Fireman (மலையாளம் ) தீயணைப்பு வீரர்களின் போராட்டம்
பொதுவாகவே நம்மூரில் தீ விபத்து ஏற்பட்டால் மட்டும் தீயணைப்பு துறை வருவதில்லை .வீட்டில் மலை பாம்பு புகுந்தாலோ இல்லை கிணற்றில் மாடு விழுந்தாலோ இல்லை ஆற்றில் வெள்ள பெருக்கில் மாட்டி கொண்டவர்களை காப்பாற்றுவதும் தீயணைப்பு துறை தான் .
ஆனால் அவர்களை பற்றி தமிழில் அதிகம் படம் வரவில்லை .பிரசாந்த் நடித்து சுசி கணேசன் இயக்கிய விரும்பிகிறேன் படம் தீயணைப்பு துறையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றாலும் அது பாதிக்கு அப்புறம் ஏதோ 90களில் வந்த காதல் திரைப்படம் போல் ஆயிற்று .
சரி இனி fireman
ஒரு பெரிய Lpg gas சிலிண்டர் நகரத்தின் மத்தியில் லாரியில் இருந்து விழுந்து விடுகிறது அதில் இருந்து வெளியேறும் வாயுவால் நகரத்தில் பெரிய தீ விபத்து ஏற்படுகிறது . ஆனால் சிலிண்டர் அகற்றமால் விட்டால் 3 கிலோ மீட்டர் அளவு வாயு பரவி விடும் அதனால் யாரனும் செல் போன் உபோயோகித்தலோ இல்லை மின்சாரம் பயன்படுத்தினாலோ பெரிய தீ விபத்தாக மாறும் அபாயம் உண்டு .அதே நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கபட்டால் மெழுகுவர்த்தியோ இல்லை ups பயன்படுத்த கூடும் இதனால் மக்கள் அனைவரும் வெளியற்றபடுகின்றனர் .ஆனால் வாயு கசிவு எற்பட்ட இடத்திற்கு மிக அருகில் மத்திய சிறைச்சாலை .அவர்களை வெளியற்ற முடியாது அதே நேரத்தில் அங்கு ஏதுனும் ஒருவர் சிகரட் பற்ற வைத்தால் கூட விபத்து ஏற்படும் .
இதற்கு இடையில் மகளை தொலைத்த ஒருவர் ஒரு கடையை பூட்டி கொண்டு கையில் Lighter உடன் இருக்கிறார்.அவர் தன் மகள் 1 மணி நேரத்தில் வர வில்லை என்றால் அதை பற்ற வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார் .
இதற்கு இடையில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசயம் தெரிந்து அவர்களை விட சொல்லி வன்முறையில் இறங்குகின்றனர் .
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் தீயணைப்பு துறை அந்த வாயு கசிவை தடுத்ததா பெரிய விபத்து ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கபட்டனரா சிறைச்சாலையில் உள்ளவர்களின் கதி என்ன என்பதே மீதி கதை .
சமீப காலங்களில் இவ்வளவு விறுவிறுப்பாக சென்ற படத்தை நான் ஹாலிவுட்டில் கூட பார்க்கவில்லை .படத்தின் ஆரம்பத்தில் இருந்தே திரைகதை வேகமாக செல்கிறது .தேவை இல்லாத பாடல்களோ நகைச்சுவை காட்சிகளோ சண்டை காட்சிகளோ இல்லை .
இவ்வளவு ஏன் படத்தில் ஒன்றி விட்டப்பின் படத்தில் நமக்கு மம்முட்டி நடித்திருபதாக தோன்ற வில்லை ஏதோ ஒரு தீயணைப்பு துறை அதிகாரி தீயை தடுக்க போராடுவதை போல் தான் இருக்கிறது .
மேலும் வெறும் விறுவிறுப்புடன் செல்வது மட்டுமின்றி தீயணைப்பு துறையில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்களையும் சொல்கின்றனர் .
ஒரு கட்டத்தில் விபத்தை தடுக்க முடியாது என்று தெரிந்த உடன் காவல் துறை உட்பட அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல தீர்மானிக்கும் போது தீயணைப்பு துறை வீரர்கள் யாரும் வர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதற்கு மம்முட்டி ஒரு காரணம் சொல்வார் ."மக்கள் தீ விபத்தோ இல்லை வெள்ள பெருக்கோ இல்லை அது போன்ற நெருக்கடியான சமயத்தில் மக்கள் யாரும் மந்திரியோ இல்லை MLA வையோ எதிர்ப்பார்பதில்லை 101 அழைத்து விட்டு எங்களைத்தான் நம்புகிறார்கள் .இது படத்திற்காக வைக்க பட்ட வசனம் என்றாலும் உண்மையும் அதுவே .ஆனால் நாம் யாரும் தீயணைப்பு துறையை பெரிதாக பார்ப்பதில்லை .காவல் துறையையும் ராணுவ துறையையும் தான் பெரிதாக பார்க்கிறோம் .
சிறு வயதில் நாம் எல்லாரும் விஜயக்காந்த் ,அர்ஜுன் நடித்த போலீஸ் படங்களை பார்த்து விட்டு அப்போது படம் முடிந்த போது நாமும் போலீஸ் ஆக வேண்டும் என்று பலர் நினைத்திருப்போம் .ஆனால் எனக்கு அப்போது எல்லாம் அப்படி ஒரு எண்ணம் வரவில்லை .ஆனால் இப்படம் பார்த்து முடித்த உடன் சிறு பிள்ளை போல் நானும் தீயணைப்பு துறை வீரனாக வேண்டும் என்று ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது .எனக்கு மட்டும் அல்ல .இப்படம் பார்க்கும் அனைவருக்குமே தீயணைப்பு துறை வீரர்கள் மீது ஒரு நல்ல மரியாதை ஏற்படும் .
முடிவாக எப்போதும் சிங்ககளும் சிறுத்தைகளும் வேட்டையாடி விளையாடுவதை மட்டும் பெரிதாக திரையில் ரசிப்பவர்கள் இது போன்று மனிதனை மனிதன் காப்பாற்றும் படங்களை பார்த்து ஊக்குவிக்க வேண்டும் .
மேலும் FIREMAN நல்ல விறுவிறுப்பாக செல்ல கூடிய படம் அதனால் அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக