திரைக்கதையும் வழிமுறைகளும் -2
குற்றமும் திரைக்கதையும்
குற்றங்கள் என்பது நிஜ வாழ்வில் பயமுறுத்தும் ஒன்றாக இருந்தாலும் திரை வாழ்வில் உலகம் எங்கும் குற்றவியல் சார்ந்த படங்கள் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது .
குற்றவியல் சார்ந்த கதைகளை நாம் கையில் எடுக்கும் போது அதன் திரைக்கதையை வேகப்படுத்துவது என்பது எளிதான ஒன்றாக அமைக்கிறது . சரி இந்த பதிவில் குற்றவியல் சார்ந்த கதைகளின் திரைக்கதைகளை எவ்வாறு அமைத்து இருந்தார்கள் எப்படி நாமும் அமைக்கலாம் என பார்க்கலாம் .அதற்கு முன் குற்றவியலில் என்ன என்ன கான்செப்ட்களில் படம் எடுக்க படுகிறது என பார்க்கலாம் .
1.கொலை களங்கள்
2.கொள்ளை .திருட்டு ,
3.கடத்தல் (ஆள் ,பணம் ,விலையுர்ந்த பொருட்கள் )
4.பண மோசடி ,சூதாட்டம்
சரி இவை தவிர இன்னும் சில இருந்தாலும் இவற்றை பார்த்து விட்டு அதை இறுதியாக பார்க்கலாம் .
கொலை களங்களும் திரைக்கதையும்
ஒரு கதையில் கொலையை ஒரு முக்கிய மைய பொருளாக வைத்து எழுதும் போது அதன் திரைக்கதையை நம்மை அறியமால் எளிதில் அதே வேகப்படுத்தி விடும் ,
சில லாஜிக்குகள் மட்டும் சரியாக நம் வைத்து விட்டால் போதும் திரை கதை சிறப்பாக அமைந்து விடும் .
கொலைகளை வைத்து எடுக்க பட்ட படங்கள் அனைத்தும் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்துவிடும் .அதற்கு அந்த கால ரெஸோமென் தொடங்கி இந்த காலம் துருவங்கள் பதினாறு வரை சான்றாகும் .
அதே நேரத்தில் நான் சொல்லும் கொலை களம் என்பது ராம்போ பட பாணியில் திரையில் வருபவர்கள் எல்லாரையும் நாயகன் தேசத்திற்காக கொள்கிறேன் என்ற பெயரில் எல்லாரையும் பட பட வென கொன்று குவிப்பது கிடையாது .
இது ஒரு கொலையை மட்டும் இல்லை ஒரு இரண்டு அல்லது 3 கொலைகளை மட்டும் ஒரு மைய பொருளாக வைத்து அதை சுற்றி பின்னப்படும் திரைக்கதை தான் .
சரி கொலையை வைத்து என்ன என்னவாறு எல்லாம் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம் .
1.கொலை செய்தவனை கண்டு பிடித்தல்
2.கொலை செய்து விட்டு அதில் இருந்து தப்பித்தல்
3.கொலை பழியை அகற்ற போராடுதல்
4.கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடுதல் அல்லது காப்பாற்றுதல் .
5.நாயகனே கொலையாளி
இவை தவிர வேற எதுவும் இருந்தாலும் பார்க்கலாம் முதலில் பார்க்க போவது
1.கொலையாளியை கண்டுபிடித்தல்
துப்பறியும் கதைகள் எப்பொழுதுமே விறுவிறுப்பை கொடுப்பன .
உலகம் முழுதுமே துப்பறிதலை வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுபவையாகவே உள்ளன .
அதன் காரணம்
ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது அந்த கொலையை செய்தவனை கண்டுபிடிப்பது நாயகனின் முக்கிய குறிக்கோள் எனில் அதன் திரைக்கதை எளிதில் விறுவிறுப்பாக அமைந்து விடும்
கொலை செய்தது யார் எதற்காக செய்தார்கள் ஏன் செய்தார்கள் இப்படி யார் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை காட்சிகளாக மாற்றி நாயகனையும் குழப்பி படம் பார்க்கும் ஆடியன்ஸையும் குழப்பி விட்டாலே போதும் படம் பார்க்கும் பார்வையாளனும் ஒரு துப்பறிவாளனாக மாறி இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ அவனோ இருக்குமோ இவனா இருக்குமோ என யோசிக்க ஆரம்பிக்கும் போதே படம் விறுவிறுப்பாக சென்று விடும் .
ஆனால் போட்ட மர்ம முடிச்சுக்களை எல்லாம் சரியாக அவிழ்க்க வேண்டும் . கொலைக்கான சரியான காரணத்தை கொலையாளி கொண்டு இருக்க வேண்டும் கொலையை துப்பறியும் கதாபாத்திரம் சரியான ஆதாரங்களுடன் கொலையை கண்டுபிடிக்க வேண்டும் .
இப்படி ஒரு சில லாஜிக் மட்டும் போதும் கொலையாளியை கண்டுபிடிக்கும் கதைகளுக்கு .
சரி கொலைகளை கண்டுபிடிக்கும் கதைகளில் இரண்டு வகை உள்ளன .
ஒன்று ஒரே ஒரு கொலையை வைத்து கொண்டு படம் முழுதும் அந்த கொலையாளி யார் என்று கண்டு பிடிப்பது .
இப்படி ஒரு கொலையை வைத்து கொண்டு செல்லும் படத்தை பொறுத்த வரையில் முதன் பாதியை எளிதில் வேகமாக கொண்டு சென்று விடலாம் யார் கொலையாளி யார் கொலையாளி என்ற கேள்வியுடன் ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை உடனே முடிக்க வேண்டும் ஏன் என்றால் இரண்டாம் பாதியிலும் கொலையாளியை காட்டாமல் இழுத்து கொண்டு இருக்கும் போது சில ஆடியன்ஸ் எரிச்சல் அடைந்து விடுவார்கள் .அதனால் ஒரு கொலையை வைத்து கொண்டு செல்லும் கதைகளில் சரியான நேரத்தை வைத்து கொண்டு செல்ல வேண்டும் குறைந்த பச்சம் ஒரு கொலையை வைத்து கொண்டு கண்டுபிடிக்கும் கதைகள் எல்லாம் ஒரு 2 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் வரை தான் செல்ல வேண்டும் .
சரி ஒரு கொலையை மட்டும் வைத்து கொண்டு திரைக்கதை அமைத்த படங்களில் எனக்கு தெரிந்த சில
1.Rashomon
இந்த படத்தை பற்றி தெரியாத உலக சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது .
அகிரா குரோசாவா இயக்கிய இப்படம்
திரைக்கதையில் புதிய யுக்தியை புகுத்திய படம் இது .சினிமாவிற்கு என்று இருந்த பல விதிகளை உடைத்து புதிய வழியை ஏற்படுத்தியது .
இந்த படத்தின் ஆரம்பத்தில் சாமுராயின் சடலத்தை வழி போக்கர் ஒருவர் கண்டுபிடிக்க அவர் அந்த கொலையை செய்தது யார் எதற்க்கு ஆக செய்தார்கள் என மூன்று பேரின் பார்வையில் வெவ்வேறு விதமாக சொல்வார்கள் .
ஒவ்வொரு முறையும் இவர் தான் செய்து இருப்பாரோ இவர் தான் செய்து இருப்பாரோ என ரசிகனை யோசிக்க வைத்து இறுதியில் ரசிகனின் பார்வைக்கே பதிலை விட்டுவிடுவார் .
ஒரு கொலையை மட்டுமே வைத்து கொண்டு திரைக்கதை வேகமாக கொண்டு செல்லா விட்டாலும் மூன்று பேர் பார்வையிலும் வெவேறு விதமாக கொண்டு சென்ற புதிய யுக்தி ரசிகனை யோசிக்க விடமால் அதுவாகவே வேகமாக கொண்டு சென்று விட்டது .
இந்த படத்தில் புதிய திரைக்கதை யுக்தியை தவிர்த்து கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் படத்தின் ஓட்ட நேரம் .இந்த படத்தின் மொத்த ஓட்ட நேரம் 88 நிமிடங்கள் அகிரா குரோசோவாவின் மற்ற படங்களை எல்லாம் எடுத்து நீங்கள் பார்த்தல் அதன் ஓட்ட நேரம் பெரும்பாலும் 2மணி நேரத்தை தாண்டி தான் இருக்கும் .
ஆனால் இந்த படம் குறுகிய நேர ஓட்டத்தை வைத்து இருப்பார் காரணம் ஒரு கொலையை புலன் விசாரணை செய்வதை நீண்ட நேரம் எடுத்தால் அது ரசிகனின் பொறுமையை சோதித்து விடும் என்பதை குரோசவா சரியாக கணித்து இதன் நேரத்தை சரியான அளவில் வைத்து இருப்பார் .
இந்த படத்தை தழுவி சிவாஜி கணேசன் அவர்களின் அந்த நாள் படமும் ஒரு கொலையை வைத்து கொண்டு மட்டும் செல்லும் .
2.MYSTIC RIVER
கிளின்ட ஈஸ்ட்வுட் இயக்கிய இந்த படமும்
ஒரு கொலையை வைத்து கொண்டு அதை புலன் விசாரணை செய்யும் படமாகும் .இதில் படத்தின் ஆரம்பத்திலே நாயகனின் மகள் கொல்லப்பட்டு விட நாயகன் தன் நண்பர்களுடன் மகளை கொலை செய்தது யார் என தேடுவான் .
இன்னொரு பக்கம் காவல்துறையும் அதன் பாணியில் கொலையை விசாரிக்கும் .
இவ்வாறு இரு வேறு பாணியில் செல்வதால் படம் விறுவிறுப்பாக செல்லும் .அதே நேரம் இதில் கதாபாத்திர வடிவமைப்பு (charactor development ) என்பதும் சிறப்பாக இருக்கும் .
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதன் கிளைமாக்ஸ் .இதன் கிளைமாக்சில் தவறான நபரை கொலை செய்தவர் என்று நாயகன் கணித்து அவரை கொன்று விடுவார் .
இதை போன்ற ஆன்டி கிளைமாக்ஸ் என்பது ஹாலிவுட் படத்திற்கு பொருந்தும் ஆனால் நம் சினிமாவிற்கு பொருந்தாது

3.mumbai police (மலையாளம் )
36 வயதினிலே படம் இயக்கிய ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிய மலையாள படமான மும்பை போலீஸ் படமும் ஒரு கொலையை விசாரணை செய்யும் படமாகும் .
இதில் படத்தின் ஆரம்ப காட்சியிலே நாயகன் பிரிதிவிராஜ் காரில் சென்று கொண்டு இருப்பார் போனில் தன் சக அதிகாரியை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்துவிட்டதாக தன் மேலாதிகாரியிடிம் சொல்லி கொண்டு இருக்கும் போதே விபத்துக்குள்ளாகி தன் நினைவை இழந்து விடுவார் .
இதனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை தொடங்குவர் .எனவே ஏற்கனவே ஒரு பாதியில் விபத்துக்கு முன் எப்பொழுதும் திமிரோடு யாரையும் மதிக்காத ஒரு போலீசாக கொலையை துப்பு துளங்குவது ஒரு பாதியாகவும் .
இன்னொரு பாதி தன் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதற்காகவே கொலையை விசாரிக்கும் பாணி .இப்படி இரண்டு விதமாக கொலையை கண்டு பிடிக்கும் பாணியில் இயக்குனர் இறுதியில் தான் கொலையாளியை கண்டுபிடிப்பது போல் வைத்து இருப்பார் .இதனால் இரண்டு விதமாக சென்றாலும் யார் கொலையாளி என்று தெரியமால் ரசிகர்கள் படத்தின் இறுதி வரை யோசிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம் .
மேலே சொன்ன மூன்று படங்களை தவிர்த்து இன்னும் பல படங்கள் இருக்கலாம் .அதே நேரத்தில் மெமண்டோ ,கஜினி இந்த படமும் ஒரு கொலையை விசாரணை செய்யும் படம் என்றாலும் இதன் முக்கிய நோக்கம் பழி வாங்குவது என்பதால் பழி வாங்கும் படங்களின் கேட்டகிரியில் சேர்ந்து விடும் .
அதே போல் The fugative ,திரிஷ்யம் போன்ற படங்களும் ஒரு கொலை சேர்ந்த படங்கள் என்றாலும் இதுவும் ஒரு கொலை விசாரணையில் சேராது அது கொலை செய்து விட்டு தப்பித்தல் வகையில் சேரும் .கொலை பழியில் இருந்து தப்பித்தல் வகையில் சேரும் .
சரி அடுத்த பதிவில் தொடர் கொலை அதாவது சீரியல் கில்லிங் அந்த வகை படங்களுக்கான திரைக்கதை மற்றும் அதை சார்ந்த படங்களையும் பற்றி பார்ப்போம்