BOYHOOD (ஓரு சிறுவனின் வாழ்க்கை பதிவு )
coming age drama என்று திரை உலகில் ஒரு Genre உள்ளது . அதாவது
வளரும் சிறுவர்கள் அல்லது விடலை பருவத்தினரின் மனநிலை , அவர்களின் உலகம் , அவர்கள் சமுதாயத்தை பார்க்கும் பார்வை , அவர்களின் நட்பு வட்டாரம் , குடும்ப சூழ்நிலையை அவர்கள் அணுகும் முறை , மற்றும் அவர்களுக்கு என்று அந்த வயதில் எழும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என்று இவற்றை வைத்து திரைக்கதை பின்னப்படுவது தான் coming age drama ஆகும் .
எனக்கு தெரிந்து தமிழில் இந்த வகையில் படம் வரவில்லை என்று தான் நினைக்கிறேன் . ஒரு வேளை நண்பர்கள் யாராவது என்னிடிம் அஞ்சலி , பசங்க ,கோலி சோடா என்று என்னிடிம் வாதம் செய்ய வந்தீர்கள் என்றால் நான் இந்த படங்கள்ளலாம் coming age drama இல்லை என்றுதான் சொல்வேன் .
பசங்க படம் நேருக்கு நேர் படத்தை அப்படியே சிறுவர்களுக்கு எடுத்தது போல் தான் இருந்தது . படம் முழுதும் சிறுவர்கள் இருந்தும் சிறுவர்களுக்கான வாழ்கையை சரியாக பிரதிபளிக்கதது போல் தான் இருந்தது . அஞ்சலி இந்த படத்தில் சிறுவர்கள் பண்ணும் அதிக பிரசங்கி தனமே அந்த படம் coming age drama இல்லை என்று தெரிந்து விடும் .
கோலி சோடாவை பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை . அடுத்த படியாக வளரும் இளமை பருவம் (அதாவது 16 அல்லது 17 வயது உள்ளவர்கள் ) இவர்களை வைத்து எடுக்கப்படும் coming age drama படங்களில் எனக்கு தெரிந்து தமிழில் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை மட்டும் தான் .
சமகாலத்தில் எனக்கு தெரிந்து coming age dramaவில் சிறந்த படங்களாக படுவது இரண்டு படங்கள் . ஒன்று நம் அனைவருக்கும் தெரிந்த அமீர் கானின் இயக்கத்தில் 2007ல் வெளிவந்த தாரே ஜமீன் பர் . இப்படத்தில் dyslexic நோயால் பள்ளியில் சிரமப்படும் சிறுவனின் மன நிலையை நன்று பதிவு செய்திருப்பார் அமீர் கான் .
இன்னொரு படம் ரோசன் அன்ட்ருஸ் (How old are you? படத்தின் இயக்குனர் ) இயக்கத்தில் 2006ல் வெளிவந்த மலையாள திரை படமான "Note book" இந்த படத்தில் பள்ளி பருவ பெண்களின் நட்பையும் அந்த பருவத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என coming age drama விற்குரிய அனைத்து கூறுகளை உள்ளடக்கி அருமையாக எடுத்து இருப்பார் .(Note book மற்றும் ரோசன் அன்ட்ருஸின் படங்களை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்)
coming age drama வை பற்றி எனக்கு தெரிந்தவை இவ்வளவுதான் .சரி coming age drama விற்கும் BOYHOOD படத்திற்கும் என்ன சம்பந்தம் என்னவென்று கேட்டிர்கள் என்றால் அதற்கு படத்தின் தலைப்பே பதில் சொல்லும்.
BOYHOOD படத்தை பற்றி
இந்த படத்தின் கதையை பற்றி சொல்வது கடினம் ஏன் இந்த படத்தின் கதை interstellar போன்றோ இல்லை memento போன்றோ கடினமான திரைக்கதையை கொண்டதா என்றால் இல்லை இந்த படம் முழுதும் ஒரு சிறுவனின் 12 ஆண்டு கால வாழ்க்கை பதிவு . எப்படி சத்யஜித்ரே அபு என்ற ஒரு சிறுவனின் கதாபாத்திரத்தின் மூலம் "பதர் பாஞ்சாலி " என்ற ஒரு வாழக்கை பதிவை திரைப்படமாக தந்தாரோ இந்த படத்தின் இயக்குனர் ரிச்சார்ட் லிங்க்லடோர் "மேசன் " என்ற சிறுவனின் மூலம் ஒரு வாழ்க்கை பதிவை தந்துள்ளார்.
படத்தை பற்றி பார்க்கும் முன் இயக்குனர் ரிச்சார்ட் லிங்க்லடோர் பற்றி சமகால அமெரிக்க இயக்குனர்களில் இவர் சிறிது மாறுப்பட்டவர் . எப்படி நம்மூரில் பாலா சில கட்டுபாடுகளை உடைத்து எறிந்து படம் எடுக்கிறோ அதே போல்த்தான் இவர். திரைக்கதைக்கான இருக்கும் சூத்திரங்களை உடைத்து படம் எடுப்பார் . ஏன் இதைத்தான் நோலனும் டாரண்டினோவும் செய்து விட்டனர் என்பவர்களுக்கு அவர்கள் படம் non-linear ஆக இருந்தாலும் இந்த திருப்புமுனை எனப்படும் plot-point ஏதாவது ஒரு இடத்தில இருக்கும் ,
ஆனால் இவர் படத்தில் அந்த திரைக்கதைக்கான சூத்திரங்களோ கதாபாதிரத்திற்கென எந்த குறிக்கோளும் இருக்காது .
அதற்கேன இவரது படங்கள் சுவாரசியமாக இருக்காதா என்றால் இல்லை .இவரது படங்களின் காட்சிகள் புதிதாகவும் ,ரசிக்கும் படியும் அமைத்திருப்பார் அதற்கு இவரது Before Triolgy(before sunrise,before sunset ) ஒரு உதாரணம் . உலகில் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் Titanic கிற்கு அடுத்தப்படியாக கொண்டாடும் காதல் திரைப்படம் இவைகள் தான் .(இதன் சில காட்சிகள் பல தமிழ் திரைப்படங்களில் வந்துள்ளது .வாலி படத்தில் அஜீத் ,ஜோதிகா காதல் காட்சிகள் இதில் வந்தவையே )
இவரது படங்கள் கதாபத்திரங்களின் காதல் நிகழ்வுகளையோ ,குடும்ப நிகழ்வுகளையோ வைத்து தான் நகரும் .
இனி BOYHOOD 2002 ல் தன் Befor Triology படங்களை எடுத்து கொண்டிற்கும் போது ஒரு பெயரிடாத படத்தை ஆரம்பித்தார் . மேலும் அவர் அந்த படத்தை 12 வருடங்கள் எடுக்க போவதாகவும் அதன் மூலம் ஒரு சிறுவனின் பள்ளி பருவத்தில் ஆரம்பித்து அவன் கல்லூரிக்கு செல்லும் நிகழ்வுகளையும் அதற்கு இடையில் அவன் குடும்பங்களின் மாற்றங்களையும் வைத்து அதன் திரைக்கதை இருக்கும் என்று கூறி இதை எடுத்துள்ளார் .
முதலில் இவர் இந்த முயற்சியை எடுத்ததற்காகவே பாராட்டலாம் .ஏனெனில் அந்த 12 ஆண்டு கால படபிடிப்பின் போது நடிக்கும் நடிகர்களுக்கு எதவாது சம்பவித்தலோ அல்லது அவர்கள் விலகி விட்டாலோ மிகவும் சிக்கலானது .அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்.
முன்பே சொன்னது போல் இதில் மேசன் என்ற சிறுவனின் 12 ஆண்டு கால வாழ்க்கை பதிவே கதை .
இந்த படத்தின் மூலம் அமெரிக்காவின் குடும்ப முறையையும் கலாச்சாரத்தையும் நன்கு பிரதிபலிக்கிறார் இயக்குனர்.
குறிப்பாக பெற்றோர்களின் விவாகரத்து , அதன் பின் அவர்கள் செய்யும் பல திருமணங்கள் அதானால் ஏற்படும் குழந்தைகளின் வாழ்க்கை மாற்றங்கள் .
என பலவற்றை இப்படம் சொல்கிறது .
அதே போல் இந்த படத்தை பார்க்கும் போது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை நேரடியாக பார்ப்பது போல் உள்ளது அதுதான் லிங்க்லடரின் 12 வருட உழைப்பின் வெற்றி .
இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் . மேசன் மற்றும் அவனது சகோதரி வார இறுதியில் அவர்களது சொந்த தந்தையை சந்திக்கும் காட்சிகள் . அவை அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது .
என்னதான் உலகமெங்கும் ஹாலிவுட் வெற்றி படங்களையும் , சிறந்த படங்களை கொடுத்தாலும் ஒரு "The 400 Blows ", போன்றோ ஒரு பதர் பாஞ்சாலியை போன்றோ சிறந்த எதார்த்த படங்கள் வராதது அங்குள்ள ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நீண்ட கால ஏக்கமாக இருந்தது .
அதை இந்த BOYHOOD தீர்த்து வைத்துள்ளது .
படம் வெளியாகி இந்த நிமிடம் வரை படத்தை கொண்டாடி தீர்க்கன்றனர் ரசிகர்களும் விமர்சகர்களும் .
அதற்கு ஏற்றார் போல் படமும் விருதுகளை வாங்கி குவிக்கறது .Golden Globe ல் சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் , சிறந்த துணை நடிகை என மூன்று விருதுகளை வென்ற இப்படம் ஆஸ்காரில் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது .
முடிவாக இயக்குனர் ஆக விரும்புவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் . சினிமா ரசிகர்களும் பார்க்கலாம் .
மற்றபடி மெதுவாக செல்லும் படங்களை விரும்பாதவர்கள் .இந்த படத்தை விருப்பம் இருந்தால் பார்க்கவும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக