திங்கள், 5 அக்டோபர், 2015

TRAINSPOTTING (1996)- போதையும் ஏழ்மையும்

TRAINSPOTTING (1996)(english movie) 

போதை பொருள் இதற்கு அடிமையாகி இது தான் வாழ்க்கை என்று இந்த உலகில் பலர் வாழந்து கொண்டு இருக்கின்றனர் .அதிலும் நம் தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை .மாலை வீட்டிற்கு ஒழுங்காக செல்கிறார்களோ இல்லையோ பலர் பாருக்கு சென்று விடுகின்றனர் .தமிழ் நாட்டு போதை பழக்கத்தை பற்றி பேசினால் அது அரசியல் ஆகி விடும் .அதனால் அது வேண்டாம் .


சரி முன்பே சொன்னது போல பொதுவாக போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் பற்றி பேசுவோம் .போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எப்போதும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் .அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அந்த போதை பொருள் மட்டும்தான் ,அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள் .

அவர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு ,உடை ,இருப்பிடம் கிடைக்கமால் இருந்தால் கூட கவலை பட மாட்டார்கள் .அதே நேரத்தில் சரியான வேளையில் அவரகளுக்கு அந்த போதை பொருள் கிடைக்காவிட்டால் அவர்கள் வெறி பிடித்த மிருகமாக மாறி விடுவார்கள் .அந்த அளவு அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பனர் .சரி இந்த பதிவில் நம் பார்க்க போகும் திரைப்படமான TRAINSPOTTING  படமும் ஒரு போதை பழக்கத்துக்கு ஆளான நாயகன் வாழ்வும் அவன் எவ்வாறு அந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபடுகிறான் என்பதே கதை .



கதை 

மார்க் ரெண்டன் ஹெராயின் போதை பழக்கத்திற்கு ஆளான ஸ்காட்லான்ட் இளைஞன் .அவனும் அவன் நண்பர்கள் சிலரும் எப்போதுமே போதை ஊசி போட்டுக்கொண்டும் ஹெராயின் எடுத்து கொண்டும் மட்டும் வாழ்பவர்கள் .இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது போதை மட்டும் தான்

ரெண்டன் போதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன் .அவர்களோடு எப்போதும் ஒரு பெண்ணும் அவளின் குழந்தையும் அவர்களோடு இருக்கும் .அவளும் போதை எடுத்து கொள்பவள் .இந்த நிலையில் ரெண்டனும் அவன் நண்பர்களும் போதை பொருள் எடுத்து கொள்வதும் பப் பார்டி என்று இருப்பதுமாக இருக்கினறனர் .

அவர்களுக்கு தேவையான பணத்தை அவர்கள் அவ்வப்போது போதை பொருள் விற்று பெற்று கொள்கின்றனர் .இந்த நிலையில் ஒரு நாள் அவர்களோடு இருந்த அந்த பெண்ணின் குழந்தை கீழே இருக்கும் ஹெராயின் போதை பொருளை தெரியாமல் சாப்பிட அதனால் அந்த குழந்தை இறந்து விடுகிறது .அப்போதும் கூட ரெண்டன் மற்றும் அவன் நண்பர்கள் போதை பழக்கத்தை கை விடவில்லை மேலும் அதிகமாகத்தான் போதை பொருளை எடுத்து கொள்கின்றனர் .

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரெண்டனக்கு சரியாக பணம் கிடைக்கமால் போக அவனால் போதை பொருள் வாங்க முடியாத சூழநிலை ஏற்படுகிறது .இதனால் அவன் மிகவும் சிரமபடுகிறான் .பின் அவன் நண்பன் ஒருவனோடு சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு போதை பொருள் வாங்குகிறான் .ஒரு முறை திருடும் போது ரெண்டனும் அவன் நண்பனும் போலீசில் மாட்டி கொள்கின்றனர் .

ரெண்டனின் நண்பனுக்கு சிறை தண்டனையும் ரெண்டனை ஒரு மூன்று மாத காலம் மறுவாழ்வு மையத்திற்கும் போகுமாறு நீதிபதி திர்ப்பளிக்கிறார் .ஆனால் ரெண்டன் மறுவாழ்வு மையம் சென்றாலும் போதை பொருள் எடுத்து கொள்வதை விடவில்லை .இதனால் ரெண்டனின் பெற்றோர் அவனை வெளியே எங்கும் செல்லாதபடி வீட்டிற்குள் அவன் பெற்றோரால் சிறை வைக்க படுகிறான் .

இதனால் அவன் போதை பொருள் எடுத்த கொள்ள முடியமால் மிகவும் சிரம படுகிறான் .நரக வேதனை அனுபவிக்கிறான் .ஒரு சில நாட்களுக்கு பின் மனம் திருந்தி வெளியே வந்து ஒரு ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறான் .அதன் பின் அவன் ஒரு சாதாரண வாழ்கை வாழ பழகி கொள்கிறான் .அவனுக்கும் அது ஓரளவு பிடித்து போகிறது .ஒரு மாதம் அப்படி சாதரணமாக வாழ்ந்து வந்து கொண்டு இருக்கும் போது

ரெண்டனின் பழைய நண்பன் ஒருவன் போலிசிடிம் இருந்து தப்பி இவனிடிம் அடைக்கலம் புகுகிறான் .அவன் ரெண்டனை உள்ளே இருந்து கொண்டே அதிக வேலை வாங்குகிறான் .அது ரெண்டனுக்கு பிடிக்கவில்லை .அவனால் ரெண்டன் அதிகம் எரிச்சலடைகிறான் .ஆனால் அவனை வெளியே போக சொல்ல முடியவில்லை காரணம் அவன் ரெண்டனை விட வழுவானவன் .

இந்த நிலையில் ரெண்டனிடிம் ஓரளவு பணமும் இருக்க இடமும் இருப்பதை அறிந்து கொண்டு அவனுடைய இன்னொரு நண்பனும் அவனோடு வந்து தங்குகிறான் இருவரும் இருப்பது ரெண்டனுக்கு மிகவும் எரிச்சலாக உள்ளது .மேலும் இருவரும் அடிக்கடி போதை பொருள்கள் பற்றி பேசியும் போதை பொருள் எடுத்து கொண்டும் ரெண்டனுக்கு மீண்டும் போதை பொருள்களை ஞாபக படுத்துகின்றனர் .இந்த நிலையில் ரெண்டனை ஒரு போதை கடத்தலில் ஈடுபட அழைக்கின்றனர் .

அவன் மறுக்கிறான் .ஆனால் அவர்கள் அவனை விடவில்லை காரணம் ரெண்டனிடிம் மட்டுமே பணமும் பாஸ் போர்ட்ம் இருக்கிறது .எனவே இதை அவனால் மட்டும் பண்ண முடியும் அதனால் பண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர் .இதனால் ரெண்டன் அவர்களிடிம் சொல்லமால் அவர்களை ஹோட்டலில் தனியாக விட்டு விட்டு தப்பி விடுகிறான் .

அதன் பின் ரெண்டன் மீண்டும் அவர்களிடிம் மாட்டி கொள்கிறான் .சரி கடைசியாக அதை பண்ணி விடுவோம் என்று  ஒத்துக்கொள்கிறான்.அந்த போதை பொருள் கடத்தலை நண்பர்களோடு சேர்ந்து சரியாக பண்ணி பணமும் நிறைய பெற்று விடுகிறான் .

அன்றைய இரவு அவன் நண்பர்கள் அனைவரும் தூங்கிய பின் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிடுகிறான் .முடிவில் அந்த பணத்தை வைத்து கொண்டு  நானும் மற்றவர்கள் போல வாழ போகிறேன் என்று சொல்லி முடிக்கிறான் .

படத்தை பற்றி

இப்படம் போதை எப்படி இளைஞர்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அருமையாக காட்டுகிறது .போதையால் திருடுவது எப்போதும் போதை பொருள் தயாரித்து கொண்டு இருப்பது போதை பொருள் எடுத்து கொண்டதால் தெரியமால் பள்ளி சிறுமியோடு உடலுறவு வைத்து கொள்வது போதை பொருளுக்காக எப்போதும் தன் 3 மாத குழந்தையை கூட கண்டு கொள்ளாத பெண்மணி போதை எடுத்து கொள்ள முடியாமல் நாயகன் படும் அவ்சத்தை என்று போதை  வாழ்வை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை எடுத்து  காட்டுகிறது .

இப்படத்தை பற்றி மேலும்  சொல்ல வேண்டுமென்றால் இப்படத்தின் பலமே இதன் வசனங்களும் ஒளிப்பதிவும்தான் .குறிப்பாக வசனங்கள் .சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் மூடர் கூடத்திற்கு அடுத்து இப்படத்தில்தான் வசனங்கள் வழுவாக இருப்பதாக உணர்கிறேன் .இன்னும் சொல்ல போனால் மூடர் கூடமும் இந்த படத்தின் வசனங்களும் பல காட்சிகளில் ஒரு பொருளை பேசுவதை உணர முடிகிறது 

உதாரணமாக படத்தின் ஆரம்ப காட்சியில் நாயகன் பேசும் வசனங்கள் 

"எல்லாரும் ஒரு நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க விரும்பின்றனர் .நல்ல வேலையில் சேர விரும்புகின்றன்ர் .குடும்பத்தை நல்ல விதமாக அமைக்க விரும்புகின்றனர் .அதன் பின் அவர்கள் டிவி ,பிரிட்ஜ் ,வாசிங் மெசின் ,சிடி பிளேர் மற்ற பல மின் சாதனங்கள் எல்லாம் வாங்க விரும்புகின்றனர் .ஒரு நிம்மதியான ஞாயிற்று கிழமையில் பொழுது போக்க விரும்புகின்றனர் .

ஆனால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை விருப்பமும் இல்லை நான் தேர்ந்துடுத்து உள்ளது எல்லாம் ஹெராயின் மட்டுமே அதற்கு என்ன காரணம் என்று தெரியாது .ஆனால் இதான் என் வாழ்க்கை "

எவ்வளவு  எதார்த்தமாக நம் வாழும் வாழ்கையை எள்ளி நகையாடும் வசனம் இது .

அடுத்ததாக எனக்கு பிடித்த இன்னொரு வசனமும் உள்ளது .ஒரு மலை அடிவாரத்திற்கு ரெண்டனும் ரெண்டனின் நண்பர்களும் போவார்கள் .அங்கே போயி கொண்டு எல்லாரும் இயற்கையை ரசித்து கொண்டு இருக்கும் போது ரெண்டன் மட்டும் அந்த பக்கம் திரும்பி இருப்பன் .அவனை வா இயற்கையை ரசிக்கலாம் என்று அவன் நண்பன் ஒருவன் கூப்பிடும் போது சொல்வான் .நமக்கு இயற்கையை ரசிக்க என்ன தகுதி இருக்கிறது .நம் எல்லாம் அடிமட்டதிற்கும் கீழே உள்ளவர்கள் நாம் இயற்கையை ரசித்து என்ன ஆக போகிறது (we are the lowest of the low)


ஏழ்மை இயற்கை கூட ரசிக்க விடாமல் செய்கிறது என்பதை காட்டும் வசனம் .இதே போல் மூடர் கூடம் படத்தில் வரும் வசனத்தை நினைவிருத்துகிறது .காதல் தோல்வியை பற்றி சொல்லும் போது நாயகன் நவீன் சொல்லும் வசனம் நமக்கு எதற்கு இந்த தேவை இல்லாத காதல் என்று .ஏழ்மை பலவற்றையும் புறக்கணிக்கிறது என்பது போன்ற வசனம் .

அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் பேசும் வசனம் "எல்லாரும் என்னை கெட்டவன் என நினைக்கின்றனர் ..நான் நல்லவனாக மாற வேண்டும் அதற்கு நானும் எல்லாரையும் போல நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க போகிறேன் .உங்களை போல் ஒரு குடும்பம் அதன் பின் டிவி ,பிரிட்ஜ் வாசிங் மெசின் என்று மற்றும் பல பொருள்களை சொல்லி கொண்டே போவான் .இதலாம் இருப்பது தான் நல்ல வாழ்க்கை என்றால் அதை நான் வாழ்கிறேன் என்பான் .

இதுவும் வாழ்கையை பற்றி எல்லாரும் ஒரு கோட்பாட்டை உருவாக்கி இருப்பதை பற்றி எள்ளி நகையாடும் வசனம் .

அதற்கு அடுத்து இந்த படத்தின் மற்றொரு பலம்  ஒளிப்பதிவு இதில் பல விதாமான வித்தியாசமான கேமரா மூவ்மெண்ட்களும் வித்தியசமான சாட்களும் பயன்படுத்தபட்டிருக்கிறது .அவை எல்லாம் நாயகனின் மன நிலையை எடுத்து காட்டுவது போல அமைக்கப்பட்டு உள்ளது .

அடுத்ததாக படத்தின் இயக்குனர் டேனி பாயல் (Danny boyle)

ஆம் அதே slumdog millionaire படத்தை இயக்கிய டேனி பாயல்

  DannyBoyle08.jpg


அந்த படத்திற்கு A.R.ரகுமானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கியது நினைவு இருக்கலாம் slumdog millionaire படம் பலரால் பாராட்டப்பட்டாலும் ஆஸ்கார் வாங்கினாலும் பலர் அந்த படத்தை விமர்சித்தார்கள் .இந்தியாவை மிக ஏழ்மை நாடாக காட்டி உள்ளார் .அவர் இந்தியாவை ஏழ்மை நாடாக காட்டவில்லை ,இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதி ஏழைகளை மட்டும் காட்டி உள்ளார் .

இந்த படத்திலும் அப்படிதான் லண்டனில் இருக்கும் ஸ்காட்லான்ட் பகுதி ஏழை இளைங்கர்கள் வாழ்வு எப்படி ஏழ்மையோடும் போதையோடும் இருப்பதை காட்டி உள்ளார் .slumdog millionaire படத்தில் சிறுவன் மலத்தில் விழுந்து அதோடு போயி அங்கு ஷூட்டிங் வந்து இருக்கும் அமிதாப் பச்சனிடம் ஆட்டோ கிராப் வாங்குவது போல் அமைத்த காட்சியை பலர் இப்படி எல்லாம் காட்சி வைப்பதா என்று பலர் திட்டினார்கள் .

இதிலும் ஒரு காட்சி வரும் கழிவறைக்கு செல்லும் நாயகன் தெரியமால் போதை மாத்திரையை அந்த மல குழியில் விழுந்து விட அவன் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த மல குழியிலே முழ்கி தேடுவான் .அந்த அளவு அவன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளான் என்பதை காட்டும் ஒரு முக்கியாமான காட்சி .இந்த காட்சியை slumdog millionaire படத்தில் மலத்தில் விழுந்து நடிகனிடிம்  ஆட்டோகிராப் வாங்கும் காட்சியோடு ஒப்பிடும் போது சினிமாவும் ஒரு போதை பொருள் என்பதை சொல்லமால் சொல்கிறார் .

போதை பொருளுக்கு அடிமையான்வனவனும் சினிமாவின் தன் விருப்பமான சாகச நாயகனுக்கு ரசிகனாக உள்ளவனும் அதற்காக எது வேண்டும்னாலும் செய்வான் என்பதை சொல்கிறது இந்த ரெண்டு காட்சிகளும் .

முடிவாக வழக்கம் போல சினிமாவை விரும்பவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் .அடுத்த படியாக  இப்படத்தை யார் பார்க்கிறிர்களோ இல்லையோ ஒளிப்பதிவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .ஏன் என்றால் இதில் வரும் பல வித்தியாசமான் சாட்களை பார்த்து கொண்டு அதை reference ஆக எடுத்து கொள்ளாலாம் எனவே ஒளிப்பதிவு துறை சேர்ந்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் .மற்றவர்களும் பார்க்கலாம் .

(பி .கு )சமிபத்தில் இப்படத்தின் இயக்குனர்  டேனி பாயல் 20 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கூறியுள்ளார் .முதல் பாகம் கொடுத்த தாக்கத்தை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று பொறுத்து பார்ப்போம் .





ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

SHAHID (2012)(hindi)

SHAHID (2012)(hindi)

இந்த  முறை ராபர்ட் ட்வேனி ஜூனியர் நடித்த the judge (2014) படத்தை பற்றிதான் பதிவாக எழுதாலம் என்று முடிவு செய்து இருந்தேன் ,ஆனால் அதை விட SHAHID படம் ஒரு எதார்த்தமான கோர்ட் ரூம் டிராமாவாக இருப்பதால் இந்த படத்தை பற்றி எழுதுகிறேன் 

Shahid Poster (2013).jpg

சாஹித் படத்தை பார்க்கும் முன் கோர்ட் ரூம் டிராமா  வகை பற்றி பாப்போம் .அதன் பெயரிலே நமக்கு ஓரளவு புரிந்தாலும் மேலும் பார்ப்போம் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் என்பவை நீதிமன்றங்களை கதை களமாகவும் வக்கீல்களையும் நீதிபதிகளையும் முக்கிய கதாபாதிரங்களாக கொண்டு  எடுக்கப்படும் படம் .
இந்த வகை படங்களில் பெரும்பாலும் ஒரு அறை அதாவது நீதிமன்ற அறை அதில் மட்டும் காட்சிகளை வைத்து கொண்டு திரைக்கதையை விறுவிறுப்பாக்கலாம் .சேசிங் காட்சிகளோ  சண்டை காட்சிகளோ அவளவாக தேவைப்படாது .இரண்டு வக்கீல்களுக்கு இடையே நடைபெறும் வாத காட்சிகளே படத்தை விறுவிறுப்பாக்கி விடும் .மேலும் பார்வையாளர்களும் கோர்ட்டில் இருப்பதை போல் உணர்வார்கள் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் ஹாலிவுட்டில்  பல சிறப்பான படங்கள் வந்துள்ளன .அதற்கு தொடக்கப்புள்ளியாக நம்மில் பலர் சிறப்பாக இன்றும் பேசும் சிட்னி லுமேண்ட்டின் 12 angry man படத்தை சொல்லலாம் .அதன் பின் 1962ல் வெளிவந்து பல ஆஸ்கார் விருதுகளை வென்ற To Kill a Mockingbird  படத்தை சொல்லலாம் . இன்றும் இப்படங்கள் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் சிறந்த படங்களாக உள்ளன .அதன் பின் பல சிறந்த படங்கள் இந்த வகையில் உள்ளன   The verdict ,I am sam,Amisted,my cousin vinny, போன்று பல படங்கள் உள்ளன .
சரி இனி தமிழுக்கு வருவோம் ஓரளவு நன்றாக யோசித்து பார்த்தால் நம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது ஒரு கோர்ட் ரூம் டிராமா  வகை  படம்தான் .ஆம் அது 1952ல் வெளிவந்த சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் .ஒரு வகையில் இது முழுவதும் கோர்ட் ரூம் டிராமா  வகையை சார்ந்த படம் இல்லை.இருப்பினும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சில் வரும் கோர்ட் ரூம் காட்சிகளும் சிவாஜி கணேசன் பேசும் கருணாநிதியின் வசனங்களும் தான் இதை கோர்ட் ரூம் டிராமா  வகை படமாக்கியது .மேலும் அது வரை காதல் படங்களிலும் மன்னர் கால படங்களிலும் முழுதும் பாடல்களால் ஆக்கப்பட்ட படங்களில் இருந்தும்  பராசக்தி காப்பற்றி தமிழ் சினிமாவிற்கு வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது ,மேலும் இப்படத்திற்கு பின்தான் பாடல்கள் குறைந்து வசனங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன .
இந்த படத்தில் நீதிமன்றங்களில் வரும் காட்சிகளில் சிவாஜி கணேசன் நடிப்பும் அவருடைய வசன உச்சரிப்பும் யாராலும் இனி எப்போதும் பண்ண முடியாத ஒன்றாகும் .ஏன் பல வட்டார மொழிகள் பேசும் நம் உலக நாயகனால் கூட இந்த அளவு தமிழை ஆக்ரோசமாக உச்சரிக்க முடியுமா எனபது சந்தேகமே .

பராசக்திக்கு பின் அவளவாக கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் சிறிது காலம் வரவில்லை .ஆனால் அதையும் சிவாஜி கணேசன்தான் தீர்த்து வைத்தார் .1973ல் அவர் நடிப்பில் வெளிவந்த கெளரவம் படம்தான் அது வியட்நாம் வீடு சுந்தரம் இப்படத்தை இயக்கி இருந்தார் .ஒரு வகையில் இதுதான் தமிழில் வந்த முதல் முழு நீள கோர்ட் ரூம் டிராமா திரைப்படமாக இருக்க வேண்டும் .
Gauravam.jpg

இதிலும் இரு கதாபாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார் .மேலும் இதில்தான் தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகளை பார்த்தனர் .என்னை பொறுத்த வரையில் ஹாலிவுட்டிற்கு 12 angry man இருக்கிறதோ தமிழுக்கு இந்த படம் .
அதன் பின்னும் தமிழில் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் வர சிறிது காலம் ஆகியது .
அதன் பின் 1984ல் வெளிவந்த மோகன் ,பூர்ணிமா மற்றும் சுஜாதா  நடிப்பில் வெளிவந்த விதி (நியாம் கவாலி  தெலுங்கு படத்தின் ரீமேக் ) திரைப்படம்தான் அடை பூர்த்தி செய்தது .இதுவும் முழு நீள கோர்ட் ரூம் டிராமா படமாகும் இதிலும் கெளரவம் படத்திற்கு இணையான விவாத காட்சிகள் இருக்கும் .மேலும் இப்படத்தின் வெற்றிக்கு பின் இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .
அதன் பின் ஜெயராம் ,ரேவதி மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த பிரியங்கா படமும் ஒரு சிறப்பான கோர்ட் ரூம் டிராமா படமாகும் .அதே போல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த மௌனம் சம்மதம் திரைப்படம் கோர்ட் ரூம் டிராமாவை வைத்து ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாக்கபட்ட படம் .
ஓரளவு நம் காலத்தில் வந்துள்ள படங்களை எடுத்தால் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படம் . இவர் முதல்வன் படத்தின் வாய்ப்பை இழந்ததற்காக அதே போல இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன் .முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுன் முதல்வன் ஆக இருந்து செய்ததை இதில் விஜய் வக்கீல் ஆக இருந்து செய்வார் .உண்மையில் ஒரு வக்கீலால் இவளவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான் எனவே இந்த படம் முழுதும் நீதிமன்றத்தை வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும் சிறந்த கோர்ட் ரூம் டிராமா படமாக அமையவில்லை .
அதே போல் சிட்டிசன் திரைப்படம் விஜய் எப்படி முதல்வன் படத்தை நினைத்து கொண்டு தமிழன் படத்தை எடுத்தாரோ அதே போல் அஜீத்தும் இந்தியன் திரைப்படத்தையும் பராசக்தி திரைப்படத்தையும் நினைத்து இப்படத்தை எடுத்து இருப்பார் போல .இருப்பினும் தமிழன் திரைப்படம் போல இது மோசம் அல்ல முதல் பாதி விறுவிறுப்பான திரைக்கதையும் இரண்டாம் பாதி உணர்ச்சி பூர்வாமன flashback காட்சிகளும் ஓரளவு இப்படத்தை சிறப்பாக கொண்டு போயிருக்கும் .ஆனால் இதில் கிளைமாக்ஸ் இல் வரும் நீதிமன்ற காட்சிகள்தான்  இதன் குறை .  அஜீத்  பராசக்தி படத்தில்  சிவாஜி உணர்ச்சிபுர்வமாகவும்  ஆக்ரோசமாகவும் நீதிமன்றத்தில் பேசுவது போல இதில் பேச முயன்று இருப்பார் .ஆனால் அவர் தமிழ் உச்சரிப்பும் அவரே கொண்டு வரும் புது சட்டங்களும் என்று இப்படத்தை சொதப்பியது
அடுத்து தெய்வ திருமகள்  I am Sam படத்தின் காப்பி என்பதை தாண்டி இப்படத்தை பார்த்தால் இதிலும் நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அதிலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் எதிர்த்தரப்பு வக்கீல் ஆக இருக்கும் நாசர் விக்ரம் மன வளர்ச்சி குன்றியவர் என்றும் அவரால் குழந்தையை முறையாக வளர்க்க முடியாது என்று நீருபித்து விடுவார் .ஆனால் குழந்தை அவரடிம் வளர்வதில் எனக்கு எந்த ஆச்சபனையும் இல்லை என்பார் .இது எனக்கு புரியவில்லை எல்லாம் நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ? இதை பற்றி எனக்கு தெரிந்த ஒரு சிலரிடம் கேட்ட போது எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் போதும் விட்டுவிடுவார்கள் என்றார்கள் .(ஒரு வேலை கொலை குற்றவாளி ஒருவனின் குற்றங்களை நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னாலும் விட்டுவிடுவார்களா ?) ஒரு வேளை எனக்குத்தான் பொது அறிவு  சட்ட அறிவும் பத்தவில்லை போல .
அடுத்து இந்த வருடம் வெளியான விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் இதில் கதைப்படி நாயகனும் நாயகியும் வக்கீல்கள் அப்படி இருக்கும் போது  நீதிமன்ற காட்சிகள் எப்படி வந்து இருக்க வேண்டும் ஆனால் இந்த படத்தில் நீதி மன்ற காட்சிகள் மொத்தமே பத்து நிமிடங்கள் தான் வரும் .சச்சின் படத்தில் விஜய் கல்லூரி மாணவர் என்பார்கள் .ஆனால் அப்படத்தில் கடைசி வரை கல்லூரியையும் வகுப்புகளையும் காட்டவே மாட்டார்கள் அது போலத்தான் இந்தியா பாகிஸ்தான் படமும் ஒழுங்காக நீதி மன்ற காட்சிகளை வைத்து இருக்க மாட்டார்கள் .
என்னை பொறுத்த வரையில் தமிழில் கெளரவம்,விதி படங்களுக்கு பின்பு ஒரு சிறந்த கோர்ட் ரூம் டிராமா படங்கள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுப்பதில் உள்ள சிக்கல் சட்ட அறிவு நன்கு தெரிந்திருக்க வேண்டும் .மேலும் நேற்று வந்த நடிகர்களாகட்டும் இன்று உள்ள நடிகர்களாகட்டும் நாளை வரப்போகிற நடிகர்களாகட்டும் அனைவரும் இரண்டு படங்கள் நடித்த பின் போலீஸ் வேடத்தில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் வக்கீல் வேடத்தை யாரும் விரும்புவதில்லை .
சரி மேலே குறிப்பிட்ட படங்களிலும் வரும் நீதிமன்ற காட்சிகளுக்கும் இயக்குனர் பாலா அவர்களின் படத்தில் நீதிமன்ற காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் .இது பற்றி நண்பன் ஒருவனிடம் கேட்ட போது அவன் சொன்னது பாலா படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நீதிமன்றங்கள் நடக்கும் என்று சொன்னான் வக்கீல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வாதாடுவார்கள் என்றும் சாட்சிகளை விசாரிக்கும் போது மட்டும்தான் தமிழில் பேசுவார்கள் .நீதிபதியும் தீர்ப்பை வழங்கும் போதும் ஆங்கிலத்தில்த்தான் சொல்வார்கள் என்றான் .அப்போதுதான் தெரிந்தது நம் சினிமாவில் பார்ப்பது எல்லாம் ரசிகர்களுக்கு ஆக வைக்கப்பட்டது .எது எப்படி இருந்தாலும் கோர்ட் ரூம் டிராமா வகை படங்களுக்கு நல்ல விவாத காட்சிகள் மட்டும் போதும் .
சரி சாஹித் படத்தை பற்றி
இது உண்மை கதை தழுவி எடுக்கப்பட்ட படம் .ஷாஹித் ஆஸ்மி என்ற வக்கீல் ஒருவரின் வாழ்கையை எடுத்து கொண்டு அவர் எப்படி வக்கீலாக இருந்து பலரை காப்பாற்றினார் என்பதை படமாக ஆக்கியுள்ளனர் .
படத்தின் கதை
ஷாஹித் ஆஸ்மி என்பவர் காஸ்மீரில் தாய் மற்றும் 3 சகோதரர்களுடன் வாழ்பவர் .ஆரம்பத்தில் காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தில் சிறிது காலம் இருக்கிறார் ,ஆனால் அங்கு உள்ள வன்முறை பிடிக்கமால் பாதிலே ஊருக்கு திரும்பி விடுகிறார் .ஆனால் இவரை போலீஸ் பிடித்து செல்கிறது .சிறைக்கு செல்லும் ஷாஹித் அங்கு ஏற்கனவே சிறையில் இருக்கும் வார் சாஹிப் என்பவரின் அறிவுரையின் மூலம் திருந்தி வாழ நினைக்கிறார் .மேலும் அவரின் உதவியால் சட்டம் படிக்கிறார் .
விடுதலை ஆன பின் வக்கீலாகிறார் .ஒருவரிடம் ஜூனியர் வக்கீலாக இருக்கிறார் .ஆனால் பின் தனியாக வந்து அவரே ஒரு சட்ட அலுவலகம் தொடங்கி வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .
வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வழக்கம் இருக்கிறது அதவாது எதவாது குண்டு வெடிப்போ இல்லை தீவிரவாத தாக்குதலோ நடந்தால் போலீஸ்க்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் யாரவது ஒரு ஏழை இஸ்லாமியாரை புடித்து சென்று விடுவார்கள் .சாஹித்க்கு அது போன்றவர்களுக்கு வாதட விரும்பி பின்னர் முழுதுமே அது போன்ற வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .இதற்கு இடையில் ஒரு விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .

ஆரம்பத்தில் நன்கு போகும் அவர் வாழ்க்கை ஒரு கட்டத்திற்கு பின் சாஹித் அதிகமான இஸ்லாமியரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவும் அவருக்கு பல அமைப்புகளில் இருந்து மிரட்டல் வருகிறது .மேலும் தெரியாத நபர்கள் தொலைபேசியில் அவரை மிரட்டுகின்றனர் .அவர் குடும்பத்தை கூட மிரட்டுகின்றனர் .அனால் மிரட்டல்களுக்கு பயப்படமால் அவர் தொடர்ந்து வாதாடி விடுதலை பெற்று தருகிறார் .



ஆனால் தொடர் மிரட்டல்களால் அவரின் மனைவி அவரை பிரிந்து செல்கிறார் .மேலும் அவர் மீதும் நீதிமன்ற வாசலிலேயே கருப்பு மையை தெரியாத நபர்கள் பூசி அவரை அசிங்க படுத்துகின்றனர் .
இறுதியில் ஒருவருக்கு வாதாடி கொண்டு இருக்கும் கால கட்டத்தில் அவருக்கு வாதடதே என்று சாஹித்க்கு கொலை மிரட்டல் வருகிறது .ஆனால் அதையும் மீறி அவர் வாதாடுகிறார் .இதனால் வழக்கு முடியும் முன் அவர் கொல்லப்படுகிறார் .தான் இருந்த வரை அவர் 16 பேருக்கு விடுதலை வாங்கி தந்துள்ளார் .

முன்பே சொன்னது போல் இது உண்மை கதை என்பதால் இதன் கதை அமைப்பில் நான் குறை சொல்ல விரும்பவில்லை .அதே போல் இதிலுருக்கும் அரசியலையும் நான் பேசவில்லை .

மாறாக இதில் உள்ள நீதிமன்ற விவிவாத காட்சிகள் அது மிகவும் நன்றாக உள்ளது .அது போல் நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் பாலா படத்தில் உள்ளது போல் மிக எதார்த்தமாக உள்ளது .இவ்வளவு எதார்த்தமான நீதி மன்ற காட்சிகளை நான் இந்தியாவில் எந்த படத்திலும் பார்த்தது இல்லை ,

அதே நேரத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவு எதார்த்த படத்திற்கு எப்படி ஒளிப்பதிவு இருக்க வேண்டுமோ அப்படி உள்ளது .வேறு எதையும் ஒளிப்பதிவிற்கு என்று சேர்க்கவில்லை .அதே போல் இசை .இதில் பின்னணி இசை கிடையாது ஒரே ஒரு பாடல் மட்டும் பின்னணியாக அவ்வப்போது ஒலிக்கிறது .
இந்த படம் 2014ம் ஆண்டு தேசிய விருதில் இதில் சாஹித் ஆக நடித்த ராஜ்குமார் ராவ்  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
மேலும் இதன் இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறந்த இயக்குனர்க்கான தேசிய விருதை வென்றார் .

முடிவாக கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுக்க விரும்புவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும் .மற்றவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும்

வியாழன், 23 ஜூலை, 2015

bajarangi bhaijan

bajarangi bhaijan-2015(Hindi)




முதலில் இந்த படத்தை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன் .காரணம் "சல்மான் கான் "
காரை குடித்து விட்டு ஒட்டி சாலையில் படுத்து இருந்தவர்கள் மீது மோதி அதனால் ஒருவரை கொன்றவர் . ஆனால் சட்டம் எல்லாருக்கும் சமம் என்பதை சல்மான் கான்   விசயத்தில் கொண்டு வரவில்லை .
அதே போல் திரையுலக பிரமுகர்கள் எல்லாம் ஏதோ சல்மான் நிரபராதி போல் அவரை ஆதரித்து பேசினர் .அதில் ஒருவர் தெருவில் படுத்து இருப்பவர்கள் நாய் என்றார் .என்ன ஒரு கொடுமை பாருங்கள் ?
சரி திரையுலகம் தான் ஆதரித்தது என்றால் ரசிகர்கள் அதற்கு மேல் சல்மான் கான்க்கு குரல் கொடுத்தனர் .
இந்த இடத்தில ஒரு விஷயத்தை ஆராய விரும்பிகிறேன் .இதே செயலை இப்போது ஷாருக் கானோ இல்லை ஆமிர் கானோ இல்லை வேறு ஒரு நடிகர் செய்து இருந்தால் அந்த நடிகர்களுக்கு ஆதரவுகுரல்கள்  வந்திருக்காது .
அதை புரியும்படி ஒரு 3 நடிகர்களை எடுத்து கொண்டு சொல்கிறேன் .
ஹிந்தியில் சல்மான் கான் ,தமிழில் அஜீத் ,தெலுங்கில் பவன் கல்யான்
இந்த 3 நடிகர்களும் அவர்களுடய ஆரம்ப காலக்கட்டதில் பல வெற்றிகளை கொடுத்து தங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டதை உருவாக்கி கொண்டவர்கள் .
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் பல தோல்வி படங்கள் கொடுத்தனர் .ஆனால் அவர்களின் ரசிகர்கள் தங்களுடய நடிகனின் வெற்றிக்காக காத்திருந்தனர் .ஒரு வெற்றி கிடைத்தால் போதும் அதன் பின் வரும் படங்கள் எப்படி இருந்தாலும் ஓட வைத்து விடலாம் என காத்து கொண்டு இருந்தனர் .
இந்த நிலையில் தான் அஜித்துக்கு மங்கத்தாவும் ,தெலுங்கில் பவன் கல்யாணுக்கு கப்பர் சிங்கும் வந்து அவர்களை மிகப்பெரிய நிலைக்கு கொண்டு சென்றது .
இதே போலத்தான் சல்மான் கானுக்கும் 2000ம் வருடத்திற்கு பிறகு சுமார் 8 வருடங்கள் அவர் நடித்த அனைத்து படங்களும் படு தோல்வி அடைந்தன .
இந்த நிலையில்த்தான் 2008ல் அவர் நடித்த WANTED (போக்கிரி படத்தின் ரீமேக் ) வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பின் சல்மான் காணும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி எந்த நிலையிலும் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ளவே நினைத்தனர் .அதன் பின் சல்மானின் எந்த படங்கள் வந்தாலும் அதுதான் அந்த வருடத்தின் இந்தியாவிலே அதிக வசூல் செய்த படமாக இருக்கும் . கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நிலைக்கு வந்து விட்டார் .ஆனால் அவரின் சக நடிகரின் ஷாருக் கான் படங்கள் வசூல் செய்தாலும் அது சல்மானின் படத்திற்கு அடுத்த படியாகத்தான் இருந்தது .அது ஷாருக் கானை பாதிதத்தோ இல்லையோ அவரின் ரசிகர்களை மிகவும் பாதித்தது . இருவரின் ரசிகர்களும் எப்படி இங்கு விஜயின் ரசிகர்களும் அஜித்தின் ரசிகர்களும் அடித்து கொள்வதை போலத்தான்  அங்கு அடித்து கொள்வார்கள் .
இந்த நிலையில் தான் சல்மான் காரை ஒட்டி இந்த செயலை செய்தது .அவர் செய்தது தப்பு என்று அவருடய ரசிகர்களுக்கும் தெரியும் ஆனால் அவரை விட்டு கொடுக்கவில்லை .
ஒரு உதாரணத்திற்கு இது போன்று ஒரு செயலை அஜித் செய்து இருந்தால் அவரின் ரசிகர்கள் என்ன எதிர்வினை செய்வார்கள் .எடுத்த உடனே விஜயின் சதி இது என்று ஒரு பெரிய சண்டையை போட்டு இருப்பார்கள் .
அதே தான் இப்போது சல்மான் கான் விசயத்திலும் ஹிந்தியில் நடக்கிறது .
என்ன இருந்தாலும் என்னை பொறுத்த வரைக்கும் சட்டம் என்பது எல்லாருக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் .மேலும் நடிகர்களை தலைவனாக தூக்கி வைத்து கொண்டாடுவதும் மக்கள் கைவிடவேண்டும் .அது எந்த நடிகனாக இருந்தாலும் சரி ,ஏன் என்றால் நடிப்பு என்பது ஒரு தொழில் அதை அவன் செய்கிறான் .அவனை ஏன் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் . அவனை திரையில் ரசிப்பதோடு சரி அதோடு மறந்து விட வேண்டும் .
சரி பஜரங்கி பாய்ஜான்க்கு வருவோம்
மேலே குறிப்பிட்ட விசயத்தை தாண்டி என்னை படம் பார்க்க இழுத்த விசயம் இதன் கதையாசிரியர்  K.V.விஜயேந்திர பிரசாத் .அவர் வேறு யாரும் அல்ல .இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் திரைப்படமான பாகுபலியின் கதையாசிரியர் மேலும் இவர்த்தான் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை ஆவார் .பெரும்பாலான ராஜமௌலியின் திரைப்படங்களுக்கு இவர்த்தான் கதை மற்றும் திரைகதையாசிரியர் .


இவருடைய திரைக்கதை எழுதும் முறை அனைத்து ரசிகர்களையும் எளிதில் கவரகூடியது .எனவேதான் இவரின் திறமையை கண்ட ஹிந்தி திரையுலகம் இவரை இழுத்துக் கொண்டது .
இந்தியாவின் மிகப்பெரிய படமான பாகுபலியின் கதையாசிரியர் ஒரு ஹிந்தி படத்திற்கு கதை எழுதுகிறார் அதுவும் தற்போது முதல் இடத்தில இருக்கும் சல்மான் கானுக்கு கதை கதை திரைக்கதை அமைத்த படம் என்றால் யாருக்குத்தான் ஆர்வம் தோன்றாது .
அதனால்த்தான் சல்மான் கானை மறந்து விட்டு  இந்த படத்தை பார்க்க சென்றேன் .மேலும் நடிகனின் சொந்த வாழ்கையை ஏன் படத்துடன் தொடர்படுத்த வேண்டும் என்று என்னை தேற்றி கொண்டு படம் பார்த்தேன் .
படத்தை பற்றி பேசுவதற்கு முன் இரண்டு விசயங்களை பற்றி ஆராய்வோம் .
ஒன்று இந்தியா பாகிஸ்தானை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் எப்படி ஹாலிவுட்காரர்களுக்கு ஒரு எதிரி ரஷ்யாவோ அதே போலத்தான் இந்தியாவுக்கு பாகிஸ்தான் .அதனால் இந்தியாவில் எல்லா மொழிகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாக்கி படம் எடுத்து தங்கள் நாட்டுப்பற்றை காட்டி விடுவார்கள் . (ஏதோ பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகளே இருப்பது போல் அங்கும் சாதாரண மக்கள் உள்ளனர் என்பது இவர்களுக்கு தெரியவில்லை போல )
ஹிந்தி சினிமாவும் 90களுக்கு முன் அப்படித்தான் இருந்தது ஆனால் கான் நடிகர்களின் (ஷாருக் கான் ,ஆமிர்கான் ,சல்மான் கான் ,சைப் அலி கான் ) வருகைக்கு பின் ஓரளவு அது மாறியது .அதன் பின் இவர்கள் படங்களில் பாகிஸ்தானை நல்ல விதமாக காட்டினர் .அதாவது மறைமுகமாக இரண்டு நடிகர்களின் நட்புறவை இவர்கள் விரும்புவது போல் அதனாலே இவர்கள் இரண்டு நாட்டையும் இணைப்பது போல் ஒரு சில படங்கள் எடுத்தனர் .அதில் முதலில் குறிப்பிட வேண்டியது ஷாருக் கானின் வீர் சாரா திரைப்படம் இதில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வரும் பெண் மீது காதல் கொள்ளும் நாயகனாக ஷாருக்கான் நடித்திருப்பார் .அதன் பின் சல்மான் கானின் ஏக் தா டைகர் இதில் இந்திய உளவாளியான சல்மான் பாகிஸ்தான் உளவாளியான காத்திரீனா மீது காதல் கொள்பவர் ஆக நடித்திருப்பார் .
அதன் பின் ஆமிர்கான் இவர் மற்றவர்கள் போல் இல்லை எதையும் கமல் போல் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்புபவர் எனவே இவர் படமானஃ பானாவில் இவர் இந்தியாவையும் திட்டுவார் பாகிஸ்தானையும் திட்டி காஸ்மீர் தீவிரவாதியாக நடித்திருப்பார் .இவர்கள் இப்படி நடிப்பதில் சுய லாபமும் அரசியலும் இருக்கத்தான் செய்கிறது .எப்படி இங்கு கமலும் சசிகுமாரும் ஒரு சமூகம் சார்ந்த படங்களை அதிகம் எடுப்பது போல .சரி இதை இதற்கு மேல் பேசினால் அது வேறு எதிலாவது தான் முடியும்
சரி அடுத்த விசயத்திற்கு வருவோம்

 குழந்தைகளை நாயகனுடன் இணைத்து எழுதப்படும் கதைகள் ,
அதாவது அந்த கதையில் மைய பாத்திரமாக ஒரு குழந்தை இருக்கும் .அதற்கும் நாயகனுக்கும் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படும் .அதன் பின் அந்த குழந்தைக்கு வரும் பிரச்சினைகளைத்தான் கதாநாயகன் எதிர்கொள்வான் .அந்த குழந்தையை வைத்து தான் படமே நகரும் .இப்படியான படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜேசன் சத்தமின் SAFE படத்தை சொல்லலாம் .அதன் பின் கொரியத் திரைப்படமான THE MAN FROM NOWHERE படமும் இந்த கதையில் சிறந்த ஒன்று .
இந்த வகையில் ஒரு முக்கியாமான  தமிழ் படத்தை நினைவு கூர்கிறேன் அது 1987ல் சத்யராஜ் ,சுஜிதா நடித்து பாசில் இயக்கி வெளிவந்த பூவிழி வாசலிலே திரைப்படம் (மலையாள படமான பூவின் புதிய புதேந்நெல் படத்தின் ரீமேக் )
என்னை பொறுத்த வரையில் தமிழ் படங்களில் மிக சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது .


ஒரு வாய் பேசமுடியாத காத்து கேட்காத சிறுவன் தன் தாயை கொன்றவர்களை பார்த்து விடுகிறான் .அதனால் அவனை கொல்ல முற்படும் போது தப்பி சென்று விடுகிறான் பின் நாயகனிடிம் தஞ்சம் புகுந்து விடுகிறான் .அவர்களுக்குள் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுகிறது .பின் இருவரும் எப்படி தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை ஒரு சிறந்த emotional thriller படமாக இது இருந்தது .
சரி இதற்கும் பஜரங்கி பாய்ஜானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் கிட்டத்தட்ட இதை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் இது

கதை
பாகிஸ்தானிலிருக்கும் 6 வயது சிறுமியான சாஹிதா வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவள் .அவள் தன் தாயுடன் டெல்லியில் இருக்கும் மசூதிக்கு வருகிறாள் .ஆனால் திரும்பி பாகிஸ்தானுக்கு ரயிலில் போகும் போது துரதிஷ்டவசமாக தன் தாயை பிரிந்து விடுகிறாள் .சாஹிதாவின் தாயால் திரும்பி இந்தியா செல்ல முடியவில்லை .
அதே நேரத்தில் சாஹிதா இந்தியாவில் பவன் குமார் என்பவனிடம் அடைக்கலம் புகுகிறாள் .பவன் குமார் ஒரு தீவிர அனுமான் பக்தன் .அவன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கி வேலை தேடி வருபவன் .
இந்த நிலையில் சாஹிதாவை பற்றி எதுவும் தெரியாமல் தன்னுடன் அழைத்து செல்கிறான் .ஆரம்பத்தில் அந்த சிறுமியை பற்றி எதுவும் தெரியாமல் வளர்த்து வருகிறான் .ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் அவள் முஸ்லிம் என்றும் பாகிஸ்தான் சிறுமி என்று தெரிந்த உடன் பவனின் மாமா அவனை அந்த சிறுமியை வீட்டை விட்டு அனுப்புமாறு சொல்கிறார் .
அதன் பின் பவனும் அவளை பாகிஸ்தான் தூதரகதிற்கு அழைத்து செல்கிறான் .ஆனால் அங்கு அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது மேலும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் தூதரகம் ஒரு மாதத்திற்கு மூடப்படுகிறது .பின் ஒரு நபர் 1 லட்சம் தந்தால் அச்சிறுமியை பாகிஸ்தான் அழைத்து செல்வதாக கூறுகிறான் .இவனும் அதை நம்பி பணமும் கொடுத்து அனுப்பி விடுகிறான் .ஆனால் பின்பு அவன் விபசார விடுதியில் அச்சிறுமியை விற்க செல்வதை அறிந்து அங்கு இருந்து அவளை மீட்டு பின்பு அனுமானிடம் அவளை எந்த வித பாஸ்போர்ட் ,விசா இல்லாமல் தானே அவளின் அம்மாவிடம் ஒப்படைப்பதாக சத்தியம் செய்கிறான் .
ஒரு வழியாக இந்திய எல்லையை மறைமுகமாக கடந்து செல்கிறான் ஆனால் அங்கு உள்ள உள்ளூர் போலீசிடம் மாட்டி கொள்கிறான் .அவர்கள் இவனை இந்தியன் என்று கண்டுபுடிக்கிறார்கள் பின் இவனை இந்திய உளவாளி என்று கூறி சிறையில் அடைகிறார்கள் .ஆனால் அங்கு இருந்து சிறுமியுடன் தப்பிக்கும் பவன் ஒரு பாகிஸ்தான் நிருபரின் உதவியுடன் எப்படி சாஹிதாவை அவளின் பெற்றோரோடு சேர்கிறான் என்பதே கதை .




முதலில் இந்த படம் pk ,சமிதாப் போன்று மிக சிறந்த படமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன் .ஆனால் அந்த படங்கள் கொடுக்காத ஒரு சிறந்த உணர்வை இப்படம் கொடுக்கிறது என்றே சொல்லலாம் .
இந்த படத்தை பொறுத்த வரையில் படம் பார்க்கும் அனைவர்க்கும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று நன்கு தெரியும் ஆனால் அதையும் தாண்டி இப்படத்தை ரசிக்கத்தான் செய்வார்கள் .அதற்கு காரணம் திரைக்கதை மூலம் நம்மை அச்சிறுமியுடனும் நாயகனுடனும் நம்மை உளவியல் ரீதியாக இணைத்து விடுகிறார்கள் .அவர்களோடு நம்மை பயணிக்க வைக்கிறனர் .
மேலும் இப்படம் மறைமுகமாக பல அரசியலையும் பேசுகிறது .உதாரணத்திற்கு பாகிஸ்தானியர்கள் எளிதாக இங்கு வர முடியாத நிலை .அதே போல் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்ல இயலா நிலை ,அதற்கு என்று படம் முழுதும் காட்சிக்கு காட்சி pk படத்தை போன்றோ சமிதாப் போன்றோ ஏதோ ஒரு கருத்தையோ அரசியலையோ பேசி கொண்டிருக்கவில்லை .
ஒரு எளிமையான Road Movie ஆக செல்கிறது .
அதற்கு என்று இப்படத்தில் குறைகள் இல்லமாலும் இல்லை .குறிப்பாக நம் எப்போதும் ஹிந்தி (இந்திய )சினிமாவில் பார்க்கும் செண்டிமெண்ட் காட்சிகள் .அவை பல இடங்களில் நெருடலை கொடுக்கிறது
முதலில் இப்படத்தை எடுத்தற்கு இயக்குனர் கபீர் கானை பாராட்ட வேண்டும் .ஏனன்றால் இது கத்தி மீது நடப்பதை போன்ற படம் .அதை திறம்பட கையாண்டு இருக்கிறார் .உதாரணத்திற்கு இப்படம் ஆரம்பிப்பதே பாகிஸ்தானில் அங்குள்ள மக்கள் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான் ஜெயித்து அம்மக்கள் கொண்டாடுவதை போன்று வைத்து இருப்பார் .இது போன்ற ஒரு காட்சியை வைக்கும் போது படத்தின் ஆரம்பத்திலே ரசிகர்கள் விலகி செல்ல வாய்ப்புண்டு .ஆனால் அவ்வாறு போகாமல் இப்படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைத்துள்ளார் .அதற்கு திரைகதையாசிரியர் K.V.விஜயேந்திர பிரசாத்அவர்களையும் பாரட்ட வேண்டும் .
அடுத்ததாக சல்மான் கான்  எப்படி இங்கு விஜய் திருமலை படத்திற்கு பின் அதை போன்று கதையம்சம் கொண்ட படத்தில் மட்டும் நடித்தாரோ அதே போல் சல்மான் wanted படத்திற்கு பின் அதே போன்று சாகச கதாநாயக அம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்தார் .அவற்றில் தபாங் தவிர மற்றும் அனைத்தும் ரீமேக் படங்கள் ,இப்படியே ரீமேக் படங்கள் நடித்தால் இந்தியாவில் அதிக ரீமேக் படங்கள் நடித்த ரவிச்சந்திரன் (கன்னடம் ),ரஜினி காந்த் (தமிழ்),வெங்கடேஷ் (தெலுங்கு ),விஜய் (தமிழ்)  இவர்களை எல்லாம் மிஞ்சி விடுவார் என்று விமர்சகர்கள் சொல்லப்பட்ட வேளையில் இது போன்று ஒரு படத்தில் நடித்து தன்னை விமர்சகர்களிடம் இருந்து காப்பற்றி கொண்டுள்ளார் .
அதே போல் எப்போதும் இருக்கும் சல்மான் படம் போல் இது இல்லை .இதில் இவர் மிக வெகுளியாக இருக்கிறார் .அதே போன்று சண்டை காட்சிகள் கூட ஒன்று தான் உள்ளது அதுவும் ஒரு நபரை மட்டும் சல்மான் அடிப்பது போன்று .
படத்தில் பல காட்சிகளில் பலரிடம் சல்மான் அடி வாங்குவது போன்று காட்சிகள் வருகின்றன. அதே போல் ஒரு நடிகராகவும் சல்மான் இந்த படத்தில் தான் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் .வெகுளியாக இருப்பதாகட்டும் குரங்கை பார்க்கும் இடங்களில் எல்லாம் வணங்கவதும் என பல காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்து உள்ளார் .



எல்லாரையும் விட இப்படத்தில் அதிக கவனம் ஈர்ப்பது சாஹிதாவாக நடித்துள்ள சிறுமி தன் முக பாவனைகள்ளே அனைவரையும் ரசிக்க வைக்கிறாள் ,சல்மானுக்கும் இச்சிறுமிக்கும் உள்ள காட்சிகளில் இருவருமே போட்டி போட்டு கொண்டு நடித்து நம்மை ரசிக்க வைக்கின்றனர் .

முடிவாக இப்படத்திற்கு subtitles எல்லாம் தேவை இல்லை .படிக்காதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் படிதான் இப்படம் உள்ளது .
எனவே இப்படத்தை தாராளமாக அனைவரும் பார்க்கலாம்







திங்கள், 13 ஜூலை, 2015

சினிமா தாகமும் செல்பி மோகமும்

ஒரு வடக்கன் செல்பி -2015(மலையாளம் )

1999 முடிந்து 2000 என புது நூற்றண்டெ துவங்கிய போது அப்போதய சினிமாவின் எதிர்காலம் மங்க துவங்கியது .ஏனனில் அப்போதுத்தான் cd களும் dvr களும் புழக்கத்தில் வந்த வருடம் .மக்கள் அனைவரும் cd யை வாடகைக்கு எடுத்து பார்ப்பதை பழக்கமாக கொண்டு இருந்தனர் .
தியேட்டர்க்கு மக்கள் வரத்து குறைய துவங்கியது .பல தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டு கல்யாண மண்டபங்களாக மாற்ற பட்டன .ஆசியாவின் இரணடாவது பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டர் உட்பட பல பழமை வாய்ந்த தியேட்டர் கள் மூடப்பட்டன ,

திரை உலகில் இருந்தவர்களுக்கும் அது ஒரு கொடுமையான காலமாகத்தான் இருந்தது . எல்லா பெரிய நடிகர்களின் படங்களும் தோல்வி அடைந்தன ,
தன் திரை உலகில் பல வருடங்கள் தோல்வியே கொடுக்காத ரஜினியே பாபா மூலம் மிக பெரிய தோல்வி கண்டார் .உச்ச நட்சத்திரமே தோல்வி கண்ட பின் மற்றவர்களின் படங்கள் எல்லாம் என்ன சொல்வது விஜய் ,அஜீத் என அணைத்து நடிகர்களின் படங்களும் வரிசையாக தோல்வி கண்டன .ஏதோ விக்ரம் மட்டும் அப்போது ஓரளவு தாக்கு புடித்தார் .
எல்லோரின் படங்களும் திரைக்கு வந்த அடுத்த நாள் லோக்கல் கேபிள் சேனல்களில் வந்தது .என்னதான் படம் நல்ல இல்லா விட்டாலும் ஓரளவு வரும் வசூலையும் இந்த cd க்கள் பறித்து கொண்டன .பலர் சினிமாவை விட்டு சென்றனர் .பல தயாரிப்பாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் .பல முன்னணி இயுக்குனர்கள் படம் இயக்கமால் இருந்தனர் .

இதே கால கட்டத்தில் இன்னொரு துறை அபார வளர்ச்சி அடைந்திருந்தது .அது  பொறியியல் துறை .அதை படித்தவர்கள் எல்லாம் அமெரிக்கா ,ஆஸ்திரலியா என்று சென்று கோடி கோடியாக சம்பாதித்தனர் ,
அந்த காலத்தில் அணைத்து பெற்றோர்களும் தன் பிள்ளைகள் இன்ஜினியர் ஆகி சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைத்தனர் .ஏன் மாணவர்களும் அதைத்தான் விருப்பமாக கொண்டிருந்தனர் .அந்த கால கட்டத்தில் எந்த வகுப்பு மாணவனிடிமும் "உன் லட்சியம் என்ன என்று கேட்டால் அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றுத்தான் சொல்வார்கள் .அந்த அளவு பொறியயல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது ,(ஏன் இன்னும் ஒரு இரண்டு படங்கள் அந்த காலத்தில் தோல்வி அடைந்திருந்தால் இந்த தலயும் தளபதியும் திரைத்துறையை விட்டு பொறியயல் துறைக்கு சென்று இருப்பார்கள் )
இது 2005 வரை இப்படிதான் இருந்தது .ஆனால் அதன் பின் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதரா வீழ்ச்சி உலகின் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது .
மெல்ல பொறியயல் துறை ஆட்டம் கண்டது .அதன் பின் பலர் வேலை இழந்தனர் .நிறைய பேருக்கு பொறியயல் துறையில் வேலை கிடைக்க வில்லை.பலர் பொறியயல் படிப்பு படித்து விட்டு சாதாரண வேலைக்கு சென்றனர் .
இந்த சமயத்தில் சினிமா துறை ஓரளவு மீட்சி கொண்டுருந்தது ,தோல்வி இல்லை என்றாலும் ஓரளவு படங்கள் ஓடின .
பின் 2008 2010 களில் பொறியயல் மாணவர்கள் சிலர் திரை துறையில் குறும்படங்கள் மூலம் உள்ளே நுழைந்து யாரும் எதிர்பாரதவிதமாக வெற்றி கொண்டனர் .அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு பொறியயல் கல்லூரியிலும் ஏதோ ஒன்று இரண்டு பேர்தான் சினிமா ஆசை கொண்டவர்களாக இருப்பனர் .ஆனால் எப்போது வரிசையாக சில பொறியயல் மாணவர்கள் திரை உலகில் வெற்றி கொள்ளவும் இன்று 100ல் 50 சதவித மாணவர்கள் பொறியயல் படிப்பில் சேருபவர்கள் பாதியிலே தன் கவனத்தை திரை உலகின் மீது செலுத்தி விடுகின்றனர் .அதை ஒரு சில பேர் வெறியாக கொண்டு உண்மையில் கடுமையாக உழைக்கின்றனர் .ஆனால் சிலரோ படிப்பு வர விட்டால் திரை உலகில் சென்று ஜெயித்து விடலாம் என பேருக்கு சினிமா மீது வெறியாக இருப்பாதாக சொல்கின்றனர் .
என்னதான்  இன்று பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு இல்லா விட்டாலும் ஆனால் இன்றும் பெற்றோர்கள் அதை பெரிதும் நம்பி உள்ளனர் .இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையே ஒரு முரண்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்த நிலையில் இது போன்ற கதை பின்புலம் கொண்டு வெளிவந்த திரைப்படம்தான் மலையாளத்தில் வெளிவந்த ஒரு வடக்கன் செல்பி திரைப்படம் .


வடக்கன் செல்பி படத்தை பொறுத்த வரை கதை இரண்டு விதமாக பயணிக்கிறது .
முதல் பாதியை பொறுத்த வரையில் உமேஷ் (நிவின் பாலே ) கதையின் நாயகன் .பொறியயல் இறுதி ஆண்டு படிப்பவன் .ஆனால் அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லை .இன்னும் சொல்ல போனால் அவனுக்கு இந்த சைன் டிட்டா ,காஸ் டிட்டா பற்றி கூட தெரியவில்லை .
எப்போதும் சினிமா மீதே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் .இந்த நிலையில் படிப்பை முடித்து ஊருக்கு வருகிறான் .அங்கு எல்லாரும் உமெஷை அவனுடய அரியர் பற்றி கேட்டு கிண்டல் செய்கிறர்கள் .அவனுடைய அப்பா இந்த முறை அரியரில் பாஸ் பண்ணாவிட்டால் அவளவுதான் உன் வாழ்க்கை என்று மிரட்டுகிறார் .
இந்த நிலையில் ஊர் வாயை மூடவும் அப்பாவிடம் இருந்து தப்பிக்கவும் சினிமாதுறைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறான் .ஆனால் மலையாள திரை உலகில் உடனே இயக்குனர் ஆக முடியாது என்றும் தமிழ் திரை உலகில் ஒரு குறும்படம் எடுத்திருந்தால் உடனே உதவி இயக்குனர் ஆகவும் அடுத்த ஒரு வருடத்தில் இயக்குனர் ஆகி விடலாம் என முடிவு செய்கிறான் .
மேலும் அவனுக்கு தன் மாநிலத்தில் இருந்து சென்ற கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறான் .

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வரும் பெண் மீது ஒரு தலை காதல் கொள்கிறான் .
அதே நேரத்தில் குறும்படமும் எடுக்கிறான் .


ஆனால் அது தோல்வியில் முடிகிறது .இந்த நிலையில் அவனுடைய அரியர் ரிசல்ட்ம்  வருகிறது .


வீட்டில் இருந்தால் அப்பாவிடம் அடி வாங்க முடியாது என்று நினைத்து அன்று இரவு சினிமாவில் சேர சென்னை கிளம்புகிறான் .போகும் போது ரயிலில் அவன் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணும் அங்கு இருக்கிறாள் .இந்த நிலையில் அவளுக்கே தெரியாமல் அவளோடு இருப்பது போல் செல் போனில் செல்பி எடுக்கிறான் .அதை தன் நண்பர்களுக்கும் அனுப்புகிறான் .இந்த நிலையில் சென்னை போய் ஓரிரு நாட்களிலே ஊருக்கு திரும்பி விடுகிறான் .ஆனால் ஊரில் உமேஷ் பக்கத்து வீட்டு பெண்ணோடு ஓடி விட்டதாக கருதி எல்லாரும் அவனை அடிக்கிறார்கள் .அதற்கு காரணம் அவன் அந்த பெண்ணோடு இருக்கும் செல்பி போட்டோ ஊர் முழுவதும் பரவியதுதான் .ஆனால் இவனக்கோ அவளை ரயிலில் பார்த்ததோடு சரி அதன் பின் எங்கும் பார்க்க வில்லை .அவன் என்ன சொன்னாலும் ஊர்க்காரர்களும் அவன் பெற்றோரும் நம்ப மறுக்கின்றனர் .அதனால் தானே சென்னை சென்று அவளை  கொண்டு வருவதாக சொல்லி மீண்டும் சென்னை வருகிறான் .அந்த பெண்ணை கண்டுப்பிடித்தனா அவளை மீண்டும் ஊர் கொண்டு சென்றனா என்பதே மீதி கதை .

படம் முன்பே சொன்னது போல் முதல் பாதியில் செல்வதில் இருந்து இரண்டாம் பாதி வேறு விதமாக பயணிக்கிறது .முதல் பாதி முழுதும் நகைச்சுவை படமாகவும் இரண்டாம் பாதி முழுதும் road movie ஆகவும் செல்கிறது .

படத்தை ஆராயும் போது மொத்தத்தில் இது ஒரு satire comedy வகை படம் என்று தான் சொல்ல வேண்டும் .அதாவது satire comedy என்றால் சமகால நிகழ்வுகளை  எள்ளி நகையாடுதல் ,அதை இப்படத்தில் சரியாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார் .

சினிமா மீது இளைஞர்களுக்கு உள்ள ஆசை , செல்பி மோகம் ,நேரிலே பார்க்கமாலே இணையம் மூலம் காதலிப்பது , என்று எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்.



அதே போன்றே நிவின் பாலே ககதாபாத்திரத்தை பார்க்கும் போது  சினிமாவில் சேர முயற்சிக்கும் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பிரதிபலிக்கிறது .
படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அதற்கு facebook ல் விமர்சனம் செய்வது ,பரீட்சையில் பெயில் ஆனால் சந்தோசப்படுவது ,அம்மாவிடம் அந்த பீஸ் இந்த பீஸ் என்று சொல்லி பணம் பறிப்பது என கல்லூரி காட்சிகளிலும்
சரி


ஊர் வந்த பின் குறும்படம் எடுக்க சிரமப்படும் காட்சிகள் ஆகட்டும்
நண்பர்கள் கதை என்ன என்று கேட்டால் ஏதாவது ஒரு கொரியன் படத்தை காப்பி அடிக்க போகிறேன் என்பதும
அதை யாரவது கண்டுபுடித்து கேட்டால் என்ன செய்வாய் ? என்று இன்னொரு நண்பன் கேட்கும் போது அதற்கு நான் இது அதன் இன்ஸ்பிரேசன் என்று சொல்லி தப்பித்து விடுவேன் என்று சொல்வது ஆகட்டும் எல்லா காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறனர் .

மேலும் என்னதான் இந்த படம் பார்க்கும் போது  நன்கு சிரித்தாலும் படம் முடிந்த பின் நம்மை சிந்திக்க வைக்கிறார் .இதுதான் satire comedy சரியாக கையாண்டு இருக்கும் விதம் வாழை பழத்தில் ஊசி ஏத்துவது போன்று நம்மை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பது அந்த விதத்தில் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது .

என்னதான் இந்த படம் இரண்டாம் பாதி சிறிது ஏமாற்றினாலும் முதல் இன்னிங்க்ஸ்லே அதிகமாக ரன் குவித்துள்ள அணிக்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் ரன் அவளவாக பாதிப்பை ஏற்படுத்தாது அது தான் வடக்கென் செல்பியின் வெற்றிக்கும் காரணம்

முடிவாக இந்த படத்தை யார் பார்கிறேர்களோ இல்லையோ திரை துறையில் நுழைய முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .

மற்றவர்களுக்கும் இது ஒரு சிறந்த பொழுதுப்போக்கு படமாக அமையும்

செவ்வாய், 16 ஜூன், 2015

குழந்தைகளே இல்லாத எதிர்காலம்

children of men -2006 (hollywood) (குழந்தைகளே இல்லாத எதிர்காலம் )






நாம் எல்லாரும் எதிர்காலத்தில் நீர் இருக்காது உணவு இருக்காது என்றுத்தான் நினைக்கிறோம் இல்லை உலகம் அழிந்து விடும் என எதிர்ப்பார்க்கிறோம் .ஆனால் உலகம் அழியாமல் நம் தலைமுறையுடன் உலகம் நின்று விட்டால் அதாவது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் எல்லாருமே மலடு ஆகி விட்டால் இல்லை இந்த அரசாங்கம் மலடு ஆக்கி விட்டால் யாருக்குமே குழந்தையே பிறக்கமால் போய் விட்டால் அதுவும் கிட்டத்தட்ட அழிவை போன்றது தான் .இதை  வைத்து எடுக்கப்பட்ட படம் தான் 2006ல் Alfonso cuaron இயக்கத்தில் வெளியான Children of Men திரைப்படம் .


படம் 2027ல் எதிர்காலத்தில் நடக்கும் கதை .2027ல் அப்போது உலகிலேயே மிக குறைந்த வயதான 18 வயது சிறுவன்  இறந்து விடுகிறான் அவன்தான் அப்போதைக்கு மிக குறைந்த வயதானவன் .அப்போது சிறுவர்கள் இல்லை குழந்தைகள் இல்லை .உலகம் முழுதும் அச்சிறுவனுக்காக அழுது கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் எப்போதும் புரட்சி நடந்து கொண்டுருக்கிறது .மறுப்பக்கம் அகதிகள் புலம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் .

ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளமால் நாயகன் தியோ  வாழ்ந்து கொண்டுருக்கிறான் .அவன் சொந்த வாழ்விலும் மகனை இழந்து இருக்கிறான் .மனைவி புரட்சி படையில் சேர்ந்து விட்டாள் .இவ்வாறு இருக்கும் போது தியோ ஒரு நாள் கடத்தப்படுகிறான் .அது ஒரு புரட்சி படை அதில் அவனுடைய முன்னால் மனைவி தான் தலைவியாக இருக்கிறாள் .அவள் தியோவிடம் ஒரு இளம் பெண்ணை ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல மறைமுகமாக அரசின் அனுமதி தாள்களை கொண்டு வருமாறு சொல்கிறாள் .முதலில் மறுக்கும் அவன் பின் ஏற்று கொண்டு செய்கிறான் .அதை கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது தியோ அவனுடைய மனைவி மற்றும் அந்த இளம் பெண் சில நபர்களால் தாக்கப்படுகிறார்கள் .அதில் தியோவின் மனைவி இறந்து விடுகிறாள் .இதனால் தியோ அந்த இளம் பெண்ணுக்கு உதவ மறுக்கிறான் .ஆனால் புரட்சி படையின் கட்டாயத்தால் அன்று அவர்களுடுன் தங்குகிறான் .
அன்று இரவு அந்த இளம் பெண் தியோவை தனியாக அழைத்து அவள் கர்ப்பமாக இருப்பதை காட்டுகிறாள் .தியோ அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் .ஏன் என்றால் பல வருடங்களுக்கு பின் ஒரு பெண் கர்ப்பம் ஆகியிருக்கிறாள் . அவள் தியோவிடம் Human Project என்ற அமைப்பில் தியோவின் மனைவி இருந்ததாகவும் அவளால் மட்டும் தான் இவளையும் இவள் குழந்தையையும் காப்பாற்ற முடியும் அவள் இல்லாவிட்டால் தியோவால் முடியும் என்று சொல்லி இருக்கிறாள் .எனவே அந்த இளம் பெண் தியோ விடம் உதவி கேட்கிறாள் . தியோ உதவ முன் வருகிறான் .



ஆனால் புரட்சி படை அதை ஏற்றுக்கொள்ளவில்லை .அவர்களுக்கு அந்த குழந்தை வேண்டும் என்றும் அதுத்தான் வருங்கால புரட்சிக்கு விதையாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்கிறார்கள் .

இன்னொரு பக்கம் அரசாங்கமும் மக்களும் பல வருடங்களுக்கு பின் ஒரு குழந்தை உலகில் பிறக்க போகிறது என்றால் என்ன செய்வார்கள் என்று தெரியாது .
 எனவே லியோ அந்த புரட்சி படை மற்றும் அரசாங்கம் இவற்றை மீறி அந்த பெண்ணை பாதுகாப்பாக கொண்டு சென்றனா அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததா என்பதே கதை .

இது வரை எதிர்காலத்தை வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்தாலும் அவை எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் விஷுவல் எபக்ட்ஸ் க்கும்  மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள் .கதையை பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள் .உண்மையில் எதிர் காலம் எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வை கொடுத்திர்க்க மாட்டார்கள் ஆனால் இப்படம் அப்படி இல்லை எதிர்காலத்தை பற்றி ஒரு பய உணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது .மேலும் எதிர் காலத்தில் உலக அரசியல் பற்றிய ஒரு பார்வையையும் அதனால் மக்கள் படும் சிரமங்களையும் தெளிவாக கூறுகிறது .
இப்படத்தை இயக்கி இருப்பவர் கிராவிட்டி புகழ் அல்போன்சா குரான் .இவர் எடிட்டர் ஆக திரை உலகிற்கு வந்தவர் என்பதால் இவர் படங்களில் எல்லாம் எடிட்டிங் சிறப்பாக இருக்கும் .

இப்படத்தின் ஒளிப்பதிவை பற்றி சொல்லும் போது  பல ஷாட்கள் single shot ஆக அருமையாக எடுக்கப்பட்டுள்ளது .மேலும் ஒளிப்பதிவிற்கு என்று எந்த இணையத்தில் refernce shot பார்த்தாலும் அதில் முக்கியமாக children of men படத்தின் சில ஷாட் இருக்கும் எனவே ஒளிப்பதிவு துறையை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் .

என்னை பொறுத்த வரை அல்போன்சா குரானனின் ஆஸ்கார் விருது பெற்ற கிராவிட்டியை விட இது மிகவும் சிறப்பான திரைப்படம் .எனவே திரைப்பட விரும்பிகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது .





புதன், 20 மே, 2015

மாளாத காதல

The Fault in Our Stars (2014-hollywood)




இப்படத்தை பற்றியும் இப்படத்தின் மைய கருத்ததான கேன்சர் பற்றி பார்க்கும் முன் சில விஷயங்கள் 

பொதுவாக படம் பார்க்கும் பார்வையாளன் ஒரு 3 விசயங்களுக்குகாக படம் பார்ப்பான் .ஒன்று அந்த படத்தை பார்த்து அவன் தன் கவலை மறந்து சிரிக்க வேண்டும் .இன்னொன்று தனக்கு புடித்த கதாநாயகனை மாஸ் ஆக காட்ட வேண்டும் (அது எப்படி பட்ட குப்பை ஆக இருந்தாலும் ரசிப்பான் )
மூன்று அந்த படத்தை பார்த்து அவன் உணர்சிப்புர்வமாக மாறி அழ வேண்டும் .இதை கருத்தில் கொண்டுத்தான் அன்று முதல் இன்று வரை படங்கள் எடுக்க படுகிறது .அதில் சோக படங்கள் எப்போதுமே பார்வையாளனுக்கு சிறந்த படமாகவும் எப்போதும் நினைவில் இருப்பதாகவே இருக்கும் .அதை விமர்சகர்களும் பாராட்டுவார்கள் .கதாநாயக பிம்பத்தை அடியொற்றி வரும் படங்களை எல்லாம் ரசிகன் ஒரு வருடத்தில் மறந்து விடுவான் .இன்றும் பாச மலரோ ,நெஞ்சம் மறப்பதில்லையோ இல்லை வாழ்வே மாயம் போன்ற படங்களை பார்த்து அழுபவர்கள் உண்டு .இவ்வாறு சோக படங்களை மனதில் நிறுத்தி வைப்பது நம் மண்ணுக்கு உரித்தான ஒன்று . சினிமாவில் மட்டும் இல்லை நம் பண்டைய கால கலையான நாடகத்திலுமே வள்ளி திருமணத்தை விட அரிச்சந்திர புராணத்தை விரும்பவர்கள்தான் அதிகம் .
நம் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சோக படங்களை எடுக்கும் போது கதாநாயகனை அவனை சார்ந்த சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளால் அவனை சோக கதாபாத்திரமாக மாற்றினர் .அதாவது அவனுக்கு இருக்கும் வறுமை ,அவனை யாராவது ஏமாற்றுவது அவனுக்கு குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் இப்படித்தான் சோக படங்களை உருவாக்கினார்கள் ஆனால் கதாபாத்திரத்துக்கு ஒரு குணபடுத்த முடியாத கொடிய நோய் வந்துள்ளது அதனால் அவன் வாழும் காலம் குறைவு என்று ஒரு குனபடுத்த முடியாத நோய் அதனால் இறக்க போகும் நாயகன் என்று ஒரு புதிய சோக படமாக வந்தது 1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் முத்து ராமன் ,தேவிகா ,கல்யாண் குமார் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் .அந்த திரைபடத்தில் முத்து ராமன் கதாபாத்திரம் குணபடுத்த முடியாத நோய்க்கு ஆளாகும் .அந்த பாத்திரத்தின் மீது ரசிகர்கள் பரிவு ஏற்பட்டதோடு ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரமாகவும் இருந்தது .அதில் இருந்து அது போன்று பல படங்கள் வந்தாலும் அதே போன்று தாக்கத்தை ஏற்படுத்தியது 1982ல் கமல்ஹாசன் ,ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த வாழ்வே மாயம் திரைப்படம்
 (இது 1981ல் வெளிவந்த தெலுங்கு படமான ப்ரேமிபிசெகம் என்ற படத்தின் ரீமேக் ஆகும் )
இதில் கமல்ஹாசன் கேன்சர் நோயாளி ஆக நடித்த படம் .கேன்சர் என்றால் என்ன என்பதை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த  படம் .அதிலிருந்து கேன்சரை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டு விட்டன .(அஜீத் நடித்த படம் கூட ஒன்று உள்ளது ஆனால் அதன் பெயர் ஞாபகம் வரவில்லை )
ஆனால் எதுவுமே வாழ்வே மாயம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .
இது போன்று கேன்சரோ இல்லை குனபடுத்த முடியாத நோயை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்யை பயன்படுத்தியது தான் காரணம் . இது போன்ற படங்களில் எல்லாம் முடிவு ஏற்கனவே ரசிகனுக்கு தெரியும் என்றாலும் முடிவுக்கு முன் இடைப்பட்ட பகுதிகளில் எல்லாம் அழுவாச்சி காவியமாக இருந்தது தான் ரசிகனுக்கு சலிப்பை ஏற்படுத்தியது .அவர்களும் அழுது கழுத்தை அறுத்துக்கொண்டு நம் கழுத்தையும் அறுப்பார்கள் .இதில் ஓரளவு வித்தியாசமாக எனக்கு தெரிந்தது  2 படங்கள் 

அதில் ஒன்று  பாசில் இயக்கத்தில் நதியா ,பத்மினி நடிப்பில் 1985ல் வெளிவந்த பூவே பூச்சுடவா திரைப்படம் .இந்த படத்தில் நாயகிக்கு கேன்சர் கிடையாது ஆனால் குணபடுத்த முடியாத நோய் ஒன்று இருக்கும் .ஆனால் அவள் தனக்கு வியாதி இருக்கிறது என்றோ சொல்லி அழ மாட்டாள் .இறுதி காட்சியில் தான் தெரியும் அவளுக்கு வியாதி இருக்கிறது என்று .படம் முழுதும் அந்த கதாபாத்திரம் ஒரு பாஸ்டிவ் எனர்ஜியோடு இருக்கும் .
அதே போன்று இன்னொரு படம்



கரன் ஜோகர் கதை திரைக்கதையில் ஷாருக்கான் ,சைப் அலி கான் ,ப்ரித்தி ஜிந்தா நடிப்பில் 2003ல் வெளியான கல் ஹோ நா ஹோ திரைப்படம் .அதே வாழ்வே மாயம் கதை தான் .ஆனால் படத்தில் எந்த காட்சியிலும் ஷாருக்கான் பாத்திரம் யாரடிமும் தனக்கு நோய் இருப்பதாக சொல்லி அழாது .மாறாக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக காண்பிக்கப்படும் .ஷாருக்கானின் சிறந்த நடிப்பில் இப்படமும் ஒன்று .
இது போன்று கேன்சரோ இல்லை மற்ற குனபடுத்த முடியாத வியாதியோ அந்த பாத்திரத்தை பாஸ்டிவ் எனர்ஜியோடு காட்டும் போது ரசிகனுக்கும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அதே நேரத்தில் கிளைமாக்சில் அந்த பாத்திரத்தின் மீது ஒரு பரிவும் எற்படும் அதைத்தான் The Fault in Our Stars படமும் செய்துள்ளது .
சரி இனி அதை பற்றி
1989ல் வெளிவந்த மணிரத்னம் இயக்கத்தில் நாகர்ஜுன் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் கதையை கிட்டத்தட்ட ஒட்டி வந்துள்ள படம்தான் இது .அதில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கேன்சர் இருக்கும் இருவரும் காதலிப்பார்கள் .



சரி தெரிந்த கதை அதே கேன்சர் ,   முடிவு தெரியும் என்று ஒரு அரை மனதோடு தான் படம் பார்த்தேன் .ஆனால் இது மற்ற கேன்சர் படங்களை போல் இல்லை .கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கேன்சர் என்றாலும் படம் முழுதும் அவர்கள் ஒரு பாஸ்டிவ் எனர்ஜியோடு  தான் இருக்கிறார்கள் .
குறிப்பாக கதாநாயகி எப்போதும் சிரித்த முகத்தோடு தான் இருக்கிறாள் .அதே போன்று தான் கதாநாயகனும் எதையும் எளிதாக எடுத்து கொள்கிறான் .
கதாநாயகி தன் காதலை நாயகனடிம் வெளிபடுத்தும் காட்சி மிகவும் அருமையாக இருந்தது .
மேலும் இதில் கதாபாத்திரங்கள் குறைவு என்றாலும் சலிப்பு தட்ட வில்லை
இப்படம் ஜோஸ் புன்னே என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது .
இப்படம் மெதுவாகத்தான் செல்கிறது .ஆனால் எந்த இடத்திலும் திரையை விட்டு கண்கள் செல்லவில்லை .
சில படங்கள் எப்படா முடியும் என்று தோன்றும் ஆனால் இது அப்படி இல்லை மெதுவாக சென்றாலும் அந்த படத்துடுன் இன்னும் கொஞ்ச நேரம் ஒன்றி இருக்கலாம் என்று தான் தோன்றியது .
தமிழில் அன்பே சிவம் படத்தில் தான் எனக்கு இது போன்ற உணர்வு ஏற்பட்டது .
முடிவாக இன்றைய ஹாலிவுட் படங்களில் காதல் என்றாலே பார்த்த உடன் முத்தமிட்டு கொண்டு அடுத்த வினாடியில் எதவாது ஒரு அறைக்கு சென்று விட்டு அங்கே இருக்கும் பொருள்களை எல்லாம் தட்டிவிடுகிறேன் என்ற பெயரில் உடைத்து விட்டு ஒரு செக்ஸ் காட்சியை வைத்து விட்டு பின்பு இது மிக சிறந்த காதல் திரைப்படம் என்று சொல்லும் ஹாலிவுட் உலகில் இது போன்று உண்மையிலே இதய பூர்வமான திரைப்படங்களை பார்ப்பது புதிது .
சிறந்த காதல் திரைப்படங்கள் என்று ஒரு 10 படங்களை என்னை சொல்ல சொன்னால் அதில் இப்படம் நிச்சியம் இடம் பெறும் .

எனவே அனைவரும் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம் .


திங்கள், 18 மே, 2015

பார்க்க 101

Fireman (மலையாளம் ) தீயணைப்பு வீரர்களின் போராட்டம் 





பொதுவாகவே நம்மூரில் தீ விபத்து ஏற்பட்டால் மட்டும் தீயணைப்பு துறை வருவதில்லை .வீட்டில் மலை பாம்பு புகுந்தாலோ இல்லை கிணற்றில் மாடு விழுந்தாலோ இல்லை ஆற்றில் வெள்ள பெருக்கில் மாட்டி கொண்டவர்களை காப்பாற்றுவதும்  தீயணைப்பு துறை தான் .
ஆனால் அவர்களை பற்றி தமிழில் அதிகம்  படம் வரவில்லை .பிரசாந்த் நடித்து சுசி கணேசன் இயக்கிய விரும்பிகிறேன் படம்  தீயணைப்பு துறையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றாலும் அது பாதிக்கு அப்புறம் ஏதோ 90களில் வந்த காதல் திரைப்படம் போல் ஆயிற்று .
சரி இனி fireman 

ஒரு பெரிய Lpg gas சிலிண்டர் நகரத்தின் மத்தியில் லாரியில் இருந்து விழுந்து விடுகிறது அதில் இருந்து வெளியேறும் வாயுவால் நகரத்தில் பெரிய தீ விபத்து ஏற்படுகிறது . ஆனால் சிலிண்டர் அகற்றமால் விட்டால் 3 கிலோ மீட்டர் அளவு வாயு பரவி விடும் அதனால் யாரனும் செல் போன் உபோயோகித்தலோ இல்லை மின்சாரம் பயன்படுத்தினாலோ பெரிய தீ விபத்தாக மாறும் அபாயம் உண்டு .அதே நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கபட்டால் மெழுகுவர்த்தியோ இல்லை ups பயன்படுத்த கூடும் இதனால் மக்கள் அனைவரும் வெளியற்றபடுகின்றனர் .ஆனால் வாயு கசிவு எற்பட்ட இடத்திற்கு மிக அருகில் மத்திய சிறைச்சாலை .அவர்களை வெளியற்ற முடியாது அதே நேரத்தில் அங்கு ஏதுனும் ஒருவர் சிகரட் பற்ற வைத்தால் கூட விபத்து ஏற்படும் .
இதற்கு இடையில் மகளை தொலைத்த ஒருவர் ஒரு கடையை பூட்டி கொண்டு கையில் Lighter உடன் இருக்கிறார்.அவர் தன் மகள் 1 மணி நேரத்தில் வர வில்லை என்றால் அதை பற்ற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார் .
இதற்கு இடையில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசயம் தெரிந்து அவர்களை விட சொல்லி வன்முறையில் இறங்குகின்றனர் .
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில்  தீயணைப்பு துறை அந்த வாயு கசிவை தடுத்ததா பெரிய விபத்து ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கபட்டனரா சிறைச்சாலையில் உள்ளவர்களின் கதி என்ன என்பதே மீதி கதை .

சமீப காலங்களில் இவ்வளவு விறுவிறுப்பாக சென்ற படத்தை நான் ஹாலிவுட்டில் கூட பார்க்கவில்லை .படத்தின் ஆரம்பத்தில் இருந்தே திரைகதை வேகமாக செல்கிறது .தேவை இல்லாத பாடல்களோ நகைச்சுவை காட்சிகளோ சண்டை காட்சிகளோ இல்லை .
இவ்வளவு ஏன் படத்தில் ஒன்றி விட்டப்பின் படத்தில் நமக்கு மம்முட்டி நடித்திருபதாக தோன்ற வில்லை ஏதோ ஒரு  தீயணைப்பு துறை அதிகாரி தீயை தடுக்க போராடுவதை போல் தான் இருக்கிறது .
மேலும் வெறும் விறுவிறுப்புடன் செல்வது மட்டுமின்றி  தீயணைப்பு துறையில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்களையும் சொல்கின்றனர் .

ஒரு கட்டத்தில் விபத்தை தடுக்க முடியாது என்று தெரிந்த உடன் காவல் துறை உட்பட அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல தீர்மானிக்கும் போது  தீயணைப்பு துறை வீரர்கள் யாரும் வர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதற்கு மம்முட்டி ஒரு காரணம் சொல்வார் ."மக்கள் தீ விபத்தோ இல்லை வெள்ள பெருக்கோ இல்லை அது போன்ற நெருக்கடியான சமயத்தில் மக்கள் யாரும் மந்திரியோ இல்லை MLA  வையோ எதிர்ப்பார்பதில்லை 101 அழைத்து விட்டு எங்களைத்தான் நம்புகிறார்கள் .இது படத்திற்காக வைக்க பட்ட வசனம் என்றாலும் உண்மையும் அதுவே .ஆனால் நாம் யாரும் தீயணைப்பு துறையை பெரிதாக பார்ப்பதில்லை .காவல் துறையையும் ராணுவ துறையையும் தான் பெரிதாக பார்க்கிறோம் .
சிறு வயதில் நாம் எல்லாரும் விஜயக்காந்த் ,அர்ஜுன் நடித்த போலீஸ் படங்களை பார்த்து விட்டு அப்போது படம் முடிந்த போது நாமும் போலீஸ் ஆக வேண்டும் என்று பலர் நினைத்திருப்போம் .ஆனால் எனக்கு அப்போது எல்லாம் அப்படி ஒரு எண்ணம் வரவில்லை .ஆனால் இப்படம் பார்த்து முடித்த உடன் சிறு பிள்ளை போல் நானும் தீயணைப்பு துறை வீரனாக வேண்டும் என்று ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது .எனக்கு மட்டும் அல்ல .இப்படம் பார்க்கும் அனைவருக்குமே தீயணைப்பு துறை வீரர்கள் மீது ஒரு நல்ல மரியாதை ஏற்படும் .

முடிவாக எப்போதும் சிங்ககளும் சிறுத்தைகளும் வேட்டையாடி விளையாடுவதை மட்டும் பெரிதாக திரையில் ரசிப்பவர்கள் இது போன்று மனிதனை மனிதன் காப்பாற்றும் படங்களை பார்த்து ஊக்குவிக்க வேண்டும் .

மேலும் FIREMAN நல்ல விறுவிறுப்பாக செல்ல கூடிய படம் அதனால் அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன் .



புதன், 13 மே, 2015

மறவாதே கண்மணியே

மறதி கதாபாத்திரங்கள் பற்றி   ஒரு பார்வை

ஓகே   கண்மணி படம்  பார்த்தவர்கள்  அனைவரும்  படம் நன்றாக உள்ளது என்றவர்களும் சரி ,படம் பிடிக்கவில்லை என்று கூறியவர்களும் சரி படத்தில் ஒரு விஷயத்தை பெரும்பாலனோர்  பிடித்திருக்கிறது என்று பாராட்டியது  பிரகாஷ் ராஜ் மற்றும் லீலா சாம்சன்  கதாபாத்திரமும் அவர்களின்   வயோதிக காதலும் .


குறிப்பாக லீலா சாம்சனின் கதாபாத்திரம் ஒரு அழுத்தமான பாத்திரமாக இருந்தது .மற்ற பாத்திரங்களை விட இவரின் கதாபாத்திரம் ஒரு ரசிப்பு தன்மையும் பரிதாபத்தையும் ரசிகர்களிடம் ஒருங்கே பெற்று தந்தது ,இதற்கு காரணம் அவர் அல்ஜிமிர் என்ற மறதி நோயால் பாதிக்கபட்டுளதாலும் அதனால் சிரமபடுவதாலும்.
மறதியை வைத்து எடுக்கப்பட்ட பாத்திரங்களின் சிறப்பு இதுதான் அப்பாத்திரங்களுக்கு மறதி  இருந்தாலும் அப்பாத்திரங்களை ரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள் .அது அன்றைய மூன்றாம் பிறை ஸ்ரீதேவி கதாபாத்திரம் ஆகட்டும் இன்றைய ஓகே கண்மணியின் லீலா சாம்சனின் கதாபாத்திரம் ஆகட்டும் இல்லை அது கஜினியின் சூர்யா கதாபாத்திரம் ஆகட்டும் ரசிகர்கள் என்றுமே இப்பாத்திரங்களை மறக்க மாட்டார்கள் .
புராண காலங்களிலும் மறதி கதாபாத்திரங்கள் உண்டு .விசுவமிதிரர்ரின் மகள் சகுந்தலையை அவளுடைய கணவன் துஷ்யந்தன் மறந்தது .மயானத்தில் அரிச்சந்திரன் மனைவியையும் சொந்த மகனையும் மறந்தது என நம் கதைகளில் எப்போதும் மறதி கதாபாத்திரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன . இப்பாத்திரங்களின் சிறப்பு என்னவென்றால் எப்படி பழி வாங்கும் கதைகளில் எப்போது நாயகன் பழி வாங்குவான் என்ற எதிர்பார்ப்பும் ஒரு வன்முறை உணர்வும் ஏற்படுகிறதோ அதே போல் மறதி கதாபாத்திரங்கள் மீது ஒரு பரிதாப உணர்வும் ஒரு எதிர்பார்ப்பு தன்மையும் ஏற்படும் .
இந்த கட்டுரை முழுதும் மறதியை வைத்து வந்த எனக்கு தெரிந்த படங்களையும் அதன் கதாபாத்திரங்கள் பற்றியும் எனக்கு தெரிந்த வரை சொல்லி இருக்கிறேன்

1.memento(2010)


நோலனை Inception பார்த்தும் Batman trilogy பார்த்தும் ரசிகர்கள் ஆகியவர்கள்தான் அதிகம் ஆனால் நோலனின் சிறந்த படமாக பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் கருதுவது இந்த Memento தான் .இன்று வரையிலும் இதன் Non-linear திரைக்கதைக்காக இந்த படம் திரும்ப திரும்ப பார்க்கப்படுகிறது .இதன் கதை நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் குறுகிய கால ஞாபகம் உள்ள கதாநாயகன் தன் காதலியை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறான் என்பதே கதை சாதாரணமாக பழி வாங்கும் கதை என்றாலே ரசிகனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்படும் இதில் மறதி கதாபாத்திரம் ஒன்று பழி வாங்குகிறது என்றால் அது ரசிகனுக்கு புது விதமாகவும் ஒரு ஆர்வமும் ஏற்படும் ,அதை நோலன் திறம்பட கையாண்டு இருப்பார் .தன் மறதியை மீறி பழி வாங்க நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகளும் தான் இந்த திரைகதையின் பலம் .

2.கஜினி (2005)


அதான் Memento பற்றி சொல்லியாய்ற்றே அப்புறம் ஏன் கஜினியை பற்றி பேச வேண்டும் என்று சிலர் நினைக்கலாம் .இந்த Copycat கண்டுபுடிக்கும் கொலம்பஸ்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லி கொள்கிறேன் இந்த அந்நிய படங்களை தழுவி படம் எடுக்கும் முறை MGR,சிவாஜி காலத்தில் இருந்து உள்ளது .அதற்கு காரணம் இயக்குனர்கள் மட்டும் அல்ல .சொந்த கதையையோ இல்லை நாவலை தழுவியோ எடுக்கும் படங்களை ரசிகர்கள் என்றும் ஓட வைப்பதில்லை. அப்புறம்   Copycat என்று மட்டும் சொல்லி கொள்பவர்கள் இரண்டு படங்களை நன்றாக ஒப்பிட்டு பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .கஜினியை பொறுத்த வரையில் A.r.முருகதாஸ் கதையையும் அந்த கான்செப்ட் யையும் மட்டும் எடுத்து கொண்டு திரைக்கதையை முற்றிலுமாக மாற்றி இருப்பார்.இதன் காதல் காட்சிகளுக்குகாவே இந்த படம் எப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி அமைத்திருப்பது A.r.முருகதாசின் சமார்த்தியம் .மேலும் இப்படம் தெய்வ திருமகள் போல (I am sam) சீன் பை சீன் அப்படியே எடுத்து வைக்கவில்லை .
இதன் திரைக்கதையால் கவரப்பட்ட ஆமிர்கான் தன் திரை உலக வாழ்கையில் Remake எடுக்காத ஆமிர்கான் Remake எடுத்த ஒரே திரைப்படம் கஜினிதான் .

3.50 First dates(2004)


பீட்டர் சீகல் இயக்கத்தில் ஆடம் சண்ட்லெர் ,ட்ரூ பெர்ரிமோர் நடித்து 2004ல் வெளி வந்த படம் .இதில் நாயகிக்கு தன் தந்தை பிறந்த நாள் அன்று அவருக்கு பிறந்த நாள் வாங்கி விட்டு வரும் வழியில் விபத்துக்கு உள்ளாகிறாள் .அதிலிருந்து எல்லா நாளும் அவளுக்கு அந்த தினம் மட்டுமே நினைவில் உள்ளது .தினமும் தூங்கி எழுந்த உடன் தந்தை பிறந்த நாளாக நினைக்கிறாள் .தந்தைக்கு பரிசு வாங்க செல்கிறாள் .Sixth sense படத்தை குடும்பத்துடுன் பார்க்கிறாள் .ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் பார்க்கிறாள் .இந்த நிலையில்தான் நாயகன் அவளை சந்திக்கிறான் .முதலில் அவளை பற்றி எதுவும் அறியாத அவன் அதன் பின் அவளை பற்றி அறிந்து கொள்கிறான் .ஆனால் அதையே அவன் சாதகமாக எடுத்துக்கொண்டு தினமும் அவளுடுன் புதியவன் போல் பழகுகிறான் .பின் அவளை குணப்படுத்த முயல்கிறான் .ஆனால் அது முடியாது என மருத்துவர்கள் சொல்லி விடுகின்றனர் .அதன் பின் அவளுக்கு அவள் மறந்த ஒரு வருட நிகழுவுகளை வீடியோவாக எடுத்து அவளுக்கு காண்பிக்கிறான் .அதன் பின் தினமும் வீடியோ எடுத்து அவளுக்கு  தினமும் வீடியோ மூலம் முந்திய தினத்தை எடுத்து அவளுக்கு காண்பித்து அவளை காதலிக்கிறான் .ஆனால் ஒரு கட்டத்தில் அவள் தன்னால் நடைமுறை வாழ்கைக்கு ஒத்துவர இயலவில்லை என்று மன நல காப்பகத்துக்கு சென்று விடுகிறாள் அதன் பின் ஒரு மூன்று மாத இடைவெளிக்கு பின் நாயகன் அவளை தேடி சென்று திருமணம் செய்து கொள்கிறான் .இறுதி வரை அவளுக்கு வீடியோ மூலம் எல்லாவற்றையும் ஞாபக படுத்துகிறான் .
பொதுவாக காதல் கதைகளில் ஞாபக மறதி கதாபாத்திரங்களை புகுத்தும் போது அது பெரும்பாலும் அழுவாச்சி காவியாமகவே இருக்கும் ஆனால் இப்படம் அப்படி இல்லை .முதல் பாதி முழுதும் காமெடியாகவும் இரண்டாம் பாதி முழுதும் நல்ல காதல் காட்சிகளுடுனும் செல்கிறது .அதுவே இப்படத்தின் பலம்.

4.Mumbai police (2013)

 

ரோசன் அன்றேவ்ஸ்  (36 வயதினிலே இயக்குனர் ) இயக்கத்தில் பிரித்திவி ராஜ் ,ஜெயசூர்யா ,ரஹ்மான்  நடிப்பில் 2013ல் வெளிவந்த திரைப்படம் .மறதி கதாபாத்திரத்தை கொண்டு வந்த ஒரு வித்தியசமான திரைப்படம் .

பிரிதிவிராஜ் ஒரு திறமையான போலீஸ் அதிகாரி .ஆனால் யாரையும் மதிக்காமல் எப்போதும் ஒரு திமிருடுன் இருப்பவர் ,அதற்கு காரணம் அவர் மும்பையில் போலீஸ் ஆக வேலை பார்த்து விட்டு வந்திருப்பவர் .அதனாலே அவரை மும்பை போலீஸ் என்று கூறுகிறார்கள் .இப்படி இருக்கும் போது தன்னுடுன் வேலை பார்க்கும் சக போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார் .அதை விசாரணை செய்யும் பொறுப்பு பிரிதிவிராஜ்க்கு வருகிறது .எல்லாம் முடிந்து கொலையாளி யார் என்று கண்டுபுடித்து தன் மேலாதிகாரிக்கு சொல்ல போகும் வழியில் பிரிதிவிராஜ் விபத்துக்குள்ளாகிறார் .இதனால் கொலையாளியை மட்டுமின்றி தான் யார் என்பதையே முற்றிலுமாக மறக்கிறார் .அதன் பின் மிகவும் சிரமபடும் அவரிடிம் அவர் மேலதிகாரியான ரகுமான் மீண்டும் அந்த கொலை பற்றிய விசாரணையை முதலில் இருந்து துவங்குமாறு கூறுகிறார் .ஆனால் எதை பற்றியும் ஞாபகம் இல்லாத பிரிதிவிராஜ் அதை விசாரணை செய்யும் போது அது முதல் பாதியில் சென்றது போல் இல்லாமல் வேறு விதமாக செல்கிறது கொலையை பற்றிய சந்தேகங்கள் முற்றிலும் புதிதாக உள்ளது .இதை எல்லாம் மீறி பிரிதிவிராஜ் கொலையாளியை கண்டுபுடித்தரா தன் ஞாபகம் மீண்டும் வந்தாதா என்பதே கதை .இந்த படம் பிரிதிவிராஜின் நடிப்பில் ஒரு மைல் கல் என்றே சொல்லாலம் .மும்பை போலீஸ் என்ற பெயரில் திமிருடுன் இருப்பதாகட்டும் தன்னை பற்றியே மறந்த பின் ஒரு கொலையை பற்றி விசாரணை செய்யும் போது மிகவும் பரிதாபமாக இருப்பது ஆகட்டும் நடிப்பில் ஒரு சிறந்த பரிமாணத்தை காட்டி இருப்பார் .அதே போல் சம கால மலையாள இயக்குனர்களில் ரோசன் அன்றேவ்ஸ்  கவனிக்கதக்கவர் .இவருடைய அனைத்து படங்களும் வேவேறு விதமான வகை படங்கள் ஆகும் .மேலும் இவருடைய படங்களில் திரைகதையை மந்தமாக்கும் வகையில் பாடல்களோ நகைச்சுவையோ அதிகம்  இருக்காது .மும்பை போலீசை பொறுத்த வரையில் எப்படி மறதி கதாபாத்திரத்தை வைத்து ஒரு பழி வாங்கும் கதையாக கஜினி இருந்ததோ அதே போல் இது  மறதி கதாபாத்திரத்தை வைத்து ஒரு  நல்ல crime thriller .

5.Deepavali(2007)


மூன்றாம் பிறையில் கமலின் பாத்திரம் பைத்தியம் ஆகமால் மீண்டும் காதலியை தேடி போய் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று இயக்குனர் எழில் யோசித்திருப்பார் போல அது போலே தீபாவளி படம் இயக்கிருப்பார் .
அதே போல் மூன்று மாதம் நாயகனை காதலிக்கும் நாயகி அதன் பின் தன் பழைய ஞாபகங்கள்  வந்த பின் நாயகனை மறக்கிறாள் .அவளை தேடி சென்று அவளுக்கு தன் காதலையும் தன்னுடுன் இருந்த நாட்களை ஞாபகபடுத்த முயற்சிக்கும் நாயகன் என்று நல்ல Classical Romance படமாக வர வேண்டியது திரைக்கதையால் சுமாராகி போனது .இருப்பினும் இதன் பாடல்களும் அது படமாக்கபட்டிருக்கும் விதமும் இன்று பார்த்தாலும் ரசிக்கும் படி இருக்கும் 

6.The vow (2012)

இப்படத்தை பார்த்தவர்களோ இல்லை நான் கதை சொல்லிய பின் இது தீபாவளி படம் போன்று இருக்கிறதே என்று நினைத்து ஒரு வேலை இதை எழில் காப்பி அடித்திருப்பாரோ என்று நினைப்பவர்கள் இரண்டு படங்கள் வெளி வந்த வருடங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள் .The vow வெளி வந்தது 2012 ஆனால் தீபாவளி 2007ல் வெளிவந்துள்ளது .

The vow படத்தை பொறுத்த வரை பணக்கார நாயகி வீட்டில் இருக்க புடிக்கமால் வெளியே வருகிறாள் ஒரு ஆல்பம் பாடகரான நாயகனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் .மூன்று மாத காலம் அவனுடன் நிம்மதியாக வாழ்கிறாள் .ஆனால் ஒரு விபத்துக்கு பின் நாயகி அந்த மூன்று மாத கால நினைவுகளையும் தன் கணவனையும் மறக்கிறாள் .அதன் பின் நாயகன் தன் திருமண போட்டோவை காண்பித்து அவளை தன்னுடுன் இருக்க சொல்கிறான் .அவளும் முதலில் சம்மதிக்கிறாள் .ஆனால் பின்பு அது புடிக்காமல் தன் பெற்றோரிடம் சென்று விடுகிறாள் அதன் பின் வழக்கம் போல் நாயகன் அவளுக்கு ஞாபகபடுத்த முயல்கிறான் . ஆனால் இறுதி வரை நாயகிக்கு ஏதும் ஞாபகம் வரவில்லை .ஆனால் நாயகனின் அன்பினால் இறுதியில் அவனிடமே சென்று விடுகிறாள் .இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது நாயகியின் பாத்திரத்தில் உள்ள உண்மை பெண்மணிக்கு இன்று வரை ஞாபகம் வரவில்லை .ஆனால் அப்பெண்மணி கணவருடுன்தான் உள்ளார் .
7.Vetri vizha (1989)


கமல் நடிக்காத பாத்திரம் என்றுதான் ஏதும் உண்டா ?  அவர் மறதி கதாபாத்திரமாக நடித்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1989ல் வெளி வந்த திரைப்படம் தான் வெற்றி விழா .கிட்டத்தட்ட ராபர்ட் லாடுளும் எழுதிய  The Bourne Identity என்ற  நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம் .
தான் யார் என்று மறந்து விட்ட உளவு அதிகாரியான நாயகன் தன்னை பற்றியும் தன்னை கொல்ல முயற்சிப்பவர்களையும் கண்டுபுடிப்பதே கதை இதில் வெறுமனே கமலின் பாத்திரத்தை வைத்து கொண்டு திரைக்கதை அமைக்கபட்டிருந்தால் கூட படம் விறுவிறுப்பாக சென்று இருக்கும் .ஆனால் தேவை இல்லாமல் பிரபு மற்றும் குஷ்பு கதாபாத்திரங்கள் மற்றும் s.s.சந்திரனின் இரட்டை அர்த்த நகைச்சுவையும் இதன் திரைக்கதையை வலுவற்று போக செய்து விட்டது .கமலின் ஆபூர்வ சகோதரர்கள் ,சத்யா ,சகலகலா வல்லவன் போன்று சிறந்த பொழுதுப்போக்கு படமாக வந்திருக்க வேண்டியது ஆனால் சுமாரான படமாகவே ஓடியது .

8.The bourne series (2002,2004,2007,2012)


அதே ராபர்ட் லாடுலம் எழுதிய The bourne identity நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது .அதே போல் தன்னை மறந்து விட்ட ஒரு உளவு அதிகாரி எப்படி தனக்கு வரும் சிக்கல்களை எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக கொண்டு சென்ற படம் .ஆனால் மூன்று பாகங்களிலும் தான் யார் என்பதை நாயகனால் ஞாபகப்படுத்தவே முடியாது .
எப்படி bruce wills க்கு Die hard series ,டாம் குருஸ்க்கு மிசன் இம்பசபில் போல மேட் டேமன் க்கு இந்த திரைப்படங்கள் வெற்றி பாதையை வகுத்தது .

9.Still Alice(2014)


பொதுவாகவே இன்றைய கால கட்டத்தில் 40 மற்றும் 50 வயது பெண்மணிகள் மன அழுத்தத்தினால் அல்ஜிமிர் மறதி நோய்க்கு உள்ளாகின்றனர் .அதை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது .
கல்லூரி விரிவுரையாளராக இருக்கும் ஆலிஸ்க்கு அல்ஜிமிர் மறதி நோய் ஏற்படுகிறது . ஆரம்பத்தில் சிறிய விசயங்களை மறக்கும் ஆலிஸ் அதை போக்க செல் போன் reminder மற்றும் குறிப்புகள் எடுத்து சமாளிக்கிறாள் .ஆனால் நாளாக நாளாக அனைத்தையும் மறக்கிறாள் .இறுதியில் அவளுக்கு பேசும் வார்த்தைகள் கூட மறந்து விடுகிறது .
மெதுவாக செல்லும் திரைக்கதையை ஜுலியானெ மூரே தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார் .இந்த படத்திற்காக அவர் ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வென்றார் .

10.A moment to remember (2004)


ஆலிஸ்க்கும்(Still alice) பவானி ஆண்டிக்கும் (ஓகே கண்மணி) 50 வயதில் வந்த அல்ஜிமிர் மறதி நோய் ஒரு 27 வயது பெண்மணிக்கு அதுவும் திருமணம் முடிந்த ஓரிரு மாதங்களிலே வந்தால் எப்படி இருக்கும் அது தான் கொரியன் திரைப்படமான இந்த a moment to remember.
பொதுவாக காதல் திரைப்படங்கள் எடுப்பதில் கொரியாகாரர்களை அடித்து கொள்ள முடியாது அதுவும் இது போன்ற கதை உள்ள படத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் .படத்தில் எடிட்டிங் மற்றும் இசையும் பாராட்டத்தக்கது .
மேலும் இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது .ஹிந்தியில் அஜய் தேவ்கன் ,கஜோல் நடிப்பில் U me aur hum என்ற பெயரில் காப்பி அடிக்கப்பட்டது .

11.Naduvula konjam pakkatha kanom (2012)


முடிவாக  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு நாயகன் கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுகிறான் .இதனால் அவன் தலையில் சிறிய அடிப்பட்டு ஒரு 3 மாதங்களுக்கு முன் நடந்த அனைத்தையும் மறக்கிறான் .இந்த 3 மாதத்தில்த்தான் அவன் காதலித்து அதை திருமணம் வரை கொண்டு சென்று இருக்கிறான் .அடுத்த நாள்  திருமணம் ஆனால் அவனுக்கோ ஏதும் ஞாபகம் இல்லை .இப்படியான கதையை எடுக்கும் போது அது கத்தி மீது நடப்பதை போன்றது ஆனால் இயக்குனரோ அதை சோக காவியமாக்கமால் காட்சிக்கு  காட்சி சிரிக்க வைத்துள்ளார் . ஒரு வசனத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது பொதுவாக அலுப்பு தட்டிவிடும் ஆனால் இதிலோ நாயகன் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் போது நகைச்சுவையாக இருக்கும் படி அமைத்துள்ளார் .
பொதுவாகவே மறதி கதாபாத்திரங்கள் மீது பரிதாப உணர்வுதான் ஏற்படும் ஆனால் இதில் நாயகனை பார்க்கும் போதல்லாம் ரசிகர்கள் சிரிக்கின்றனர் அது தான் இயுக்குனரின் சமார்த்தியம் .
எனக்கு தெரிந்து மறதியை வைத்து படம் முழுதும் சிரிக்க வைத்த  ஒரே படம் இதுவாகத்தான் இருக்க முடியும்



இவைகள் தவிர வேறு மறதியை வைத்து வந்த படங்களை நான் விட்ருக்கலாம் .
பெரும்பாலும் மறதி பாத்திரங்களை கண்மணிகளுக்கு படைக்கும் போது அது எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாது .மேலும் பெண்களுக்கு மறதி வரும் போது அது அவர்களை விட அது நாயகர்களுக்கு சாதமாக அமையும் .அதனால் தான் மூன்றாம் பிறையின் கமலின் பாத்திரம் இன்று வரை மறக்க முடியாதாக இருக்கிறது .அதே நேரத்தில் ஆண்களுக்கு மறதி பாத்திரம் படைக்கும் போது அதை கவனத்துடன் கையாள வேண்டும் .
ஏனன்றால் கஜினியை போன்றோ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்றோ ஒரு முறைதான் எடுக்க முடியும் .ஆனால் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தையோ இல்லை ஓகே கண்மணி லீலா சாம்சன் பாத்திரத்தை போன்று மீண்டும் படைத்தல் அது கிலெசெ வாக இருந்தாலும் ரசிப்பார்கள் .
மேலும் மறதி பாத்திரங்களுக்கு அல்ஜிமிர் நோய் மூலம் வருவதாக காட்டப்படுகிறது .எனவே அல்ஜிமிர் நோய் பற்றிய ஒரு நல்ல தெளிவு பெற்ற பின் மறதி கதாபாத்திரங்கள் படைப்பது நல்லது .

எனவே மறதியை வைத்து திரைக்கதை எழுதும் போது இந்த படங்கள் பார்த்து விட்டு எழுதினால் திரைக்கதை சிறப்பாக அமையும் என நினைக்கிறேன் .