children of men -2006 (hollywood) (குழந்தைகளே இல்லாத எதிர்காலம் )
நாம் எல்லாரும் எதிர்காலத்தில் நீர் இருக்காது உணவு இருக்காது என்றுத்தான் நினைக்கிறோம் இல்லை உலகம் அழிந்து விடும் என எதிர்ப்பார்க்கிறோம் .ஆனால் உலகம் அழியாமல் நம் தலைமுறையுடன் உலகம் நின்று விட்டால் அதாவது ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் எல்லாருமே மலடு ஆகி விட்டால் இல்லை இந்த அரசாங்கம் மலடு ஆக்கி விட்டால் யாருக்குமே குழந்தையே பிறக்கமால் போய் விட்டால் அதுவும் கிட்டத்தட்ட அழிவை போன்றது தான் .இதை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் 2006ல் Alfonso cuaron இயக்கத்தில் வெளியான Children of Men திரைப்படம் .
படம் 2027ல் எதிர்காலத்தில் நடக்கும் கதை .2027ல் அப்போது உலகிலேயே மிக குறைந்த வயதான 18 வயது சிறுவன் இறந்து விடுகிறான் அவன்தான் அப்போதைக்கு மிக குறைந்த வயதானவன் .அப்போது சிறுவர்கள் இல்லை குழந்தைகள் இல்லை .உலகம் முழுதும் அச்சிறுவனுக்காக அழுது கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் எப்போதும் புரட்சி நடந்து கொண்டுருக்கிறது .மறுப்பக்கம் அகதிகள் புலம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளமால் நாயகன் தியோ வாழ்ந்து கொண்டுருக்கிறான் .அவன் சொந்த வாழ்விலும் மகனை இழந்து இருக்கிறான் .மனைவி புரட்சி படையில் சேர்ந்து விட்டாள் .இவ்வாறு இருக்கும் போது தியோ ஒரு நாள் கடத்தப்படுகிறான் .அது ஒரு புரட்சி படை அதில் அவனுடைய முன்னால் மனைவி தான் தலைவியாக இருக்கிறாள் .அவள் தியோவிடம் ஒரு இளம் பெண்ணை ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல மறைமுகமாக அரசின் அனுமதி தாள்களை கொண்டு வருமாறு சொல்கிறாள் .முதலில் மறுக்கும் அவன் பின் ஏற்று கொண்டு செய்கிறான் .அதை கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது தியோ அவனுடைய மனைவி மற்றும் அந்த இளம் பெண் சில நபர்களால் தாக்கப்படுகிறார்கள் .அதில் தியோவின் மனைவி இறந்து விடுகிறாள் .இதனால் தியோ அந்த இளம் பெண்ணுக்கு உதவ மறுக்கிறான் .ஆனால் புரட்சி படையின் கட்டாயத்தால் அன்று அவர்களுடுன் தங்குகிறான் .
அன்று இரவு அந்த இளம் பெண் தியோவை தனியாக அழைத்து அவள் கர்ப்பமாக இருப்பதை காட்டுகிறாள் .தியோ அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் .ஏன் என்றால் பல வருடங்களுக்கு பின் ஒரு பெண் கர்ப்பம் ஆகியிருக்கிறாள் . அவள் தியோவிடம் Human Project என்ற அமைப்பில் தியோவின் மனைவி இருந்ததாகவும் அவளால் மட்டும் தான் இவளையும் இவள் குழந்தையையும் காப்பாற்ற முடியும் அவள் இல்லாவிட்டால் தியோவால் முடியும் என்று சொல்லி இருக்கிறாள் .எனவே அந்த இளம் பெண் தியோ விடம் உதவி கேட்கிறாள் . தியோ உதவ முன் வருகிறான் .
ஆனால் புரட்சி படை அதை ஏற்றுக்கொள்ளவில்லை .அவர்களுக்கு அந்த குழந்தை வேண்டும் என்றும் அதுத்தான் வருங்கால புரட்சிக்கு விதையாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்கிறார்கள் .
இன்னொரு பக்கம் அரசாங்கமும் மக்களும் பல வருடங்களுக்கு பின் ஒரு குழந்தை உலகில் பிறக்க போகிறது என்றால் என்ன செய்வார்கள் என்று தெரியாது .
எனவே லியோ அந்த புரட்சி படை மற்றும் அரசாங்கம் இவற்றை மீறி அந்த பெண்ணை பாதுகாப்பாக கொண்டு சென்றனா அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததா என்பதே கதை .
இது வரை எதிர்காலத்தை வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்தாலும் அவை எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் விஷுவல் எபக்ட்ஸ் க்கும் மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள் .கதையை பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள் .உண்மையில் எதிர் காலம் எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வை கொடுத்திர்க்க மாட்டார்கள் ஆனால் இப்படம் அப்படி இல்லை எதிர்காலத்தை பற்றி ஒரு பய உணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது .மேலும் எதிர் காலத்தில் உலக அரசியல் பற்றிய ஒரு பார்வையையும் அதனால் மக்கள் படும் சிரமங்களையும் தெளிவாக கூறுகிறது .
இப்படத்தை இயக்கி இருப்பவர் கிராவிட்டி புகழ் அல்போன்சா குரான் .இவர் எடிட்டர் ஆக திரை உலகிற்கு வந்தவர் என்பதால் இவர் படங்களில் எல்லாம் எடிட்டிங் சிறப்பாக இருக்கும் .
இப்படத்தின் ஒளிப்பதிவை பற்றி சொல்லும் போது பல ஷாட்கள் single shot ஆக அருமையாக எடுக்கப்பட்டுள்ளது .மேலும் ஒளிப்பதிவிற்கு என்று எந்த இணையத்தில் refernce shot பார்த்தாலும் அதில் முக்கியமாக children of men படத்தின் சில ஷாட் இருக்கும் எனவே ஒளிப்பதிவு துறையை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் .
என்னை பொறுத்த வரை அல்போன்சா குரானனின் ஆஸ்கார் விருது பெற்ற கிராவிட்டியை விட இது மிகவும் சிறப்பான திரைப்படம் .எனவே திரைப்பட விரும்பிகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது .