ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

SHAHID (2012)(hindi)

SHAHID (2012)(hindi)

இந்த  முறை ராபர்ட் ட்வேனி ஜூனியர் நடித்த the judge (2014) படத்தை பற்றிதான் பதிவாக எழுதாலம் என்று முடிவு செய்து இருந்தேன் ,ஆனால் அதை விட SHAHID படம் ஒரு எதார்த்தமான கோர்ட் ரூம் டிராமாவாக இருப்பதால் இந்த படத்தை பற்றி எழுதுகிறேன் 

Shahid Poster (2013).jpg

சாஹித் படத்தை பார்க்கும் முன் கோர்ட் ரூம் டிராமா  வகை பற்றி பாப்போம் .அதன் பெயரிலே நமக்கு ஓரளவு புரிந்தாலும் மேலும் பார்ப்போம் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் என்பவை நீதிமன்றங்களை கதை களமாகவும் வக்கீல்களையும் நீதிபதிகளையும் முக்கிய கதாபாதிரங்களாக கொண்டு  எடுக்கப்படும் படம் .
இந்த வகை படங்களில் பெரும்பாலும் ஒரு அறை அதாவது நீதிமன்ற அறை அதில் மட்டும் காட்சிகளை வைத்து கொண்டு திரைக்கதையை விறுவிறுப்பாக்கலாம் .சேசிங் காட்சிகளோ  சண்டை காட்சிகளோ அவளவாக தேவைப்படாது .இரண்டு வக்கீல்களுக்கு இடையே நடைபெறும் வாத காட்சிகளே படத்தை விறுவிறுப்பாக்கி விடும் .மேலும் பார்வையாளர்களும் கோர்ட்டில் இருப்பதை போல் உணர்வார்கள் .
கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் ஹாலிவுட்டில்  பல சிறப்பான படங்கள் வந்துள்ளன .அதற்கு தொடக்கப்புள்ளியாக நம்மில் பலர் சிறப்பாக இன்றும் பேசும் சிட்னி லுமேண்ட்டின் 12 angry man படத்தை சொல்லலாம் .அதன் பின் 1962ல் வெளிவந்து பல ஆஸ்கார் விருதுகளை வென்ற To Kill a Mockingbird  படத்தை சொல்லலாம் . இன்றும் இப்படங்கள் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்களில் சிறந்த படங்களாக உள்ளன .அதன் பின் பல சிறந்த படங்கள் இந்த வகையில் உள்ளன   The verdict ,I am sam,Amisted,my cousin vinny, போன்று பல படங்கள் உள்ளன .
சரி இனி தமிழுக்கு வருவோம் ஓரளவு நன்றாக யோசித்து பார்த்தால் நம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது ஒரு கோர்ட் ரூம் டிராமா  வகை  படம்தான் .ஆம் அது 1952ல் வெளிவந்த சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் .ஒரு வகையில் இது முழுவதும் கோர்ட் ரூம் டிராமா  வகையை சார்ந்த படம் இல்லை.இருப்பினும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சில் வரும் கோர்ட் ரூம் காட்சிகளும் சிவாஜி கணேசன் பேசும் கருணாநிதியின் வசனங்களும் தான் இதை கோர்ட் ரூம் டிராமா  வகை படமாக்கியது .மேலும் அது வரை காதல் படங்களிலும் மன்னர் கால படங்களிலும் முழுதும் பாடல்களால் ஆக்கப்பட்ட படங்களில் இருந்தும்  பராசக்தி காப்பற்றி தமிழ் சினிமாவிற்கு வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது ,மேலும் இப்படத்திற்கு பின்தான் பாடல்கள் குறைந்து வசனங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன .
இந்த படத்தில் நீதிமன்றங்களில் வரும் காட்சிகளில் சிவாஜி கணேசன் நடிப்பும் அவருடைய வசன உச்சரிப்பும் யாராலும் இனி எப்போதும் பண்ண முடியாத ஒன்றாகும் .ஏன் பல வட்டார மொழிகள் பேசும் நம் உலக நாயகனால் கூட இந்த அளவு தமிழை ஆக்ரோசமாக உச்சரிக்க முடியுமா எனபது சந்தேகமே .

பராசக்திக்கு பின் அவளவாக கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் சிறிது காலம் வரவில்லை .ஆனால் அதையும் சிவாஜி கணேசன்தான் தீர்த்து வைத்தார் .1973ல் அவர் நடிப்பில் வெளிவந்த கெளரவம் படம்தான் அது வியட்நாம் வீடு சுந்தரம் இப்படத்தை இயக்கி இருந்தார் .ஒரு வகையில் இதுதான் தமிழில் வந்த முதல் முழு நீள கோர்ட் ரூம் டிராமா திரைப்படமாக இருக்க வேண்டும் .
Gauravam.jpg

இதிலும் இரு கதாபாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார் .மேலும் இதில்தான் தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகளை பார்த்தனர் .என்னை பொறுத்த வரையில் ஹாலிவுட்டிற்கு 12 angry man இருக்கிறதோ தமிழுக்கு இந்த படம் .
அதன் பின்னும் தமிழில் கோர்ட் ரூம் டிராமா  வகை படங்கள் வர சிறிது காலம் ஆகியது .
அதன் பின் 1984ல் வெளிவந்த மோகன் ,பூர்ணிமா மற்றும் சுஜாதா  நடிப்பில் வெளிவந்த விதி (நியாம் கவாலி  தெலுங்கு படத்தின் ரீமேக் ) திரைப்படம்தான் அடை பூர்த்தி செய்தது .இதுவும் முழு நீள கோர்ட் ரூம் டிராமா படமாகும் இதிலும் கெளரவம் படத்திற்கு இணையான விவாத காட்சிகள் இருக்கும் .மேலும் இப்படத்தின் வெற்றிக்கு பின் இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .
அதன் பின் ஜெயராம் ,ரேவதி மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த பிரியங்கா படமும் ஒரு சிறப்பான கோர்ட் ரூம் டிராமா படமாகும் .அதே போல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த மௌனம் சம்மதம் திரைப்படம் கோர்ட் ரூம் டிராமாவை வைத்து ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாக்கபட்ட படம் .
ஓரளவு நம் காலத்தில் வந்துள்ள படங்களை எடுத்தால் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படம் . இவர் முதல்வன் படத்தின் வாய்ப்பை இழந்ததற்காக அதே போல இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன் .முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுன் முதல்வன் ஆக இருந்து செய்ததை இதில் விஜய் வக்கீல் ஆக இருந்து செய்வார் .உண்மையில் ஒரு வக்கீலால் இவளவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான் எனவே இந்த படம் முழுதும் நீதிமன்றத்தை வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும் சிறந்த கோர்ட் ரூம் டிராமா படமாக அமையவில்லை .
அதே போல் சிட்டிசன் திரைப்படம் விஜய் எப்படி முதல்வன் படத்தை நினைத்து கொண்டு தமிழன் படத்தை எடுத்தாரோ அதே போல் அஜீத்தும் இந்தியன் திரைப்படத்தையும் பராசக்தி திரைப்படத்தையும் நினைத்து இப்படத்தை எடுத்து இருப்பார் போல .இருப்பினும் தமிழன் திரைப்படம் போல இது மோசம் அல்ல முதல் பாதி விறுவிறுப்பான திரைக்கதையும் இரண்டாம் பாதி உணர்ச்சி பூர்வாமன flashback காட்சிகளும் ஓரளவு இப்படத்தை சிறப்பாக கொண்டு போயிருக்கும் .ஆனால் இதில் கிளைமாக்ஸ் இல் வரும் நீதிமன்ற காட்சிகள்தான்  இதன் குறை .  அஜீத்  பராசக்தி படத்தில்  சிவாஜி உணர்ச்சிபுர்வமாகவும்  ஆக்ரோசமாகவும் நீதிமன்றத்தில் பேசுவது போல இதில் பேச முயன்று இருப்பார் .ஆனால் அவர் தமிழ் உச்சரிப்பும் அவரே கொண்டு வரும் புது சட்டங்களும் என்று இப்படத்தை சொதப்பியது
அடுத்து தெய்வ திருமகள்  I am Sam படத்தின் காப்பி என்பதை தாண்டி இப்படத்தை பார்த்தால் இதிலும் நல்ல கோர்ட் ரூம் விவாத காட்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அதிலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் எதிர்த்தரப்பு வக்கீல் ஆக இருக்கும் நாசர் விக்ரம் மன வளர்ச்சி குன்றியவர் என்றும் அவரால் குழந்தையை முறையாக வளர்க்க முடியாது என்று நீருபித்து விடுவார் .ஆனால் குழந்தை அவரடிம் வளர்வதில் எனக்கு எந்த ஆச்சபனையும் இல்லை என்பார் .இது எனக்கு புரியவில்லை எல்லாம் நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ? இதை பற்றி எனக்கு தெரிந்த ஒரு சிலரிடம் கேட்ட போது எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னால் போதும் விட்டுவிடுவார்கள் என்றார்கள் .(ஒரு வேலை கொலை குற்றவாளி ஒருவனின் குற்றங்களை நிருபித்து விட்டு எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சபனை இல்லை என்று சொன்னாலும் விட்டுவிடுவார்களா ?) ஒரு வேளை எனக்குத்தான் பொது அறிவு  சட்ட அறிவும் பத்தவில்லை போல .
அடுத்து இந்த வருடம் வெளியான விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் இதில் கதைப்படி நாயகனும் நாயகியும் வக்கீல்கள் அப்படி இருக்கும் போது  நீதிமன்ற காட்சிகள் எப்படி வந்து இருக்க வேண்டும் ஆனால் இந்த படத்தில் நீதி மன்ற காட்சிகள் மொத்தமே பத்து நிமிடங்கள் தான் வரும் .சச்சின் படத்தில் விஜய் கல்லூரி மாணவர் என்பார்கள் .ஆனால் அப்படத்தில் கடைசி வரை கல்லூரியையும் வகுப்புகளையும் காட்டவே மாட்டார்கள் அது போலத்தான் இந்தியா பாகிஸ்தான் படமும் ஒழுங்காக நீதி மன்ற காட்சிகளை வைத்து இருக்க மாட்டார்கள் .
என்னை பொறுத்த வரையில் தமிழில் கெளரவம்,விதி படங்களுக்கு பின்பு ஒரு சிறந்த கோர்ட் ரூம் டிராமா படங்கள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுப்பதில் உள்ள சிக்கல் சட்ட அறிவு நன்கு தெரிந்திருக்க வேண்டும் .மேலும் நேற்று வந்த நடிகர்களாகட்டும் இன்று உள்ள நடிகர்களாகட்டும் நாளை வரப்போகிற நடிகர்களாகட்டும் அனைவரும் இரண்டு படங்கள் நடித்த பின் போலீஸ் வேடத்தில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் வக்கீல் வேடத்தை யாரும் விரும்புவதில்லை .
சரி மேலே குறிப்பிட்ட படங்களிலும் வரும் நீதிமன்ற காட்சிகளுக்கும் இயக்குனர் பாலா அவர்களின் படத்தில் நீதிமன்ற காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் .இது பற்றி நண்பன் ஒருவனிடம் கேட்ட போது அவன் சொன்னது பாலா படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நீதிமன்றங்கள் நடக்கும் என்று சொன்னான் வக்கீல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வாதாடுவார்கள் என்றும் சாட்சிகளை விசாரிக்கும் போது மட்டும்தான் தமிழில் பேசுவார்கள் .நீதிபதியும் தீர்ப்பை வழங்கும் போதும் ஆங்கிலத்தில்த்தான் சொல்வார்கள் என்றான் .அப்போதுதான் தெரிந்தது நம் சினிமாவில் பார்ப்பது எல்லாம் ரசிகர்களுக்கு ஆக வைக்கப்பட்டது .எது எப்படி இருந்தாலும் கோர்ட் ரூம் டிராமா வகை படங்களுக்கு நல்ல விவாத காட்சிகள் மட்டும் போதும் .
சரி சாஹித் படத்தை பற்றி
இது உண்மை கதை தழுவி எடுக்கப்பட்ட படம் .ஷாஹித் ஆஸ்மி என்ற வக்கீல் ஒருவரின் வாழ்கையை எடுத்து கொண்டு அவர் எப்படி வக்கீலாக இருந்து பலரை காப்பாற்றினார் என்பதை படமாக ஆக்கியுள்ளனர் .
படத்தின் கதை
ஷாஹித் ஆஸ்மி என்பவர் காஸ்மீரில் தாய் மற்றும் 3 சகோதரர்களுடன் வாழ்பவர் .ஆரம்பத்தில் காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தில் சிறிது காலம் இருக்கிறார் ,ஆனால் அங்கு உள்ள வன்முறை பிடிக்கமால் பாதிலே ஊருக்கு திரும்பி விடுகிறார் .ஆனால் இவரை போலீஸ் பிடித்து செல்கிறது .சிறைக்கு செல்லும் ஷாஹித் அங்கு ஏற்கனவே சிறையில் இருக்கும் வார் சாஹிப் என்பவரின் அறிவுரையின் மூலம் திருந்தி வாழ நினைக்கிறார் .மேலும் அவரின் உதவியால் சட்டம் படிக்கிறார் .
விடுதலை ஆன பின் வக்கீலாகிறார் .ஒருவரிடம் ஜூனியர் வக்கீலாக இருக்கிறார் .ஆனால் பின் தனியாக வந்து அவரே ஒரு சட்ட அலுவலகம் தொடங்கி வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .
வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வழக்கம் இருக்கிறது அதவாது எதவாது குண்டு வெடிப்போ இல்லை தீவிரவாத தாக்குதலோ நடந்தால் போலீஸ்க்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் யாரவது ஒரு ஏழை இஸ்லாமியாரை புடித்து சென்று விடுவார்கள் .சாஹித்க்கு அது போன்றவர்களுக்கு வாதட விரும்பி பின்னர் முழுதுமே அது போன்ற வழக்குகளை எடுத்து வாதாடுகிறார் .இதற்கு இடையில் ஒரு விதவை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .

ஆரம்பத்தில் நன்கு போகும் அவர் வாழ்க்கை ஒரு கட்டத்திற்கு பின் சாஹித் அதிகமான இஸ்லாமியரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவும் அவருக்கு பல அமைப்புகளில் இருந்து மிரட்டல் வருகிறது .மேலும் தெரியாத நபர்கள் தொலைபேசியில் அவரை மிரட்டுகின்றனர் .அவர் குடும்பத்தை கூட மிரட்டுகின்றனர் .அனால் மிரட்டல்களுக்கு பயப்படமால் அவர் தொடர்ந்து வாதாடி விடுதலை பெற்று தருகிறார் .



ஆனால் தொடர் மிரட்டல்களால் அவரின் மனைவி அவரை பிரிந்து செல்கிறார் .மேலும் அவர் மீதும் நீதிமன்ற வாசலிலேயே கருப்பு மையை தெரியாத நபர்கள் பூசி அவரை அசிங்க படுத்துகின்றனர் .
இறுதியில் ஒருவருக்கு வாதாடி கொண்டு இருக்கும் கால கட்டத்தில் அவருக்கு வாதடதே என்று சாஹித்க்கு கொலை மிரட்டல் வருகிறது .ஆனால் அதையும் மீறி அவர் வாதாடுகிறார் .இதனால் வழக்கு முடியும் முன் அவர் கொல்லப்படுகிறார் .தான் இருந்த வரை அவர் 16 பேருக்கு விடுதலை வாங்கி தந்துள்ளார் .

முன்பே சொன்னது போல் இது உண்மை கதை என்பதால் இதன் கதை அமைப்பில் நான் குறை சொல்ல விரும்பவில்லை .அதே போல் இதிலுருக்கும் அரசியலையும் நான் பேசவில்லை .

மாறாக இதில் உள்ள நீதிமன்ற விவிவாத காட்சிகள் அது மிகவும் நன்றாக உள்ளது .அது போல் நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் பாலா படத்தில் உள்ளது போல் மிக எதார்த்தமாக உள்ளது .இவ்வளவு எதார்த்தமான நீதி மன்ற காட்சிகளை நான் இந்தியாவில் எந்த படத்திலும் பார்த்தது இல்லை ,

அதே நேரத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவு எதார்த்த படத்திற்கு எப்படி ஒளிப்பதிவு இருக்க வேண்டுமோ அப்படி உள்ளது .வேறு எதையும் ஒளிப்பதிவிற்கு என்று சேர்க்கவில்லை .அதே போல் இசை .இதில் பின்னணி இசை கிடையாது ஒரே ஒரு பாடல் மட்டும் பின்னணியாக அவ்வப்போது ஒலிக்கிறது .
இந்த படம் 2014ம் ஆண்டு தேசிய விருதில் இதில் சாஹித் ஆக நடித்த ராஜ்குமார் ராவ்  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
மேலும் இதன் இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறந்த இயக்குனர்க்கான தேசிய விருதை வென்றார் .

முடிவாக கோர்ட் ரூம் டிராமா படங்கள் எடுக்க விரும்புவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும் .மற்றவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பார்க்கவும்

3 கருத்துகள்: