புதன், 13 மே, 2015

மறவாதே கண்மணியே

மறதி கதாபாத்திரங்கள் பற்றி   ஒரு பார்வை

ஓகே   கண்மணி படம்  பார்த்தவர்கள்  அனைவரும்  படம் நன்றாக உள்ளது என்றவர்களும் சரி ,படம் பிடிக்கவில்லை என்று கூறியவர்களும் சரி படத்தில் ஒரு விஷயத்தை பெரும்பாலனோர்  பிடித்திருக்கிறது என்று பாராட்டியது  பிரகாஷ் ராஜ் மற்றும் லீலா சாம்சன்  கதாபாத்திரமும் அவர்களின்   வயோதிக காதலும் .


குறிப்பாக லீலா சாம்சனின் கதாபாத்திரம் ஒரு அழுத்தமான பாத்திரமாக இருந்தது .மற்ற பாத்திரங்களை விட இவரின் கதாபாத்திரம் ஒரு ரசிப்பு தன்மையும் பரிதாபத்தையும் ரசிகர்களிடம் ஒருங்கே பெற்று தந்தது ,இதற்கு காரணம் அவர் அல்ஜிமிர் என்ற மறதி நோயால் பாதிக்கபட்டுளதாலும் அதனால் சிரமபடுவதாலும்.
மறதியை வைத்து எடுக்கப்பட்ட பாத்திரங்களின் சிறப்பு இதுதான் அப்பாத்திரங்களுக்கு மறதி  இருந்தாலும் அப்பாத்திரங்களை ரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள் .அது அன்றைய மூன்றாம் பிறை ஸ்ரீதேவி கதாபாத்திரம் ஆகட்டும் இன்றைய ஓகே கண்மணியின் லீலா சாம்சனின் கதாபாத்திரம் ஆகட்டும் இல்லை அது கஜினியின் சூர்யா கதாபாத்திரம் ஆகட்டும் ரசிகர்கள் என்றுமே இப்பாத்திரங்களை மறக்க மாட்டார்கள் .
புராண காலங்களிலும் மறதி கதாபாத்திரங்கள் உண்டு .விசுவமிதிரர்ரின் மகள் சகுந்தலையை அவளுடைய கணவன் துஷ்யந்தன் மறந்தது .மயானத்தில் அரிச்சந்திரன் மனைவியையும் சொந்த மகனையும் மறந்தது என நம் கதைகளில் எப்போதும் மறதி கதாபாத்திரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன . இப்பாத்திரங்களின் சிறப்பு என்னவென்றால் எப்படி பழி வாங்கும் கதைகளில் எப்போது நாயகன் பழி வாங்குவான் என்ற எதிர்பார்ப்பும் ஒரு வன்முறை உணர்வும் ஏற்படுகிறதோ அதே போல் மறதி கதாபாத்திரங்கள் மீது ஒரு பரிதாப உணர்வும் ஒரு எதிர்பார்ப்பு தன்மையும் ஏற்படும் .
இந்த கட்டுரை முழுதும் மறதியை வைத்து வந்த எனக்கு தெரிந்த படங்களையும் அதன் கதாபாத்திரங்கள் பற்றியும் எனக்கு தெரிந்த வரை சொல்லி இருக்கிறேன்

1.memento(2010)


நோலனை Inception பார்த்தும் Batman trilogy பார்த்தும் ரசிகர்கள் ஆகியவர்கள்தான் அதிகம் ஆனால் நோலனின் சிறந்த படமாக பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் கருதுவது இந்த Memento தான் .இன்று வரையிலும் இதன் Non-linear திரைக்கதைக்காக இந்த படம் திரும்ப திரும்ப பார்க்கப்படுகிறது .இதன் கதை நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் குறுகிய கால ஞாபகம் உள்ள கதாநாயகன் தன் காதலியை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறான் என்பதே கதை சாதாரணமாக பழி வாங்கும் கதை என்றாலே ரசிகனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்படும் இதில் மறதி கதாபாத்திரம் ஒன்று பழி வாங்குகிறது என்றால் அது ரசிகனுக்கு புது விதமாகவும் ஒரு ஆர்வமும் ஏற்படும் ,அதை நோலன் திறம்பட கையாண்டு இருப்பார் .தன் மறதியை மீறி பழி வாங்க நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகளும் தான் இந்த திரைகதையின் பலம் .

2.கஜினி (2005)


அதான் Memento பற்றி சொல்லியாய்ற்றே அப்புறம் ஏன் கஜினியை பற்றி பேச வேண்டும் என்று சிலர் நினைக்கலாம் .இந்த Copycat கண்டுபுடிக்கும் கொலம்பஸ்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லி கொள்கிறேன் இந்த அந்நிய படங்களை தழுவி படம் எடுக்கும் முறை MGR,சிவாஜி காலத்தில் இருந்து உள்ளது .அதற்கு காரணம் இயக்குனர்கள் மட்டும் அல்ல .சொந்த கதையையோ இல்லை நாவலை தழுவியோ எடுக்கும் படங்களை ரசிகர்கள் என்றும் ஓட வைப்பதில்லை. அப்புறம்   Copycat என்று மட்டும் சொல்லி கொள்பவர்கள் இரண்டு படங்களை நன்றாக ஒப்பிட்டு பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .கஜினியை பொறுத்த வரையில் A.r.முருகதாஸ் கதையையும் அந்த கான்செப்ட் யையும் மட்டும் எடுத்து கொண்டு திரைக்கதையை முற்றிலுமாக மாற்றி இருப்பார்.இதன் காதல் காட்சிகளுக்குகாவே இந்த படம் எப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி அமைத்திருப்பது A.r.முருகதாசின் சமார்த்தியம் .மேலும் இப்படம் தெய்வ திருமகள் போல (I am sam) சீன் பை சீன் அப்படியே எடுத்து வைக்கவில்லை .
இதன் திரைக்கதையால் கவரப்பட்ட ஆமிர்கான் தன் திரை உலக வாழ்கையில் Remake எடுக்காத ஆமிர்கான் Remake எடுத்த ஒரே திரைப்படம் கஜினிதான் .

3.50 First dates(2004)


பீட்டர் சீகல் இயக்கத்தில் ஆடம் சண்ட்லெர் ,ட்ரூ பெர்ரிமோர் நடித்து 2004ல் வெளி வந்த படம் .இதில் நாயகிக்கு தன் தந்தை பிறந்த நாள் அன்று அவருக்கு பிறந்த நாள் வாங்கி விட்டு வரும் வழியில் விபத்துக்கு உள்ளாகிறாள் .அதிலிருந்து எல்லா நாளும் அவளுக்கு அந்த தினம் மட்டுமே நினைவில் உள்ளது .தினமும் தூங்கி எழுந்த உடன் தந்தை பிறந்த நாளாக நினைக்கிறாள் .தந்தைக்கு பரிசு வாங்க செல்கிறாள் .Sixth sense படத்தை குடும்பத்துடுன் பார்க்கிறாள் .ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் பார்க்கிறாள் .இந்த நிலையில்தான் நாயகன் அவளை சந்திக்கிறான் .முதலில் அவளை பற்றி எதுவும் அறியாத அவன் அதன் பின் அவளை பற்றி அறிந்து கொள்கிறான் .ஆனால் அதையே அவன் சாதகமாக எடுத்துக்கொண்டு தினமும் அவளுடுன் புதியவன் போல் பழகுகிறான் .பின் அவளை குணப்படுத்த முயல்கிறான் .ஆனால் அது முடியாது என மருத்துவர்கள் சொல்லி விடுகின்றனர் .அதன் பின் அவளுக்கு அவள் மறந்த ஒரு வருட நிகழுவுகளை வீடியோவாக எடுத்து அவளுக்கு காண்பிக்கிறான் .அதன் பின் தினமும் வீடியோ எடுத்து அவளுக்கு  தினமும் வீடியோ மூலம் முந்திய தினத்தை எடுத்து அவளுக்கு காண்பித்து அவளை காதலிக்கிறான் .ஆனால் ஒரு கட்டத்தில் அவள் தன்னால் நடைமுறை வாழ்கைக்கு ஒத்துவர இயலவில்லை என்று மன நல காப்பகத்துக்கு சென்று விடுகிறாள் அதன் பின் ஒரு மூன்று மாத இடைவெளிக்கு பின் நாயகன் அவளை தேடி சென்று திருமணம் செய்து கொள்கிறான் .இறுதி வரை அவளுக்கு வீடியோ மூலம் எல்லாவற்றையும் ஞாபக படுத்துகிறான் .
பொதுவாக காதல் கதைகளில் ஞாபக மறதி கதாபாத்திரங்களை புகுத்தும் போது அது பெரும்பாலும் அழுவாச்சி காவியாமகவே இருக்கும் ஆனால் இப்படம் அப்படி இல்லை .முதல் பாதி முழுதும் காமெடியாகவும் இரண்டாம் பாதி முழுதும் நல்ல காதல் காட்சிகளுடுனும் செல்கிறது .அதுவே இப்படத்தின் பலம்.

4.Mumbai police (2013)

 

ரோசன் அன்றேவ்ஸ்  (36 வயதினிலே இயக்குனர் ) இயக்கத்தில் பிரித்திவி ராஜ் ,ஜெயசூர்யா ,ரஹ்மான்  நடிப்பில் 2013ல் வெளிவந்த திரைப்படம் .மறதி கதாபாத்திரத்தை கொண்டு வந்த ஒரு வித்தியசமான திரைப்படம் .

பிரிதிவிராஜ் ஒரு திறமையான போலீஸ் அதிகாரி .ஆனால் யாரையும் மதிக்காமல் எப்போதும் ஒரு திமிருடுன் இருப்பவர் ,அதற்கு காரணம் அவர் மும்பையில் போலீஸ் ஆக வேலை பார்த்து விட்டு வந்திருப்பவர் .அதனாலே அவரை மும்பை போலீஸ் என்று கூறுகிறார்கள் .இப்படி இருக்கும் போது தன்னுடுன் வேலை பார்க்கும் சக போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார் .அதை விசாரணை செய்யும் பொறுப்பு பிரிதிவிராஜ்க்கு வருகிறது .எல்லாம் முடிந்து கொலையாளி யார் என்று கண்டுபுடித்து தன் மேலாதிகாரிக்கு சொல்ல போகும் வழியில் பிரிதிவிராஜ் விபத்துக்குள்ளாகிறார் .இதனால் கொலையாளியை மட்டுமின்றி தான் யார் என்பதையே முற்றிலுமாக மறக்கிறார் .அதன் பின் மிகவும் சிரமபடும் அவரிடிம் அவர் மேலதிகாரியான ரகுமான் மீண்டும் அந்த கொலை பற்றிய விசாரணையை முதலில் இருந்து துவங்குமாறு கூறுகிறார் .ஆனால் எதை பற்றியும் ஞாபகம் இல்லாத பிரிதிவிராஜ் அதை விசாரணை செய்யும் போது அது முதல் பாதியில் சென்றது போல் இல்லாமல் வேறு விதமாக செல்கிறது கொலையை பற்றிய சந்தேகங்கள் முற்றிலும் புதிதாக உள்ளது .இதை எல்லாம் மீறி பிரிதிவிராஜ் கொலையாளியை கண்டுபுடித்தரா தன் ஞாபகம் மீண்டும் வந்தாதா என்பதே கதை .இந்த படம் பிரிதிவிராஜின் நடிப்பில் ஒரு மைல் கல் என்றே சொல்லாலம் .மும்பை போலீஸ் என்ற பெயரில் திமிருடுன் இருப்பதாகட்டும் தன்னை பற்றியே மறந்த பின் ஒரு கொலையை பற்றி விசாரணை செய்யும் போது மிகவும் பரிதாபமாக இருப்பது ஆகட்டும் நடிப்பில் ஒரு சிறந்த பரிமாணத்தை காட்டி இருப்பார் .அதே போல் சம கால மலையாள இயக்குனர்களில் ரோசன் அன்றேவ்ஸ்  கவனிக்கதக்கவர் .இவருடைய அனைத்து படங்களும் வேவேறு விதமான வகை படங்கள் ஆகும் .மேலும் இவருடைய படங்களில் திரைகதையை மந்தமாக்கும் வகையில் பாடல்களோ நகைச்சுவையோ அதிகம்  இருக்காது .மும்பை போலீசை பொறுத்த வரையில் எப்படி மறதி கதாபாத்திரத்தை வைத்து ஒரு பழி வாங்கும் கதையாக கஜினி இருந்ததோ அதே போல் இது  மறதி கதாபாத்திரத்தை வைத்து ஒரு  நல்ல crime thriller .

5.Deepavali(2007)


மூன்றாம் பிறையில் கமலின் பாத்திரம் பைத்தியம் ஆகமால் மீண்டும் காதலியை தேடி போய் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று இயக்குனர் எழில் யோசித்திருப்பார் போல அது போலே தீபாவளி படம் இயக்கிருப்பார் .
அதே போல் மூன்று மாதம் நாயகனை காதலிக்கும் நாயகி அதன் பின் தன் பழைய ஞாபகங்கள்  வந்த பின் நாயகனை மறக்கிறாள் .அவளை தேடி சென்று அவளுக்கு தன் காதலையும் தன்னுடுன் இருந்த நாட்களை ஞாபகபடுத்த முயற்சிக்கும் நாயகன் என்று நல்ல Classical Romance படமாக வர வேண்டியது திரைக்கதையால் சுமாராகி போனது .இருப்பினும் இதன் பாடல்களும் அது படமாக்கபட்டிருக்கும் விதமும் இன்று பார்த்தாலும் ரசிக்கும் படி இருக்கும் 

6.The vow (2012)

இப்படத்தை பார்த்தவர்களோ இல்லை நான் கதை சொல்லிய பின் இது தீபாவளி படம் போன்று இருக்கிறதே என்று நினைத்து ஒரு வேலை இதை எழில் காப்பி அடித்திருப்பாரோ என்று நினைப்பவர்கள் இரண்டு படங்கள் வெளி வந்த வருடங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள் .The vow வெளி வந்தது 2012 ஆனால் தீபாவளி 2007ல் வெளிவந்துள்ளது .

The vow படத்தை பொறுத்த வரை பணக்கார நாயகி வீட்டில் இருக்க புடிக்கமால் வெளியே வருகிறாள் ஒரு ஆல்பம் பாடகரான நாயகனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் .மூன்று மாத காலம் அவனுடன் நிம்மதியாக வாழ்கிறாள் .ஆனால் ஒரு விபத்துக்கு பின் நாயகி அந்த மூன்று மாத கால நினைவுகளையும் தன் கணவனையும் மறக்கிறாள் .அதன் பின் நாயகன் தன் திருமண போட்டோவை காண்பித்து அவளை தன்னுடுன் இருக்க சொல்கிறான் .அவளும் முதலில் சம்மதிக்கிறாள் .ஆனால் பின்பு அது புடிக்காமல் தன் பெற்றோரிடம் சென்று விடுகிறாள் அதன் பின் வழக்கம் போல் நாயகன் அவளுக்கு ஞாபகபடுத்த முயல்கிறான் . ஆனால் இறுதி வரை நாயகிக்கு ஏதும் ஞாபகம் வரவில்லை .ஆனால் நாயகனின் அன்பினால் இறுதியில் அவனிடமே சென்று விடுகிறாள் .இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது நாயகியின் பாத்திரத்தில் உள்ள உண்மை பெண்மணிக்கு இன்று வரை ஞாபகம் வரவில்லை .ஆனால் அப்பெண்மணி கணவருடுன்தான் உள்ளார் .
7.Vetri vizha (1989)


கமல் நடிக்காத பாத்திரம் என்றுதான் ஏதும் உண்டா ?  அவர் மறதி கதாபாத்திரமாக நடித்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1989ல் வெளி வந்த திரைப்படம் தான் வெற்றி விழா .கிட்டத்தட்ட ராபர்ட் லாடுளும் எழுதிய  The Bourne Identity என்ற  நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம் .
தான் யார் என்று மறந்து விட்ட உளவு அதிகாரியான நாயகன் தன்னை பற்றியும் தன்னை கொல்ல முயற்சிப்பவர்களையும் கண்டுபுடிப்பதே கதை இதில் வெறுமனே கமலின் பாத்திரத்தை வைத்து கொண்டு திரைக்கதை அமைக்கபட்டிருந்தால் கூட படம் விறுவிறுப்பாக சென்று இருக்கும் .ஆனால் தேவை இல்லாமல் பிரபு மற்றும் குஷ்பு கதாபாத்திரங்கள் மற்றும் s.s.சந்திரனின் இரட்டை அர்த்த நகைச்சுவையும் இதன் திரைக்கதையை வலுவற்று போக செய்து விட்டது .கமலின் ஆபூர்வ சகோதரர்கள் ,சத்யா ,சகலகலா வல்லவன் போன்று சிறந்த பொழுதுப்போக்கு படமாக வந்திருக்க வேண்டியது ஆனால் சுமாரான படமாகவே ஓடியது .

8.The bourne series (2002,2004,2007,2012)


அதே ராபர்ட் லாடுலம் எழுதிய The bourne identity நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது .அதே போல் தன்னை மறந்து விட்ட ஒரு உளவு அதிகாரி எப்படி தனக்கு வரும் சிக்கல்களை எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக கொண்டு சென்ற படம் .ஆனால் மூன்று பாகங்களிலும் தான் யார் என்பதை நாயகனால் ஞாபகப்படுத்தவே முடியாது .
எப்படி bruce wills க்கு Die hard series ,டாம் குருஸ்க்கு மிசன் இம்பசபில் போல மேட் டேமன் க்கு இந்த திரைப்படங்கள் வெற்றி பாதையை வகுத்தது .

9.Still Alice(2014)


பொதுவாகவே இன்றைய கால கட்டத்தில் 40 மற்றும் 50 வயது பெண்மணிகள் மன அழுத்தத்தினால் அல்ஜிமிர் மறதி நோய்க்கு உள்ளாகின்றனர் .அதை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது .
கல்லூரி விரிவுரையாளராக இருக்கும் ஆலிஸ்க்கு அல்ஜிமிர் மறதி நோய் ஏற்படுகிறது . ஆரம்பத்தில் சிறிய விசயங்களை மறக்கும் ஆலிஸ் அதை போக்க செல் போன் reminder மற்றும் குறிப்புகள் எடுத்து சமாளிக்கிறாள் .ஆனால் நாளாக நாளாக அனைத்தையும் மறக்கிறாள் .இறுதியில் அவளுக்கு பேசும் வார்த்தைகள் கூட மறந்து விடுகிறது .
மெதுவாக செல்லும் திரைக்கதையை ஜுலியானெ மூரே தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார் .இந்த படத்திற்காக அவர் ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வென்றார் .

10.A moment to remember (2004)


ஆலிஸ்க்கும்(Still alice) பவானி ஆண்டிக்கும் (ஓகே கண்மணி) 50 வயதில் வந்த அல்ஜிமிர் மறதி நோய் ஒரு 27 வயது பெண்மணிக்கு அதுவும் திருமணம் முடிந்த ஓரிரு மாதங்களிலே வந்தால் எப்படி இருக்கும் அது தான் கொரியன் திரைப்படமான இந்த a moment to remember.
பொதுவாக காதல் திரைப்படங்கள் எடுப்பதில் கொரியாகாரர்களை அடித்து கொள்ள முடியாது அதுவும் இது போன்ற கதை உள்ள படத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் .படத்தில் எடிட்டிங் மற்றும் இசையும் பாராட்டத்தக்கது .
மேலும் இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது .ஹிந்தியில் அஜய் தேவ்கன் ,கஜோல் நடிப்பில் U me aur hum என்ற பெயரில் காப்பி அடிக்கப்பட்டது .

11.Naduvula konjam pakkatha kanom (2012)


முடிவாக  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு நாயகன் கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுகிறான் .இதனால் அவன் தலையில் சிறிய அடிப்பட்டு ஒரு 3 மாதங்களுக்கு முன் நடந்த அனைத்தையும் மறக்கிறான் .இந்த 3 மாதத்தில்த்தான் அவன் காதலித்து அதை திருமணம் வரை கொண்டு சென்று இருக்கிறான் .அடுத்த நாள்  திருமணம் ஆனால் அவனுக்கோ ஏதும் ஞாபகம் இல்லை .இப்படியான கதையை எடுக்கும் போது அது கத்தி மீது நடப்பதை போன்றது ஆனால் இயக்குனரோ அதை சோக காவியமாக்கமால் காட்சிக்கு  காட்சி சிரிக்க வைத்துள்ளார் . ஒரு வசனத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது பொதுவாக அலுப்பு தட்டிவிடும் ஆனால் இதிலோ நாயகன் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் போது நகைச்சுவையாக இருக்கும் படி அமைத்துள்ளார் .
பொதுவாகவே மறதி கதாபாத்திரங்கள் மீது பரிதாப உணர்வுதான் ஏற்படும் ஆனால் இதில் நாயகனை பார்க்கும் போதல்லாம் ரசிகர்கள் சிரிக்கின்றனர் அது தான் இயுக்குனரின் சமார்த்தியம் .
எனக்கு தெரிந்து மறதியை வைத்து படம் முழுதும் சிரிக்க வைத்த  ஒரே படம் இதுவாகத்தான் இருக்க முடியும்



இவைகள் தவிர வேறு மறதியை வைத்து வந்த படங்களை நான் விட்ருக்கலாம் .
பெரும்பாலும் மறதி பாத்திரங்களை கண்மணிகளுக்கு படைக்கும் போது அது எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாது .மேலும் பெண்களுக்கு மறதி வரும் போது அது அவர்களை விட அது நாயகர்களுக்கு சாதமாக அமையும் .அதனால் தான் மூன்றாம் பிறையின் கமலின் பாத்திரம் இன்று வரை மறக்க முடியாதாக இருக்கிறது .அதே நேரத்தில் ஆண்களுக்கு மறதி பாத்திரம் படைக்கும் போது அதை கவனத்துடன் கையாள வேண்டும் .
ஏனன்றால் கஜினியை போன்றோ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்றோ ஒரு முறைதான் எடுக்க முடியும் .ஆனால் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தையோ இல்லை ஓகே கண்மணி லீலா சாம்சன் பாத்திரத்தை போன்று மீண்டும் படைத்தல் அது கிலெசெ வாக இருந்தாலும் ரசிப்பார்கள் .
மேலும் மறதி பாத்திரங்களுக்கு அல்ஜிமிர் நோய் மூலம் வருவதாக காட்டப்படுகிறது .எனவே அல்ஜிமிர் நோய் பற்றிய ஒரு நல்ல தெளிவு பெற்ற பின் மறதி கதாபாத்திரங்கள் படைப்பது நல்லது .

எனவே மறதியை வைத்து திரைக்கதை எழுதும் போது இந்த படங்கள் பார்த்து விட்டு எழுதினால் திரைக்கதை சிறப்பாக அமையும் என நினைக்கிறேன் .


4 கருத்துகள்:

  1. நீங்கள் இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு திரைக்கதை எழுதச் சொல்லுவது நமது திரைக்கதை இந்த படங்களைப் போல இருக்ககூடாது என்பதற்கு தானே?

    எனக்கு ஹிப்னோடிசம் சம்பதமான படங்களை / படங்களின் பெயர்களை சொல்லவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிப்னோடிசம் சம்பந்த பட்ட படங்களை நான் அதிகம் பார்த்தது இல்லை மேலும் ஹிப்னோடிசம் வைத்து தமிழில் படங்கள் அவளவாக வரவில்லை ஹிப்னோடிசம் வைத்து ஏதானும் படம் பார்த்தேன் என்றால் கண்டிப்பாக சொல்கிறேன்

      நீக்கு