திரைக்கதையும் பல வழி முறைகளும்
இது முழுதும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கான கட்டுரை என்பதால் கதை என்றால் என்ன திரைக்கதை என்றால் என்ன பிரேம் என்றால் என்ன ஷாட் என்றால் என்ன என்று சினிமா வரலாறுகளை ஆரம்பத்தில் இருந்து சொல்வதை விட நேரடியாக நான் திரைக்கதை விசயத்திற்கு வருகிறேன் .
இந்த கட்டுரை முழுதும் நான் பார்த்த படங்களை வைத்தும் ஏதோ எனக்கு இருக்கும் அறிவுக்கும் வைத்து தான் எழுதி உள்ளேன் .இது எந்த புத்தகத்தையும் தழுவி எழுத வில்லை .மேலும் இந்த கட்டுரையில் வரும் உதாரண படங்கள் அனைத்தும் அதிகமாக ஹாலிவுட் மற்றும் மற்ற மொழி படங்கள் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும் .தமிழ் படங்கள் அந்த அந்த இடத்திற்கு ஏற்ப வரும் .அது போல் சில வார்த்தைகள் தமிழ் படுத்த முயற்சித்த போது வேறு ஒரு அர்த்தமாக மாறி வருவதால் சில வார்த்தைகள் ஆங்கிலத்திலே வரும் .அதையும் புரிந்து கொள்ளவும் .
அது போல இதில் திரைக்கதை எழுதுவது எப்படி என்று முழுதுமாக எல்லாம் நான் சொல்ல போவதில்லை .திரைக்கதை வகைகள் மற்றும் சிறிய விளக்கங்கள் சில உதாரணங்கள் வைத்து மட்டும் தான் சொல்லி உள்ளேன் .
மேலும் முன்பே சொன்னது போல் இது முழுவதும் சினிமா எழுத்தாளர்களுக்கான கட்டுரை என்பதால் சினிமாவிற்கு திரைக்கதை எழுதுபவர்கள் இல்லை எழுத நினைப்பவர்கள் மட்டும் படித்து கொண்டு புரிந்து கொள்ளவும் .
மற்றபடி எங்க ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே போதும் கதையாவது திரைக்கதையாவது என கூறும் ரசிகர்கள் இதை படிப்பதை விட்டு உங்கள் ஹீரோக்களுக்கு புகழ் பாடும் பல கட்டுரைகள் உள்ளன அதை போயி படித்து கொள்ளவும் .
திரைக்கதையின் வகைகள் .
கதைக்கும் படத்திற்கும் தானே வகைகள் உண்டு இது ஆக்சன் படம் இது காமெடி படம் என்று அது என்ன திரைக்கதை வகைகள் என்று கேட்கிறீர்களா .சரி என்னுடைய அறிவுக்கு ஏற்றவாரு அதை வகைப்படுத்தி உள்ளேன் அதை இங்கு வகைப்படுத்தி விட்டு பின் விரிவாக பார்ப்போம் .
1.வேக திரைக்கதை
2.மெதுவான திரைக்கதை
3.சுவாரசிய திரைக்கதை
4.நகைச்சுவை திரைக்கதை .
5.சோக திரைக்கதை
6. சூப்பர் ஸ்டார் திரைக்கதை
7.பீல் குட் மூவிஸ் திரைக்கதை
சரி இப்படி ஸ்குள் பையன் போல வகை பிரித்து எழுதி இருக்கிறான் என எண்ணலாம் .ஆனால் இதை தவிர்த்து விட்டு பார்த்தல் எந்த ஒரு திரைக்கதையையும் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம் அது ஒன்று வேகமாக செல்லும் திரைக்கதை இன்னொன்று மெதுவாக செல்லும் திரைக்கதை .
இதில் நான் முதலில் எடுத்து கொள்வது எல்லாருக்கும் பிடித்தமான வேகமான திரைக்கதையை எடுத்து கொள்கிறேன் .
வேகமான திரைக்கதை .
வரலாறு சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு வரலாறு சொல்கிறேன் என யாரும் கோபிக்க வேண்டும் .சரி கதைகளை திரைக்கதையாக நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது நாடாக மேடையில் தான் .
நம்மூரில் பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் நாடங்கங்கள் போடுவார்கள் . மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் மறுநாள் காலை 6 மணிக்கு தான் முடியும் .இந்த முறையை ஏன் அவர்கள் கொண்டு வந்தார்கள் என்றால் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் இரவு சாமிக்காக அந்த விசேஷ நாளில் விடிய விடிய முழிக்க வேண்டும் என்றும் அதிகாலை 6 மணிக்கு சாமியை ஊர்வலம் கொண்டு செல்வதாற்காகவும் இப்படி விடிய விடிய நாடகம் நடத்துவார்கள் .
அந்த நாடங்களை எல்லாம் பார்த்தால் உடனே கதை ஆரம்பிக்கவே ஆரம்பிக்காது ஒரு 7 மணிக்கு நாடக குரூப் வரும் ஒரு 10 மணி வரையாவது ஜோக்கர் எனும் கதாபாத்திரம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி சிரிக்க வைத்து கொண்டே இருக்கும் அதன் பின் நாடகம் ஆரம்பித்தால் காட்சிகளில் வசனங்கள் குறைவாகவும் பாடல் நிறையாகவும் இருக்கும் ஏன் என்றால் பாடல்கள் வேகத்தை எளிதில் மட்டுப்படுத்தி விடும் (இதனால் தான் உலக சினிமாக்கள் பல பாடல்கள் இல்லமால் இயங்குகின்றன )
சரி கதை சொல்லல் என்பது நாடகத்தை தாண்டி கேமிரா கண்டுபிடிக்கப்பட்ட போது சினிமாவக மாறிய போது ஆரம்ப கால மவுன படங்களை தவிர்த்து விட்டு ஓரளவு எல்லாம் உள்ள படங்களாக மாறிய போது நாடகங்கள் போலவே சினிமாவையும் வெறும் பாடல்கள் நிறைந்த படங்களாகவே எடுத்தனர் .
இது ஹாலிவுட் ஆகட்டும் இல்லை நம்மூர் சினிமாவாகட்டும் ஆரம்பத்தில் இப்படி தான் சினிமா இருந்தது .பாடல்களால் மட்டுமே சினிமா இயங்கியது .அதன் திரைக்கதை மெதுவாக தான் நகரும் .
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மெதுவாக செல்லும் திரைக்கதைகளை ரசிகர்கள் ஒதுக்கியதால் வேகமான திரைக்கதையை கொண்டு வந்தார்கள் .படம் பார்க்கும் ரசிகன் கதை வேகமாக செல்வதாக உணர வேண்டும் 2.30 மணி நேரம் போனது தெரியமால் இருக்க வேண்டும் இந்த ஒரே நோக்கத்திற்காக தான் தற்போது பல இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் .
ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் படம் எப்படி இருக்கு என்று ஒரு 6 வது படிக்கும் சிறுவனிடம் கேட்டால் கூட அவன் ரெண்டே வார்த்தையில் படத்தை அருமையாக விமர்சனம் செய்து விடுவான் .
நன்றாக இருக்கிறது என்றால் படம் செம ஸ்பீடா போகுது என்பான் இல்லை அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் ஸ்லோவாக போகுது என்பான் .
அதற்கு என்று மெதுவாக நகருபவை மோசமான படங்கள் அல்ல இன்னும் சொல்ல போனால் மெதுவாக நகரும் திரைக்கதை கொண்ட படங்கள் தான் சிறந்த படங்களாக நிறைய உள்ளன.
ஆனால் பெரும்பான்மையானோர் விரும்புவது எல்லாவிதமான ஆடியன்ஸையும் ஈர்ப்பது என்று பார்த்தல் அது வேகமான திரைக்கதை தான் .
சரி வேகமான திரைக்கதைகளை எதை எல்லாம் கொண்டு ஆரம்பிக்கலாம் எந்த கான்செப்ட் வேகமான திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும் என இன்றைய பதிவில் பார்த்து விட்டு அடுத்த பதிவில் விரிவாக பாப்போம் .
வேகமான திரைக்கதைக்கான கான்செப்ட்கள்
1.குற்றமும் குற்றம் சார்ந்தவைகளும்
2.மர்மமங்கள் (சஸ்பேன்ஸ் மற்றும் மிஸ்டரி )
3.cat & mouse chase
4.புதையலை தேடு (tresure hunting )
5.பழி வாங்குதல்
6.பணம் மற்றும் பதவியை அடைய எடுக்கும் முயற்ச்சி
இன்னும் பல கான்செப்ட்கள் திரைக்கதை வேகப்படுத்த உள்ளன .ஆனால் அவற்றை எல்லாம் இவற்றுற்குள் அடக்கி விடலாம் இதை தாண்டி சில விதி விளக்குகள் இருக்கலாம் .
சரி அடுத்த பதிவில் இருந்து உதாரணங்களோடு விளக்கமாக பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக