செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

BOYHOOD (2014) - 0scar nominee- 2015

BOYHOOD (ஓரு   சிறுவனின்  வாழ்க்கை  பதிவு  )


coming  age drama   என்று   திரை  உலகில்   ஒரு  Genre  உள்ளது .  அதாவது
வளரும்  சிறுவர்கள்  அல்லது  விடலை  பருவத்தினரின்  மனநிலை ,  அவர்களின் உலகம்  ,  அவர்கள்  சமுதாயத்தை  பார்க்கும்  பார்வை , அவர்களின்   நட்பு  வட்டாரம் , குடும்ப  சூழ்நிலையை  அவர்கள்  அணுகும்  முறை , மற்றும்  அவர்களுக்கு என்று  அந்த  வயதில்  எழும் உடல் மற்றும்  உளவியல் சார்ந்த  பிரச்சினைகள்  என்று  இவற்றை  வைத்து  திரைக்கதை  பின்னப்படுவது தான்  coming age drama   ஆகும் .

எனக்கு  தெரிந்து  தமிழில் இந்த  வகையில்  படம்  வரவில்லை  என்று  தான்  நினைக்கிறேன் . ஒரு வேளை  நண்பர்கள்  யாராவது என்னிடிம்  அஞ்சலி , பசங்க ,கோலி சோடா  என்று  என்னிடிம்  வாதம் செய்ய வந்தீர்கள் என்றால் நான் இந்த படங்கள்ளலாம் coming age drama  இல்லை என்றுதான் சொல்வேன் .

பசங்க  படம் நேருக்கு நேர்  படத்தை  அப்படியே சிறுவர்களுக்கு எடுத்தது போல் தான் இருந்தது . படம் முழுதும்  சிறுவர்கள் இருந்தும்  சிறுவர்களுக்கான வாழ்கையை சரியாக பிரதிபளிக்கதது போல் தான் இருந்தது .   அஞ்சலி  இந்த படத்தில் சிறுவர்கள்  பண்ணும்  அதிக பிரசங்கி தனமே அந்த படம் coming age drama    இல்லை என்று தெரிந்து விடும் .

கோலி சோடாவை பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை . அடுத்த படியாக வளரும் இளமை பருவம் (அதாவது  16 அல்லது 17 வயது உள்ளவர்கள் ) இவர்களை வைத்து எடுக்கப்படும்  coming age drama   படங்களில் எனக்கு  தெரிந்து  தமிழில் செல்வராகவனின்  துள்ளுவதோ இளமை மட்டும் தான் .


சமகாலத்தில்  எனக்கு  தெரிந்து    coming age dramaவில்  சிறந்த  படங்களாக  படுவது  இரண்டு படங்கள் . ஒன்று  நம்  அனைவருக்கும் தெரிந்த அமீர் கானின் இயக்கத்தில் 2007ல் வெளிவந்த  தாரே ஜமீன் பர் . இப்படத்தில் dyslexic நோயால் பள்ளியில் சிரமப்படும் சிறுவனின் மன நிலையை நன்று பதிவு செய்திருப்பார்  அமீர் கான் .


இன்னொரு  படம் ரோசன் அன்ட்ருஸ் (How old are you? படத்தின் இயக்குனர் ) இயக்கத்தில் 2006ல் வெளிவந்த  மலையாள திரை படமான "Note book" இந்த படத்தில் பள்ளி பருவ பெண்களின் நட்பையும் அந்த பருவத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என  coming age drama விற்குரிய  அனைத்து கூறுகளை   உள்ளடக்கி  அருமையாக எடுத்து இருப்பார் .(Note book மற்றும்  ரோசன் அன்ட்ருஸின் படங்களை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்)

  coming age drama வை பற்றி எனக்கு தெரிந்தவை இவ்வளவுதான் .சரி coming age drama விற்கும் BOYHOOD படத்திற்கும் என்ன சம்பந்தம் என்னவென்று கேட்டிர்கள் என்றால் அதற்கு படத்தின் தலைப்பே பதில் சொல்லும்.

BOYHOOD  படத்தை பற்றி



இந்த  படத்தின் கதையை பற்றி சொல்வது கடினம் ஏன் இந்த படத்தின் கதை interstellar போன்றோ இல்லை memento போன்றோ கடினமான திரைக்கதையை  கொண்டதா என்றால் இல்லை இந்த படம் முழுதும் ஒரு சிறுவனின் 12 ஆண்டு கால வாழ்க்கை பதிவு . எப்படி  சத்யஜித்ரே  அபு  என்ற ஒரு சிறுவனின் கதாபாத்திரத்தின் மூலம் "பதர்  பாஞ்சாலி " என்ற ஒரு  வாழக்கை பதிவை திரைப்படமாக தந்தாரோ இந்த படத்தின் இயக்குனர் ரிச்சார்ட் லிங்க்லடோர்  "மேசன் " என்ற சிறுவனின் மூலம் ஒரு வாழ்க்கை பதிவை தந்துள்ளார்.

படத்தை  பற்றி பார்க்கும் முன் இயக்குனர் ரிச்சார்ட் லிங்க்லடோர் பற்றி சமகால அமெரிக்க இயக்குனர்களில் இவர் சிறிது  மாறுப்பட்டவர் . எப்படி   நம்மூரில் பாலா சில கட்டுபாடுகளை உடைத்து எறிந்து படம் எடுக்கிறோ அதே போல்த்தான் இவர். திரைக்கதைக்கான இருக்கும் சூத்திரங்களை உடைத்து படம் எடுப்பார் . ஏன் இதைத்தான் நோலனும் டாரண்டினோவும்     செய்து விட்டனர் என்பவர்களுக்கு அவர்கள் படம் non-linear ஆக இருந்தாலும் இந்த திருப்புமுனை எனப்படும் plot-point ஏதாவது ஒரு இடத்தில இருக்கும் ,
ஆனால் இவர் படத்தில் அந்த திரைக்கதைக்கான  சூத்திரங்களோ கதாபாதிரத்திற்கென எந்த  குறிக்கோளும் இருக்காது .

அதற்கேன இவரது படங்கள் சுவாரசியமாக இருக்காதா என்றால் இல்லை .இவரது படங்களின் காட்சிகள் புதிதாகவும் ,ரசிக்கும் படியும் அமைத்திருப்பார்  அதற்கு இவரது Before Triolgy(before sunrise,before sunset ) ஒரு உதாரணம் . உலகில் உள்ள  ஹாலிவுட் ரசிகர்கள் Titanic கிற்கு  அடுத்தப்படியாக கொண்டாடும் காதல் திரைப்படம் இவைகள் தான் .(இதன் சில காட்சிகள் பல தமிழ் திரைப்படங்களில்  வந்துள்ளது .வாலி படத்தில் அஜீத் ,ஜோதிகா காதல் காட்சிகள் இதில் வந்தவையே )

இவரது படங்கள் கதாபத்திரங்களின்  காதல்  நிகழ்வுகளையோ ,குடும்ப  நிகழ்வுகளையோ  வைத்து தான் நகரும் .

இனி BOYHOOD 2002 ல் தன் Befor Triology  படங்களை எடுத்து கொண்டிற்கும் போது ஒரு பெயரிடாத படத்தை ஆரம்பித்தார் . மேலும் அவர் அந்த படத்தை 12 வருடங்கள் எடுக்க போவதாகவும் அதன் மூலம் ஒரு சிறுவனின் பள்ளி பருவத்தில் ஆரம்பித்து அவன் கல்லூரிக்கு செல்லும் நிகழ்வுகளையும் அதற்கு இடையில் அவன் குடும்பங்களின் மாற்றங்களையும் வைத்து அதன் திரைக்கதை இருக்கும் என்று  கூறி இதை எடுத்துள்ளார் .

முதலில் இவர் இந்த முயற்சியை எடுத்ததற்காகவே பாராட்டலாம் .ஏனெனில் அந்த 12 ஆண்டு கால படபிடிப்பின் போது நடிக்கும் நடிகர்களுக்கு எதவாது சம்பவித்தலோ அல்லது அவர்கள் விலகி விட்டாலோ மிகவும் சிக்கலானது .அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்.

முன்பே சொன்னது போல் இதில் மேசன் என்ற சிறுவனின் 12 ஆண்டு கால வாழ்க்கை பதிவே கதை .



 இந்த  படத்தின் மூலம்  அமெரிக்காவின் குடும்ப முறையையும் கலாச்சாரத்தையும் நன்கு பிரதிபலிக்கிறார் இயக்குனர்.
  குறிப்பாக  பெற்றோர்களின் விவாகரத்து , அதன் பின் அவர்கள் செய்யும் பல திருமணங்கள் அதானால் ஏற்படும் குழந்தைகளின் வாழ்க்கை மாற்றங்கள் .
என பலவற்றை இப்படம் சொல்கிறது .

அதே போல்  இந்த படத்தை பார்க்கும் போது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை நேரடியாக பார்ப்பது போல் உள்ளது அதுதான்   லிங்க்லடரின் 12 வருட உழைப்பின் வெற்றி .

இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் . மேசன் மற்றும் அவனது சகோதரி வார இறுதியில் அவர்களது சொந்த தந்தையை சந்திக்கும் காட்சிகள் . அவை அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது .

என்னதான் உலகமெங்கும் ஹாலிவுட் வெற்றி படங்களையும் , சிறந்த படங்களை கொடுத்தாலும்  ஒரு "The 400 Blows ",  போன்றோ ஒரு பதர் பாஞ்சாலியை போன்றோ சிறந்த எதார்த்த படங்கள் வராதது  அங்குள்ள ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நீண்ட கால ஏக்கமாக இருந்தது .
அதை இந்த BOYHOOD தீர்த்து வைத்துள்ளது .
படம் வெளியாகி இந்த நிமிடம் வரை படத்தை கொண்டாடி  தீர்க்கன்றனர் ரசிகர்களும் விமர்சகர்களும் .

அதற்கு ஏற்றார் போல் படமும் விருதுகளை வாங்கி குவிக்கறது .Golden Globe ல்  சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் , சிறந்த துணை நடிகை என மூன்று விருதுகளை வென்ற இப்படம் ஆஸ்காரில் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது .


முடிவாக  இயக்குனர் ஆக விரும்புவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் . சினிமா ரசிகர்களும் பார்க்கலாம் .

மற்றபடி மெதுவாக செல்லும் படங்களை விரும்பாதவர்கள் .இந்த படத்தை விருப்பம் இருந்தால் பார்க்கவும் .

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

AMERICAN SNIPER (2015) - Oscar nominee (2015)

AMERICAN  SNIPER ( அமெரிக்க  போர்  வீரனின்  உண்மை  கதை  )


  நம்மூர்   ரசிகர்களை  கவர  எப்படி  காமெடி  படங்கள்  எடுக்கபடுகிறதோ  அதே  போல்  தான்  ஹாலிவுட்   ரசிகர்களுக்கு  போரை  தழுவி  எடுக்கப்படும்  படங்கள் .

       

 இது  ஆண்டாண்டு   காலம்   தொடரும்    ஒன்றாகும்  .  ஒவ்வொரு  வருடமும்
அமெரிக்கர்கள்  எந்த   நாட்டையாவது  திரையில்  வெற்றி   கொள்ள வேண்டும்
அப்படி இருந்தால்தான்   அந்த    வருடம்   நிறைவு  அடைந்தாக  கருதுவர் . ஓன்று  ரஷ்யா  இல்லை என்றால்  ஜப்பான் . அதுவும்  இல்லை   என்றால்  இரண்டு  உலக  யுத்தங்கள் .  என்று  அமெரிக்கா  யாரையாவது  கொன்று  குவிக்கும் .

              அதே  போல் தான்  அங்குள்ள  இயக்குனர்களும்  போரை  தழுவி  படங்கள்  எடுக்கா  விட்டால்  தன்  திரை உலகம்  முழுமையற்றதாக  கருதுவர்.
அனைத்து  சிறந்த  இயக்குனர்களும்  ( Stanley Kubrick -Full Metal Jacket (1987)Steven Spielberg -Saving Private Ryan  , Ridley Scott- Black Hawk Down (2001,)  போர்  சார்ந்த  படங்களை  எடுத்த  விடுவனர் . இதில்  martin scorsese   மட்டுமே  விதி விலக்கு  .

அவர்கள்  இவ்வாறு  படம் எடுபதற்கு  அரசியல்  காரணங்களும்  உண்டு .   அரசின்   ஆதரவும் இருக்கும் .  மேலும்  ஆஸ்காரில் நிச்சியம் எதாவது  விருதையும் பெற்று  விடும் .

   இதற்கு  2009 ன்   ஆஸ்காரே  சாட்சி  .  அந்த  வருடம்  எல்லாரும்  எதிர்பார்த்த James Cameron ன்  Avatar    சிறந்த  படம் ,  மற்றும்  சிறந்த இயக்குனர்  விருதை பெறவில்லை . அதற்கு  பதில்  அந்த  வருடம்  போரை  தழுவி  வந்த Kathryn Bigelow ன் The Hurt Locker  தான் முக்கிய விருதுகளை  வென்றது . இது  உலக சினிமா ரசிகர்களுக்கு  அதிர்ச்சியாக இருந்தாலும்  அமெரிக்கர்கள்  ரசிக்கவே  செய்தனர் .   


                                  காலங்காலமாக   ரஷ்யாவை  போட்டு  துவைத்த  அமெரிக்க  

திரை உலகினர்  செப்டம்பர் 11,2001 நியூயார்க்கின்   இரட்டை  கோபுரத்தை  


அல் -கொய்தா  விமானம்  மூலம்  தாக்கிய  பிறகு  அமெரிக்காவின்  பிரதான 

எதிரியாக  ஈராக்  மற்றும்  ஆப்கான்  நாடுகள்  ஆகின .   


அப்புறம்  ஏன்ன  ஹாலிவுடின்  எந்த  திரை படத்தை எடுத்தாலும்  இந்த ஈராக்  

அல்லது  முஸ்லிம் நாடுகள்  ஏதாவது  எதிரியாக  இருக்கும் . அது   ஜேம்ஸ்  

பாண்ட்  படமாக  இருந்தாலும்  சரி  சூப்பர்  ஹீரோ  படமாக இருந்தாலும் சரி  காதல் படமாக   இருந்தாலும்  சரி  இவ்வளவு  ஏன்  காமெடி  படமாக  இருந்தால்  கூட  அதில்  அவர்களை  மறைமுகமாக இல்லை நேரடியாகவே தாக்கி கொண்டிருப்பர் .


அப்படங்கள்   எல்லாம்  அமெரிக்காவின்  பெருமையை  பறை  சாற்றுவது  

போலே  இருக்கும்  .மேலும்  இராக்  பல  கொடுமைகளை  செய்வது  போலவும் 

அமெரிக்கா  தான் அதை  தடுத்தது  போலவும்  காட்டுவர் . அமெரிக்காவின்  

மற்றொரு  பக்கத்தை காட்ட மாட்டார்கள் .  இதில்  வித்தியாசத்துடுனும்   

ஓரளவு  அமெரிக்காவின்  உண்மை  முகத்தை  காட்டுவது  போலவும் வந்த  

படம்  2007ல்  Robert Redford  இயக்கத்தில்  Tom Cruise  மற்றும்  Meryl Streep  நடிப்பில் வெளிவந்த  Lions for Lambs  திரைப்படம்  மட்டுமே .
அதானாலே  என்னவோ  இந்த  படம்  தோல்வி அடைந்தது .


சரி  இனி  AMERICAN  SNIPER பற்றி  




கடந்த  ஒரு  மாத காலமாகவே   US Box office இல்  நம்பர் 1ல்  இருக்கும்  படம் .

மேலும்   அமெரிக்க அதிபரின்  மனைவியான  திருமதி .மிச்சேல் ஒபாமாவே 

பாராட்டிற்கும் படம் .  உலகம்  எங்கும்  விமர்சகர்களால்  பாரட்டும் திட்டும் 

ஒருங்கே   வாங்க  பெற்ற  படம் . 


இப்படத்தை  இயக்கி  இருப்பவர்  அமெரிக்காவின்  சிறந்த  இயக்குனர்களில்  

ஒருவரான  Clint Eastwood . ஒரு  நடிகராக  தன்  வாழ்கையை  தொடங்கி  இயக்குனராக மாறியவர் . Mystic RiverMillion Dollar Baby    போன்ற  திரைப்படங்களை  இயக்கி  புகழ்  பெற்றவர்  .    

பல  hit  படங்களை    கொடுத்தவர் .   இருப்பினும்  எல்லா   இயக்குனர்களை  போல் போர்  பற்றிய  படம்  எடுக்காதது  இவருக்கு  மனக்குறையாகப் பட்டிருக்கும்  போல . அதானலே  இப்படத்தை   எடுத்துள்ளார்.

                                            இந்த  படத்திற்காக    இவர்  கிரிஸ்  கேல்   என்ற   உண்மையான   ராணுவ  வீரனின்   வாழ்கையை  தழுவி  எடுத்துள்ளார் .

கிரிஸ்  கேல்    என்பவர்   ஒரு   கௌ பாய்  ஆக   வாழ்கையை  தொடங்கி  ராணுவ  வீரராக  மாறியவர்.   பின் தயா ரேனே என்ற  பெண்மணியை   காதலித்து  திருமணம்  செய்து  கொண்டவர் .

2001 இரட்டை  கோபுர  தாக்குதலுக்கு  பின்  கேல்  ஈராக்கிற்கு   அனுப்ப படுகிறார். அங்கு   sniper   ஆக  பணிபுரிகிறார் .  (sniper    என்றால்  குழுவுடன்  சேராமல்  தனியாக  எங்காவது  மறைந்து  கொண்டு  தொலை தூரத்தில்  இருந்து  சுடுபவர் )  இராக்கில்   அல் -கொய்தா தலைவன்  ஒருவனை  புடிக்கும் பணி அங்கு  அளிக்கப்படுகிறது  .


அதன் பின்  ஓரு  நான்கு  பயணங்களாக   கேல்    ஈராக்கிற்கு   செல்கிறார்  . ஒவ்வொரு பயணத்தின்  போதும்   பலரை  கொன்று  அமெரிக்க  வீரர்களை   பாதுகாக்கிறார் . இதனாலே   கேல்  சீனியர்  தலைவர் ஆகிறார்  .

இதற்கு இடையில்  அவருக்கு  இரண்டு  குழந்தைகள்  பிறக்கின்றன .


கேல்   ராணுவத்தில்  சிறப்பாக  செயல் படுகிறார் . ஆனால்  குடும்பத்துடன்  போதிய  நேரம்  செலவளிக்க முடியவில்லை  அவரால்.

அதே  போல்  அமெரிக்க  ராணுவத்தாலும்   அல் -கொய்தா தலைவனை  புடிக்க முடியவில்லை . மேலும்  அல் -கொய்தாவிடம்  முஸ்தபா  என்ற ஒலிம்பிக்கில்  தொலை தூர துப்பாக்கி  சுடுதலில்  பதக்கம் வென்றவன்  sniper  ஆக இருக்கிறான் . அவன்  கேலை  விட சிறப்பாக  செயல் படுகிறான் .
அவன்   பல மைல்  தூரத்தில்  இருந்து  எளிதாக   பல  வீரர்களை  கொன்று  விடுகிறான் .

முடிவாக   அமெரிக்க  ராணுவம்   அல் -கொய்தா தலைவனை புடித்ததா  ,   கேல் முஸ்தபாவை  முறியடித்து கொன்றாரா  ,   அவரால்  மீண்டும்  குடும்ப  வாழ்க்கையுடன்  ஒன்ற முடிந்ததா  என்பதே  AMERICAN  SNIPER படத்தின் கதை .


இந்த   படம்  வழக்கமான  யுத்த  படங்களில்  எவ்வாறு  வேறுபடுகிறது  என்றால் , மற்ற  யுத்த  படங்களில் எல்லாம்  ஒரு  குழு தொடர்ந்து  சண்டையிட்டு  கொண்டே இருக்கும் . மேலும்  போர் களம்  மட்டுமே  காட்டப்பட்டு கொண்டு இருக்கும் . ஆனால்  இது  அவ்வாறு  இல்லை  ஒரு  போர் வீரனின்  வாழ்க்கையயும்  மட்டுமின்றி  யுத்த  களத்தில்  ஒரு உயிரை  கொல்லும் போது  அவனின்  மனப்போரட்டதையும்  அப்படியே  படம்  புடித்து  காட்டுகிறது ,


முதல்   காட்சியில்  வெடிகுண்டை  எடுத்து  வரும் சிறுவனையும்  பெண்மணியையும்  கொல்வதில் இருந்து  கேலின்  மனப்போரட்டம்  ஆரம்பிக்கறது .  அதே  போல்  இராணுவ வீரனின்  குடும்ப சூழ்நிலையையும் நன்றாக விளக்குகிறது .  

குறிப்பாக  ஒவ்வொரு முறை  வீட்டிற்கு  வரும்  போதும்  கேல்  தொலைகாட்சி  பார்ப்பார் . ஒவ்வொரு முறை யும்   யுத்த  சம்பந்தப்பட்ட  செய்திகளை  பார்த்து  இறுதியில்  போர்  முடிந்த பின்  வெறும்  தொலைகாட்சி  பார்க்கும் போதும்  அந்த யுத்த செய்திகளின் சத்தம் கேலிற்கு கேட்டு கொண்டே இருப்பது  போர் வீரர்களின் மன நிலை எவ்வாறு இருக்கிறது  என்பதற்கு ஒரு நல்ல சான்று .



                       இந்த  படத்தில்  காதல்  காட்சியும் நன்கு வைக்கப்பட்டுள்ளது .
ஒரு   யுத்தம் சார்ந்த   காதல்  காட்சி  இவ்வளவு  வலுவாக  வைக்க பட்டிருப்பது தான்  இப்படத்தின் சிறப்பு .

மேலும்    இப்படத்தில்   குறிப்பட்டு சொல்ல வேண்டிய ஒன்று  எடிட்டிங்  .

அது   பல  காட்சிகளை  விறுவிறுப்பாக கொண்டு  செல்கிறது . முதல்  காட்சியும்  கிளைமாக்ஸ்  காட்சியும்  அதற்கு சான்று .


AMERICAN  SNIPER  இந்த வருட  ஆஸ்காரில்  சிறந்த  படம் , சிறந்த நடிகர்  உட்பட 6 விருதுகளுக்கு  பரிந்துரைக்கபட்டுளது .


வன்முறை  புடிக்காதவர்கள் , மற்றும்  அமெரிக்க  ஏகாதிபத்தியம்  புடிக்காதவர்கள்     தவிர  அனைத்து  சினிமா ரசிகர்களும்  இந்த  படத்தை  பார்க்கலாம் 

  











                  

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

THE GRAND BUDAPEST HOTEL-2014 (Oscar nominee-2015)

THE GRAND BUDAPEST HOTEL-2014 ( ஹோட்டல் முதலாளியும்  மற்றும்   லாபி பையனும் இணைந்து  செய்யும்  நகைச்சுவை  சாகசங்கள் )


                           சம கால  ஹாலிவுட்   இயக்குனர்களில்  எனக்கு

David Fincherக்கு   அடுத்தபடியாக   புடித்த   இயக்குனர்  Wes Anderson. இவர்   படங்கள்  பெரும்பாலும்  ஓரு  புத்தகத்தை  படிப்பது  போன்று  உணர்வை  தரும் .( இதே  உணர்வை  டாரண்டினோ  படங்கள்  தந்தாலும்  அது  ஒரு குழப்பமான  நிலையை  ஒருங்கே  தரும் )


              இவரின்  படங்களில்  இலையொடும்  நகைச்சுவை  இருக்கும் . மேலும்  

 fast-paced comedies( அதாவது  விறுவிறுப்பான திரைக்கதையை  நகைச்சுவையுடன்  தருவது )  வகை  படங்களில்  wes  anderson யை  அடித்து கொள்ள முடியாது .



மேலும்  நம் காலங்காலமாக  ஆக்சன் ஹீரோக்களாக  பார்த்த  bruce wills ,  edward  norton , gene hackman  போன்ற நடிகர்களை  நகைச்சுவை  நடிகர்களாக்கி  வேறுறொரு பரிமாணத்தில் தருவார் .  

                            இவருடைய  படங்கள்  பெரும்பாலும்  பெற்றோரால்  தனித்து  விடப்பட்ட குழந்தைகளின் மனநிலை ,  தனிமையில்  இருக்கும்  முதியோர்கள் என  இவர்களை  மையமிட்டே  இருக்கும் .

தொழில்நுட்பத்தை  பொறுத்த வரையில்  anderson  கேமராவில்  இருக்கும் எல்லா முவ்மேன்ட்களையும் ( flat space camera moves, obsessively symmetrical compositions, snap-zooms, slow-motion walking shots,a deliberately limited color palette) என எல்லாவற்றையும் பயன்படுத்தி விடுவார் .

இவை  எல்லாவற்றிற்கும்  மேலாக  எனக்கு  இவரை  பிடிக்க  காரணம்  இன்று எந்த  அமெரிக்க  இயக்குனரை  கேட்டாலும்  அவர்களுடைய  inspiration ஆக சொல்வது Stanley Kubrick யோ இல்லை David Lean யோத்தான்  சொல்வார்கள் .  

ஆனால்  இவர் இவருடைய   inspiration ஆக சொல்வது    நம் நாட்டு  இயக்குனர் சத்தியஜித்ரேவை. மேலும் anderson இன்   படமான The Darjeeling Limited   இல்  சத்தியஜித்ரேவிற்கு  tribute கொடுப்பது  போல்  அந்த படம்  முழுதும்  சத்தியஜித்ரேவின்  படங்களின் இசையை பயன்படுத்திருப்பார் .

நான் wes andeson யை  மிகவும் புகழ்வதால்  இவரை  நீங்கள்  நோலன் அளவிற்கோ இல்லை  டாரண்டினோ அளவிற்கோ  நினைத்து விட வேண்டாம்  புரியும்படி சொன்னால்  இவர் ஹாலிவுட் இன்   பாக்யராஜ்  ஆவார் .


சரி  இனி   The Grand Budapest Hotel   பற்றி  பார்ப்போம் .

anderson இன்  வழக்கமான படங்களை போல்  தான்   இதுவும்  ஒரு புத்தகத்தை  திறப்பது போல்   ஆரம்பிக்கிறது .  அதன் பின் அந்த புத்தகத்தின் எழுத்தாளர்  சொல்வது போல் செல்கிறது .அவர்  1989 இல் பார்த்த  The Grand Budapest Hotel   இன்  முதலாளியான ஜீரோ  முஸ்தபாவின் கதை கேட்பதில்லிருந்து  படம்  முக்கிய  கதைக்கு செல்கிறது 


1932இல்  எங்கும் யுத்தம் நடந்த கால கட்டத்தில் The Grand Budapest Hotel  இல்  ஜீரோ லாபி பாய் ஆக   வேலை சேர்கிறார் . அங்கு  அப்போது  முதலாளியாக இருந்த மோன்சர் குஸ்தாப்  இவரை  வேலைக்கு  சேர்த்து கொள்கிறார் .எந்தவித  அனுபவம் இல்லாவிடினும்   ஜீரோ யுத்தத்தில் பெற்றோரை இழந்தவர் என்பதால் வேலைக்கு சேர்த்து கொள்கிறார்


குஸ்தாப்  ஓரு வேடிக்கையான  மனிதர் .எப்போதும்  ஹோட்டல் இல்   இருக்கும்  வாடிகையாலர்களுடன் குடி ,கூத்து  என்று சந்தோசமாக இருப்பவர் .அதே நேரத்தில் யுத்தத்தின்  காரணமாக  யார் வந்தாலும்  அடைக்கலம் தருபவர் . அதனாலே  குஸ்தாப்  எல்லாருக்கும்  புடித்த மனிதராக திகழ்கிறார் .


ஒரு நாள்  அவருடைய ஹோடேலில்   அடைக்கலம் இருந்த   செலினா என்ற வயதான பெண்மணி  அவசர அழைப்பு  காரணமாக  வீட்டிற்கு  திரும்ப அழைக்கபடுகிறார் . ஆனால்  போரின்  காரணமாக  அவர்  பயந்து செல்ல  மறுக்கிறார் . பின் அவரை   குஸ்தாப் சமாதனபடுத்தி  அனுப்பி வைக்கிறார் .


ஒரு மாத காலத்திற்கு  பின்  அந்த பெண்மணி மர்மம் ஆன முறையில் இறந்து விடுகிறார். அவருடைய  இறுதி  ஊர்வலத்திற்கு குஸ்தாப்ம்  ஜீரோவும்   செல்கின்றனர் .அப்போது  அங்கு அந்த  பெண்மணி    அனைத்து    சொத்துக்களையும் The Grand Budapest Hotel க்கு   எழுதி வைத்துள்ளார் . மேலும்  Boy with Apple  என்ற  பல கோடி மதிப்புள்ள ஓவியத்தை குஸ்தாப்ற்கு அன்பளிப்பு ஆக எழுதி வைத்துள்ளார் .

இதனால்  ஏமாற்றம்  அடைந்த அப்பெண்மணியின் மகன்  டிமிட்ரி  குஸ்தாப்  மீது  கொலை பழியை சுமத்தி அவரை  சிறைக்கு  அனுப்பி  வைக்கிறார் . பின் அந்த ஆவணங்களையும்  பொய்  என்று கூறி சொத்துக்களை  தானே வைத்து கொள்கிறார் .


பின்  குஸ்தாப்  எப்படி ஜீரோவின்  உதவியுடன்  சிறையில்  இருந்து தப்பித்து தான் மீது உள்ள கொலை பழியை எப்படி துடைத்தார் . அந்த ஓவியத்தை  எப்படி கைபற்றினார் .அந்த பெண்மணியை கொன்றவனை எப்படி கண்டுபுடித்தார்  என்பதை  நகைச்சுவையுடனும்  சாகசத்துடனும் சொல்வதே  இந்த  The Grand Budapest Hotel திரைப்படம் .

              முன்பே  சொன்னது போல்  இப்படம்  காட்சிக்கு காட்சி  நகைச்சுவையாகவும்  விறுவிறுப்பாகவும்  செல்கிறது  .  

இப்படத்தை  wes anderson   1.33, 1.85,  மற்றும்   2.35:1 மூன்று  aspect ratio  களில்  எடுத்துள்ளார் . அவை  அனைத்தும்  ஒவொவொரு காலக்காட்டதை காட்டியுள்ளார் .

மேலும்  பல காட்சிகளில்  மினியச்சேர்களை  பயன்படுத்தி உள்ளார் .

       முக்கிய கதாபத்திரங்கள்  தவிர  jude law,owen willson , bill murry , f.murry abrham  என்று  ஹாலிவுட்டின்  முக்கிய ஹீரோக்கள்  இதில்  guest role  செய்து  உள்ளனர் .


பின் இப்படம் இந்த வருட  ஆஸ்காரில்  BIRD MAN  திரைப்படத்துடன் இணைந்து  9 விருதுகளுக்கு  பரிந்துரைக்கபட்டுள்ளது .அதில் சிறந்த  படம்  மற்றும் சிறந்த  இயக்குனர் ஆகியவையும் அடங்கும் .

இது  விருதுகள் வாங்குவது  சந்தேகமே .ஏனனெனில்  பெரும்பாலான விருதுகளை BOYHOOD மற்றும்  BIRD MAN தட்டி சென்று விடும் .இருப்பினும் அமெரிக்க  மக்களின் சென்ற வருடத்தின் விருப்பத்திற்குரிய படமாக திகழ்கிறது .


முடிவாக  நம் கமலின்  நகைச்சுவை  படங்களை  எளதில்  புரிந்து  கொண்டு சிரிப்பவர்களுக்கும் ரசிப்பவர்களுக்கும்  இந்த படம் ஒரு  சிறந்த  நகைச்சுவை  படமாக இருக்கும் .

                 மற்றபடி  சினிமா ரசிகர்கள் ரசிக்க வேண்டிய படம் .


                    ;

 






.


வியாழன், 12 பிப்ரவரி, 2015

BIRDMAN(2014) Oscar nominee-2015

BIRDMAN  (மறக்கப்பட்ட சூப்பர் ஹீரோ )

                       நாம் பொதுவாக  பல  கதாநாயகர்களை  காலப்போக்கில்  மறந்திருப்போம் . அது  அவர்கள்  கொடுத்த  தோல்வி  படங்களால்  இல்லை .
உதாரணமாக  மோகன் , அரவிந்த் சாமி  ,ராம ராஜன்  போன்ற  கதாநாயகர்கள்   தற்போது திரை உலகில் இல்லை என்றாலும்  அவர்கள்  பெயர் சொன்னால் உடனே ஞாபகம் வரும் .

                        அதே நேரத்தில் சுதாகர் என்று ஓரு நடிகர்  இருந்தார் .அவர் பெயர் சொன்னால் கூட யாருக்கும்  உடனே ஞாபகம் வராது.( ஒரு வேலை ஆல் இன் ஆல் அழகுராஜவில் சந்தானம் கிண்டல் அடித்திருபரே அவர்தான் என்றால் ஞாபகம்  வரலாம் )  அவர் 1978 இல் பாரதி ராஜாவால் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் அறிமுகம் செய்யபட்டவர் . அப்படம்  மாபெரும் வெற்றி அடைந்தாலும் அதில் நடித்த ராதிகா தான் புகழ் பெற்றார் .இருப்பினும் அவர் "சுவர் இல்லா சித்திரங்கள் " எங்க ஊர் ராசாத்தி " போன்ற வெற்றி படங்களில் நடித்தார் .இருப்பினும் அதன் பின் ஒரே மாதிரியான படங்களில் நடித்தாலும் கிராமத்து கதாபாத்திரத்தை தவிர அவரை வேறு பாத்திரங்களில் மக்கள் மனம் ஏற்க மறுத்ததாலும்  காலப்போக்கில்  அவர் மறக்கடிக்கப்பட்டார் .


இப்போது   சுதாகர் என்று கேட்டால்  யாருக்கும்  தெரியாது . ஏன்  அந்த  காலகட்ட மக்கள் கூட மறந்திருப்பார்கள் .இது  எல்லா  இடங்களில் நடைபெறும் ஒன்றுதான் .
         நம்மூரில் எப்படி  கிராமத்து கதாபத்திரங்கலில் நடித்தவர்களை  வேறு பாத்திரங்களில் மனம் எற்கமால் மறக்கின்றமோ  அதே  போல் தான்   ஹாலிவுட் இல்  சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் . படம் வெளியாகி அதன் ஓரு மூன்று பாகங்கள் வரை உச்சத்தில் இருப்பார்கள். அதன் பின் அவர்களை  மறந்து விடுவார்கள் . உதாரணமாக பழைய "சூப்பர் மேன் " படத்தில் நடித்த நடிகனின் பெயர்  இப்போது யாருக்கும் ஞாபகம் இருக்காது . இதே தான் அனைத்து சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும்  " பேட் மேன் ,
"சூப்பர் மேன் ",ஹல்க்  என அதில் நடித்த அனைவரையும் ஹாலிவுட் ரசிகர்கள் மறந்து விட்டார்கள் . நாம் கூட கொஞ்ச காலத்திற்கு முன்பு நமக்கு பரிச்சயமான  SPIDERMAN (பழைய spider man ) அதில் நடித்த நடிகரை மறந்திருப்போம் . இதில் தப்பித்தது  என்று பார்த்தால் கிர்ஷடின் பேலும் ,ராபர்ட் டௌனி JR ம்  தான் ( அவர்களும் இன்னொரு பாகம் சூப்பர் ஹீரோவாக நடிந்திருந்தால் மறந்திருப்பார்கள் )
      மைக்கேல் கிடொன் என்ற (birdman படத்தின்  நாயகன் ) நடிகர் 1989இல் வெளிவந்த  பேட்மேன் படத்தில்  பேட்மேன்  ஆக நடித்தவர் .அந்த படம் hit  என்றாலும் அதன் பின் வந்த படங்கள் அனைத்தும் தோல்வி . அதன் பின் அவர் சிறு சிறு பாத்திரங்களில்  தான் நடித்தார் .
          சரி இதற்கும் BIRDMAN படத்திற்கும்  என்ன சம்பந்தம் என்று கேட்டிர்கள் என்றால் கிட்டத்தட்ட மைக்கேல் கிடொனின் வாழ்கையை ஓரளவு தழுவியது போல் வந்திருக்கும் படம்தான் BIRDMAN .


ரீகன் தாம்சன் (மைக்கேல் கிடொன்) பழைய ஹாலிவுட் நடிகர் . ஒரு காலத்தில் பேர்ட் மேன் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தவர் .தற்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு நாடக கம்பெனியில் நடிகராகவும் இயக்குனராகவும் வேலை பார்க்கிறார் . அவர் மகள் அவருக்கு உதவியாளராக இருக்கிறாள் .
   
      ரீகன் தன்னிடிம் எப்போதும் சூப்பர் ஹீரோ விற்குரிய  சக்தி இருப்பதாகவே உணர்கிறார். அவருக்கு  எப்போதும் சூப்பர் ஹீரோ குரல் கேட்டு கொண்டே இருக்கிறது . போல் உணர்கிறார் .

               அவர் Raymond Carver' என்ற எழுத்தாளரின் நாடகமான "What We Talk About When We Talk About Love".என்பதை நாடகமாக மேடையில் அரங்கேற்றுபவர் . அங்கு புதிதாக நடிக்க வருபவர் மைக் (எட்வர்ட் நோர்டன் ) இவர் method acting இல் நம்பிக்கை கொண்டு இருப்பவர் .இவர் எதையும் உண்மையாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் .

     ரீகனால்  தற்போதைய காலத்திற்கு ஏற்ப வாழ முடியவில்லை .அவருக்கு FACEBOOK ,TWITTER ,YOUTUBE  இது போன்றவை பற்றி எல்லாம் தெரியவில்லை .எனவே சம கால மனிதர்களுடுன் அவரால் சரியாக பழக முடியவில்லை .  

     மேலும்  அவருக்குள் கேட்கும் குரல் அவரை ஒரு குழப்ப மன நிலைக்கு கொண்டு செல்கிறது .முடிவில் தன்னிடிம் இருக்கும் அந்த  பேர்ட் மேன் பிரச்சினையை எப்படி கையாண்டார் என்பதே கதை


படம்  முழுதும் surrealism ( யதார்த்தம் +புதிர் தன்மை ) நிலையிலே  உள்ளது .ரீகனுக்கு மட்டும் அல்ல நமக்கும் அவருக்கு உண்மையில் சக்தி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே  இருக்கிறது  .கிளைமாக்ஸ் இல் ஓரு வித தீர்வை கொடுத்தாலும் அப்போதும்  சந்தேகம் ஆக தான் உள்ளது .
       அதே போல் இந்த படத்தில் டார்க் ஹ்யூமறும் நன்கு கையாளப்பட்டுள்ளது .பல இடங்களில் method acting யையும் ,சம காலத்தில் இணையத்தளத்தில் ஏது போட்டாலும் உடனடியாக பரவுதல் ,விமர்சகர்கள் ,ரசிகர்கள்  என அனைவரையும் எள்ளி நகையாலப்படுகிறது .

     ஒரு காட்சியில் சூப்பர் ஹீரோ குரல் ரீகனடிம் இப்போதைய ரசிகர்களுக்கு பேசினால் பிடிக்காது  ஆக்சன்  தான் பிடிக்கும் என்பதாலும்  ரசிகர்களின் ரசனைக்கு கொடுக்க பட்ட சவுக்கடி .

 இப்படத்தை இயக்கி இருப்பவர் Alejandro González Iñárritu இவர் ஸ்பானிஸ் நாட்டு இயக்குனர் .எப்படி டாரண்டினோ நான் லின்னெயெர் ஆக படம் எடுப்பதில் சிறந்த்வரோ இவர் anthalaogy  மற்றும் non linear  இரண்டையும் இணைத்து படம் எடுப்பதில் சிறந்தவர் .இவருடைய படமான Amores perros  தான் ஆயுத எழுத்து ,ஆடுகளம் போன்ற படங்களுக்கு inspiration ஆக இருந்தது.
Alejandro González Iñárritu with a camera in production Cropped.jpg

எப்படி டாரண்டினோவின் மற்ற படங்களில் இருந்து ஜாங்கோ வேறுபட்டதோ இவருக்கு BIRDMAN இவரின்  மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளது .

மேலும் இப்படத்தின் கேமரா முவ்மேன்ட்களுக்ககாவும் ,ஒளிப்பதிவிர்க்காகவும் இந்த படத்தை ஒளிப்பதிவு ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் .

இப்படத்தில் பின்னணி இசை பெரும்பாலும் ட்ரம்ஸ் இசையே திரும்ப திரும்ப ஒலிப்பது ஒருவித எரிச்சலை தந்தாலும் ப்ளாக் காமெடி வகை படத்திற்கு இதுதான் தேவை .மேலும் அவ்வொலி  நாடகத்தின் இசையை பிரதிபலிப்பதாகவும் உள்ளதால் வைக்கபட்டிற்க்கிலாம் .

இந்த படம் 2015ன் ஆஸ்கார் இல் சிறந்த படம் ,சிறந்த நடிகர் உட்பட 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது .இந்த படமும்  The Grand Budapest Hotel  என்ற படமும் தான் இந்த முறை அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது.

எனவே முன்பே சொன்னது போல் ஒளிப்பதிவு ஆர்வம் உள்ளவர்கள் ,சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா வெறியர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .

மற்றபடி சாதாரண சினிமா ரசிகர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும் .

       




               
        

புதன், 11 பிப்ரவரி, 2015

SHAMITABH (HINDI) -2015

SHAMITABH   நிராகரிக்கப்பட்ட குரலின் பின்னணியில் முன்னணி நடிகன் ஆக துடிக்கும் ஊமை நடிகன்



நாம் படம் பார்க்கும் போது எப்போதுமே நடிகனனின் நடிப்பை ரசிக்கும் போது அவர்களுடைய வசனங்களையும் அதை அவர்களுக்கு என்ற பாணியில் உச்சரிக்கும் போது தான் மிகவும் ரசிக்கிறோம் .நடிகனின் தோற்றத்திற்கு பிறகு அவர்களுடய குரல் தான் அவர்களின் அடையாளமாக கருதபடுகிறது .
           மங்கத்தா படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் சொன்னான் "திரிஷாவிற்கு இந்த முறை வேறு யாரோ குரல் கொடுத்து இருக்கிறார்கள் நன்றவாகவே இல்லை என்றான் .நான் சொன்னேன் இது தான் அவர்களின் சொந்த குரல் என்றேன் .அந்தளவு குரல் ஒருவரின் அடையாளமாகி விடுகிறது
சிறிது காலத்திற்கு முன்பு பின்னணி குரல் கொடுப்பவர் ஓருவர் ஒரு சர்ச்சைக்குரிய பேட்டியை கொடுத்தார் "என் குரலால் தான் அவர் பிரபல நடிகர் ஆனார் .ஆனால் அதன் பின் என்னை கண்டுகொள்ளவில்லை " என்றார் .


சரி ஷமிதாபிற்கு வருவோம் ,
              தனுசின் 2வது ஹிந்தி படம் ,தனுஷும் அமிதாப்பும் இணையும் படம்
அமிதாப் பால்கியுடுன் இணையும் 3வது படம் ,ஆக்ஸ்ராஹசன் அறிமுகம் ஆகும் படம் மற்றும் இளையராஜா வின் 1000 வது படம் ஆக வெளிவருவது (தாரை தப்பட்டை தான் இளையராஜா 1000 வது படம் ஆக இசை அமைத்தது ஆனால் அதற்கு முன் ஷமிதாப் வந்து விட்டது ) என்று பல எதிர்பார்ப்புகளுடுன் வெளி வந்திற்கும் படம் .


கதை
மராட்டிய மாநிலத்தில் பிறவி ஊமையான டானிஸ் (தனுஸ் ) சிறு வயதில் இருந்தே சினிமா நடிகனாக வேண்டும் என்பது கனவு . பள்ளியில் படிக்கும் போதே காந்தி என்றால் பெண்கிங்க்ஸ்லி என்றும் காந்தியின் மனைவியின் பெயரை கேட்டால் காந்தி படத்தில் மனைவியாக நடித்த நடிகையின் பெயரை எழுதுதல் என்று  சினிமாவின் மீது தீவிர வெறியனாக இருக்கிறான்.பின் பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்கிறான் (இந்த பகுதி மட்டும் ரஜினியை ஞாபகபடுத்தும் வகையில் வைக்க பட்டதோ என்று தோன்றியது .) தன் அம்மா இறந்த பின் மும்பைக்கு சென்று ஒவ்வொரு ஸ்டுடியோவிலும் சென்று வாய்ப்பு கேட்கிறான் .ஆனால் எல்லா இடங்களிலும் கேலி செய்யப்பட்டு துரத்தப்படுகிறான் .அதன் பின் ஒரு நாள் உதவி இயக்குநனர் அக்ஷரவால் பார்க்கப்பட்டு அவள் டானிசின் திறமையை கண்டுபிடிக்கிறாள் .ஆனால் அவளின் இயக்குனர் அவன் ஊமை என்பதால் அவனை நிராகரிக்கிறார் .
         அதன் பின் அக்ஷ்ராவின் தந்தை ஒரு மருத்துவர் அவருக்கு தெரிந்த வெளிநாட்டு மருத்துவர் மூலம் டானிஸ்ர்கு voice transefer என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் அவனுக்கு பேச்சு வருகிறது .ஆனால் அவனால் பேச முடியாது .அவனுக்கு சிறிது தொலைவு தள்ளி யாருவது பேசினால் ஒரரிரு நிமிடங்களுக்கு பின் அதற்கு ஏற்ப வாய் அசைத்தால் டானிஸ் பேசுவது போன்று தோன்றும் .அதற்கு ஏற்ப குரல் கொடுக்க ஆள் தேடுகின்றனர் .ஆனால் யாரும் கிடைக்கவில்லை .அப்போது சுடுகாட்டில் எப்போதும் குடித்து கொண்டிற்கும் அமிதாப் சின்ஹா (அமிதாப் பச்சன் )வின் குரல் பிடித்து போக அவரிடிம் உதவி கேட்கிறனர்  அக்ஷராவும் டான்னிஷும் ஆனால் அவர் முதலில் மறுத்து விடுகிறார் .பின் அவர் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது என்று அக்ஷரா சொல்லும் போது தன் முன் கதையை சொல்கிறார் .அவரும் இளம் வயதில் நடிகனாக வேண்டும் ஆசையில் மும்பை வந்தவர் .அவரை எந்த  ஸ்டுடியோவும் ஏற்று கொள்ளவில்லை காரணம் அவர் குரல் ஹீரோவிற்கு ஏற்றதல்ல என்றும் வில்லன் குரியது என்றும் கூறி நிரகரிக்கபட்டுளார் .அந்த குரலை வைத்து கொண்டு அவரால் ரேடியோவில் கூட சேரமுடியவில்லை என்கிறார் .
       பின்பு  அவரை சமாதானபடுத்தி அவரை குரல் கொடுக்க வைக்கின்றனர் .அவரும் எந்த திரை உலகம் இந்த குரலால் தன்னை துரத்தியதோ அதே குரலால் இந்த திரை உலகத்தை ஜெயித்து காட்டுகிறேன் என்கிறார் .பின்பு டானிஸ் யை கதாநாயகன் ஆக்க இயக்குனர் சம்மதிக்கிறார் ஆனால் டானிஸ் என்ற பெயரை மாற்ற சொல்கிறார் .அப்போது டானிஸ் அவன் பெயரையும் அமிதாபின்    பெயரையும்  இணைத்து சமிதாப்  என்று பெயர் வைக்கிறான் .பின்பு அமிதாபை கூடவே வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பியூன் என்று வெளியே சொல்கிறான் .முதல் படம் வெளிவந்து சமிதாப் என்ற பெயரில் பிரபலமடைகிறான் .ஆனால் அமிதாபின் பெயரோ ராபர்ட் என்ற பெயரில் கடைசி ஆக பியூன் என்ற பெயரில் வருகிறது .இதனால் மனம் உடைந்த அமிதாப்ற்கு தன் குரலால் தான் பிரபலம் ஆனான் .ஆனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறார்.அதன் பின் டானிஸ் அடையும் ஒவ்வொவுரு வெற்றியும் விருதுகளும் அமிதாபை பொறாமை பட வைக்கிறது .


ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டு பேருக்கும் உள்ள ஈகோ வெடித்து பிரிந்து விடுகின்றனர் .அதன் பின் அவர்கள் இருவரும் தனியாக படம் பண்ணுகிறார்கள் .ஆனால் அது இரண்டு பேருக்கும் தோல்வியை தருகிறது .பின் அக்ஷ்ரா தலையிட்டு இரண்டு பேருக்கும் உள்ள பிரச்னையை தீர்த்து வைக்கிறாள் .இருவரும் மீண்டும் இணைகிறார்கள் .இதற்கு இடையில் ஒரு டிவி ரிப்போர்டோர் அவர்களின் உண்மையை கண்டுபிடிக்கிறான் .
 அவன் உண்மையை சொல்வதுற்கு முன்னால் நாமே சொல்லி விடாலாம் என இருவரும் முடிவு செய்கின்றனர் .
             
     அவர்கள் உண்மையை சொன்னார்களா அவர்கள் மீண்டும் இணைந்து படம் செய்தார்களா என்பதை திரையில் காண்க .
       கிளைமாக்ஸ் அமிதாப்ற்கு மட்டும் அல்ல அவரை  போல நமக்கு இது மிகவும் பலம் என கருதும் ஒவ்வருவருக்கும் ஒரு பாடம் .

    படத்தை பற்றிய பார்வை

                       முதலில் தனுஸ் முதல் 40 நிமிடங்களை முழுதுமாக ஆக்கிரமித்து கொள்கிறார் .அவரின் சினிமா வெறியை காட்டும் அந்த MONTAGE SONG யை பார்த்தாலே போதும் சினிமா வெறி கொண்ட எவரும் அதற்காவே இந்த படத்தை மறுபடியும் மறுபடியும் பார்ப்பார்கள் .

         சான்ஸ் கேட்டு ஸ்டுடியோ ஸ்டுடியோ வாக சென்று அலையும் காட்சி ஆகட்டும் , அக்ஷறாவிடம் தனியாக நடித்து காட்டும் காட்சி ஆகட்டும் அவர் நடிப்பின் வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்று உள்ளார் என்று காட்டுகிறது .பிற் பாதியில் நடிகனாக மாறி விட்ட பின் ஒரு திமிருடன் இருப்பதும் அமிதாப்பிடம் சண்டை போடுவதும் என ஒரு முழுமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் .
          அதன் பின் அக்ஷரா அமிதாபிற்கும் தனுசிற்கும் சண்டை இல்லமால் பார்த்து கொள்பவராக இருக்கிறார் .இருவரையும் நர்சரி ஸ்கூல்இல் வைத்து பாடம் எடுக்கும் காட்சி அழகு .

இறுதியாக அமிதாப் பச்சன் ஒரு காலத்தில் சூப்பர் ஹீரோ வாக திகழ்ந்தவர் .இவரை பின்பற்றி தான் இன்று வரை பலர் சூப்பர் ஹீரோ ஆக திகழ்கின்றனர் .இவரின் பல படங்களை நகல் எடுத்து தான் பலர் மக்களுக்கு பிடித்த நாயகன் ஆகினர் .ஆனால் இவரோ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு உள்ளார்.ப்ளாக் ,சீனிகம் ,பா ,பாகுபான் போன்ற படங்களில் இவர் கதாநாயகன்தான் ,ஆனால் அதில்  எல்லாம் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில்தான் நடித்துள்ளார் என்பது அந்த படம் பார்த்தவர்கள் அறிவார்கள் .            இதிலும் அப்பிடித்தான் அவர் அறிமுக காட்சியே அவர் இமேஜ் பார்க்காமல் நடிப்பவர் என காட்டுகிறது .
       

இவர் வந்த பின் முழுமையாகக படத்தை ஆக்கிரமித்து கொள்கிறார் .குடி போதையில் உளறுவது ஆகட்டும் ஈகோவால் பொருமுவது ஆகட்டும்
ஒவ்வவொரு முறையும் தனுசை மட்டம் தட்டுவது ஆகட்டும் எல்லா காட்சியிலும் நடிப்பை வாரி வழங்கி உள்ளார் .
    ஒரு காட்சியில் தன்னை விட வயது குறைந்த தனுசிடம் அடி வாங்குவது எல்லாம் அமிதாபின் பெருந்தன்மை .கடைசி வரை தன் ஈகோ குறையாமல் இருப்பது அவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது .

இளையராஜா ; பலர் இப்படத்தின்  இசை ஏற்கனவே கேட்டது போல் உள்ளது என கருதினாலும் அதையும் மீறி ராஜா சார் ஸ்கோர் செய்கிறார் .குறிப்பாக பின்னணி இசை படத்தை மீறாமல் படத்திற்கு தேவையான அளவே உள்ளது .

p .c .ஸ்ரீராம் ; பல  காட்சிகளில் அமிதாப் மற்றும்  தனுசின் நடிப்பை தூக்கி காட்டுவது இவரின் ஒளிப்பதிவு தான்

வசனங்கள் ; இப்படத்தின் வசனங்கள் தான் இப்படத்தின் மிக பெரிய பலம் .
குறிப்பாக அமிதாபின் குரலை விட அவர் பேசும் வசனங்கள் ஓங்கி ஒலிக்கறது
 குறிப்பாக its not picture its mixture , உண்மை கதாநாயகனுக்கு யாரும் விருது தர மாட்டர்கள் .copy கிடையாது inspired என்று அவர் பேசும் அனைத்து வசனங்களும் கை தட்டல்கள் பெற்றன

 அதே போல் அவர் தன்னை விஸ்கி என்றும் தனுஸ் யை தண்ணீர் என்றும் கூறுவார் .அதற்கு அக்ஷர விஸ்கியில் கூட 53% தண்ணீர்தான் என்று கூறும் இடங்களும் அருமை .

படம் நீளம் என சிலர் கருதுகிறனர் என்னை பொருத்த வரையில் இந்த படத்தில் தேவை இல்லாத காட்சிகளோ வசனங்களோ இல்லை .ஒரு இடத்தில அக்சரா தனுசை பார்த்து நீ ஒரு மோசமான டிரைவர் உன் கூட நான் வர மாட்டேன் என்பார் .அது கூட பின்னாடி ஒரு இடத்தில் பயன்படுத்த பட்டிற்கும்.

இறுதியாக நான் ஹிந்தி படம் பார்ப்பதை 2010 உடன் நிறுத்தி விட்டேன் .ஏன் என்றால் அப்போது தான் taare zameen par,paa ,chak de india போன்ற நல்ல படங்கள் வந்தன .அதன் பின் சல்மான் கானால் தெலுங்கு பட ரீமேக்களும் சன்னி லியோனின் நல்ல படங்களும் ஆக்கிரமித்து கொண்டன .இல்லை என்றால் சில்க்கின் வரலாறும் காமசுத்ரா என்ற அருமையான இலக்கியமும் தான் படமாகியது .சஞ்சய் லீலா பன்சாலி போன்ற கலைபட இயக்குனர்கள் கூட ராம்லீலாவை ஏதோ பிரபுதேவா போல எடுத்து வைத்துதிருந்தார் .
     வட இந்திய கமல் எனப்படும் ஆமிர்கான் கூட Dhoom 3 என்ற ஒரு குப்பையை எடுத்தார் .

ஆனால் தற்போது தான் queen ,pk போன்ற படங்களால் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது அந்த வரிசையில் ஷமிதாப் படமும் சேரும் .

 

அதே போல் இந்த படத்திற்காக அமிதாப் மற்றும் தனுசுக்கும் நிச்சயம் விருதுகள் கிடைக்கும் என நம்புகிறேன் .
என்னை விட்டால் இன்னும் கூட ஷமிதாப் படத்தை பற்றி எழுதி கொண்டே இருப்பேன் .அந்த அளவு படம் என்னை கவர்ந்துள்ளது.

தனுசின் ரசிகர்கள் ,அமிதாபின் ரசிகர்கள் ,இளையராஜாவின் ரசிகர்கள் ,p .c .ஸ்ரீராமின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என எல்லாரும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம் .
பி .கு . அனைத்து திரை அரங்குகளிலும் ஷமிதாப் SUBTITLES உடன் தான் ஒளிபரப்பாகிறது .எனவே சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன் .

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

NIGHTCRAWLER -2014

Nightcrawler (செய்திகளை  உருவாக்குபவன் )




பொதுவாக நாம் செய்திகளில் பார்க்கும் பொது கொலை ,விபத்து  போன்ற சில காட்சிகளை  சில கொடுரமானவற்றை காட்டும் போது இதை எப்படி நிருபர்களை எடுக்க காவல்துறை அனுமதித்தது .எப்படி அந்த நிருபர்கள் எடுத்தார்கள் அதை எப்படி அந்த தொலைகாட்சி நிறுவனம் exculisive என்று ஒளிபரப்பியது போன்ற கேள்விகள் சில நேரங்களில் நமக்கு எழாலம் .அது போன்றவற்றை தழுவி எடுக்கப்பட்டது தான் இத் திரைப்படம் .

லூயி ப்ளூம் தனிமையில் வேலை இன்றி இருப்பவன் .அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை .ஒரு நாள் ஒரு விபத்து நடப்பதை பார்க்கிறான் .பின் அங்கு வந்த ஒரு தனியார் (indipedent videographer ) வீடியோகிராபர் அந்த விபத்தை படம் பிடிக்கிறான் .பின் அவனிடிம்  லூயி ப்ளூம் பேசிய போது இது போன்ற விபத்து ,கொலை போன்றவற்றை உடனே எடுத்து டிவிக்கு  கொடுத்தால் நல்ல பணம்  கிடைக்கும் என்கிறான் .அது லூயி ப்ளூம்ற்கு பிடித்து போக மறுநாள் ஒரு சைக்கில்யை திருடி அதை விற்று ஒரு handycamera வாங்குகிறான் .
பின்பு ஒரு நாள் ஒரு விபத்தை படம் பிடித்து அதை ஒரு தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்து பணம்  சம்பாதிக்கிறான் . பின்பு அந்த வேலை பிடித்து போக இரவு முழுதும் விபத்து நடக்கும் இடங்களுக்கும், கொலை போன்றவை நடக்கும் இடங்களுக்கும் சென்று படம் பிடிக்கிறான். அவனுக்கு என்று ஒரு assistant யை நியமித்து கொள்கிறான் . பின்பு அதிகமாக பணம் சம்பாதிக்கிறான் . அந்த சேனல் இல் வேலை பார்க்கும் தன்னை விட 10 வயது மூத்தவலன nina வின் மீது சிறிது மையல் கொள்கிறான் ஆனால் அவள் இதற்கு சம்மதிக்கவில்லை . தொடர்ந்து இரவு முழுதும் வீடியோ எடுக்க திரிந்து கொண்டு இருக்கிறான் . 
        ஒரு நாள் ஓர் வீட்டில் கொலை நடப்பதை ஒளிந்து இருந்து வீடியோ எடுக்கிறான் கொலையாளிகளின் முகத்தையும் அவர்களின் கார் நம்பரையும் படம் பிடிக்கிறான் .
அந்த வீடியோ வை தொலைகாட்சி க்கு கொடுத்து அதிகமாக சம்பாதிக்கிறான் .
ஆனால் போலீஸ் வந்து கேட்கும் போது கொலையாளிகளை சரியாக ஞாபகம் இல்லை என்று பொய் சொல்கிறான் . பின்பு அவன் எடுத்த வீடியோ வை பார்த்து அன்று இரவு கொலையாளிகளை பின் தொடர்கிறான் .அவர்களை பற்றி போலீஸ்க்கு தெரிவித்து அவர்களை வர வைக்கிறான் .அப்போது அங்கு நடக்கும் சம்பவங்களை படம் பிடிக்கிறான் .அங்கு போலீஸ் துப்பாக்கி சுடு நடத்தி அந்த கொலையாளிகளை கொல்கின்றனர். அப்போது அதை வீடியோ எடுக்கும் போது லூயி யின் உதவியலான் இறந்து விடுகிறான் .லூயி அதையும் படம் பிடிக்கிறான் .இறுதியில் லூயி  தனியாக ஒரு குழு ஆரம்பித்து home invation என்ற பெயரில் ஆரம்பித்து தன் வேலையை தொடர்கிறான் .


       படம் முழுதும் ஒரு 4 கதாபத்திரங்கலையே வைத்து படம் நகர்ந்தாலும் படம் "taxi driver ",pick pocket  போன்று மெதுவாக செல்லவில்லை. விறுவிறுப்பாக தான் செல்கிறது .
அதே நேரத்தில் வீடியோ எடுக்கும் காட்சிகளை மட்டும் திரும்ப திரும்ப காட்டுவது ஒரு அலுப்பையும் தருகிறது .
படம் பெரும்பாலும் இரவிலே நடப்பதால் ஒளிப்பதிவு குறிப்பட வேண்டிய ஒன்று .

முடிவாக செய்திகளை விரும்பவர்களும் , கேமரா விரும்பிகளும் , சினிமா விரும்பிகளும் பார்க்க வேண்டிய திரைப்படம் .
 
           

புதன், 4 பிப்ரவரி, 2015

QUEEN

  QUEEN (2014)



சென்ற வருடம் வெளியாகி விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் வெகுவான
பாராட்டுகளை பெற்ற இத்திரைப்படம் கடந்த ஞாயிறு அன்று நடை பெற்ற ஹிந்தி பிலிம் FILMFARE  AWARDS இல் சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் ,சிறந்த நடிகை உட்பட 6 filmfare விருதுகளை வென்றது .

படத்தின் கதை
படத்தின் நாயகி (நாயகன் ) ஆன ராணி மேரா  வின் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளின் வருங்கால கணவனும் காதலனும் ஆன விஜய் அவளிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறுகிறான் . ராணி அதிர்ச்சி அடைகிறாள். அவனிடிம் காரணம் கேட்கிறாள் .அதற்கு அவன் அவளுக்கு உலக அறிவு இல்லை,என்றும் இன்னும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பதாகவும் கூறுகிறான் .அவள் அவனிடிம் மிகவும் கெஞ்சுகிறாள் .அனால் அவன் மறுத்து விடுகிறான் .இதானால் மிகவும் மனம் உடைந்த ராணி வீட்டிற்கு சென்று தனி அறைக்கு சென்று முடங்கி விடுகிறாள்.ஒரு 4 நாட்கள் யார்டிமும் பேசமால் தன் பழைய காதலை நினைத்து கொண்டு இருக்கிறாள் .

பின்பு அவள் திருமணத்திற்காக திட்டமிட்டு இருந்த தேனிலவு பயணமான பாரிஸ் க்கு தனியாக செல்ல முடிவு செய்கிறாள்.அவள்  வரை தனியாக கடைக்கு கூட சென்றதில்லை .அவள் டெல்லி யை கூட பார்த்தது இல்லை அனால் அதை அனைத்தையும் மீறி அவள் பாரிஸ்செல்கிறாள் .

பாரிஸ் அவளுக்கு புதிதாகவும் விசித்திரமாகவும் உள்ளது .ஆரம்பத்தில் தனிமை யை உணரும் அவள் அதன் பின்பு அங்கு ஹோட்டல் இல் வேலை பார்க்கும் விஜயலட்சுமி என்ற ஆங்கிலோ இந்திய பெணிடம் நட்பு கொள்கிறாள் . பின்பு ஒரு  இரவு puff கு சென்று முதல் முறையாக மது அருந்துகிறாள் .தன்னை மீறி நடனம் ஆடுகிறாள் .எல்லார் இடமும் தன் சோக கதையை புலம்புகிறாள் . அன்று சுதத்திரத்தை உணர்கிறாள் .பின் அங்கு இருந்து Amsterdam செல்கிறாள் .ஒரு நாள் தெரியாமல் தான் மாடல் ஆக உடை அணிந்த போட்டோ வை மாறி விஜய் க்கு அனுப்பி விடுகிறாள் .அதை பார்த்து மீண்டும் அவள் மீது காதல் கொள்கிறான் .அவளிடிம் பேச முயல்கிறான் .அனால் ராணி மறுத்து விடுகிறாள் .
         Amsterdam சென்ற அவளுக்கு ஆண்கள் விடுதியில் தங்க வேண்டிய சூழ்நிலை வருகிறது .முதலில் தயங்கும் அவள் பின்பு அவர்களுடன் நட்பாகி விடுகிறாள்.அதன் பின் ஒரு சமையல் போட்டியில் கலந்து வெற்றி பெறுகிறாள்.பின் விஜய் பாரிஸ்இற்கு அவளை பார்க்க வருகிறான் .மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்கிறான் .அனால் அவள் தன் இந்தியா வந்து சொல்வதாக கூறிவிடுகிறாள் . பின் நண்பர்களிடிம் சொல்லி விட்டு இந்தியா வருகிறாள்.தற்போது பயமற்று ஒரு நவீன பெண்ணாகி வருகிறாள் ராணி . வந்த  உடன் விஜய் வீட்டிற்கு சென்று அவனிடிம் நிச்ச்யதரர்த்த மோதிரத்தை கொடுத்து விட்டு அவனுக்கு நன்றி கூறி சுதந்திரமாக நடந்து செல்கிறாள்

இப்படம்  முழுதும் பெண்ணியம் சார்ந்த உள்ளது.மேலும் பெண் சுதந்திரம் பற்றி சொல்லமால் சொல்கிறது .ஆண்கள் பெண்ணை பற்றிய பார்வையையும் குறித்து விமர்சகம் செய்கிறது .

ராணியாக கங்கனா ரனாவத் முற் பாதியில் ஒன்றும் தெரியாத பெண்ணாகவும் ,திருமணம் நின்ற ஏக்கதுடுனும் உள்ளார்.பின் பாரிஸ் சென்ற பின் துடிப்புடனும் சுதந்திரம்ஆகவும் உள்ளார்.

இவர் சோகத்தை யும் நகைச்சுவையும் அருமையாக கை ஆள்கிறார் .அந்த பார் இல் குடித்து விட்டு இவர் ஆடும் நடனம் ஒன்றே போதும் இவர் நடிப்பு திறமைக்கு .

இயக்குனர் விகாஸ் பஹ்ல் இற்கு இது முதல் படம் . சன்னி லியோன் யும் சல்மான் கஹன் யும் நம்பி படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணியம் சார்ந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள் .

     முடிவாக தமிழில் பாலச்சந்தர்க்கு பின் யாரும் பெண்ணியம் சார்ந்த படங்களை  யாரும் எடுபதில்லை .ஆனால் ஹிந்தி இல் QUEEN ,HIGHWAY ,MARYCOM போன்ற பெண்ணியம் சார்ந்த படங்கள் நிறைய வெளி வந்தன .

  இதற்கு இயக்குனர்களை குறை சொல்ல முடியாது தனக்கு புடித்த நாயகன் திரையில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ரசிகர்களிடிம் மாற்றம் வர வேண்டும் .


சினிமாவை விரும்பும் அனைவரும் QUEEN திரைபடத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .