வியாழன், 23 ஜூலை, 2015

bajarangi bhaijan

bajarangi bhaijan-2015(Hindi)




முதலில் இந்த படத்தை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன் .காரணம் "சல்மான் கான் "
காரை குடித்து விட்டு ஒட்டி சாலையில் படுத்து இருந்தவர்கள் மீது மோதி அதனால் ஒருவரை கொன்றவர் . ஆனால் சட்டம் எல்லாருக்கும் சமம் என்பதை சல்மான் கான்   விசயத்தில் கொண்டு வரவில்லை .
அதே போல் திரையுலக பிரமுகர்கள் எல்லாம் ஏதோ சல்மான் நிரபராதி போல் அவரை ஆதரித்து பேசினர் .அதில் ஒருவர் தெருவில் படுத்து இருப்பவர்கள் நாய் என்றார் .என்ன ஒரு கொடுமை பாருங்கள் ?
சரி திரையுலகம் தான் ஆதரித்தது என்றால் ரசிகர்கள் அதற்கு மேல் சல்மான் கான்க்கு குரல் கொடுத்தனர் .
இந்த இடத்தில ஒரு விஷயத்தை ஆராய விரும்பிகிறேன் .இதே செயலை இப்போது ஷாருக் கானோ இல்லை ஆமிர் கானோ இல்லை வேறு ஒரு நடிகர் செய்து இருந்தால் அந்த நடிகர்களுக்கு ஆதரவுகுரல்கள்  வந்திருக்காது .
அதை புரியும்படி ஒரு 3 நடிகர்களை எடுத்து கொண்டு சொல்கிறேன் .
ஹிந்தியில் சல்மான் கான் ,தமிழில் அஜீத் ,தெலுங்கில் பவன் கல்யான்
இந்த 3 நடிகர்களும் அவர்களுடய ஆரம்ப காலக்கட்டதில் பல வெற்றிகளை கொடுத்து தங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டதை உருவாக்கி கொண்டவர்கள் .
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் பல தோல்வி படங்கள் கொடுத்தனர் .ஆனால் அவர்களின் ரசிகர்கள் தங்களுடய நடிகனின் வெற்றிக்காக காத்திருந்தனர் .ஒரு வெற்றி கிடைத்தால் போதும் அதன் பின் வரும் படங்கள் எப்படி இருந்தாலும் ஓட வைத்து விடலாம் என காத்து கொண்டு இருந்தனர் .
இந்த நிலையில் தான் அஜித்துக்கு மங்கத்தாவும் ,தெலுங்கில் பவன் கல்யாணுக்கு கப்பர் சிங்கும் வந்து அவர்களை மிகப்பெரிய நிலைக்கு கொண்டு சென்றது .
இதே போலத்தான் சல்மான் கானுக்கும் 2000ம் வருடத்திற்கு பிறகு சுமார் 8 வருடங்கள் அவர் நடித்த அனைத்து படங்களும் படு தோல்வி அடைந்தன .
இந்த நிலையில்த்தான் 2008ல் அவர் நடித்த WANTED (போக்கிரி படத்தின் ரீமேக் ) வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பின் சல்மான் காணும் சரி அவர்களின் ரசிகர்களும் சரி எந்த நிலையிலும் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ளவே நினைத்தனர் .அதன் பின் சல்மானின் எந்த படங்கள் வந்தாலும் அதுதான் அந்த வருடத்தின் இந்தியாவிலே அதிக வசூல் செய்த படமாக இருக்கும் . கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நிலைக்கு வந்து விட்டார் .ஆனால் அவரின் சக நடிகரின் ஷாருக் கான் படங்கள் வசூல் செய்தாலும் அது சல்மானின் படத்திற்கு அடுத்த படியாகத்தான் இருந்தது .அது ஷாருக் கானை பாதிதத்தோ இல்லையோ அவரின் ரசிகர்களை மிகவும் பாதித்தது . இருவரின் ரசிகர்களும் எப்படி இங்கு விஜயின் ரசிகர்களும் அஜித்தின் ரசிகர்களும் அடித்து கொள்வதை போலத்தான்  அங்கு அடித்து கொள்வார்கள் .
இந்த நிலையில் தான் சல்மான் காரை ஒட்டி இந்த செயலை செய்தது .அவர் செய்தது தப்பு என்று அவருடய ரசிகர்களுக்கும் தெரியும் ஆனால் அவரை விட்டு கொடுக்கவில்லை .
ஒரு உதாரணத்திற்கு இது போன்று ஒரு செயலை அஜித் செய்து இருந்தால் அவரின் ரசிகர்கள் என்ன எதிர்வினை செய்வார்கள் .எடுத்த உடனே விஜயின் சதி இது என்று ஒரு பெரிய சண்டையை போட்டு இருப்பார்கள் .
அதே தான் இப்போது சல்மான் கான் விசயத்திலும் ஹிந்தியில் நடக்கிறது .
என்ன இருந்தாலும் என்னை பொறுத்த வரைக்கும் சட்டம் என்பது எல்லாருக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் .மேலும் நடிகர்களை தலைவனாக தூக்கி வைத்து கொண்டாடுவதும் மக்கள் கைவிடவேண்டும் .அது எந்த நடிகனாக இருந்தாலும் சரி ,ஏன் என்றால் நடிப்பு என்பது ஒரு தொழில் அதை அவன் செய்கிறான் .அவனை ஏன் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் . அவனை திரையில் ரசிப்பதோடு சரி அதோடு மறந்து விட வேண்டும் .
சரி பஜரங்கி பாய்ஜான்க்கு வருவோம்
மேலே குறிப்பிட்ட விசயத்தை தாண்டி என்னை படம் பார்க்க இழுத்த விசயம் இதன் கதையாசிரியர்  K.V.விஜயேந்திர பிரசாத் .அவர் வேறு யாரும் அல்ல .இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் திரைப்படமான பாகுபலியின் கதையாசிரியர் மேலும் இவர்த்தான் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை ஆவார் .பெரும்பாலான ராஜமௌலியின் திரைப்படங்களுக்கு இவர்த்தான் கதை மற்றும் திரைகதையாசிரியர் .


இவருடைய திரைக்கதை எழுதும் முறை அனைத்து ரசிகர்களையும் எளிதில் கவரகூடியது .எனவேதான் இவரின் திறமையை கண்ட ஹிந்தி திரையுலகம் இவரை இழுத்துக் கொண்டது .
இந்தியாவின் மிகப்பெரிய படமான பாகுபலியின் கதையாசிரியர் ஒரு ஹிந்தி படத்திற்கு கதை எழுதுகிறார் அதுவும் தற்போது முதல் இடத்தில இருக்கும் சல்மான் கானுக்கு கதை கதை திரைக்கதை அமைத்த படம் என்றால் யாருக்குத்தான் ஆர்வம் தோன்றாது .
அதனால்த்தான் சல்மான் கானை மறந்து விட்டு  இந்த படத்தை பார்க்க சென்றேன் .மேலும் நடிகனின் சொந்த வாழ்கையை ஏன் படத்துடன் தொடர்படுத்த வேண்டும் என்று என்னை தேற்றி கொண்டு படம் பார்த்தேன் .
படத்தை பற்றி பேசுவதற்கு முன் இரண்டு விசயங்களை பற்றி ஆராய்வோம் .
ஒன்று இந்தியா பாகிஸ்தானை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் எப்படி ஹாலிவுட்காரர்களுக்கு ஒரு எதிரி ரஷ்யாவோ அதே போலத்தான் இந்தியாவுக்கு பாகிஸ்தான் .அதனால் இந்தியாவில் எல்லா மொழிகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாக்கி படம் எடுத்து தங்கள் நாட்டுப்பற்றை காட்டி விடுவார்கள் . (ஏதோ பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகளே இருப்பது போல் அங்கும் சாதாரண மக்கள் உள்ளனர் என்பது இவர்களுக்கு தெரியவில்லை போல )
ஹிந்தி சினிமாவும் 90களுக்கு முன் அப்படித்தான் இருந்தது ஆனால் கான் நடிகர்களின் (ஷாருக் கான் ,ஆமிர்கான் ,சல்மான் கான் ,சைப் அலி கான் ) வருகைக்கு பின் ஓரளவு அது மாறியது .அதன் பின் இவர்கள் படங்களில் பாகிஸ்தானை நல்ல விதமாக காட்டினர் .அதாவது மறைமுகமாக இரண்டு நடிகர்களின் நட்புறவை இவர்கள் விரும்புவது போல் அதனாலே இவர்கள் இரண்டு நாட்டையும் இணைப்பது போல் ஒரு சில படங்கள் எடுத்தனர் .அதில் முதலில் குறிப்பிட வேண்டியது ஷாருக் கானின் வீர் சாரா திரைப்படம் இதில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வரும் பெண் மீது காதல் கொள்ளும் நாயகனாக ஷாருக்கான் நடித்திருப்பார் .அதன் பின் சல்மான் கானின் ஏக் தா டைகர் இதில் இந்திய உளவாளியான சல்மான் பாகிஸ்தான் உளவாளியான காத்திரீனா மீது காதல் கொள்பவர் ஆக நடித்திருப்பார் .
அதன் பின் ஆமிர்கான் இவர் மற்றவர்கள் போல் இல்லை எதையும் கமல் போல் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்புபவர் எனவே இவர் படமானஃ பானாவில் இவர் இந்தியாவையும் திட்டுவார் பாகிஸ்தானையும் திட்டி காஸ்மீர் தீவிரவாதியாக நடித்திருப்பார் .இவர்கள் இப்படி நடிப்பதில் சுய லாபமும் அரசியலும் இருக்கத்தான் செய்கிறது .எப்படி இங்கு கமலும் சசிகுமாரும் ஒரு சமூகம் சார்ந்த படங்களை அதிகம் எடுப்பது போல .சரி இதை இதற்கு மேல் பேசினால் அது வேறு எதிலாவது தான் முடியும்
சரி அடுத்த விசயத்திற்கு வருவோம்

 குழந்தைகளை நாயகனுடன் இணைத்து எழுதப்படும் கதைகள் ,
அதாவது அந்த கதையில் மைய பாத்திரமாக ஒரு குழந்தை இருக்கும் .அதற்கும் நாயகனுக்கும் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படும் .அதன் பின் அந்த குழந்தைக்கு வரும் பிரச்சினைகளைத்தான் கதாநாயகன் எதிர்கொள்வான் .அந்த குழந்தையை வைத்து தான் படமே நகரும் .இப்படியான படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜேசன் சத்தமின் SAFE படத்தை சொல்லலாம் .அதன் பின் கொரியத் திரைப்படமான THE MAN FROM NOWHERE படமும் இந்த கதையில் சிறந்த ஒன்று .
இந்த வகையில் ஒரு முக்கியாமான  தமிழ் படத்தை நினைவு கூர்கிறேன் அது 1987ல் சத்யராஜ் ,சுஜிதா நடித்து பாசில் இயக்கி வெளிவந்த பூவிழி வாசலிலே திரைப்படம் (மலையாள படமான பூவின் புதிய புதேந்நெல் படத்தின் ரீமேக் )
என்னை பொறுத்த வரையில் தமிழ் படங்களில் மிக சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது .


ஒரு வாய் பேசமுடியாத காத்து கேட்காத சிறுவன் தன் தாயை கொன்றவர்களை பார்த்து விடுகிறான் .அதனால் அவனை கொல்ல முற்படும் போது தப்பி சென்று விடுகிறான் பின் நாயகனிடிம் தஞ்சம் புகுந்து விடுகிறான் .அவர்களுக்குள் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுகிறது .பின் இருவரும் எப்படி தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை ஒரு சிறந்த emotional thriller படமாக இது இருந்தது .
சரி இதற்கும் பஜரங்கி பாய்ஜானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் கிட்டத்தட்ட இதை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் இது

கதை
பாகிஸ்தானிலிருக்கும் 6 வயது சிறுமியான சாஹிதா வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவள் .அவள் தன் தாயுடன் டெல்லியில் இருக்கும் மசூதிக்கு வருகிறாள் .ஆனால் திரும்பி பாகிஸ்தானுக்கு ரயிலில் போகும் போது துரதிஷ்டவசமாக தன் தாயை பிரிந்து விடுகிறாள் .சாஹிதாவின் தாயால் திரும்பி இந்தியா செல்ல முடியவில்லை .
அதே நேரத்தில் சாஹிதா இந்தியாவில் பவன் குமார் என்பவனிடம் அடைக்கலம் புகுகிறாள் .பவன் குமார் ஒரு தீவிர அனுமான் பக்தன் .அவன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கி வேலை தேடி வருபவன் .
இந்த நிலையில் சாஹிதாவை பற்றி எதுவும் தெரியாமல் தன்னுடன் அழைத்து செல்கிறான் .ஆரம்பத்தில் அந்த சிறுமியை பற்றி எதுவும் தெரியாமல் வளர்த்து வருகிறான் .ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் அவள் முஸ்லிம் என்றும் பாகிஸ்தான் சிறுமி என்று தெரிந்த உடன் பவனின் மாமா அவனை அந்த சிறுமியை வீட்டை விட்டு அனுப்புமாறு சொல்கிறார் .
அதன் பின் பவனும் அவளை பாகிஸ்தான் தூதரகதிற்கு அழைத்து செல்கிறான் .ஆனால் அங்கு அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது மேலும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் தூதரகம் ஒரு மாதத்திற்கு மூடப்படுகிறது .பின் ஒரு நபர் 1 லட்சம் தந்தால் அச்சிறுமியை பாகிஸ்தான் அழைத்து செல்வதாக கூறுகிறான் .இவனும் அதை நம்பி பணமும் கொடுத்து அனுப்பி விடுகிறான் .ஆனால் பின்பு அவன் விபசார விடுதியில் அச்சிறுமியை விற்க செல்வதை அறிந்து அங்கு இருந்து அவளை மீட்டு பின்பு அனுமானிடம் அவளை எந்த வித பாஸ்போர்ட் ,விசா இல்லாமல் தானே அவளின் அம்மாவிடம் ஒப்படைப்பதாக சத்தியம் செய்கிறான் .
ஒரு வழியாக இந்திய எல்லையை மறைமுகமாக கடந்து செல்கிறான் ஆனால் அங்கு உள்ள உள்ளூர் போலீசிடம் மாட்டி கொள்கிறான் .அவர்கள் இவனை இந்தியன் என்று கண்டுபுடிக்கிறார்கள் பின் இவனை இந்திய உளவாளி என்று கூறி சிறையில் அடைகிறார்கள் .ஆனால் அங்கு இருந்து சிறுமியுடன் தப்பிக்கும் பவன் ஒரு பாகிஸ்தான் நிருபரின் உதவியுடன் எப்படி சாஹிதாவை அவளின் பெற்றோரோடு சேர்கிறான் என்பதே கதை .




முதலில் இந்த படம் pk ,சமிதாப் போன்று மிக சிறந்த படமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன் .ஆனால் அந்த படங்கள் கொடுக்காத ஒரு சிறந்த உணர்வை இப்படம் கொடுக்கிறது என்றே சொல்லலாம் .
இந்த படத்தை பொறுத்த வரையில் படம் பார்க்கும் அனைவர்க்கும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று நன்கு தெரியும் ஆனால் அதையும் தாண்டி இப்படத்தை ரசிக்கத்தான் செய்வார்கள் .அதற்கு காரணம் திரைக்கதை மூலம் நம்மை அச்சிறுமியுடனும் நாயகனுடனும் நம்மை உளவியல் ரீதியாக இணைத்து விடுகிறார்கள் .அவர்களோடு நம்மை பயணிக்க வைக்கிறனர் .
மேலும் இப்படம் மறைமுகமாக பல அரசியலையும் பேசுகிறது .உதாரணத்திற்கு பாகிஸ்தானியர்கள் எளிதாக இங்கு வர முடியாத நிலை .அதே போல் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்ல இயலா நிலை ,அதற்கு என்று படம் முழுதும் காட்சிக்கு காட்சி pk படத்தை போன்றோ சமிதாப் போன்றோ ஏதோ ஒரு கருத்தையோ அரசியலையோ பேசி கொண்டிருக்கவில்லை .
ஒரு எளிமையான Road Movie ஆக செல்கிறது .
அதற்கு என்று இப்படத்தில் குறைகள் இல்லமாலும் இல்லை .குறிப்பாக நம் எப்போதும் ஹிந்தி (இந்திய )சினிமாவில் பார்க்கும் செண்டிமெண்ட் காட்சிகள் .அவை பல இடங்களில் நெருடலை கொடுக்கிறது
முதலில் இப்படத்தை எடுத்தற்கு இயக்குனர் கபீர் கானை பாராட்ட வேண்டும் .ஏனன்றால் இது கத்தி மீது நடப்பதை போன்ற படம் .அதை திறம்பட கையாண்டு இருக்கிறார் .உதாரணத்திற்கு இப்படம் ஆரம்பிப்பதே பாகிஸ்தானில் அங்குள்ள மக்கள் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான் ஜெயித்து அம்மக்கள் கொண்டாடுவதை போன்று வைத்து இருப்பார் .இது போன்ற ஒரு காட்சியை வைக்கும் போது படத்தின் ஆரம்பத்திலே ரசிகர்கள் விலகி செல்ல வாய்ப்புண்டு .ஆனால் அவ்வாறு போகாமல் இப்படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைத்துள்ளார் .அதற்கு திரைகதையாசிரியர் K.V.விஜயேந்திர பிரசாத்அவர்களையும் பாரட்ட வேண்டும் .
அடுத்ததாக சல்மான் கான்  எப்படி இங்கு விஜய் திருமலை படத்திற்கு பின் அதை போன்று கதையம்சம் கொண்ட படத்தில் மட்டும் நடித்தாரோ அதே போல் சல்மான் wanted படத்திற்கு பின் அதே போன்று சாகச கதாநாயக அம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்தார் .அவற்றில் தபாங் தவிர மற்றும் அனைத்தும் ரீமேக் படங்கள் ,இப்படியே ரீமேக் படங்கள் நடித்தால் இந்தியாவில் அதிக ரீமேக் படங்கள் நடித்த ரவிச்சந்திரன் (கன்னடம் ),ரஜினி காந்த் (தமிழ்),வெங்கடேஷ் (தெலுங்கு ),விஜய் (தமிழ்)  இவர்களை எல்லாம் மிஞ்சி விடுவார் என்று விமர்சகர்கள் சொல்லப்பட்ட வேளையில் இது போன்று ஒரு படத்தில் நடித்து தன்னை விமர்சகர்களிடம் இருந்து காப்பற்றி கொண்டுள்ளார் .
அதே போல் எப்போதும் இருக்கும் சல்மான் படம் போல் இது இல்லை .இதில் இவர் மிக வெகுளியாக இருக்கிறார் .அதே போன்று சண்டை காட்சிகள் கூட ஒன்று தான் உள்ளது அதுவும் ஒரு நபரை மட்டும் சல்மான் அடிப்பது போன்று .
படத்தில் பல காட்சிகளில் பலரிடம் சல்மான் அடி வாங்குவது போன்று காட்சிகள் வருகின்றன. அதே போல் ஒரு நடிகராகவும் சல்மான் இந்த படத்தில் தான் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் .வெகுளியாக இருப்பதாகட்டும் குரங்கை பார்க்கும் இடங்களில் எல்லாம் வணங்கவதும் என பல காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்து உள்ளார் .



எல்லாரையும் விட இப்படத்தில் அதிக கவனம் ஈர்ப்பது சாஹிதாவாக நடித்துள்ள சிறுமி தன் முக பாவனைகள்ளே அனைவரையும் ரசிக்க வைக்கிறாள் ,சல்மானுக்கும் இச்சிறுமிக்கும் உள்ள காட்சிகளில் இருவருமே போட்டி போட்டு கொண்டு நடித்து நம்மை ரசிக்க வைக்கின்றனர் .

முடிவாக இப்படத்திற்கு subtitles எல்லாம் தேவை இல்லை .படிக்காதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் படிதான் இப்படம் உள்ளது .
எனவே இப்படத்தை தாராளமாக அனைவரும் பார்க்கலாம்







திங்கள், 13 ஜூலை, 2015

சினிமா தாகமும் செல்பி மோகமும்

ஒரு வடக்கன் செல்பி -2015(மலையாளம் )

1999 முடிந்து 2000 என புது நூற்றண்டெ துவங்கிய போது அப்போதய சினிமாவின் எதிர்காலம் மங்க துவங்கியது .ஏனனில் அப்போதுத்தான் cd களும் dvr களும் புழக்கத்தில் வந்த வருடம் .மக்கள் அனைவரும் cd யை வாடகைக்கு எடுத்து பார்ப்பதை பழக்கமாக கொண்டு இருந்தனர் .
தியேட்டர்க்கு மக்கள் வரத்து குறைய துவங்கியது .பல தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டு கல்யாண மண்டபங்களாக மாற்ற பட்டன .ஆசியாவின் இரணடாவது பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டர் உட்பட பல பழமை வாய்ந்த தியேட்டர் கள் மூடப்பட்டன ,

திரை உலகில் இருந்தவர்களுக்கும் அது ஒரு கொடுமையான காலமாகத்தான் இருந்தது . எல்லா பெரிய நடிகர்களின் படங்களும் தோல்வி அடைந்தன ,
தன் திரை உலகில் பல வருடங்கள் தோல்வியே கொடுக்காத ரஜினியே பாபா மூலம் மிக பெரிய தோல்வி கண்டார் .உச்ச நட்சத்திரமே தோல்வி கண்ட பின் மற்றவர்களின் படங்கள் எல்லாம் என்ன சொல்வது விஜய் ,அஜீத் என அணைத்து நடிகர்களின் படங்களும் வரிசையாக தோல்வி கண்டன .ஏதோ விக்ரம் மட்டும் அப்போது ஓரளவு தாக்கு புடித்தார் .
எல்லோரின் படங்களும் திரைக்கு வந்த அடுத்த நாள் லோக்கல் கேபிள் சேனல்களில் வந்தது .என்னதான் படம் நல்ல இல்லா விட்டாலும் ஓரளவு வரும் வசூலையும் இந்த cd க்கள் பறித்து கொண்டன .பலர் சினிமாவை விட்டு சென்றனர் .பல தயாரிப்பாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் .பல முன்னணி இயுக்குனர்கள் படம் இயக்கமால் இருந்தனர் .

இதே கால கட்டத்தில் இன்னொரு துறை அபார வளர்ச்சி அடைந்திருந்தது .அது  பொறியியல் துறை .அதை படித்தவர்கள் எல்லாம் அமெரிக்கா ,ஆஸ்திரலியா என்று சென்று கோடி கோடியாக சம்பாதித்தனர் ,
அந்த காலத்தில் அணைத்து பெற்றோர்களும் தன் பிள்ளைகள் இன்ஜினியர் ஆகி சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைத்தனர் .ஏன் மாணவர்களும் அதைத்தான் விருப்பமாக கொண்டிருந்தனர் .அந்த கால கட்டத்தில் எந்த வகுப்பு மாணவனிடிமும் "உன் லட்சியம் என்ன என்று கேட்டால் அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றுத்தான் சொல்வார்கள் .அந்த அளவு பொறியயல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது ,(ஏன் இன்னும் ஒரு இரண்டு படங்கள் அந்த காலத்தில் தோல்வி அடைந்திருந்தால் இந்த தலயும் தளபதியும் திரைத்துறையை விட்டு பொறியயல் துறைக்கு சென்று இருப்பார்கள் )
இது 2005 வரை இப்படிதான் இருந்தது .ஆனால் அதன் பின் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதரா வீழ்ச்சி உலகின் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது .
மெல்ல பொறியயல் துறை ஆட்டம் கண்டது .அதன் பின் பலர் வேலை இழந்தனர் .நிறைய பேருக்கு பொறியயல் துறையில் வேலை கிடைக்க வில்லை.பலர் பொறியயல் படிப்பு படித்து விட்டு சாதாரண வேலைக்கு சென்றனர் .
இந்த சமயத்தில் சினிமா துறை ஓரளவு மீட்சி கொண்டுருந்தது ,தோல்வி இல்லை என்றாலும் ஓரளவு படங்கள் ஓடின .
பின் 2008 2010 களில் பொறியயல் மாணவர்கள் சிலர் திரை துறையில் குறும்படங்கள் மூலம் உள்ளே நுழைந்து யாரும் எதிர்பாரதவிதமாக வெற்றி கொண்டனர் .அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு பொறியயல் கல்லூரியிலும் ஏதோ ஒன்று இரண்டு பேர்தான் சினிமா ஆசை கொண்டவர்களாக இருப்பனர் .ஆனால் எப்போது வரிசையாக சில பொறியயல் மாணவர்கள் திரை உலகில் வெற்றி கொள்ளவும் இன்று 100ல் 50 சதவித மாணவர்கள் பொறியயல் படிப்பில் சேருபவர்கள் பாதியிலே தன் கவனத்தை திரை உலகின் மீது செலுத்தி விடுகின்றனர் .அதை ஒரு சில பேர் வெறியாக கொண்டு உண்மையில் கடுமையாக உழைக்கின்றனர் .ஆனால் சிலரோ படிப்பு வர விட்டால் திரை உலகில் சென்று ஜெயித்து விடலாம் என பேருக்கு சினிமா மீது வெறியாக இருப்பாதாக சொல்கின்றனர் .
என்னதான்  இன்று பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு இல்லா விட்டாலும் ஆனால் இன்றும் பெற்றோர்கள் அதை பெரிதும் நம்பி உள்ளனர் .இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையே ஒரு முரண்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்த நிலையில் இது போன்ற கதை பின்புலம் கொண்டு வெளிவந்த திரைப்படம்தான் மலையாளத்தில் வெளிவந்த ஒரு வடக்கன் செல்பி திரைப்படம் .


வடக்கன் செல்பி படத்தை பொறுத்த வரை கதை இரண்டு விதமாக பயணிக்கிறது .
முதல் பாதியை பொறுத்த வரையில் உமேஷ் (நிவின் பாலே ) கதையின் நாயகன் .பொறியயல் இறுதி ஆண்டு படிப்பவன் .ஆனால் அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லை .இன்னும் சொல்ல போனால் அவனுக்கு இந்த சைன் டிட்டா ,காஸ் டிட்டா பற்றி கூட தெரியவில்லை .
எப்போதும் சினிமா மீதே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் .இந்த நிலையில் படிப்பை முடித்து ஊருக்கு வருகிறான் .அங்கு எல்லாரும் உமெஷை அவனுடய அரியர் பற்றி கேட்டு கிண்டல் செய்கிறர்கள் .அவனுடைய அப்பா இந்த முறை அரியரில் பாஸ் பண்ணாவிட்டால் அவளவுதான் உன் வாழ்க்கை என்று மிரட்டுகிறார் .
இந்த நிலையில் ஊர் வாயை மூடவும் அப்பாவிடம் இருந்து தப்பிக்கவும் சினிமாதுறைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறான் .ஆனால் மலையாள திரை உலகில் உடனே இயக்குனர் ஆக முடியாது என்றும் தமிழ் திரை உலகில் ஒரு குறும்படம் எடுத்திருந்தால் உடனே உதவி இயக்குனர் ஆகவும் அடுத்த ஒரு வருடத்தில் இயக்குனர் ஆகி விடலாம் என முடிவு செய்கிறான் .
மேலும் அவனுக்கு தன் மாநிலத்தில் இருந்து சென்ற கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறான் .

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வரும் பெண் மீது ஒரு தலை காதல் கொள்கிறான் .
அதே நேரத்தில் குறும்படமும் எடுக்கிறான் .


ஆனால் அது தோல்வியில் முடிகிறது .இந்த நிலையில் அவனுடைய அரியர் ரிசல்ட்ம்  வருகிறது .


வீட்டில் இருந்தால் அப்பாவிடம் அடி வாங்க முடியாது என்று நினைத்து அன்று இரவு சினிமாவில் சேர சென்னை கிளம்புகிறான் .போகும் போது ரயிலில் அவன் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணும் அங்கு இருக்கிறாள் .இந்த நிலையில் அவளுக்கே தெரியாமல் அவளோடு இருப்பது போல் செல் போனில் செல்பி எடுக்கிறான் .அதை தன் நண்பர்களுக்கும் அனுப்புகிறான் .இந்த நிலையில் சென்னை போய் ஓரிரு நாட்களிலே ஊருக்கு திரும்பி விடுகிறான் .ஆனால் ஊரில் உமேஷ் பக்கத்து வீட்டு பெண்ணோடு ஓடி விட்டதாக கருதி எல்லாரும் அவனை அடிக்கிறார்கள் .அதற்கு காரணம் அவன் அந்த பெண்ணோடு இருக்கும் செல்பி போட்டோ ஊர் முழுவதும் பரவியதுதான் .ஆனால் இவனக்கோ அவளை ரயிலில் பார்த்ததோடு சரி அதன் பின் எங்கும் பார்க்க வில்லை .அவன் என்ன சொன்னாலும் ஊர்க்காரர்களும் அவன் பெற்றோரும் நம்ப மறுக்கின்றனர் .அதனால் தானே சென்னை சென்று அவளை  கொண்டு வருவதாக சொல்லி மீண்டும் சென்னை வருகிறான் .அந்த பெண்ணை கண்டுப்பிடித்தனா அவளை மீண்டும் ஊர் கொண்டு சென்றனா என்பதே மீதி கதை .

படம் முன்பே சொன்னது போல் முதல் பாதியில் செல்வதில் இருந்து இரண்டாம் பாதி வேறு விதமாக பயணிக்கிறது .முதல் பாதி முழுதும் நகைச்சுவை படமாகவும் இரண்டாம் பாதி முழுதும் road movie ஆகவும் செல்கிறது .

படத்தை ஆராயும் போது மொத்தத்தில் இது ஒரு satire comedy வகை படம் என்று தான் சொல்ல வேண்டும் .அதாவது satire comedy என்றால் சமகால நிகழ்வுகளை  எள்ளி நகையாடுதல் ,அதை இப்படத்தில் சரியாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார் .

சினிமா மீது இளைஞர்களுக்கு உள்ள ஆசை , செல்பி மோகம் ,நேரிலே பார்க்கமாலே இணையம் மூலம் காதலிப்பது , என்று எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்.



அதே போன்றே நிவின் பாலே ககதாபாத்திரத்தை பார்க்கும் போது  சினிமாவில் சேர முயற்சிக்கும் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பிரதிபலிக்கிறது .
படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அதற்கு facebook ல் விமர்சனம் செய்வது ,பரீட்சையில் பெயில் ஆனால் சந்தோசப்படுவது ,அம்மாவிடம் அந்த பீஸ் இந்த பீஸ் என்று சொல்லி பணம் பறிப்பது என கல்லூரி காட்சிகளிலும்
சரி


ஊர் வந்த பின் குறும்படம் எடுக்க சிரமப்படும் காட்சிகள் ஆகட்டும்
நண்பர்கள் கதை என்ன என்று கேட்டால் ஏதாவது ஒரு கொரியன் படத்தை காப்பி அடிக்க போகிறேன் என்பதும
அதை யாரவது கண்டுபுடித்து கேட்டால் என்ன செய்வாய் ? என்று இன்னொரு நண்பன் கேட்கும் போது அதற்கு நான் இது அதன் இன்ஸ்பிரேசன் என்று சொல்லி தப்பித்து விடுவேன் என்று சொல்வது ஆகட்டும் எல்லா காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறனர் .

மேலும் என்னதான் இந்த படம் பார்க்கும் போது  நன்கு சிரித்தாலும் படம் முடிந்த பின் நம்மை சிந்திக்க வைக்கிறார் .இதுதான் satire comedy சரியாக கையாண்டு இருக்கும் விதம் வாழை பழத்தில் ஊசி ஏத்துவது போன்று நம்மை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பது அந்த விதத்தில் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது .

என்னதான் இந்த படம் இரண்டாம் பாதி சிறிது ஏமாற்றினாலும் முதல் இன்னிங்க்ஸ்லே அதிகமாக ரன் குவித்துள்ள அணிக்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் ரன் அவளவாக பாதிப்பை ஏற்படுத்தாது அது தான் வடக்கென் செல்பியின் வெற்றிக்கும் காரணம்

முடிவாக இந்த படத்தை யார் பார்கிறேர்களோ இல்லையோ திரை துறையில் நுழைய முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .

மற்றவர்களுக்கும் இது ஒரு சிறந்த பொழுதுப்போக்கு படமாக அமையும்