜூனியர் வக்கீலாக இருக்கிறார் .ஆனால் பின் தனியாக வந்து அவரே ஒரு சட்ட அலுவலகம் தொடங்கி வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .
வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வழக்கம் இருக்கிறது அதவாது எதவாது குண்டு வெடிப்போ இல்லை தீவிரவாத தாக்குதலோ நடந்தால் போலீஸ்க்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் யாரவது ஒரு ஏழை இஸ்லாமியாரை புடித்து சென்று விடுவார்கள் .சாஹித்க்கு அது போன்றவர்களுக்கு வாதட விரும்பி பின்னர் முழுதுமே அது போன்ற வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .இதற்கு இடையில் ஒரு விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .

ஆரம்பத்தில் நன்கு போகும் அவர் வாழ்க்கை ஒரு கட்டத்திற்கு பின் சாஹித் அதிகமான இஸ்லாமியரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவும் அவருக்கு பல அமைப்புகளில் இருந்து மிரட்டல் வருகிறது .மேலும் தெரியாத நபர்கள் தொலைபேசியில் அவரை மிரட்டுகின்றனர் .அவர் குடும்பத்தை கூட மிரட்டுகின்றனர் .அனால் மிரட்டல்களுக்கு பயப்படமால் அவர் தொடர்ந்து வாதாடி விடுதலை பெற்று தருகிறார் .



ஆனால் தொடர் மிரட்டல்களால் அவரின் மனைவி அவரை பிரிந்து செல்கிறார் .மேலும் அவர் மீதும் நீதிமன்ற வாசலிலேயே கருப்பு மையை தெரியாத நபர்கள் பூசி அவரை அசிங்க படுத்துகின்றனர் .
இறுதியில் ஒருவருக்கு வாதாடி கொண்டு இருக்கும் கால கட்டத்தில் அவருக்கு வாதடதே என்று சாஹித்க்கு கொலை மிரட்டல் வருகிறது .ஆனால் அதையும் மீறி அவர் வாதாடுகிறார் .இதனால் வழக்கு முடியும் முன் அவர் கொல்லப்படுகிறார் .தான் இருந்த வரை அவர் 16 பேருக்கு விடுதலை வாங்கி தந்துள்ளார் .

முன்பே சொன்னது போல் இது உண்மை கதை என்பதால் இதன் கதை அமைப்பில் நான் குறை சொல்ல விரும்பவில்லை .அதே போல் இதிலுருக்கும் அரசியலையும் நான் பேசவில்லை .

மாறாக இதில் உள்ள நீதிமன்ற விவிவாத காட்சிகள் அது மிகவும் நன்றாக உள்ளது .அது போல் நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் பாலா படத்தில் உள்ளது போல் மிக எதார்த்தமாக உள்ளது .இவ்வளவு எதார்த்தமான நீதி மன்ற காட்சிகளை நான் இந்தியாவில் எந்த படத்திலும் பார்த்தது இல்லை ,

அதே நேரத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவு எதார்த்த படத்திற்கு எப்படி ஒளிப்பதிவு இருக்க வேண்டுமோ அப்படி உள்ளது .வேறு எதையும் ஒளிப்பதிவிற்கு என்று சேர்க்கவில்லை .அதே போல் இசை .இதில் பின்னணி இசை கிடையாது ஒரே ஒரு பாடல் மட்டும் பின்னணியாக அவ்வப்போது ஒலிக்கிறது .
இந்த படம் 2014ம் ஆண்டு தேசிய விருதில் இதில் சாஹித் ஆக நடித்த ராஜ்குமார் ராவ்  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
மேலும் இதன் இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறந்த இயக்குனர்க்கான தேசிய விருதை வென்றார் .

முடிவாக கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுக்க விரும்புவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும் .மற்றவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும்