LITTLE MISS SUNSHINE (2006) ஹாலிவுட்
பொதுவாகவே எனக்கு எப்போது எல்லாம் மனசு சரி இல்லமால் போகிறாதோ இல்லை எப்பதொல்லாம் எதையாவது இழப்பதை போல் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் ஒரு 3 படங்களில் ஏதாவது ஒன்றை பார்ப்பேன் ,அவற்றில் ஒன்று நம் தமிழ் சினிமாவான அன்பே சிவம் அடுத்த இரண்டில் ஒன்று 1946ல் வெளி வந்த Its a wonderful life ஹாலிவுட் திரைப்படம் (இதை பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பெரிய பதிவாக எழுதுகிறேன் )
அடுத்த ஒன்று 2006ல் little miss sunshine திரைப்படம் .
முதலில் படத்தை பற்றி சொல்வதற்கு முன் வழக்கம் போல் சில விசயங்கள்
பொதுவாகவே நம் சமூகத்தில் ஏன் இந்த உலகம் முழுதும் எடுத்து கொண்டாலும் எப்போதுமே எல்லாரும் வெற்றி மட்டுமே வாழ்க்கை என்பார்கள் .நீ பள்ளியில் படிக்கிறியா நீ முதல் ரேன்க் வாங்கினால் தான் நீ படித்தவன் என்று அர்த்தம் ,நீ விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறயா கண்டிப்பாக அதில் வெற்றி பெற வேண்டும் .கல்லூரியிலும் இதே நிலைமை தான் அதை முடித்தால் வேலை அதுவும் கவுரவாமான வேலை இப்படி நம் எடுக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவன் மட்டுமே வாழ தகுதியானவன் என்ற முத்திரையை குத்துகிறார்கள் ,
ஏன் நாமே டோனி கேப்டானாக இருந்து தொடர்ந்தாவரு ஒரு மூன்று தொடரை இழந்தால் இனி டோனி கேப்டனாக இருக்க லாயாக்கு இல்லை கோலியை கொண்டு வாங்கப்பா என்கிறோம் ,இங்கு தோற்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்று தான் சமூகம் சொல்கிறது .
சரி அடுத்த இரண்டாவது விசயம் கடந்த சில வருடங்காலகவெ நடக்கும் ரியலாட்டி ஷோக்கள் குறிப்பாக சிறுவர்களுக்கு நடக்கும் ரியாலட்டி ஷோக்கள்
10 வயது 15 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு நடக்கும் பாட்டு போட்டிகளும் நடன போட்டிகளும்
பொதுவாகவே தோல்வியை பெரியவர்களாலே தாங்க முடியாது ,ஆனால் துள்ளி குதிக்கும் குழந்தைகளுக்கு இந்த தோல்வியை அருமையாக தந்து வாழ்க்கையை அந்த வயதிலே வெறுக்க வைக்கின்றது .
சரி மேலே பேசியவற்றிற்கும் Little miss sunshineக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறிர்களா வாங்க பாப்போம்
இந்த படத்தின் கதையை எப்போதும் போல் இல்லமால் வேறு மாதிரியாக சொல்கிறேன் ,
இந்த படத்தில் மொத்தம் ஆறே கதாபாத்திரங்கள் அந்த 6 கதாபாத்திரங்களும் ஒவ்வொரு வகையில் ஒரு தோல்வியை தான் சந்திக்கின்றன ஆனால் அதையும் கடந்து ஒரு செல்கின்றன .
இந்த படத்தின் மைய கதாபாத்திரம் ஆலிவ் என்ற சிறுமி கதாபாத்திரம் தான் அவளை வைத்து தான் கதை நகர்கிறது
ஆலிவுக்கு லிட்டில் மிஸ் சன்சைன் என்ற சிறுமிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் அந்த லிட்டில் மிஸ் சன்சைன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது ஆசை அதற்காக தினமும் தன் தாத்தா துணையோடு பயிற்சி எடுத்து கொள்கிறாள் .
முதல் தோல்வி
படத்தின் ஆரம்பத்தில் ஆலிவின் மாமா பிராங்(ஓரின சேர்க்கையாளர் ) காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்து மருத்துவ மனையில் அனுமதிக்க படுகிறார் ,அவரை தனியாக விட வேண்டாம் என்று சொல்லி அவரின் சகோதரியை (ஆலிவின் அம்மா ) வர வைத்து டாக்டர் சிறிது காலம் அவரை பார்த்து கொள்ளுமாறு அனுப்புகிறார்
அடுத்து ஆலிவின் தந்தை
ஆலிவின் தந்தை ரிச்சார்ட் இவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பற்றி வகுப்புகளை எடுத்து கொண்டும் அதை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதி கொண்டு இருக்கிறார் ,இவருக்கு வெற்றி பெறுபவர்களை மட்டும் பிடிக்கும் .அதே நேரத்தில் இவருக்கு பேங்கில் வாங்கிய கடன்கள் நிறைய இருக்கிறது இந்த நிலையில் இவர் எழுதிய தன்னபிக்கை புத்தகம் வெளி வந்தால் எல்லாம் கிடைத்து கடன்களை அடைத்து விடலாம் என நினைக்கிறார் ,
ஆலிவின் தாய்
ஆனால் ஆலிவின் தாய்க்கோ தன் கணவரோடு வாழ பிடிக்கமால் இருப்பதால் விவாகாரத்து வாங்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் .
ஆலிவின் தாத்தா
இவர் தான் ஆலிவிற்கு தினமும் அழகி போட்டிக்காக டான்ஸ் சொல்லி கொடுப்பது அதே நேரத்தில் தினமும் இவர் போதை பொருள் எடுத்து கொண்டு தான் தூங்குவர்
ஆலிவின் சகோதரன்
ஆலிவின் சகோதரன் டுவைன் .இவனுக்கு குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது .அதே நேரத்தில் பைலட் ஆன பின்பு தான் பேசுவேன் என்று சபதம் எடுத்து கொண்டு 7 மாதங்கள் பேசமால் இருக்கிறான் .
இப்படி ஒரு வழக்கமான நடுத்தர அமெரிக்கா குடும்பத்தோடு கதை செல்கிறது ,இந்த நிலையில் ஆலிவிற்கு லிட்டில் மிஸ் சன்சைன் அழகி போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது ,ஆனால் அதில் கலந்து கொள்ள அவர்கள் கலிபோர்னியா செல்ல வேண்டும் அது அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் இதனால் தனக்கு புத்தகம் வெளியிடும் பதிப்பகத்தரிடிம் பேச வேண்டிய சூல்னிலையால் தன்னால் ஆலிவை அதற்கு அழைத்து செல்ல முடியாது என்று சொல்கிறார் .பின்பு ஆலிவிர்காக சரி என்று சொல்கிறார் ,ஆனால் அதே நேரத்தில் அலிவின் தந்தை ரிச்சர்ட் கலிபோர்னியா போகும் வழியில் புத்தக பதிப்பாளரை பார்த்து விட வேண்டும் எனவும் நினைக்கிறார் .
அதே போல் டுவைனும் முதலில் மறுத்து பின் சரி என்கிறான் ,பிராங்கை தனியாக வீட்டில் விட முடியாது என்று அவரையும் அழைத்து கொண்டு எல்லாருமாக ஒரு பழைய வேனை எடுத்து கொண்டு கலிபோர்னியா பயனிக்கிறனர் .ஒரு சாதாரண பயணமாக செல்கிறது .இடை இடையே பேச்சுக்கள் சிறு சிறு வாக்குவாதங்கள் என்று செல்கிறது
முதல் தடையாக
அவர்கள் பயணிக்கும் வேன் பாதிலே ரிப்பர் ஆகி விடுகிறது ,இதனால் அதை எல்லா நேரமும் தள்ளி விட்டு ஒட்ட வேண்டி இருக்கிறது .ஒரு நாள் செல்லும் வழியில் உள்ள ஹோட்டலில் அனைவரையும் தங்க வைத்து விட்டு ஆளிவின் தந்தை ரிச்சர்ட் மட்டும் அந்த புத்தக பதிப்பாளரை பார்க்க செல்கிறார் .
இரண்டாம் தோல்வி
ரிச்சார்ட் எழுதிய புத்தகம் வெளியிடும் அளவுக்கு மதிப்பு இல்லை என்றும் புதிய எழுத்தாளர்கள் புத்தகங்கங்களை வாசகர்கள் அவளவாக ரசிக்க மாட்டார்கள் என்று சொல்லி அவரின் புத்தகத்தை வெளியிட முடியாது என்று பதிப்பாகத்தார் சொல்லி விடுகிறார் ,இதனால் மீண்டும் கடனில் இருந்து மீள முடியாத சூல்னிலை ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறார் .
ஒரு இழப்பு
இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் ஆலிவின் தாத்தா இறந்து விடுகிறார் ,இதனால் ஆலிவ் அழகி போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது .ஆனால் ரிசார்ட் தன் மகள் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ,ஏன் என்றால் தன் தந்தை வயதான காலத்திலும் தன் பேத்தி கலந்து கொள்வதை பார்க்க 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இருக்கிறார் எனவே அவரின் ஆசையும் ஆலிவ் போட்டியில் கலந்து கொள்வதாக தான் இருக்கும் எனவே ஒரு நாள் கழித்து உடலை வாங்கி கொள்கிறேன் என்கிறார் ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் அதை ஏற்க மறுக்கிறது .எனவே அவர்களுக்கு தெரியாமல் தன் தந்தையின் உடலை எடுத்து கொண்டு பயணிக்கிறார் .
மூன்றாவது தோல்வி
மீண்டும் பயணிக்கும் போது ஆலிவ் எதார்த்தமாக தன் அண்ணன் டுவைட் இடம் ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து வந்த கலர் பிளைன்ட் அட்டையை வைத்து விளையாட்டாக கேட்கும் போது தான் தெரிகிறது டுவைட்க்கு நிற குருடு என்று இதனால் அவனால் பைலட் ஆக முடியாது இதை தெரிந்த உடன் அத்தனை நாள் பேசமால் இருந்த மவுனம் வீணாகி விட்டது என்று வருத்தத்துடன் வேனை நிப்பாட்டி கத்தி கொண்டு கோபமாக ஓடுகிறான் .அவன் அம்மா சமாதானபடுத்தியும் அவன் வர மாட்டேன் என்கிறான்
நீங்கள் எல்லாரும் வாழ்க்கையில் தோற்றவர்கள் உங்களோடு சேர்த்து நான் இருக்க விரும்ப வில்லை என்கிறான் .பின் தன் குட்டி தங்கை ஆலிவிர்காக மனதை தேற்றி கொண்டு வண்டியில் ஏறுகிறான் .
ஒரு வழியாக எல்லாரும் ஆலிவ் போட்டியில் கலந்து கொள்ளும் இடத்திற்கு வருகிறார்கள் ,போட்டி நடந்து கொண்டு இருக்கிறது .அப்போது அங்கு இருக்கும் சிறுமிகள் எல்லாம் அதித திறமையாகவும் அழகாகவும் பாடவும் ஆடவும் செய்கின்றன .ஒரு கட்டத்திற்கு மேல் ரிசார்ட்ற்கு இந்த குழந்தைகளோடு போட்டி போட்டு ஆலிவால் ஜெயிக்க முடியாது என நினைக்கிறார் .
அதே போலவே டுவைட்ம் இந்த இடம் ஆலிவை தோற்றவள் ஆக்கி மனதை நொருங்க செய்து விடும் இவர்கள் யார் என் தங்கையை அழகு அழகு இல்லை என சொல்ல எனவே ஆலிவ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என சொல்கிறான் .தந்தையும் சகோதரனும் ஆலிவை பாதுகாக்க விரும்பினாலும் ஆலிவ் கலந்து கொள்ள ஒரு வருடமாக ஆசை பட்டால் கலந்து கொள்ளட்டும் என ஆலிவின் தாய் சொல்கிறாள் ,
ஆலிவும் கலந்து கொள்கிறாள் .ஆலிவ் முறை வருகிறது அவள் தன் தாத்தா சொல்லி கொடுத்தப்படி நடனம் ஆடுகிறாள் .கீழே இருப்பவர்கள் எல்லாம் அந்த நடன அசைவுகள் எல்லாம் முகம் சுழிக்கும் படி இருக்கிறது என கத்துகிறார்கள் ,எனவே போட்டி நடத்துபவர் பாடல் ஓடி கொண்டு இருக்க பாதிலே ஆலிவை மேடையை விட்டு இறக்க முயற்சி செய்ய ஆலிவின் தந்தை அவளை முழுமையாக அதில் கலந்து கொள்ள விடுங்கள் என்று தடுக்கிறார் .
ஆனால் இறங்கியே ஆக வேண்டும் என்று சொல்ல அவர் தன் மகளையும் விழா அமைப்பாளரையும் பார்க்கிறார் ,பின் ஆலிவை உற்சாக படுத்த தானும் சேர்ந்து ஆட தொடங்குகிறார் ,பின் ஆலிவின் மாமா அண்ணன் அம்மா என்று எல்லாரும் அவளுடுன் அந்த பாடல் முடியும் வரை ஆடுகிறார்கள்,ஆடி ஆலிவை உற்சாக படுத்துகிறார்கள் .ஆலிவிற்கு தோல்வியை காட்டாமல் செய்கின்றனர் ,
இறுதியாக ஆலிவ் இனி மேல் அழகி போட்டியிலே கலந்து கொள்ள முடியாது என்று அனுப்பினாலும் அதையும் சாதாரண ஒன்றாக அவளும் கருதி கொண்டு அவள் குடும்பமும் கருதி விட்டு மீண்டும் வீட்டிற்கு பயணிக்கின்றனர் ,
இனி படத்தை பற்றி
பொதுவாகவே சில படங்களை மட்டும் பார்த்தே சே என்ன படம்டா சான்சே இல்ல செம பீல் குட் மூவி என்று சொல்லுவோம் அந்த பீல் குட் வகை படம் தான் இந்த LITTLE MISS SUNSHINE
இந்த படம் இவளவு சிறப்பாக அமைவதற்கு இதில் உள்ள காட்சி அமைப்புகளும் கதாபாத்திரங்களும் திரைக்கதையும் தான் காரணம் ,
இதில் வரும் 6 கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் நம் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திகிறது .அதே போல் இதில் வரும் பல காட்சிகள் நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பவையாக உள்ளன .
குறிப்பாக ஒரு காட்சியில் ஆலிவிற்கு தன் அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்று நினைத்து தன் தாத்தாவிடிம் தன் அழகாக இருக்கிறேனா என கேட்கிறாள்
அவர் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்கிறார் ,அடுத்ததாக ஆலிவ் அழுது கொண்டே நான் தோற்று போவானோ என்று பயமாக இருக்கிறது என்கிறாள் .அதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று தாத்தா கேட்கும் போது அப்பாவிற்கு தோற்றால் பிடிக்காது என்கிறாள் .
(இந்த ஒரு வசனத்தின் மூலமெ நம் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம் என்று காட்டி விடுகிறது )
அதற்கு அவர் நீ எப்போது போட்டியில் கலந்து கொண்டாயோ அப்போதே நீ வெற்றி பெற்றவள் தான் உண்மையான தோல்வியாளன் யார் என்றால் கலந்து கொள்ளாதவன் தான் என்று சொல்லி சமாதான படுத்துகிறார் (இந்த வசனம் எங்கோ என் புத்தியில் செருப்பால் அடித்தது போன்று இருந்தாலும் திருந்த முடியவில்லை )
அடுத்ததாக டுவைட் திரும்ப பேச ஆரம்பித்த பின்பு தன் மாமாவிடம் பேசும் காட்சி ,அவன் சொல்வான் வாழ்க்கையில் ஒன்று போனால் கண்டிப்பாக இன்னொன்று வரும் ,அது போல் எனக்கு பறக்க வேண்டும் என நினைக்கும் போது நான் பறப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்பான் ,
எல்லாவற்றிற்கும் மேலாக கிளைமாக்ஸ் காட்சி ஆலிவை எல்லார் முன்னாலும் அசிங்க பட வைக்க கூடாது என்றும் முழுமையாக போட்டியில் குடும்பமே சந்தோசத்துடன் அவளுடுன் இணைந்து ஆடும் காட்சி இருக்கிறதே
ஒரு அருமையான கவிதை போன்று ,இது போன்ற கிளைமாக்ஸ் காட்சிகள் சில படங்களில் மட்டும் தான் கிடைக்கும் ,எனக்கு தெரிந்து மறக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சிகள் என்றால் இரண்டை சொல்வேன் ஒன்று அன்பே சிவம் படத்தில் கமல் கதாபாத்திரம் நாயுடுன் தனிமையாக நடந்து செல்லும் காட்சி
அடுத்து Dead poets society படத்தில் ராபின் வில்லியம்ஸ்க்கு மாணவர்கள் Farwell கொடுக்கும் காட்சி ,
இவை இரண்டும் கூட சோகமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனால் LITTLE MISS SUNSHINE உற்சாகமூட்டும் கிளைமாக்ஸ் காட்சி ,இன்று காக்கா மூட்டையில் வந்த உற்சாகமான சந்தோசமான கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னோடியே இந்த LITTLE MISS SUNSHINE தான் .
இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள் இரண்டு ஒன்று தாத்தாவாக வரும் ஆலன் ஆர்கின் கதாபாத்திரம்
30 நிமிடங்களே வந்தாலும் நல்ல ஒரு நிறைவான பெர்போமான்ஸ் கொடுத்து நம் மனதில் இடம் பிடித்து மட்டும் இல்லமால் அந்த வருடத்திற்க்கான சிறந்த துணை நடிகர்க்கான விருதை பெற்று விட்டார் ,
அடுத்ததாக மாமாவாக வரும் ஸ்டீவ் காரல் கதாபாத்திரம்
ஸ்டீவ் காரல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்திற்கு முன்பு எனக்கு ஸ்டீவ் காரல் சுத்தமாக பிடிக்காது ,ஏன் என்றால் அவர் ஹாலிவுட் சிவ கார்த்திகேயன் ,டிவி ஹோஸ்ட் ஆக இருந்து பின்பு சிரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் ,இவரின் நகைச்சுவை எல்லாம் ரொம்ப மொக்கையாகவும் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவாதகவும் இருக்கும் ,இதனாலே நான் ஆரம்ப கால ஸ்டீவ் காரல் படங்கள் எதுவும் பார்க்க மாட்டேன் ,
ஆனால் இந்த படத்தில் தான் முதன் முதலாக எனக்கு நகைச்சுவை மட்டும் அல்ல நடிப்பும் வரும் என்று நிருபித்து இருப்பார் ,மேலும் இந்த படம் வந்த கால கட்டத்தில் அவர் தனி கதாநாயகனாக இருந்து வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து கொண்டு இருந்தார் ,ஆனால் இந்த படத்தின் கதைக்காக இதை ஒத்து கொண்டார் ,மேலும் நல்ல புகழ் பெற்ற பிறகு ஓரின சேர்க்கை காதல் தோல்வி பாத்திரத்தில் நடித்த இவரின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும் ,இவர் டுவைட் உடன் பேசும் ஒரு காட்சி போதும் இவர் நடிப்பு திறமையை பாராட்ட ,
இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்ட கதாபாத்திரம் ஆலிவ் கதாபாத்திரம்
அழகி போட்டியில் தேர்வானதுகாக அவள் குதிப்பதாகட்டும் .ஹோட்டலில் அழுது கொண்டே தாத்தாவிடம் தன் தோற்க விரும்ப வில்லை என்று சொல்வதாகட்டும் அழகி போட்டிக்கு செல்லும் முன் தன் குண்டாகி இருக்கிறோமோ என்று கண்ணாடியில் பார்ப்பது ஆகட்டும்
நடன போட்டியில் தன் தாத்தா சொல்லி கொடுத்த படி ஆடுவாதாகட்டும் என ஆலிவ் அந்த அழகி போட்டியில் தோற்றலும் நம் மனதில் அழகியாக இடம் பிடிக்கிறாள் .
மேலும் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் மேலே சொன்ன ஆலன் அர்கின் ,ஸ்டீவ் காரல் தவிர யாரும் பெரிய நடிகர்களோ பெரிய டெக்னிசியன்களோ இல்லை,ஆனால அதை எல்லாம் தாண்டி கதையாலும் திரைகதையாலும் படம் நம்மை ஆக்கிரமிக்கிறது ,
இப் படத்தை இயக்கியது Jonathan dayton மற்றும் valrie faries என்ற கணவன் மனைவி இணைந்து இயக்கி இருக்கிறார்கள் ,இவர்கலுக்கு இது தான் முதல் படம் ,முதல் படமே முழு நிறைவான படமாக கொடுத்து இருக்கிறார்கள் ,
இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும் அப்போது வென்றது ,
நான் முதன் முதலில் இந்த படத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது .என்னடா நம்ம ஹாலிவுட் படம் தான் பாக்கிரோமோ என்று ஏன் என்றால் பொதுவாக ஹாலிவ்ட் படங்களில் சிறந்த படங்கள் என்று சொல்லும் படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் கமர்சியல் ஆக இருக்கும் அது லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றோ இல்லை அவதார் போன்றோ ஒன்று பிரமண்டமாக இருக்கும் ,
இல்லை புதுமையான திரைக்கதை என்று இன்செப்சன் போன்று நம் முளையை குழப்பி விடுவார்கள் ,இல்லை இது யுத்தம் பற்றிய படம் அதனால் நீங்கள் கண்டிப்பாக இதை சிறந்த படமாக ஒத்து கொள்ள வேண்டும் என்பது போல் வரும் பல யுத்தம் தழுவிய saving private rayan மற்றும் the hurt locker மற்றும் பல யுத்த படங்களும் நாசி மூகாம் படங்காலான பியானிஸ்ட் சின்லர்ஸ் லிஸ்ட் இது போன்ற படங்களை சொல்வார்கள் அதையும் மீறி பீல் குட் மூவி என்று சொல்லப்படும் பாரஸ்ட் கம்ப் போன்ற படங்களும் ஓவர் செண்டிமெண்ட ஆக இருக்கும்
எந்த ஒரு ஹாலிவுட் படமும் ஒரு இரானிய படம் போன்றோ இல்லை பிரஞ்சு ஜெர்மன் படம் போன்றோ எதார்த்தாமகாவும் உண்மையான பீல் குட் கொடுப்பதாகவும் இருக்காது ,ஆனால் இந்த லிட்டில் மிஸ் சண் சைன் எதார்த்தமும் உண்மையான பில் குட் கொடுக்கும் .இதில் பெரிய சண்டை காட்சிகளோ இல்லை முத்தம் ஆபாச காட்சிகளோ என்று ஹாலிவுட்டிற்கு உரிய எந்த கமர்சியல் அம்சமும் இல்லை ,
படத்தை முழுமையாக பார்த்து முடித்த பின் தோன்றிய ஒன்று .இன்று பல தொலைகாட்சிகளில் குழந்தைகளை கூப்பிட்டு வந்து அவர்களை பாட வைத்தும் ஆட வைத்தும் அவர்களுக்கு மார்க் போட்டு நீ சரியா ஆடல நீ சரியா பாடலா என்று சொல்கிறார்கள் ,
வேண்டாம் அவர்களுக்கு பள்ளி மட்டும் மார்க் போடட்டும் அவர்களை விட்டு விடுங்கள் .பாவம் 7 வயது பையனை டாடி மாமி வீட்டில் இல்லை என்று பாட வைத்து விட்டு அதில் சரியான ஏற்றம் இறக்கம் இல்லை என்று சொல்வதும் 8 வயது சிறுமியை கல்யாணம் தான் கட்டி கிட்டு ஓடி போவோமா என்று சிறிய ஆடைகளை போட்டு ஆட வைத்து விட்டு அதில் சரியான மூவ் மெண்ட் இல்லை என்று சொல்வதும் வேண்டாம் விட்டு விடுங்கள் அவர்களை தோல்வியை அவர்கள் சந்திக்க வேண்டிய வயதில் சந்திக்கட்டும் இப்போதே அவர்களுக்கு தோல்வியை கொடுக்காதிர்கள் ,வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்லாதிர்கள் .தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதி தான் அதை தாண்டி போக வேண்டும் என்று தட்டி கொடுங்கள் .
இறுதியாக மீண்டும் லிட்டில் மிஸ் சன்சைன் பற்றி ஹாலிவுட் ரசிகர்கள் பலருக்கு அடிக்கடி பார்க்கும் படங்கள் என்றால் சிலர் இன்செப்சனையும் இல்லை அவதார் டைட்டானிக் இல்லை ஏதாவது மிகவும் புகழ் பெற்ற இயக்குனர் படங்கள் எதையாவது ஒன்றை திரும்ப திரும்ப பார்க்கும் படமாக சொல்வார்கள் முன்பே சொன்னது போல்
ஆனால் எனக்கு எப்போதுமே All time favourite movie என்றால் அது லிட்டில் மிஸ் சன்சைன் ஆக தான் இருக்கும் இந்த படத்தை பல முறை பார்த்து விட்டேன் ,எல்லா முறையும் ஒரு ரசிகனாக பார்த்து ரசிக்கின்றேன் ,ஒரு முறை கூட சலிக்க வில்லை ,எப்போது பார்த்தாலும் அந்த பீல் குட் பீலிங்கை எனக்கு இது தருகிறது ,
எனவே இதை பற்றி நான் சொல்லி கொண்டு போனால் அது இன்னும் போயி கொண்டே இருக்கும் அதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் ,உங்களுக்கு ஒரு நல்ல ஒரு அனுபவத்தையும் நல்ல பீலையும் கொடுக்க கூடிய படம் இது ,எனவே எல்லாரும் கண்டிப்பாக பாருங்கள் ,
(எப்படி இருந்தாலும் என் தளத்தை வாசிப்பவர்கள் குறைவு தான் இருந்தாலும் அவர்களுக்காக நீண்ட நாட்கள் கழித்து எழுதி இருப்பாதால் நான் சரியாக எழுத வில்லை என்று தோன்றினாலோ இல்லை பிழை இருந்தாலும் மன்னித்து விடுங்கள் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக