சனி, 7 மார்ச், 2015

UNBROKEN(2014) Oscar nominee-2015

UNBROKEN(2014) (ஒரு தடகள வீரன் போர் கைதியாக அவதிப்பட்ட கதை )

பொதுவாக போரை தழுவி எடுக்கப்படும் படங்களில் இரண்டு வகையான திரைக்கதை அமைத்து எடுக்கப்படும் .ஒன்று யுத்த களங்களில் போர் வீரர்களின் சாகசத்தை காட்டுவது . இதற்கு AMERICAN SNIPER ஒரு நல்ல உதாரணம் .

இரண்டாவது  வகை போரில் எதிரி நாட்டிடம் கைதியாக  மாட்டி கொண்டவர்களின் கதை .இதில் அவர்கள் எப்படி எதிரி நாட்டினாரால் எப்படி கொடுமைபடுத்தப்பட்டனர் என்பதே காட்டபட்டிற்கும் .அதற்கு பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரபு நடித்து வெளிவந்த சிறைச்சாலை ஒரு நல்ல உதாரணம் .

அந்த வகையில் எடுக்கப்பட்டு வெளிவந்த படம்தான்   UNBROKEN

கதை
லூயி ஜாம்பர்னி என்பவர் இத்தாலிய குடும்பத்தை சேர்ந்தவர் .அவர் சிறு வயதிலே  குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர் .
சிறு வயதில் அவருடைய ஓடும் வேகத்தை பார்த்த அவருடைய அண்ணன் பீட்டர்    லூயியை  ஒரு ஓட்ட பந்தய வீரன் ஆக மாற்றுகிறார் . உள்ளூரில் சிறந்த தடகள வீரராக திகழும் லூயி 1936ம் ஆண்டு ஜெர்மனியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பில் கலந்து கொள்கிறார் .அவர் 5000 மீட்டரை 56 வினாடிகளில் கடந்து சாதனை படைக்கிறார் .

அதன் பின் 1943ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது வான் படை வீரராக இருக்கிறார் .அவருடன் அவரின் அண்ணனும் இருக்கிறார் .விமான தாக்குதலின் போது லூயியின் விமானம் மிகவும் சேதமடைந்து கடலில் விழுகிறது .அதில் லூயி,அவரின் அண்ணன் பீட்டர் மற்றும் லூயியின் நண்பர் பில் மட்டும் உயிர் தப்பிக்கிறார்கள்.அவர்கள் நடுக்கடலில் சிறிய படகில் இருக்கிறார்கள் .யாரும் அவர்களை காப்பாற்ற வரவில்லை .அவர்கள் கடலில் கிடைக்கும் மீனை உண்டு உயிர் வாழ்கிறார்கள் .இதற்கு இடையில் ஒரு எதரி நாட்டு விமானம் அவர்களை தாக்குகிறது .அதில் லூயியின் அண்ணன் உயிர் இழக்கிறார் .முடிவாக 47 நாட்களுக்கு பின் ஜப்பானிய கடற்படையிடம் லூயி மற்றும் பில் மாட்டிக்கொள்கிறார்கள் .அதில் லூயி மற்றும் பில் பிரிக்கப்பட்டு வேறு வேறு கைதி முகாமிற்கு கொண்டு செல்லபடுகின்றனர் .

அங்கு பேர்ட் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் முஸ்திரோ  என்ற ஜப்பானிய அதிகாரி லூயியை மிகவும் கொடுமைப்படுத்துகிறார் . இதற்கு இடையில் லூயிற்கு விடுதலை ஆக வாய்ப்பு கிடைக்கிறது .ஆனால் அவர் அதற்கு அமெரிக்காவை பற்றி வானொலியில் தவறாக பேசவேண்டும் .எனவே  அவ்வாறு பேச மறுத்து விடுதலையை வேண்டாம் என்று சொல்லி விடுகிறார் .இதனால்     பேர்ட்  அவரை மிக கொடூரமாக அடித்து விடுகிறார் .

அதன் பின் அமெரிக்கா  கைதிகளை  காப்பாற்ற டோக்யோ மீது குண்டு வீசுகிறது .அதனால் அமெரிக்கா கைதிகளை நிலக்கரி சுரங்கத்திற்கு வேலை பார்க்க மாற்றுகிறது . அங்கு அமெரிக்க கைதிகள் மிகவும் சிரமப்படுகிறனர் .அங்கு யாரவது வேலை பார்க்கமால் சோர்ந்து விழுந்தால் உடனடியாக  சுடப்படுவார்கள் .அவ்வாறு இருக்கும் போது  ஒரு நாள் லூயி  தடுமாறி கீழே  விழுகிறார்.ஆனால் பேர்ட் அவரை உடனே சுடாமல் அவரிடம் பெரிய மரம் ஒன்றை கொடுத்து அதை தலைக்கு மேலே தூக்க  சொல்கிறார் .அதை மாலை வரை விழாமல் பிடித்து இருந்தால் உயிருடன் விட்டுவிடுவதாக சொல்கிறார் .
லூயியும்  மாலை வரை விடாமல் பிடித்து மாலை பெரும் சத்தத்துடன் தூக்கி எறிகிறார் (மாஸ் மாஸ் என்று மொக்கை காட்சிக்கு எல்லாம் கை தட்டுபவர்கள் இந்த காட்சியை பார்த்தால் தெரியும் உண்மையான மாஸ் எதுவென்று )
இறுதியில்  அமெரிக்கா அவர்களுடைய வீரர்களை மீட்கிறது .லூயியும் நாடு  திரும்புகிறார் .
பின் பல வருடங்களுக்கு பின் 1998ம்  ஆண்டு  எந்த ஜப்பானில் போர் கைதியாக அவதிப்பட்டரோ அதே ஜப்பானில்  சிறப்பு  விருந்தினராக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கிறார் .
இது படத்தின் கதை மட்டும் அல்ல . லூயி ஜாம்பர்னி என்பவரின்  உணமையான வாழ்கை வரலாறு ஆகும் .
இந்த படத்தை இயக்கி இருப்பவர் ஹாலிவுட் ரசிகர்களின் முன்னாள் கனவுக்கன்னியான  எஞ்சலினா  ஜூலி  ஆவார் .


ஒரு  நடிகை ஆக எனக்கு எஞ்சலினா  ஜூலியை எனக்கு புடிக்காது .ஏனன்றால் நடிகை கவர்ச்சி மட்டுமின்றி நடிப்பையும் வழங்க வேண்டும் .என்னதான் எஞ்சலினா  ஜூலி  Girl  interputted       படத்திற்காக   ஆஸ்கார்   வாங்கினாலும் அவரின் மற்ற படங்களில் கவர்ச்சி மட்டுமே இருக்கும் நடிப்பு இருக்காது .அதற்கு அவரின் சமகால நடிகையான கேட்  வின்செல்ட் இவரை விட சிறந்த நடிகை ஆவார் .

 ஆனால்  ஒரு  இயக்குனர்  ஆக என்னை மிகவும்  கவர்ந்து விட்டார் ஏனன்றால் படம் பார்த்து  முடித்த  போது  இதை உண்மையிலே எஞ்சலினா  ஜூலி தான்   இயக்கினரா என்று தோன்றியது  .அந்தளவு படம் சிறப்பாக இருந்தது . மேலும்  பெரிய பெரிய இயக்குனர்களே ஒரு 10 படங்களுக்கு பின்தான் போர் சார்ந்த படத்தை இயக்குவார்கள் .ஆனால் எஞ்சலினா  ஜூலி தன் முதல் படத்திலே  போர் மற்றும் விளையாட்டு மற்றும் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என அனைத்தையும் முதல் படத்திலே சிறப்பாக கையாண்டு இருப்பது பாராட்டத்தக்கது .
வானம் ,கடல் ,நிலம் என அனைத்திலும் படத்தை எடுத்துள்ளார் .
படத்தை  ஒரு உணர்ச்சிபுர்வமாக கொண்டு சென்றுள்ளார். என்னை  பொருத்தவரை  இந்த வருடம் வந்த  AMERICAN SNIPER யை விட எனக்கு UNBROKEN யை பிடித்திருந்தது .  அதில் வரும் கேலின்  கதாபாத்திரத்தை விட UNBROKEN லூயி ஜாம்பர்னி  கதாபாத்திரத்துடன் தான் ஒன்ற முடிந்தது .பல காட்சிகளில் லூயி ஜாம்பர்னியின் வலியை  உணரமுடிகறது. அதற்கு Jack O'Connellன்  சிறந்த நடிப்பே காரணம் .
இவர் இப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கபடாதது  ஏமாற்றமே.
பலரிடம் லூயி அடி வாங்கும் காட்சி ஆகட்டும் , நடுக்கடலில் தவிக்கும் காட்சி ஆகட்டும் ,இறுதியில் அந்த மரத்தை தாங்கி பிடிக்கும் காட்சி ஆகட்டும்  Jack O'Connel லூயியாக  வாழ்ந்து காட்டியுள்ளார் .இவர் அந்த மரத்தை மட்டும் தாங்கி பிடிக்கவில்லை இந்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார் .


இப்படத்தை  ஒரு பெண் இயக்குனர் இயக்கி இருந்தாலும் இப்படத்தில் லூயியின்  அம்மா ,தங்கை என்று இரண்டே பெண் கதாபாத்திரங்கள் தான் . அவர்களும் இரண்டு காட்சிக்குத்தான் வருகின்றனர் .

அதே போல்  ஹாலிவுட்டில் எப்போதும் வைக்கப்படும் முத்த காட்சியோ படுக்கையறை காட்சியோ இதில் சுத்தமாக கிடையாது .துளி கூட ஆபாசம் இல்லாத படம் இது .

புற்றுநோயில் இருந்து மீண்டுவந்து ஒரு உணர்ச்சிபுர்வமான படத்தை எடுத்ததற்கு  எஞ்சலினா  ஜூலியை பாராட்டியே தீரவேண்டும் .

UNBROKEN ஆஸ்காரில் 3 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது .அதில் சிறந்த ஒளிப்பதிவும் அடங்கும் . இது சிறந்த படத்திற்கு பரிந்துரைக்கபடாவிட்டாலும்
இது சென்ற வருடத்தின் ஆக சிறந்த படமாகும் .

எனவே சினிமா விரும்பிகள் இப்படத்தை  தாராளமாக பார்க்கலாம் .ஆனால் பொழுதுபோக்கு சினிமா விரும்பிகள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும்


செவ்வாய், 3 மார்ச், 2015

JOHN WICK (2014)

JOHN WICK (பக்கா ஆக்சன்  மேளா )

தொடர்ந்து  ஆஸ்கார்  விருதிற்கு  பரிந்துரைக்கப்பட்ட படங்களாக பார்த்தாதல் ஒரு மாறுதலுக்காக JOHN WICK என்ற ஆக்சன்  படம் பார்த்தேன் .

பொதுவாக  இரண்டு வகை சினிமாக்களுக்கு மட்டும் மொழி தேவைப்படுவதில்லை ,ஒன்று அந்த படங்களுக்கு மொழி தேவை  இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை உங்களுக்கு ,

மற்றொன்று  ஆக்சன்  படங்கள் , அவை எந்த மொழியில் இருந்தாலும் நல்ல ஆக்சன் காட்சிகள் மட்டும் இருந்தால் போதும் அதை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் .மேலும் ஆக்சன் படங்களுக்கு கதையும் தேவை  இல்லை .

மேலும் ஆக்சன் படங்களில் நடிப்பவர்களுக்குதான் பெரிய ரசிகர் கூட்டமும்   நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும் . உலகின் சிறந்த நடிகர்களான"டாம் ஹன்க்ஸ் "பற்றியோ "டஸ்டின் ஹோப்ப்மன் "பற்றியோ பெரும்பாலனோர்  அறிந்து வைத்திருபதில்லை அதே நேரத்தில் ஆக்சன் ஹீரோக்களான அர்நால்ட் பற்றியோ  ஜாக்கிசான் பற்றியோ உலகில்  எந்த மூலையிலும் உள்ள 8 வயது சிறுவனை கேட்டால் கூட சொல்லுவான் .

அதே போல் ஆக்சன் படங்களில் நடிப்பவர்கள்  தான் சூப்பர் ஸ்டார் ஆகவும் முடியும் ,அதனால் தான் விஜய் ,அஜித்தில் ஆரம்பித்து நேற்று வந்த சிவக்கார்த்திகயேன் உட்பட ஆக்சன் படங்கள் செய்யவே விரும்புகின்றனர் .

ஆக்சன் படங்களுக்கு கதை ஏதும் பெரிதாக இருக்க தேவையில்லை .ஓரளவு திரைக்கதையும் நல்ல ஆக்சன் காட்சிகள் மட்டும் போதும் .

ஆக்சன் படங்களை விமர்சகர்கள் தூற்றினாலும் ,ரசிகர்கள் கொண்டாடவே செய்வர் .அதற்கு ராம்போ சீரீஸ் ஒரு நல்ல உதாரணம் . அந்த படம்  அமெரிக்காவில் மோசமான படம் என்ற golden rassebury  விருதுகளை வாங்கி விமர்சகர்களால் கழுவி உற்றபட்ட  படம் .ஆனால் அதன் ஆக்சன் காட்சிகளுக்கு ஆகவே இன்றும் ரசிகர்கள் அதை பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர் .

இன்றும் நம்மூரில் ஹரியின் படங்களுக்கு செல்லும் கூட்டம் பாலா படத்திற்கோ இல்லை வசந்த பாலன் படத்திற்கோ இருப்பதில்லை ,

இவ்வாறு  ஆக்சன் படங்களை பெரும்பாலனோர் விரும்ப காரணம் நமக்குள் மறைந்து இருக்கும் வன்முறை உணர்வே ஆகும் ,அதானால்தான் இன்று கிரிக்கெட் பார்க்கும் கூட்டதை விட WWE  எனப்படும் wristling  பார்க்கும் கூட்டமெ அதிகம்

சரி JOHN WICK யை பற்றி பார்க்கும் முன்பு அதில் நடித்துள்ள KEANU REEVES பற்றி சில வார்த்தைகள்

எப்படி நம்மூரில் அஜீத்தும் விஜயும் ஆரம்ப காலத்தில் காதல் படங்கள் நடித்து அதன் பின்பு  ஆக்சன் ஹீரோவாக மாறினார்களோ அதே போல்  தான்  ஹாலிவுட்டில் KEANU REEVES .ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தவர் .
SPEED படத்தின் வெற்றியால் ஆக்சன் ஹீரோவாக மாறினார் , அதன் பின் MATRIX SERIES படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் .ஆனால் TRIOLOGY படங்களில் நடிப்பவர்கள் அதற்கு பின் வெற்றி கொடுப்பது கடினம் .அதற்கு LORD OF THE RINGSஇல் நடித்த எலிஜா வூட் ,TWILIGHT SERIES இல் நடித்த ராபர்ட் பட்டின்சென் ,மற்றும் HARI POTTOR கதாநாயகன் இவர்களே உதாரணம் . அதே போல் தான் KEANU REEVESம்  சிறிது காலம் திணறினார் . ஆனால் JOHN WICK மூலம் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார் .


கதை என்று பார்த்தால் JOHN WICKன் கதை மிகவும் சிறியது இறப்பதற்கு முன்பு மனைவி பரிசாக அளித்த நாயை கொன்றவனை JOHN WICK பழி வாங்குவது தான் கதை . கேட்பதற்கு சிரிப்பாகவும் ,Logig இல்லாதது போல் தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் ஒரு நல்ல  ஆக்சன் படத்திற்கு கதையோ \லாஜிக்கோ  தேவை இல்லை . நல்ல  ஆக்சன் காட்சிகள் மட்டுமே போதும் படத்தை நகர்த்த அதைத்தான் JOHN WICK செய்து உள்ளது .

காட்சிக்கு காட்சி ஸ்டைல் ஆன ஆக்சன் காட்சிகளே படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறது . மேலும் சமீப காலங்களில் Korean படங்களில் ஸ்டைல் ஆன  ஆக்சன் காட்சிகளை பார்த்து உள்ளேன் ஒரு ஹாலிவுட் படத்தில் நல்ல
ஸ்டைல் ஆன ஆக்சன் காட்சிகளை பார்த்தது இந்த படத்தில் தான் .

அதே போல் மற்ற ஆக்சன் படங்களில் ஹீரோக்கள் சவால் விடும் பஞ்ச் வசங்களை இதில் KEANU REEVES பேசி கொல்லவில்லை .மேலும் இப்படத்தில் KEANU REEVES பேசுவதே குறைவு .அவரின் வசனங்கள் மொத்தமாகவே பத்தோ பதினொன்றோதான் இருக்கும் .அதுவும் படத்தின் போக்கிற்கு ஏற்றதாகவே உள்ளது .

 அர்நால்ட் ,ஸ்டொல்லனிற்கு  பிறகு ஹாலிவுட்டில் நல்ல ஆக்சன் ஹீரோக்கள் யாரும் அந்த இடத்தை நிரப்பவில்லை .
KEANU REEVES   JOHN WICK போன்ற ஆக்சன் படங்களில் நடித்தார் என்றால் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக திகழ்வார் என நம்பலாம் .


முடிவாக   ஆக்சன்  பட விரும்பிகளுக்கு JOHN WICK  ஒரு நல்ல ஆக்சன் விருந்து .