புதன், 11 பிப்ரவரி, 2015

SHAMITABH (HINDI) -2015

SHAMITABH   நிராகரிக்கப்பட்ட குரலின் பின்னணியில் முன்னணி நடிகன் ஆக துடிக்கும் ஊமை நடிகன்



நாம் படம் பார்க்கும் போது எப்போதுமே நடிகனனின் நடிப்பை ரசிக்கும் போது அவர்களுடைய வசனங்களையும் அதை அவர்களுக்கு என்ற பாணியில் உச்சரிக்கும் போது தான் மிகவும் ரசிக்கிறோம் .நடிகனின் தோற்றத்திற்கு பிறகு அவர்களுடய குரல் தான் அவர்களின் அடையாளமாக கருதபடுகிறது .
           மங்கத்தா படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் சொன்னான் "திரிஷாவிற்கு இந்த முறை வேறு யாரோ குரல் கொடுத்து இருக்கிறார்கள் நன்றவாகவே இல்லை என்றான் .நான் சொன்னேன் இது தான் அவர்களின் சொந்த குரல் என்றேன் .அந்தளவு குரல் ஒருவரின் அடையாளமாகி விடுகிறது
சிறிது காலத்திற்கு முன்பு பின்னணி குரல் கொடுப்பவர் ஓருவர் ஒரு சர்ச்சைக்குரிய பேட்டியை கொடுத்தார் "என் குரலால் தான் அவர் பிரபல நடிகர் ஆனார் .ஆனால் அதன் பின் என்னை கண்டுகொள்ளவில்லை " என்றார் .


சரி ஷமிதாபிற்கு வருவோம் ,
              தனுசின் 2வது ஹிந்தி படம் ,தனுஷும் அமிதாப்பும் இணையும் படம்
அமிதாப் பால்கியுடுன் இணையும் 3வது படம் ,ஆக்ஸ்ராஹசன் அறிமுகம் ஆகும் படம் மற்றும் இளையராஜா வின் 1000 வது படம் ஆக வெளிவருவது (தாரை தப்பட்டை தான் இளையராஜா 1000 வது படம் ஆக இசை அமைத்தது ஆனால் அதற்கு முன் ஷமிதாப் வந்து விட்டது ) என்று பல எதிர்பார்ப்புகளுடுன் வெளி வந்திற்கும் படம் .


கதை
மராட்டிய மாநிலத்தில் பிறவி ஊமையான டானிஸ் (தனுஸ் ) சிறு வயதில் இருந்தே சினிமா நடிகனாக வேண்டும் என்பது கனவு . பள்ளியில் படிக்கும் போதே காந்தி என்றால் பெண்கிங்க்ஸ்லி என்றும் காந்தியின் மனைவியின் பெயரை கேட்டால் காந்தி படத்தில் மனைவியாக நடித்த நடிகையின் பெயரை எழுதுதல் என்று  சினிமாவின் மீது தீவிர வெறியனாக இருக்கிறான்.பின் பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்கிறான் (இந்த பகுதி மட்டும் ரஜினியை ஞாபகபடுத்தும் வகையில் வைக்க பட்டதோ என்று தோன்றியது .) தன் அம்மா இறந்த பின் மும்பைக்கு சென்று ஒவ்வொரு ஸ்டுடியோவிலும் சென்று வாய்ப்பு கேட்கிறான் .ஆனால் எல்லா இடங்களிலும் கேலி செய்யப்பட்டு துரத்தப்படுகிறான் .அதன் பின் ஒரு நாள் உதவி இயக்குநனர் அக்ஷரவால் பார்க்கப்பட்டு அவள் டானிசின் திறமையை கண்டுபிடிக்கிறாள் .ஆனால் அவளின் இயக்குனர் அவன் ஊமை என்பதால் அவனை நிராகரிக்கிறார் .
         அதன் பின் அக்ஷ்ராவின் தந்தை ஒரு மருத்துவர் அவருக்கு தெரிந்த வெளிநாட்டு மருத்துவர் மூலம் டானிஸ்ர்கு voice transefer என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் அவனுக்கு பேச்சு வருகிறது .ஆனால் அவனால் பேச முடியாது .அவனுக்கு சிறிது தொலைவு தள்ளி யாருவது பேசினால் ஒரரிரு நிமிடங்களுக்கு பின் அதற்கு ஏற்ப வாய் அசைத்தால் டானிஸ் பேசுவது போன்று தோன்றும் .அதற்கு ஏற்ப குரல் கொடுக்க ஆள் தேடுகின்றனர் .ஆனால் யாரும் கிடைக்கவில்லை .அப்போது சுடுகாட்டில் எப்போதும் குடித்து கொண்டிற்கும் அமிதாப் சின்ஹா (அமிதாப் பச்சன் )வின் குரல் பிடித்து போக அவரிடிம் உதவி கேட்கிறனர்  அக்ஷராவும் டான்னிஷும் ஆனால் அவர் முதலில் மறுத்து விடுகிறார் .பின் அவர் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது என்று அக்ஷரா சொல்லும் போது தன் முன் கதையை சொல்கிறார் .அவரும் இளம் வயதில் நடிகனாக வேண்டும் ஆசையில் மும்பை வந்தவர் .அவரை எந்த  ஸ்டுடியோவும் ஏற்று கொள்ளவில்லை காரணம் அவர் குரல் ஹீரோவிற்கு ஏற்றதல்ல என்றும் வில்லன் குரியது என்றும் கூறி நிரகரிக்கபட்டுளார் .அந்த குரலை வைத்து கொண்டு அவரால் ரேடியோவில் கூட சேரமுடியவில்லை என்கிறார் .
       பின்பு  அவரை சமாதானபடுத்தி அவரை குரல் கொடுக்க வைக்கின்றனர் .அவரும் எந்த திரை உலகம் இந்த குரலால் தன்னை துரத்தியதோ அதே குரலால் இந்த திரை உலகத்தை ஜெயித்து காட்டுகிறேன் என்கிறார் .பின்பு டானிஸ் யை கதாநாயகன் ஆக்க இயக்குனர் சம்மதிக்கிறார் ஆனால் டானிஸ் என்ற பெயரை மாற்ற சொல்கிறார் .அப்போது டானிஸ் அவன் பெயரையும் அமிதாபின்    பெயரையும்  இணைத்து சமிதாப்  என்று பெயர் வைக்கிறான் .பின்பு அமிதாபை கூடவே வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பியூன் என்று வெளியே சொல்கிறான் .முதல் படம் வெளிவந்து சமிதாப் என்ற பெயரில் பிரபலமடைகிறான் .ஆனால் அமிதாபின் பெயரோ ராபர்ட் என்ற பெயரில் கடைசி ஆக பியூன் என்ற பெயரில் வருகிறது .இதனால் மனம் உடைந்த அமிதாப்ற்கு தன் குரலால் தான் பிரபலம் ஆனான் .ஆனால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறார்.அதன் பின் டானிஸ் அடையும் ஒவ்வொவுரு வெற்றியும் விருதுகளும் அமிதாபை பொறாமை பட வைக்கிறது .


ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டு பேருக்கும் உள்ள ஈகோ வெடித்து பிரிந்து விடுகின்றனர் .அதன் பின் அவர்கள் இருவரும் தனியாக படம் பண்ணுகிறார்கள் .ஆனால் அது இரண்டு பேருக்கும் தோல்வியை தருகிறது .பின் அக்ஷ்ரா தலையிட்டு இரண்டு பேருக்கும் உள்ள பிரச்னையை தீர்த்து வைக்கிறாள் .இருவரும் மீண்டும் இணைகிறார்கள் .இதற்கு இடையில் ஒரு டிவி ரிப்போர்டோர் அவர்களின் உண்மையை கண்டுபிடிக்கிறான் .
 அவன் உண்மையை சொல்வதுற்கு முன்னால் நாமே சொல்லி விடாலாம் என இருவரும் முடிவு செய்கின்றனர் .
             
     அவர்கள் உண்மையை சொன்னார்களா அவர்கள் மீண்டும் இணைந்து படம் செய்தார்களா என்பதை திரையில் காண்க .
       கிளைமாக்ஸ் அமிதாப்ற்கு மட்டும் அல்ல அவரை  போல நமக்கு இது மிகவும் பலம் என கருதும் ஒவ்வருவருக்கும் ஒரு பாடம் .

    படத்தை பற்றிய பார்வை

                       முதலில் தனுஸ் முதல் 40 நிமிடங்களை முழுதுமாக ஆக்கிரமித்து கொள்கிறார் .அவரின் சினிமா வெறியை காட்டும் அந்த MONTAGE SONG யை பார்த்தாலே போதும் சினிமா வெறி கொண்ட எவரும் அதற்காவே இந்த படத்தை மறுபடியும் மறுபடியும் பார்ப்பார்கள் .

         சான்ஸ் கேட்டு ஸ்டுடியோ ஸ்டுடியோ வாக சென்று அலையும் காட்சி ஆகட்டும் , அக்ஷறாவிடம் தனியாக நடித்து காட்டும் காட்சி ஆகட்டும் அவர் நடிப்பின் வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்று உள்ளார் என்று காட்டுகிறது .பிற் பாதியில் நடிகனாக மாறி விட்ட பின் ஒரு திமிருடன் இருப்பதும் அமிதாப்பிடம் சண்டை போடுவதும் என ஒரு முழுமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் .
          அதன் பின் அக்ஷரா அமிதாபிற்கும் தனுசிற்கும் சண்டை இல்லமால் பார்த்து கொள்பவராக இருக்கிறார் .இருவரையும் நர்சரி ஸ்கூல்இல் வைத்து பாடம் எடுக்கும் காட்சி அழகு .

இறுதியாக அமிதாப் பச்சன் ஒரு காலத்தில் சூப்பர் ஹீரோ வாக திகழ்ந்தவர் .இவரை பின்பற்றி தான் இன்று வரை பலர் சூப்பர் ஹீரோ ஆக திகழ்கின்றனர் .இவரின் பல படங்களை நகல் எடுத்து தான் பலர் மக்களுக்கு பிடித்த நாயகன் ஆகினர் .ஆனால் இவரோ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு உள்ளார்.ப்ளாக் ,சீனிகம் ,பா ,பாகுபான் போன்ற படங்களில் இவர் கதாநாயகன்தான் ,ஆனால் அதில்  எல்லாம் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில்தான் நடித்துள்ளார் என்பது அந்த படம் பார்த்தவர்கள் அறிவார்கள் .            இதிலும் அப்பிடித்தான் அவர் அறிமுக காட்சியே அவர் இமேஜ் பார்க்காமல் நடிப்பவர் என காட்டுகிறது .
       

இவர் வந்த பின் முழுமையாகக படத்தை ஆக்கிரமித்து கொள்கிறார் .குடி போதையில் உளறுவது ஆகட்டும் ஈகோவால் பொருமுவது ஆகட்டும்
ஒவ்வவொரு முறையும் தனுசை மட்டம் தட்டுவது ஆகட்டும் எல்லா காட்சியிலும் நடிப்பை வாரி வழங்கி உள்ளார் .
    ஒரு காட்சியில் தன்னை விட வயது குறைந்த தனுசிடம் அடி வாங்குவது எல்லாம் அமிதாபின் பெருந்தன்மை .கடைசி வரை தன் ஈகோ குறையாமல் இருப்பது அவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது .

இளையராஜா ; பலர் இப்படத்தின்  இசை ஏற்கனவே கேட்டது போல் உள்ளது என கருதினாலும் அதையும் மீறி ராஜா சார் ஸ்கோர் செய்கிறார் .குறிப்பாக பின்னணி இசை படத்தை மீறாமல் படத்திற்கு தேவையான அளவே உள்ளது .

p .c .ஸ்ரீராம் ; பல  காட்சிகளில் அமிதாப் மற்றும்  தனுசின் நடிப்பை தூக்கி காட்டுவது இவரின் ஒளிப்பதிவு தான்

வசனங்கள் ; இப்படத்தின் வசனங்கள் தான் இப்படத்தின் மிக பெரிய பலம் .
குறிப்பாக அமிதாபின் குரலை விட அவர் பேசும் வசனங்கள் ஓங்கி ஒலிக்கறது
 குறிப்பாக its not picture its mixture , உண்மை கதாநாயகனுக்கு யாரும் விருது தர மாட்டர்கள் .copy கிடையாது inspired என்று அவர் பேசும் அனைத்து வசனங்களும் கை தட்டல்கள் பெற்றன

 அதே போல் அவர் தன்னை விஸ்கி என்றும் தனுஸ் யை தண்ணீர் என்றும் கூறுவார் .அதற்கு அக்ஷர விஸ்கியில் கூட 53% தண்ணீர்தான் என்று கூறும் இடங்களும் அருமை .

படம் நீளம் என சிலர் கருதுகிறனர் என்னை பொருத்த வரையில் இந்த படத்தில் தேவை இல்லாத காட்சிகளோ வசனங்களோ இல்லை .ஒரு இடத்தில அக்சரா தனுசை பார்த்து நீ ஒரு மோசமான டிரைவர் உன் கூட நான் வர மாட்டேன் என்பார் .அது கூட பின்னாடி ஒரு இடத்தில் பயன்படுத்த பட்டிற்கும்.

இறுதியாக நான் ஹிந்தி படம் பார்ப்பதை 2010 உடன் நிறுத்தி விட்டேன் .ஏன் என்றால் அப்போது தான் taare zameen par,paa ,chak de india போன்ற நல்ல படங்கள் வந்தன .அதன் பின் சல்மான் கானால் தெலுங்கு பட ரீமேக்களும் சன்னி லியோனின் நல்ல படங்களும் ஆக்கிரமித்து கொண்டன .இல்லை என்றால் சில்க்கின் வரலாறும் காமசுத்ரா என்ற அருமையான இலக்கியமும் தான் படமாகியது .சஞ்சய் லீலா பன்சாலி போன்ற கலைபட இயக்குனர்கள் கூட ராம்லீலாவை ஏதோ பிரபுதேவா போல எடுத்து வைத்துதிருந்தார் .
     வட இந்திய கமல் எனப்படும் ஆமிர்கான் கூட Dhoom 3 என்ற ஒரு குப்பையை எடுத்தார் .

ஆனால் தற்போது தான் queen ,pk போன்ற படங்களால் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது அந்த வரிசையில் ஷமிதாப் படமும் சேரும் .

 

அதே போல் இந்த படத்திற்காக அமிதாப் மற்றும் தனுசுக்கும் நிச்சயம் விருதுகள் கிடைக்கும் என நம்புகிறேன் .
என்னை விட்டால் இன்னும் கூட ஷமிதாப் படத்தை பற்றி எழுதி கொண்டே இருப்பேன் .அந்த அளவு படம் என்னை கவர்ந்துள்ளது.

தனுசின் ரசிகர்கள் ,அமிதாபின் ரசிகர்கள் ,இளையராஜாவின் ரசிகர்கள் ,p .c .ஸ்ரீராமின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என எல்லாரும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம் .
பி .கு . அனைத்து திரை அரங்குகளிலும் ஷமிதாப் SUBTITLES உடன் தான் ஒளிபரப்பாகிறது .எனவே சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக