BIRDMAN (மறக்கப்பட்ட சூப்பர் ஹீரோ )
நாம் பொதுவாக பல கதாநாயகர்களை காலப்போக்கில் மறந்திருப்போம் . அது அவர்கள் கொடுத்த தோல்வி படங்களால் இல்லை .
உதாரணமாக மோகன் , அரவிந்த் சாமி ,ராம ராஜன் போன்ற கதாநாயகர்கள் தற்போது திரை உலகில் இல்லை என்றாலும் அவர்கள் பெயர் சொன்னால் உடனே ஞாபகம் வரும் .
அதே நேரத்தில் சுதாகர் என்று ஓரு நடிகர் இருந்தார் .அவர் பெயர் சொன்னால் கூட யாருக்கும் உடனே ஞாபகம் வராது.( ஒரு வேலை ஆல் இன் ஆல் அழகுராஜவில் சந்தானம் கிண்டல் அடித்திருபரே அவர்தான் என்றால் ஞாபகம் வரலாம் ) அவர் 1978 இல் பாரதி ராஜாவால் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் அறிமுகம் செய்யபட்டவர் . அப்படம் மாபெரும் வெற்றி அடைந்தாலும் அதில் நடித்த ராதிகா தான் புகழ் பெற்றார் .இருப்பினும் அவர் "சுவர் இல்லா சித்திரங்கள் " எங்க ஊர் ராசாத்தி " போன்ற வெற்றி படங்களில் நடித்தார் .இருப்பினும் அதன் பின் ஒரே மாதிரியான படங்களில் நடித்தாலும் கிராமத்து கதாபாத்திரத்தை தவிர அவரை வேறு பாத்திரங்களில் மக்கள் மனம் ஏற்க மறுத்ததாலும் காலப்போக்கில் அவர் மறக்கடிக்கப்பட்டார் .
இப்போது சுதாகர் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . ஏன் அந்த காலகட்ட மக்கள் கூட மறந்திருப்பார்கள் .இது எல்லா இடங்களில் நடைபெறும் ஒன்றுதான் .
நம்மூரில் எப்படி கிராமத்து கதாபத்திரங்கலில் நடித்தவர்களை வேறு பாத்திரங்களில் மனம் எற்கமால் மறக்கின்றமோ அதே போல் தான் ஹாலிவுட் இல் சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் . படம் வெளியாகி அதன் ஓரு மூன்று பாகங்கள் வரை உச்சத்தில் இருப்பார்கள். அதன் பின் அவர்களை மறந்து விடுவார்கள் . உதாரணமாக பழைய "சூப்பர் மேன் " படத்தில் நடித்த நடிகனின் பெயர் இப்போது யாருக்கும் ஞாபகம் இருக்காது . இதே தான் அனைத்து சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும் " பேட் மேன் ,
"சூப்பர் மேன் ",ஹல்க் என அதில் நடித்த அனைவரையும் ஹாலிவுட் ரசிகர்கள் மறந்து விட்டார்கள் . நாம் கூட கொஞ்ச காலத்திற்கு முன்பு நமக்கு பரிச்சயமான SPIDERMAN (பழைய spider man ) அதில் நடித்த நடிகரை மறந்திருப்போம் . இதில் தப்பித்தது என்று பார்த்தால் கிர்ஷடின் பேலும் ,ராபர்ட் டௌனி JR ம் தான் ( அவர்களும் இன்னொரு பாகம் சூப்பர் ஹீரோவாக நடிந்திருந்தால் மறந்திருப்பார்கள் )
மைக்கேல் கிடொன் என்ற (birdman படத்தின் நாயகன் ) நடிகர் 1989இல் வெளிவந்த பேட்மேன் படத்தில் பேட்மேன் ஆக நடித்தவர் .அந்த படம் hit என்றாலும் அதன் பின் வந்த படங்கள் அனைத்தும் தோல்வி . அதன் பின் அவர் சிறு சிறு பாத்திரங்களில் தான் நடித்தார் .
சரி இதற்கும் BIRDMAN படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிர்கள் என்றால் கிட்டத்தட்ட மைக்கேல் கிடொனின் வாழ்கையை ஓரளவு தழுவியது போல் வந்திருக்கும் படம்தான் BIRDMAN .
ரீகன் தாம்சன் (மைக்கேல் கிடொன்) பழைய ஹாலிவுட் நடிகர் . ஒரு காலத்தில் பேர்ட் மேன் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தவர் .தற்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு நாடக கம்பெனியில் நடிகராகவும் இயக்குனராகவும் வேலை பார்க்கிறார் . அவர் மகள் அவருக்கு உதவியாளராக இருக்கிறாள் .
ரீகன் தன்னிடிம் எப்போதும் சூப்பர் ஹீரோ விற்குரிய சக்தி இருப்பதாகவே உணர்கிறார். அவருக்கு எப்போதும் சூப்பர் ஹீரோ குரல் கேட்டு கொண்டே இருக்கிறது . போல் உணர்கிறார் .
அவர் Raymond Carver' என்ற எழுத்தாளரின் நாடகமான "What We Talk About When We Talk About Love".என்பதை நாடகமாக மேடையில் அரங்கேற்றுபவர் . அங்கு புதிதாக நடிக்க வருபவர் மைக் (எட்வர்ட் நோர்டன் ) இவர் method acting இல் நம்பிக்கை கொண்டு இருப்பவர் .இவர் எதையும் உண்மையாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் .
ரீகனால் தற்போதைய காலத்திற்கு ஏற்ப வாழ முடியவில்லை .அவருக்கு FACEBOOK ,TWITTER ,YOUTUBE இது போன்றவை பற்றி எல்லாம் தெரியவில்லை .எனவே சம கால மனிதர்களுடுன் அவரால் சரியாக பழக முடியவில்லை .
மேலும் அவருக்குள் கேட்கும் குரல் அவரை ஒரு குழப்ப மன நிலைக்கு கொண்டு செல்கிறது .முடிவில் தன்னிடிம் இருக்கும் அந்த பேர்ட் மேன் பிரச்சினையை எப்படி கையாண்டார் என்பதே கதை
படம் முழுதும் surrealism ( யதார்த்தம் +புதிர் தன்மை ) நிலையிலே உள்ளது .ரீகனுக்கு மட்டும் அல்ல நமக்கும் அவருக்கு உண்மையில் சக்தி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது .கிளைமாக்ஸ் இல் ஓரு வித தீர்வை கொடுத்தாலும் அப்போதும் சந்தேகம் ஆக தான் உள்ளது .
அதே போல் இந்த படத்தில் டார்க் ஹ்யூமறும் நன்கு கையாளப்பட்டுள்ளது .பல இடங்களில் method acting யையும் ,சம காலத்தில் இணையத்தளத்தில் ஏது போட்டாலும் உடனடியாக பரவுதல் ,விமர்சகர்கள் ,ரசிகர்கள் என அனைவரையும் எள்ளி நகையாலப்படுகிறது .
ஒரு காட்சியில் சூப்பர் ஹீரோ குரல் ரீகனடிம் இப்போதைய ரசிகர்களுக்கு பேசினால் பிடிக்காது ஆக்சன் தான் பிடிக்கும் என்பதாலும் ரசிகர்களின் ரசனைக்கு கொடுக்க பட்ட சவுக்கடி .

இப்படத்தை இயக்கி இருப்பவர் Alejandro González Iñárritu இவர் ஸ்பானிஸ் நாட்டு இயக்குனர் .எப்படி டாரண்டினோ நான் லின்னெயெர் ஆக படம் எடுப்பதில் சிறந்த்வரோ இவர் anthalaogy மற்றும் non linear இரண்டையும் இணைத்து படம் எடுப்பதில் சிறந்தவர் .இவருடைய படமான Amores perros தான் ஆயுத எழுத்து ,ஆடுகளம் போன்ற படங்களுக்கு inspiration ஆக இருந்தது.
எப்படி டாரண்டினோவின் மற்ற படங்களில் இருந்து ஜாங்கோ வேறுபட்டதோ இவருக்கு BIRDMAN இவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளது .
மேலும் இப்படத்தின் கேமரா முவ்மேன்ட்களுக்ககாவும் ,ஒளிப்பதிவிர்க்காகவும் இந்த படத்தை ஒளிப்பதிவு ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் .
இப்படத்தில் பின்னணி இசை பெரும்பாலும் ட்ரம்ஸ் இசையே திரும்ப திரும்ப ஒலிப்பது ஒருவித எரிச்சலை தந்தாலும் ப்ளாக் காமெடி வகை படத்திற்கு இதுதான் தேவை .மேலும் அவ்வொலி நாடகத்தின் இசையை பிரதிபலிப்பதாகவும் உள்ளதால் வைக்கபட்டிற்க்கிலாம் .
இந்த படம் 2015ன் ஆஸ்கார் இல் சிறந்த படம் ,சிறந்த நடிகர் உட்பட 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது .இந்த படமும் The Grand Budapest Hotel என்ற படமும் தான் இந்த முறை அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது.
எனவே முன்பே சொன்னது போல் ஒளிப்பதிவு ஆர்வம் உள்ளவர்கள் ,சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா வெறியர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .
மற்றபடி சாதாரண சினிமா ரசிகர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும் .
நன்று!
பதிலளிநீக்குபிழைகளை மன்னித்து பாராட்டியதற்கு நன்றி
பதிலளிநீக்கு