திங்கள், 5 அக்டோபர், 2015

TRAINSPOTTING (1996)- போதையும் ஏழ்மையும்

TRAINSPOTTING (1996)(english movie) 

போதை பொருள் இதற்கு அடிமையாகி இது தான் வாழ்க்கை என்று இந்த உலகில் பலர் வாழந்து கொண்டு இருக்கின்றனர் .அதிலும் நம் தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை .மாலை வீட்டிற்கு ஒழுங்காக செல்கிறார்களோ இல்லையோ பலர் பாருக்கு சென்று விடுகின்றனர் .தமிழ் நாட்டு போதை பழக்கத்தை பற்றி பேசினால் அது அரசியல் ஆகி விடும் .அதனால் அது வேண்டாம் .


சரி முன்பே சொன்னது போல பொதுவாக போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள் பற்றி பேசுவோம் .போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எப்போதும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் .அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அந்த போதை பொருள் மட்டும்தான் ,அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள் .

அவர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு ,உடை ,இருப்பிடம் கிடைக்கமால் இருந்தால் கூட கவலை பட மாட்டார்கள் .அதே நேரத்தில் சரியான வேளையில் அவரகளுக்கு அந்த போதை பொருள் கிடைக்காவிட்டால் அவர்கள் வெறி பிடித்த மிருகமாக மாறி விடுவார்கள் .அந்த அளவு அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பனர் .சரி இந்த பதிவில் நம் பார்க்க போகும் திரைப்படமான TRAINSPOTTING  படமும் ஒரு போதை பழக்கத்துக்கு ஆளான நாயகன் வாழ்வும் அவன் எவ்வாறு அந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபடுகிறான் என்பதே கதை .



கதை 

மார்க் ரெண்டன் ஹெராயின் போதை பழக்கத்திற்கு ஆளான ஸ்காட்லான்ட் இளைஞன் .அவனும் அவன் நண்பர்கள் சிலரும் எப்போதுமே போதை ஊசி போட்டுக்கொண்டும் ஹெராயின் எடுத்து கொண்டும் மட்டும் வாழ்பவர்கள் .இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது போதை மட்டும் தான்

ரெண்டன் போதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன் .அவர்களோடு எப்போதும் ஒரு பெண்ணும் அவளின் குழந்தையும் அவர்களோடு இருக்கும் .அவளும் போதை எடுத்து கொள்பவள் .இந்த நிலையில் ரெண்டனும் அவன் நண்பர்களும் போதை பொருள் எடுத்து கொள்வதும் பப் பார்டி என்று இருப்பதுமாக இருக்கினறனர் .

அவர்களுக்கு தேவையான பணத்தை அவர்கள் அவ்வப்போது போதை பொருள் விற்று பெற்று கொள்கின்றனர் .இந்த நிலையில் ஒரு நாள் அவர்களோடு இருந்த அந்த பெண்ணின் குழந்தை கீழே இருக்கும் ஹெராயின் போதை பொருளை தெரியாமல் சாப்பிட அதனால் அந்த குழந்தை இறந்து விடுகிறது .அப்போதும் கூட ரெண்டன் மற்றும் அவன் நண்பர்கள் போதை பழக்கத்தை கை விடவில்லை மேலும் அதிகமாகத்தான் போதை பொருளை எடுத்து கொள்கின்றனர் .

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரெண்டனக்கு சரியாக பணம் கிடைக்கமால் போக அவனால் போதை பொருள் வாங்க முடியாத சூழநிலை ஏற்படுகிறது .இதனால் அவன் மிகவும் சிரமபடுகிறான் .பின் அவன் நண்பன் ஒருவனோடு சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு போதை பொருள் வாங்குகிறான் .ஒரு முறை திருடும் போது ரெண்டனும் அவன் நண்பனும் போலீசில் மாட்டி கொள்கின்றனர் .

ரெண்டனின் நண்பனுக்கு சிறை தண்டனையும் ரெண்டனை ஒரு மூன்று மாத காலம் மறுவாழ்வு மையத்திற்கும் போகுமாறு நீதிபதி திர்ப்பளிக்கிறார் .ஆனால் ரெண்டன் மறுவாழ்வு மையம் சென்றாலும் போதை பொருள் எடுத்து கொள்வதை விடவில்லை .இதனால் ரெண்டனின் பெற்றோர் அவனை வெளியே எங்கும் செல்லாதபடி வீட்டிற்குள் அவன் பெற்றோரால் சிறை வைக்க படுகிறான் .

இதனால் அவன் போதை பொருள் எடுத்த கொள்ள முடியமால் மிகவும் சிரம படுகிறான் .நரக வேதனை அனுபவிக்கிறான் .ஒரு சில நாட்களுக்கு பின் மனம் திருந்தி வெளியே வந்து ஒரு ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறான் .அதன் பின் அவன் ஒரு சாதாரண வாழ்கை வாழ பழகி கொள்கிறான் .அவனுக்கும் அது ஓரளவு பிடித்து போகிறது .ஒரு மாதம் அப்படி சாதரணமாக வாழ்ந்து வந்து கொண்டு இருக்கும் போது

ரெண்டனின் பழைய நண்பன் ஒருவன் போலிசிடிம் இருந்து தப்பி இவனிடிம் அடைக்கலம் புகுகிறான் .அவன் ரெண்டனை உள்ளே இருந்து கொண்டே அதிக வேலை வாங்குகிறான் .அது ரெண்டனுக்கு பிடிக்கவில்லை .அவனால் ரெண்டன் அதிகம் எரிச்சலடைகிறான் .ஆனால் அவனை வெளியே போக சொல்ல முடியவில்லை காரணம் அவன் ரெண்டனை விட வழுவானவன் .

இந்த நிலையில் ரெண்டனிடிம் ஓரளவு பணமும் இருக்க இடமும் இருப்பதை அறிந்து கொண்டு அவனுடைய இன்னொரு நண்பனும் அவனோடு வந்து தங்குகிறான் இருவரும் இருப்பது ரெண்டனுக்கு மிகவும் எரிச்சலாக உள்ளது .மேலும் இருவரும் அடிக்கடி போதை பொருள்கள் பற்றி பேசியும் போதை பொருள் எடுத்து கொண்டும் ரெண்டனுக்கு மீண்டும் போதை பொருள்களை ஞாபக படுத்துகின்றனர் .இந்த நிலையில் ரெண்டனை ஒரு போதை கடத்தலில் ஈடுபட அழைக்கின்றனர் .

அவன் மறுக்கிறான் .ஆனால் அவர்கள் அவனை விடவில்லை காரணம் ரெண்டனிடிம் மட்டுமே பணமும் பாஸ் போர்ட்ம் இருக்கிறது .எனவே இதை அவனால் மட்டும் பண்ண முடியும் அதனால் பண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர் .இதனால் ரெண்டன் அவர்களிடிம் சொல்லமால் அவர்களை ஹோட்டலில் தனியாக விட்டு விட்டு தப்பி விடுகிறான் .

அதன் பின் ரெண்டன் மீண்டும் அவர்களிடிம் மாட்டி கொள்கிறான் .சரி கடைசியாக அதை பண்ணி விடுவோம் என்று  ஒத்துக்கொள்கிறான்.அந்த போதை பொருள் கடத்தலை நண்பர்களோடு சேர்ந்து சரியாக பண்ணி பணமும் நிறைய பெற்று விடுகிறான் .

அன்றைய இரவு அவன் நண்பர்கள் அனைவரும் தூங்கிய பின் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிடுகிறான் .முடிவில் அந்த பணத்தை வைத்து கொண்டு  நானும் மற்றவர்கள் போல வாழ போகிறேன் என்று சொல்லி முடிக்கிறான் .

படத்தை பற்றி

இப்படம் போதை எப்படி இளைஞர்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அருமையாக காட்டுகிறது .போதையால் திருடுவது எப்போதும் போதை பொருள் தயாரித்து கொண்டு இருப்பது போதை பொருள் எடுத்து கொண்டதால் தெரியமால் பள்ளி சிறுமியோடு உடலுறவு வைத்து கொள்வது போதை பொருளுக்காக எப்போதும் தன் 3 மாத குழந்தையை கூட கண்டு கொள்ளாத பெண்மணி போதை எடுத்து கொள்ள முடியாமல் நாயகன் படும் அவ்சத்தை என்று போதை  வாழ்வை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை எடுத்து  காட்டுகிறது .

இப்படத்தை பற்றி மேலும்  சொல்ல வேண்டுமென்றால் இப்படத்தின் பலமே இதன் வசனங்களும் ஒளிப்பதிவும்தான் .குறிப்பாக வசனங்கள் .சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் மூடர் கூடத்திற்கு அடுத்து இப்படத்தில்தான் வசனங்கள் வழுவாக இருப்பதாக உணர்கிறேன் .இன்னும் சொல்ல போனால் மூடர் கூடமும் இந்த படத்தின் வசனங்களும் பல காட்சிகளில் ஒரு பொருளை பேசுவதை உணர முடிகிறது 

உதாரணமாக படத்தின் ஆரம்ப காட்சியில் நாயகன் பேசும் வசனங்கள் 

"எல்லாரும் ஒரு நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க விரும்பின்றனர் .நல்ல வேலையில் சேர விரும்புகின்றன்ர் .குடும்பத்தை நல்ல விதமாக அமைக்க விரும்புகின்றனர் .அதன் பின் அவர்கள் டிவி ,பிரிட்ஜ் ,வாசிங் மெசின் ,சிடி பிளேர் மற்ற பல மின் சாதனங்கள் எல்லாம் வாங்க விரும்புகின்றனர் .ஒரு நிம்மதியான ஞாயிற்று கிழமையில் பொழுது போக்க விரும்புகின்றனர் .

ஆனால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை விருப்பமும் இல்லை நான் தேர்ந்துடுத்து உள்ளது எல்லாம் ஹெராயின் மட்டுமே அதற்கு என்ன காரணம் என்று தெரியாது .ஆனால் இதான் என் வாழ்க்கை "

எவ்வளவு  எதார்த்தமாக நம் வாழும் வாழ்கையை எள்ளி நகையாடும் வசனம் இது .

அடுத்ததாக எனக்கு பிடித்த இன்னொரு வசனமும் உள்ளது .ஒரு மலை அடிவாரத்திற்கு ரெண்டனும் ரெண்டனின் நண்பர்களும் போவார்கள் .அங்கே போயி கொண்டு எல்லாரும் இயற்கையை ரசித்து கொண்டு இருக்கும் போது ரெண்டன் மட்டும் அந்த பக்கம் திரும்பி இருப்பன் .அவனை வா இயற்கையை ரசிக்கலாம் என்று அவன் நண்பன் ஒருவன் கூப்பிடும் போது சொல்வான் .நமக்கு இயற்கையை ரசிக்க என்ன தகுதி இருக்கிறது .நம் எல்லாம் அடிமட்டதிற்கும் கீழே உள்ளவர்கள் நாம் இயற்கையை ரசித்து என்ன ஆக போகிறது (we are the lowest of the low)


ஏழ்மை இயற்கை கூட ரசிக்க விடாமல் செய்கிறது என்பதை காட்டும் வசனம் .இதே போல் மூடர் கூடம் படத்தில் வரும் வசனத்தை நினைவிருத்துகிறது .காதல் தோல்வியை பற்றி சொல்லும் போது நாயகன் நவீன் சொல்லும் வசனம் நமக்கு எதற்கு இந்த தேவை இல்லாத காதல் என்று .ஏழ்மை பலவற்றையும் புறக்கணிக்கிறது என்பது போன்ற வசனம் .

அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் பேசும் வசனம் "எல்லாரும் என்னை கெட்டவன் என நினைக்கின்றனர் ..நான் நல்லவனாக மாற வேண்டும் அதற்கு நானும் எல்லாரையும் போல நல்ல வாழ்கையை தேர்ந்துடுக்க போகிறேன் .உங்களை போல் ஒரு குடும்பம் அதன் பின் டிவி ,பிரிட்ஜ் வாசிங் மெசின் என்று மற்றும் பல பொருள்களை சொல்லி கொண்டே போவான் .இதலாம் இருப்பது தான் நல்ல வாழ்க்கை என்றால் அதை நான் வாழ்கிறேன் என்பான் .

இதுவும் வாழ்கையை பற்றி எல்லாரும் ஒரு கோட்பாட்டை உருவாக்கி இருப்பதை பற்றி எள்ளி நகையாடும் வசனம் .

அதற்கு அடுத்து இந்த படத்தின் மற்றொரு பலம்  ஒளிப்பதிவு இதில் பல விதாமான வித்தியாசமான கேமரா மூவ்மெண்ட்களும் வித்தியசமான சாட்களும் பயன்படுத்தபட்டிருக்கிறது .அவை எல்லாம் நாயகனின் மன நிலையை எடுத்து காட்டுவது போல அமைக்கப்பட்டு உள்ளது .

அடுத்ததாக படத்தின் இயக்குனர் டேனி பாயல் (Danny boyle)

ஆம் அதே slumdog millionaire படத்தை இயக்கிய டேனி பாயல்

  DannyBoyle08.jpg


அந்த படத்திற்கு A.R.ரகுமானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கியது நினைவு இருக்கலாம் slumdog millionaire படம் பலரால் பாராட்டப்பட்டாலும் ஆஸ்கார் வாங்கினாலும் பலர் அந்த படத்தை விமர்சித்தார்கள் .இந்தியாவை மிக ஏழ்மை நாடாக காட்டி உள்ளார் .அவர் இந்தியாவை ஏழ்மை நாடாக காட்டவில்லை ,இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதி ஏழைகளை மட்டும் காட்டி உள்ளார் .

இந்த படத்திலும் அப்படிதான் லண்டனில் இருக்கும் ஸ்காட்லான்ட் பகுதி ஏழை இளைங்கர்கள் வாழ்வு எப்படி ஏழ்மையோடும் போதையோடும் இருப்பதை காட்டி உள்ளார் .slumdog millionaire படத்தில் சிறுவன் மலத்தில் விழுந்து அதோடு போயி அங்கு ஷூட்டிங் வந்து இருக்கும் அமிதாப் பச்சனிடம் ஆட்டோ கிராப் வாங்குவது போல் அமைத்த காட்சியை பலர் இப்படி எல்லாம் காட்சி வைப்பதா என்று பலர் திட்டினார்கள் .

இதிலும் ஒரு காட்சி வரும் கழிவறைக்கு செல்லும் நாயகன் தெரியமால் போதை மாத்திரையை அந்த மல குழியில் விழுந்து விட அவன் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த மல குழியிலே முழ்கி தேடுவான் .அந்த அளவு அவன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளான் என்பதை காட்டும் ஒரு முக்கியாமான காட்சி .இந்த காட்சியை slumdog millionaire படத்தில் மலத்தில் விழுந்து நடிகனிடிம்  ஆட்டோகிராப் வாங்கும் காட்சியோடு ஒப்பிடும் போது சினிமாவும் ஒரு போதை பொருள் என்பதை சொல்லமால் சொல்கிறார் .

போதை பொருளுக்கு அடிமையான்வனவனும் சினிமாவின் தன் விருப்பமான சாகச நாயகனுக்கு ரசிகனாக உள்ளவனும் அதற்காக எது வேண்டும்னாலும் செய்வான் என்பதை சொல்கிறது இந்த ரெண்டு காட்சிகளும் .

முடிவாக வழக்கம் போல சினிமாவை விரும்பவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் .அடுத்த படியாக  இப்படத்தை யார் பார்க்கிறிர்களோ இல்லையோ ஒளிப்பதிவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .ஏன் என்றால் இதில் வரும் பல வித்தியாசமான் சாட்களை பார்த்து கொண்டு அதை reference ஆக எடுத்து கொள்ளாலாம் எனவே ஒளிப்பதிவு துறை சேர்ந்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் .மற்றவர்களும் பார்க்கலாம் .

(பி .கு )சமிபத்தில் இப்படத்தின் இயக்குனர்  டேனி பாயல் 20 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கூறியுள்ளார் .முதல் பாகம் கொடுத்த தாக்கத்தை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று பொறுத்து பார்ப்போம் .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக