AMERICAN SNIPER ( அமெரிக்க போர் வீரனின் உண்மை கதை )
நம்மூர் ரசிகர்களை கவர எப்படி காமெடி படங்கள் எடுக்கபடுகிறதோ அதே போல் தான் ஹாலிவுட் ரசிகர்களுக்கு போரை தழுவி எடுக்கப்படும் படங்கள் .
இது ஆண்டாண்டு காலம் தொடரும் ஒன்றாகும் . ஒவ்வொரு வருடமும்
அமெரிக்கர்கள் எந்த நாட்டையாவது திரையில் வெற்றி கொள்ள வேண்டும்
அப்படி இருந்தால்தான் அந்த வருடம் நிறைவு அடைந்தாக கருதுவர் . ஓன்று ரஷ்யா இல்லை என்றால் ஜப்பான் . அதுவும் இல்லை என்றால் இரண்டு உலக யுத்தங்கள் . என்று அமெரிக்கா யாரையாவது கொன்று குவிக்கும் .
அதே போல் தான் அங்குள்ள இயக்குனர்களும் போரை தழுவி படங்கள் எடுக்கா விட்டால் தன் திரை உலகம் முழுமையற்றதாக கருதுவர்.
அனைத்து சிறந்த இயக்குனர்களும் ( Stanley Kubrick -Full Metal Jacket (1987), Steven Spielberg -Saving Private Ryan , Ridley Scott- Black Hawk Down (2001,) போர் சார்ந்த படங்களை எடுத்த விடுவனர் . இதில் martin scorsese மட்டுமே விதி விலக்கு .
அவர்கள் இவ்வாறு படம் எடுபதற்கு அரசியல் காரணங்களும் உண்டு . அரசின் ஆதரவும் இருக்கும் . மேலும் ஆஸ்காரில் நிச்சியம் எதாவது விருதையும் பெற்று விடும் .
இதற்கு 2009 ன் ஆஸ்காரே சாட்சி . அந்த வருடம் எல்லாரும் எதிர்பார்த்த James Cameron ன் Avatar சிறந்த படம் , மற்றும் சிறந்த இயக்குனர் விருதை பெறவில்லை . அதற்கு பதில் அந்த வருடம் போரை தழுவி வந்த Kathryn Bigelow ன் The Hurt Locker தான் முக்கிய விருதுகளை வென்றது . இது உலக சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ரசிக்கவே செய்தனர் .
காலங்காலமாக ரஷ்யாவை போட்டு துவைத்த அமெரிக்க
திரை உலகினர் செப்டம்பர் 11,2001 நியூயார்க்கின் இரட்டை கோபுரத்தை
அல் -கொய்தா விமானம் மூலம் தாக்கிய பிறகு அமெரிக்காவின் பிரதான
எதிரியாக ஈராக் மற்றும் ஆப்கான் நாடுகள் ஆகின .
அப்புறம் ஏன்ன ஹாலிவுடின் எந்த திரை படத்தை எடுத்தாலும் இந்த ஈராக்
அல்லது முஸ்லிம் நாடுகள் ஏதாவது எதிரியாக இருக்கும் . அது ஜேம்ஸ்
பாண்ட் படமாக இருந்தாலும் சரி சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் சரி காதல் படமாக இருந்தாலும் சரி இவ்வளவு ஏன் காமெடி படமாக இருந்தால் கூட அதில் அவர்களை மறைமுகமாக இல்லை நேரடியாகவே தாக்கி கொண்டிருப்பர் .
அப்படங்கள் எல்லாம் அமெரிக்காவின் பெருமையை பறை சாற்றுவது
போலே இருக்கும் .மேலும் இராக் பல கொடுமைகளை செய்வது போலவும்
அமெரிக்கா தான் அதை தடுத்தது போலவும் காட்டுவர் . அமெரிக்காவின்
மற்றொரு பக்கத்தை காட்ட மாட்டார்கள் . இதில் வித்தியாசத்துடுனும்
ஓரளவு அமெரிக்காவின் உண்மை முகத்தை காட்டுவது போலவும் வந்த
படம் 2007ல் Robert Redford இயக்கத்தில் Tom Cruise மற்றும் Meryl Streep நடிப்பில் வெளிவந்த Lions for Lambs திரைப்படம் மட்டுமே .
அதானாலே என்னவோ இந்த படம் தோல்வி அடைந்தது .
சரி இனி AMERICAN SNIPER பற்றி
கடந்த ஒரு மாத காலமாகவே US Box office இல் நம்பர் 1ல் இருக்கும் படம் .
மேலும் அமெரிக்க அதிபரின் மனைவியான திருமதி .மிச்சேல் ஒபாமாவே
பாராட்டிற்கும் படம் . உலகம் எங்கும் விமர்சகர்களால் பாரட்டும் திட்டும்
ஒருங்கே வாங்க பெற்ற படம் .
இப்படத்தை இயக்கி இருப்பவர் அமெரிக்காவின் சிறந்த இயக்குனர்களில்
ஒருவரான Clint Eastwood . ஒரு நடிகராக தன் வாழ்கையை தொடங்கி இயக்குனராக மாறியவர் . Mystic River, Million Dollar Baby போன்ற திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் .
பல hit படங்களை கொடுத்தவர் . இருப்பினும் எல்லா இயக்குனர்களை போல் போர் பற்றிய படம் எடுக்காதது இவருக்கு மனக்குறையாகப் பட்டிருக்கும் போல . அதானலே இப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்திற்காக இவர் கிரிஸ் கேல் என்ற உண்மையான ராணுவ வீரனின் வாழ்கையை தழுவி எடுத்துள்ளார் .
கிரிஸ் கேல் என்பவர் ஒரு கௌ பாய் ஆக வாழ்கையை தொடங்கி ராணுவ வீரராக மாறியவர். பின் தயா ரேனே என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் .
2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் கேல் ஈராக்கிற்கு அனுப்ப படுகிறார். அங்கு sniper ஆக பணிபுரிகிறார் . (sniper என்றால் குழுவுடன் சேராமல் தனியாக எங்காவது மறைந்து கொண்டு தொலை தூரத்தில் இருந்து சுடுபவர் ) இராக்கில் அல் -கொய்தா தலைவன் ஒருவனை புடிக்கும் பணி அங்கு அளிக்கப்படுகிறது .
அதன் பின் ஓரு நான்கு பயணங்களாக கேல் ஈராக்கிற்கு செல்கிறார் . ஒவ்வொரு பயணத்தின் போதும் பலரை கொன்று அமெரிக்க வீரர்களை பாதுகாக்கிறார் . இதனாலே கேல் சீனியர் தலைவர் ஆகிறார் .
இதற்கு இடையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன .
கேல் ராணுவத்தில் சிறப்பாக செயல் படுகிறார் . ஆனால் குடும்பத்துடன் போதிய நேரம் செலவளிக்க முடியவில்லை அவரால்.
அதே போல் அமெரிக்க ராணுவத்தாலும் அல் -கொய்தா தலைவனை புடிக்க முடியவில்லை . மேலும் அல் -கொய்தாவிடம் முஸ்தபா என்ற ஒலிம்பிக்கில் தொலை தூர துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றவன் sniper ஆக இருக்கிறான் . அவன் கேலை விட சிறப்பாக செயல் படுகிறான் .
அவன் பல மைல் தூரத்தில் இருந்து எளிதாக பல வீரர்களை கொன்று விடுகிறான் .
முடிவாக அமெரிக்க ராணுவம் அல் -கொய்தா தலைவனை புடித்ததா , கேல் முஸ்தபாவை முறியடித்து கொன்றாரா , அவரால் மீண்டும் குடும்ப வாழ்க்கையுடன் ஒன்ற முடிந்ததா என்பதே AMERICAN SNIPER படத்தின் கதை .
இந்த படம் வழக்கமான யுத்த படங்களில் எவ்வாறு வேறுபடுகிறது என்றால் , மற்ற யுத்த படங்களில் எல்லாம் ஒரு குழு தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருக்கும் . மேலும் போர் களம் மட்டுமே காட்டப்பட்டு கொண்டு இருக்கும் . ஆனால் இது அவ்வாறு இல்லை ஒரு போர் வீரனின் வாழ்க்கையயும் மட்டுமின்றி யுத்த களத்தில் ஒரு உயிரை கொல்லும் போது அவனின் மனப்போரட்டதையும் அப்படியே படம் புடித்து காட்டுகிறது ,
முதல் காட்சியில் வெடிகுண்டை எடுத்து வரும் சிறுவனையும் பெண்மணியையும் கொல்வதில் இருந்து கேலின் மனப்போரட்டம் ஆரம்பிக்கறது . அதே போல் இராணுவ வீரனின் குடும்ப சூழ்நிலையையும் நன்றாக விளக்குகிறது .
குறிப்பாக ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும் போதும் கேல் தொலைகாட்சி பார்ப்பார் . ஒவ்வொரு முறை யும் யுத்த சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்து இறுதியில் போர் முடிந்த பின் வெறும் தொலைகாட்சி பார்க்கும் போதும் அந்த யுத்த செய்திகளின் சத்தம் கேலிற்கு கேட்டு கொண்டே இருப்பது போர் வீரர்களின் மன நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல சான்று .
இந்த படத்தில் காதல் காட்சியும் நன்கு வைக்கப்பட்டுள்ளது .
ஒரு யுத்தம் சார்ந்த காதல் காட்சி இவ்வளவு வலுவாக வைக்க பட்டிருப்பது தான் இப்படத்தின் சிறப்பு .
மேலும் இப்படத்தில் குறிப்பட்டு சொல்ல வேண்டிய ஒன்று எடிட்டிங் .
அது பல காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது . முதல் காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் அதற்கு சான்று .
AMERICAN SNIPER இந்த வருட ஆஸ்காரில் சிறந்த படம் , சிறந்த நடிகர் உட்பட 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுளது .
வன்முறை புடிக்காதவர்கள் , மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புடிக்காதவர்கள் தவிர அனைத்து சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக