செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

woody allen காதலின் முன்னோடி 


இன்று 83 வயதான வூடி ஆலன் இயக்கிய cafe society படம் பார்த்த பின் எப்படி இவர் இந்த வயதிலும் காதலின் ஆழத்தை இவளவு நேர்த்தியாக காட்டுகிறார் என தோன்றியது .




நான் முதலில் அந்த திரைப்படத்தை பற்றி மட்டும் தான் எழுத வேண்டும் என நினைத்தேன் .ஆனால் நம்மில் பலர் ஏன் சினிமாவில் இருக்கும் நண்பர்கள் சினிமாவிற்கு செல்ல துடிப்பவர்கள் உலக சினிமா ரசிகர்கள் இவர்கள் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கும் இயக்குனர்களில் முதன்மையாக ஸ்பீல்பெர்க் மற்றும் நோலன் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து வேறு இயக்குனர்கள் சொல்ல சொன்னால் ஓரளவு ஸ்கார்சசி, குப்பிரிக் போன்றாரை சொல்லலாம் சரி கிளாசிக் டைரக்டர் யாரவது சொல்லுங்கள் என்றால் உடனே ஹிச்காக் மற்றும் குரசோவாவை சொல்வார்கள் 


  வூடி ஆலன் என்றால் யார் என்றோ அவரின் படங்கள் பற்றியோ தெரிந்து வைத்து இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .


ஆனால் வூடி அலனை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தலைப்பில் சொன்னது போல் அவர் காதலின் முன்னோடி காதல் படங்களை தொடங்கி வைத்தது அவர் தான் .
வூடி அலனின் தாக்கம் தான் மணி ரத்ணம் ,கவுதம் மேனன் ,மற்றும் செல்வ ராகவன் எல்லாம் .


எப்படி ஒரு திரில்லர் படம் எடுக்க போவதற்கு முன் ஹிச்காக் படங்கள் பாருங்கள் என சொல்வார்களோ அதே போல் ஒரு காதல் படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு வூடி அலனின் படங்கள் கண்டிப்பாக பார்த்து இருக்க வேண்டும் .சரி வூடி ஆலன் அப்படி என்ன செய்தார் அவரின் படங்களில் வரும் காதல் எப்படி திரைத்துறையில் மாற்றத்தை கொண்டு வந்தது என பார்க்கலாம் .அதற்கு முன் இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவின் காதல் எப்படி கொண்டு செல்லப்பட்டது படுகிறது என பார்ப்போம் 


சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஹாலிவுட் ஆக இருந்தாலும் சரி கோலிவுட் ஆக இருந்தாலும் சரி இல்லை பாலிவுட் ஆக இருந்தாலும் சரி எந்த விதமான மொழியாக இருந்தாலும் சரி அந்த படங்களில் எல்லாம் காதல் காட்சிகளை காட்டும் போது ஒன்று பட்டும் படமால் காட்டுவார்கள் .இல்லை அதிக எமோஷனலாக காட்டுவார்கள் .அதாவது அன்பே ஆருயிரே கண்ணே கணியமுதே இப்படி கவிதையாக காதலித்து விட்டு பிரியும் போது இரண்டு காதலர்களும் லிட்டர் கணக்கில் அழுது கண்ணீர் வடிப்பது போல் காட்டுவார்கள் .


இது தான் வூடி ஆலன் வருகைக்கு முன் இருந்த காதல் .ஆனால் எதார்த்த வாழ்க்கையில் காதல் என்பது அதிக உணர்வு பூர்வமுடையதாக இருந்தாலும் காதலர்கள் அதை எளிதில் வெளிப்படுத்திவிடுவதில்லை மேலும் பிரியும் போது தனிமையில் தான் அழுவார்களே தவிர நேருக்கு நேர் இந்த ஜென்மத்துல நம்மளால சேர் முடியில அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா சேருவோம் .இப்படி எல்லாம் எல்லா காதலர்களும் சொல்லி கொண்டு இருப்பதில்லை .


அதே போல்  இந்திய  சினிமாவில் வரும் காதலில் எப்போதுமே ஆணின் பார்வையில் இருந்தே கொண்டு செல்வது வழக்கம் .பெண் மனதில் இருப்பதையோ இல்லை பெண்ணுக்குரிய நடைமுறை சிக்கல்களையோ யாரும் காட்டுவதில்லை .

எல்லா தமிழ் சினிமாவிலும் வேலை இல்லாத இளைஞன் காதலிப்பதை மட்டுமே வேலையாக வைத்து கொண்டு இறுதியில் அந்த பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்து குடித்து விட்டு பிப் பாடலாகவும் கொலைவெறி பாடலஆக டாஸ்மார்க்கில் உக்காந்த்து பாடி அந்த பெண்ணை எளிதில் கேவலப்படுத்தி விட்டு இவன் நல்லவனாக விடுவான் .


எனக்கு தெரிந்து என்ன தான் நாம் இன்று விக்ரமன் படங்களை கேலி செய்தாலும் விக்ரமன் பட நாயகர்களாவது தன் காதலிக்காக உழைக்கிறார்கள் வேலை தேடுகிறார்கள் முன்னேறுகிறார்கள் .


சரி காதலில் பெண்ணுக்கு உரிய உணர்வுகளை எப்போதுமே காட்டப்படுவதில்லை . எவ்வளவு சிறப்பு மிக்க குணங்களை கொண்டு இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி இல்லை சாதாராண பெண்ணாக இருந்தாலும் சரி அவளுக்கு என்று காதலை பற்றிய பார்வை காமத்தை பற்றிய பார்வை சமுதாயத்தை பற்றிய பார்வை என எல்லாமே மாறுபடும் .




காதலிக்கும் போது பெண் தான் உண்மையிலே அதிக சிக்கல்களை சந்திப்பவள் .அது எந்த காலமாக இருந்தாலும் சரி புறா மூலம் கடிதம் பெற்ற காலமாக சரி இல்லை ஜியோ சிம் மூலம் இலவச கால் அட்டென்ட் பண்ணும் போதும் சரி அதை முதலில் அட்டென்ட் பண்ணுவதற்கே அவர்கள் ஒரு பெரிய போராட்டம் போராட வேண்டும் ஆனால் நம் சினிமாவிலோ பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு காதலர்களிடம்   மாறி மாறி பேசுவது போல் காட்டத்தான் மட்டும் தான் காட்டுகிறார்கள்.


உடனே சிலர் சொல்லாம் அப்படி தானே சில பெண்கள் இருக்கின்றனர் என .அப்படி சொல்லும் நாம் பல ஆண்கள் அப்படி இருப்பதை திரையில் காட்டுவதிலில்லை திரையில் ஆண்களை மிகவும் நல்லவர்களாக காட்டுவது தான் உள்ளது .காதல் தோல்விக்கு முழு காரணமும் பெண்ணையும் பெண்ணின் பெற்றோர்கள் மீது எளிதில் சுமத்தி விட்டு நாயகன் எளிதில் என்னமா இப்படி பண்றிங்களேம்மா என பாடி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்று விடுகிறான் .


இதே தான் எல்லா மொழியிலும் என்ன பாடல் மட்டும் தான் மாறுமே தவிர இடம் குடிக்கும் இடமாக தான் இருக்கும் .


சரி பெற்றோர் எதிர்ப்பை தவிர்த்து விட்டு ஒரு பெண்ணின் மனநிலை இல்லை ஆணின் மனநிலையே எடுத்து கொள்வோம் யாராக இருந்தாலும் சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு விட்டோமோ என தோன்றுவது எதார்த்த வாழ்வில் ஆண் பெண் இருபாலார்க்குமே தோன்றும் ஆனால் அவர்கள் அதை சொல்ல சிரமப்பட நாம் திரையில் காட்டப்பட்டு இருக்கும் காதல் கதைகளும் கதாபாத்திரங்களும் கூட ஒரு காரணமாகும் .

உண்மை காதல் ,காதலில் புனிதம் ,கலாச்சாரம் இப்படி தான் நம் சினிமாக்களில் சொல்லி கொண்டு வருகிறோம் எங்க காதலில் எதற்கு கலாச்சரமும் புனிதமும் வருகிறது காதலில் மன உணர்வுகளுக்கு மட்டும் தான் இடம் அளிக்க வேண்டும் அதை நாம் எந்த படத்திலும் காட்டுவது இல்லை அதை முதன் முதலில் மணி ரத்தினம் மவுன ராகத்தில் காட்டியதால் தான் கொண்டாடப்படுகிறார் .


சரி வூடி ஆலனுக்கு வருவோம்


ஹாலிவுட்டிலும் இது போன்று புனிதம் உண்மை என பேசி கொண்டு இருந்த காலத்தில் தான் வூடி ஆலன் தன் படங்களில் காதலுக்குரிய எதார்த்த முகத்தை திரையில் காட்டினார் . எதார்த்த வாழ்வில் பெண் காதல்  உணர்வுகளை திரையில் காட்டினார் .

உண்மையில் பெண் முரட்டு தனமாகவும் சுதந்திரமாகவும் ஒரு அழகான திமிருடன்  இருப்பது தன் காதலனிடம் மட்டும் தான் அதை தான் வூடி ஆலன் 1977ல் வெளிவந்த annie hall படத்தில் காட்டினார் .




அந்த படத்தில் அப்படியொரு கதாபாத்திரமாக தான் ஆனி இருப்பாள் .அதுவரை வந்த ஹாலிவுட் காதலிகளில் இருந்து அவள் மாறுபட்டும் மேலும் எதார்த்த வாழ்வில் இருக்கும் அவரவர் காதலிகளை பிரதிபலிப்பதாலும் ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி தீர்த்தனர் .


மேலும் அந்த படத்தில் தான் வூடி ஆலன் காதல் ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் என  காட்டி இருப்பார் .இன்று அவ்வாறு காட்டுவது எளிது (இப்பொழுதும் தென்னக சினிமாக்களில் கஷ்டமே )

4த் வால்  பிரேக் எனப்படும் புதிய யுக்தியை அணி ஹாலில் வூடி அலன் புகுத்தி இருப்பார் அதாவது படம் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகனிடிம் நேரடியாக திடீர் திடீர் என்று பேசி விடுவார் .


மேலும் அனி ஹால் காதலர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மற்ற உளவியல் சிக்கல்களை அருமையாக விவரித்த படமாகும் .


இன்றும்  சில உளவியல் கல்லூரிகளில் சைக்கோ ,சைலன்ஸ் அப் தி லெம்பஸ் ,குட் வில் ஹாண்டிங் இந்த படங்களுடன் அதிகமாக திரையிட்டு உளவியல் சிக்கல்களை பற்றி விவாதிக்கும் படமாக annie hall உள்ளது .இந்த படம் சிறந்த படம் ,சிறந்த நடிகை என இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் சிறந்த திரைக்கதை சிறந்த இயக்குனர் என இரண்டு விருதுகளை வூடி ஆலன் பெற்றார் .(30 வருடங்கள் கழித்து அணி ஹாலை பாலாஜி மோகன் காதலில் சொதப்புவது எப்படி என பிரதி எடுத்து இருக்கிறார் )


வூடி ஆலன் அதிகமாக காதல் படங்களை தான் எடுத்தார் .காதலில் இருக்கும் நெருக்கம் பிரிவு ,தோரகம் ,வருத்தம் ,உளவியல் சிக்கல்கள் என எல்லாமே அவர் படங்களில் அருமையாக காட்டப்பட்டு இருக்கும் .

மேலும் முக்கோண காதல் ,அதிக வயது குறைந்த வயது காதல் ,சொல்லா காதல்,சேரா காதல் ,காதலில் பேண்டஸி என காதலில் எல்லா வகைகளையும் அறிமுகம் செய்து வைத்தவர் வூடி ஆலன் தான் .


இன்று செல்வ ராகவன் படத்திலும் கவுதம் மேனன் படத்திலும் வரும் காதல் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறதே என கொண்டாடுகிறோமே அது எல்லாமே வூடி அலன் தாக்கமே .


ஆம் வூடி அலனின் படத்தில் வசனங்கள் எல்லாம் நேருக்கு நேர் கேட்டு விடுவது போல் இருக்கும்  எனக்கு பிடித்து இருக்கிறது உனக்கு பிடித்து இருக்கிறதா என உடனடியாக கேட்டு விடுவார்கள் .பிடிக்கவில்லை என்றாலும் உடனே சொல்லி விடுவார்கள் .

உதாரணத்திற்கு cafe society படத்தையே எடுத்து கொண்டால் அதில் நாயகன் நாயகியிடம் காதலை சொல்லும் போது அவள் எனக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறான் என்பாள் .



நாயகன் ஓகே என்று சாதாரணமாக தான் மீண்டும் இருப்பான் அதே போல் சிறிது நாள் கழித்து அதே நாயகி என் காதலன் என்னை பிரேக் அப் செய்து விட்டான் என சொன்ன அடுத்த வினாடியே நாயகன் கேப்பான் அப்படி என்றால் நாம் இருவரும் காதலிப்போம் என்று .இது தான் எதார்த்தம் எதார்த்தத்தில் உலகில் எந்த மூலையில் இருக்கும் ஆணுக்கும் அந்த சூழ்நிலையில் அப்படி தான் நினைக்க தோணும் ஆனால் நம் படங்களில் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் என்ன சொல்வான் கவலைப்படாதீங்க உங்க காதலை நான் சேர்த்து வைக்கிறேன் என்பான் .


cafe society யில் இன்னொரு இடத்தில் நாயகி மீண்டும் தான் முதல் காதலனோடு  திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்னால் அவனை மறக்க முடியவில்லை என சொல்லும் போது நாயகன் சரி போ என அவளை திட்டமால் அவன் வேலையை பார்க்க அவன் சென்று விடுவான் .

இதுவே நம் சினிமாவாக இருந்தால் ஏன் ஹாலிவுட்டிலே வேற இயக்குனர் இயக்கிய சினிமாவாக இருந்தாலும் கூட அடுத்த வினாடியே அந்த பெண்ணை அசிங்கமாக திட்டும் வசனம் ஒன்று வைக்கப்பட்டு இருக்கும் ஆனால் வூடி ஆலன் அப்படி செய்வதில்லை .


அதையே தான் இங்கு கவுதம் மேனன் பின்பற்றுகிறார் கவுதம் மேனன் நாயகர்களும் காதலி பிரிந்து விடலாம் என்று சொன்னால் அவளை பிடித்து திட்டுவதில்லை  அசிங்க அசிங்கமாக பாடுவதில்லை (மின்னலே தவிர்த்து )

 இதனால் தான் கவுதம் மேனின் காதல் டீசண்ட் காதல் எனவும் நாயகர்கள் டீசண்ட் காதலர்கள் எனவும் போற்றப்படுகிறார்கள் .பெண்கள் இதனால் தான் கவுதம் மேனன் காதல் படங்களை அதிகம் ரசிக்கிறார்கள் .அதே போல் வூடி அலனின் ஹீரோக்கள் அனைவரும் வூடி அலனை பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள் அதே போல் தான் கவுதம் மேனன் நாயகர்களும் அது உலக நாயகன் கமல் ஆகட்டும் இல்லை அல்டிமேட் அஜித் ஆகட்டும் இளைய நாயகர்கள் சிம்பு தனுஷ் ஆகட்டும் எல்லாரும் கவுதம் மேனன்  மேனரிசத்தோடு தான் இருப்பார்கள்

சரி பெண்களை திட்டுவதை தொடங்கி வைத்த செல்வராகவனிடம் வூடி ஆலன் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினார் என்றால் எதார்த்த வசனங்கள் மற்றும் வூடி ஆலன் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களை தான் செல்வா அப்படியே இங்கு கொண்டு வந்துள்ளார் .வூடி ஆலன் படத்தில் வருவது போலெ சிரிக்காத கதாநாயகிகள் திமிர் மற்றும் முரட்டு தன்மை இவை எல்லாமே செல்வ ராகவன் படத்தில் வெளிப்படும் .

முன்பே சொன்னது போல் உடனே பட் என போட்டு உடைக்கும் வசனங்கள் அதாவது ஒரு முக்கோண காதல் கதை என இருக்கும் போது அதை ஜவ்வாக இழுக்கமால் உடனே என்னை பிடிக்குமா இல்லை அவனை பிடிக்குமா என வெளிப்படையாக கேட்டு விட்டு அதன் பின் வரும் பிரச்னைகளை எதிர்கொள்வது .


மேலும் இன்று தனுஷ் என்று ஒரு நடிகர் நம்மிடம் இருக்கிறார் என்றால் அதற்கு வூடி அலன் தான் முன் உதாரணம் என சொல்லாம் .


ஆம் வூடி அலன்  ஆரம்ப கால படங்களில் அவர் தான் நாயகர் . வூடி ஆலன் உருவமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால்  குட்டை  கண்ணாடி அணிந்து இருப்பார் மெலிந்த தேகம் அவர் நாயகன் என முதன் முதலில் சொன்ன போது ஹாலிவுட்டில் எல்லாரும் அவரை  கேலி தான் செய்தார்கள் .கிளின்ட ஈஸ்ட்வுட் போன்ற மச்சோ மேன்களும் ,ராபர்ட் ரெட்போர்ட் போன்ற ஹாண்ட்ஸேம் மேன்களும் ஹீரோக்களாக இருக்கும் இடத்தில் இந்த உருவத்தோடு ஒரு நடிகரா என்றும் இல்லை அல்பசினோ போன்றோ டஸ்டின் ஹாப்மென் போன்று சிறந்த நடிகர்கள் இருக்கும் இடத்தில் இவரா என எல்லாரும் கிண்டல் செய்தனர்








மேலும் டயனா கீட்டோன்( காட்பாதர் படத்தில் நடித்து புகழ் பெற்று இருந்தவர் )

 அந்த கால ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்தவர் அவரோடு இப்படி ஒரு ஜோடியா என ரசிகர்கள் எல்லாம் வருத்தப்பட செய்தனர் ஆனால் பல கேலி பேச்சுக்களையும் கிண்டல்களையும் தன் திரைக்கதையால் மறக்க வைத்து இந்த படத்திற்கு இவர் தான் சரியானவர் என பாராட்ட வைத்தவர் .

யோசித்து பாருங்கள் இதே நிலையை தான் ஆரம்ப காலத்தில் தனுஷ்ம் எதிர்கொண்டார் .அன்று செல்வ ராகவன் தனுசை அறிமுகப்படுத்தும் போது வூடி ஆலநை நினைத்து தான் அதே போலெ தன் இரண்டாம் படத்தில் கண்ணாடியோடு நடிக்க வைத்து இருப்பார் .

(இது போன்ற நிலையை வூடி ஆலன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்பொழுது அதே நிலையை cafe society படத்தில் சந்தித்தார் அதாவது வூடி அலன் படத்தில் நடிகைகள் எப்பொழுதும் சிறந்த நடிகைகளாக இருப்பர் இந்த முறை அவர் நாயகியாக தேர்வு செய்தது ஹாலிவுட்டில் சுத்தமாக நடிக்கவே தெரியாத நடிகை என பெயர் எடுத்து நடிகை கிறிஸ்டின் ஸ்டூவர்ட் இவரை ஏன் வூடி ஆலன் தேர்வு செய்தார் என பல விமர்சகர்களும் கேள்வி எழுப்பினார் .ஆனால் வூடி ஆலன் ஸ்டூவர்ட்க்கு வைக்கப்பட்ட எதிர்மறை குணத்தையே அதாவது எப்பொழுதும் ஒரே மாதிரி வைத்து இருக்கும் முகபாவம் அதையே நேர்மறையாக மாற்றி காட்டினார் )


மேலும் வூடி ஆலன் மணி ரத்னமிடம் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று கேட்டால் நேட்டிவிட்டி அதாவது வூடி ஆலன் மிட் நைட் இன் பாரிஸ் படத்தை தவிர எல்லா படங்களையும் நியுயார்க்கிலே எடுத்து முடித்து இருப்பார் .வேறு நாட்டிற்கு இல்லை வேறு நகரத்திற்கு கூட செல்ல மாட்டார் .இதை தான் நம் மணிரத்தணும் செய்கிறார் .முன்பே சொன்னது போல் உளவியல் சிக்கல்கள் இதுவும் வூடி அலனிடிம் இருந்து வந்தது தான் .


சரி ஏன் வூடி ஆலன் ஸ்பீல்பெர்க் ,நோலன் போன்று  ஹாலிவுட் தவிர்த்து அதிகம் அறியப்படவில்லை என்றால் வூடி ஆலன் படங்கள் மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை அதிகமாக வசனங்கள் கொண்டவை .இதனாலே எவ்வளவு பெரிய உலக சினிமா ரசிகனாக இருந்தாலும் 15 நிமிடத்தில் இன்செப்ஷநோக்கோ இல்லை ட்ரான்ஸஸ்பார்மர்ஸ்க்கு கூட போயி விடுகிறான் .


ஆனால் என்னை பொறுத்தவரையில் இயக்குனராக நினைக்கும் அனைவரும் வூடி ஆலன் படங்கள் குறைந்தது மூன்று படங்களாவது பார்த்து இருக்க வேண்டும் .


வேணாம் நான் எடுக்க போறது மாஸ் மூவி இல்லை விஜய் அஜித் சூர்யா இவர்களை வைத்து தான் எடுக்க போகிறேன் என சொல்பவர்களும் சிவ கார்த்திகேயன் ,ஆர்யா வைத்து காமெடி படம் எடுக்க போகிறேன் என சொன்னாலும் சரி


தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவை பொறுத்தவரையில் நாம்  துளி கூட காதலே இல்லாமால் சேஷங் ரிடெம்ப்டேஷன் போன்ற படத்தை  எடுத்து விட முடியாது (காக்கா முட்டை மட்டும் விதிவிலக்கு )

எனவே யார் படமாக இருந்தாலும் எந்த ஜெனர் ( எல்லாமே இங்கு மாஸ் ஜெனர் தான் ) ஆக இருந்தாலும் சரி  60 வயது ரஜினி கமலை வைத்து எடுத்தாலும் சரி 40 வயது அஜித் ,விஜய் வைத்து எடுத்தாலும் சரி இல்லை 20 வயது கவுதம் கார்த்தி ,அதர்வாவை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் சரி

காதல் காட்சிகள் உங்கள் படத்தில்  வைத்தே ஆக வேண்டும் அப்படி வைக்கும் போது உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் சரி இல்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக வூடி ஆலன் படம் பாருங்கள் விண்ணை தாண்டி வருவாயா அலைபாயுதே காதல் சொல்லும் இடம் வித்தியசமாக பட்டது பிடித்து இருந்தது அது போல் ஒரு காட்சி வைக்க வேணும் என்றால் வூடி அலன் படங்கள் பாருங்கள் .


காதல் பிரேக் அப் பண்ண ஒரு வித்தியாசமான காட்சி வேண்டும் என்றாலும் வூடி அலன படங்கள் பாருங்கள் .இல்லை எனக்கு நாயகி கதாபாத்திரம் மவுன ராகம் ரேவதி போன்றோ இல்லை மயக்கம் என்ன ரிச்சா போன்றோ நல்ல வலுவான கதாபாத்திரமாக அமைக்க வேண்டுமா அதற்கும் வூடி ஆலன் படங்கள் பாருங்கள் .

கொஞ்சம் பொறுமையோடு சகித்து கொண்டு வூடி ஆலன் படங்களில் இருந்து காதலை கற்று கொள்ளுங்கள் அப்பொழுது தான் உங்கள் படம் மணி ரத்தினம் ,கவுதம் மேனன் ,செல்வ ராகவன் போன்றோர் படங்கள் போல் காதல் நன்றாக இருக்கும் .

இல்லை எனக்கு  சந்தானமோ சூரியோ சதீசோ போதும் அவர்களை நாயகர்களோடு இணைத்து விட்டு அவர்களை கோமாளியாகவோ   நாயகனை நல்லவனாக காட்டினால் போதும் அவன் வேலை இல்லாதவனாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி சிவப்பாக இருந்தாலும் சரி குட்டையாக இருந்தாலும் சரி கண்ணாடியை கழட்டினாள் முகம் பார்க்க சகிக்கத்தவனாக இருந்தாலும் சரி அவனை தான் நாயகி காதலிக்க வேண்டும் என எளிதில் திரைக்கதை எழுதுபவர்களுக்கு வூடி ஆலன் தேவை இல்லை .ஒரு அழகான நாயகி ,சூரி கால்ஷீட் ,இமான் இல்லை சந்தோஷ் நாரயணன் ,அனிருத் இடம் இருந்து அருமையாக ஒரு 5 பாடல்கள் பழைய திலீப் படங்களில் இருந்து சில நகைச்சுவை காட்சிகள் இதே போதுமானது மிகவும் எளிதானது அருமையாய் ஓட கூடியது


முடிவாக காதலர் தினமான இன்றைய நாளில் நம் தமிழ் நாட்டில் கலாச்சாரம் பண்பாடு சாதி மதம் என்று காதல் என்பதையே ஒரு பேண்டஸி பொருளாக மாற்றி விட்டார்கள் .

இன்றைய காலகட்டத்தில் காதல் தோல்வியோடு வாழ்பவனை  விட காதல் என்பதையே தெரியமால் காதலே இல்லமால் வாழ்பவர்கள் தான் அதிகம் எனவே சினிமா எடுக்க போகும் நண்பர்கள் 80 சதவீதம் பேருக்கு சொந்த வாழ்வில் காதல் இருக்க போவதில்லை அப்படியே இருந்தாலும் அது ருசியான ஒன்றாக இருந்து இருக்க போவதில்லை எனவே வூடி ஆலனிடம் இருந்து காதலை கற்று கொண்டு அதை நம் சினிமாவிலோ திரைக்கதையிலோ புகுத்தி விட்டு இன்று பல இயக்குனர்கள் சொல்வது போல் இது என் ரியல் லைப் லவ் இன்ஸ்பிரசன் என்று பொய் சொல்லி கொள்ளுங்கள் ஒன்னும் பிரச்னை இல்லை .


ஆதலால் வூடி ஆலன் படங்கள் மூலம் காதலை கற்று கொள்ளுங்கள் அழகான காதல் படமாக எடுங்கள்


சனி, 11 பிப்ரவரி, 2017

it's a wonderful life(1946) ( ஹாலிவுட் ) வாழ்வை வெறுக்காதீர்கள் 






மனிதனாக பிறந்த எல்லாரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏதோ ஒரு தோல்வியோ ஏமாற்றோமோ அவனை தற்கொலைக்கு தூண்டுவது உண்டு எல்லாரும் தற்கொலை முயற்சி செய்யாவிட்டாலும் அந்த எண்ணத்தை மனதிலாவது நினைத்து பார்த்து இருப்பார்கள் .

என்னடா வாழ்க்கை இது இப்படி தோற்கிறமே நமக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது நம் பிறந்து என்ன பயன் இருந்து என்ன பயன் வாழ்ந்து என்ன பயன் நம் இருப்பதால் யாருக்கு என்ன லாபம் நாம இல்லாமலே போயிடுவோம் என்று ஒரு எதிர்மறை எண்ணம் நம்மில் பல பேருக்கு தோன்றுவது உன்டு அப்படி தோன்றாதவார்கள் அதிர்ஷ்டசாலிகள் .


சரி அப்படி பட்ட எண்ணம்  உங்களில் யாருக்குமெனில் இருந்தால் இல்லை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இப்படி எண்ணம் வைத்து இருந்தால் உடனே இந்த படத்தை காட்டுங்கள் .

சரி இட்ஸ் வொண்டர்புல் லைப்பின் கதையை பற்றி பார்ப்போம்

கதை 


1945ல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் உலகெமெ கிறிஸ்துமஸை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராக உள்ள நிலையில் அமெரிக்காவின் பெட் போர்ட் பால்ஸ் எனும் சிறிய நகரத்தில் உள்ள மக்கள் மட்டும் எல்லாரும் ஜார்ஜை காப்பாற்றுங்கள் ஜார்ஜை காப்பாற்றுங்கள் அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் அவன் எதுவும் செய்து கொள்ளாமல் அவனை காப்பாற்றுங்கள் என்று வருத்தத்தோடு கடவுளிடிம் பிரார்த்தனை செய்ய 

கடவுளும் ஜார்ஜை காப்பாற்ற  கிளாரன்ஸ் எனும் தேவ தூதனை அழைக்கிறார் .கிளாரன்ஸ் ஜார்ஜை காப்பற்றினால் தேவதை போல் இறக்கைகள் கிடைக்கும் என்பதால் உடனே செல்ல முற்பட அவரை தடுத்து கடவுள் கிளாரன்ஸ்க்கு ஜார்ஜ் பெயிலியின் வாழ்க்கையை விவரிக்க அதன் மூலம் நமக்கு ஜார்ஜின் வாழ்க்கை காட்சி படுத்த படுகிறது .

12 வயதில் சிறுவனாக நாயகன் ஜார்ஜ் பெயிலி இருக்கும் போது நண்பர்களோடும் தன் தம்பி ஹாரி பெயிலியோடும் பனி சறுக்கில் விளையாடும் போது எதிர்பாராவிதமாக பனி உடைந்து அதில் தம்பி ஹாரி விழுந்து உயிருக்கு போராட  ஜார்ஜ் அந்த பனிக்குளத்தில் குதித்து தன் தம்பியை காப்பாற்றுகிறான் .ஆனால் நீண்ட நேரம் பனிக்குளத்தில் இருந்ததால் ஜார்ஜின் ஒரு பக்க காது முழுதுமாக பழுது அடைந்து விட ஜார்ஜால் ஒரு காதால் மட்டும் கேட்கும் நிலை ஏற்படுகிறது .


அதன் பின் சிறுவன் ஜார்ஜ் பெயிலி பகுதி நேர ஊழியனாக ஒரு மருந்து கடையில் வேலை பார்க்கிறான் .ஒரு நாள் அந்த கடையின் முதலாளியின் மகன் போரில் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டு அவர் மனமுடைந்து இருக்கிறார் இந்த நிலையில் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் ஒரு மருந்து அவசரமாக கொண்டு வர சொல்கிறார் வருத்தத்தில் இருந்த அவர் மருந்திற்கு பதிலாக அவர் வைத்து இருந்த விஷத்தை மாற்றி பேக் பண்ண அதை ஜார்ஜ் பார்த்து சொல்ல அப்பொழுது அவர் அதை கேட்கும் நிலையில் இல்லை .

ஆனால் ஜார்ஜ் அந்த மருந்தை வீட்டிற்கு கொடுக்க செல்லமாலே அந்த மருந்தை வைத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல்  தெருவில்  சுற்றி விட்டு வர அவனின் முதலாளி ஏன் இன்னும் மருந்தை கொடுக்க வில்லை என்று அவனை அடிக்க அப்போது ஜார்ஜ் அழுது கொண்டே உண்மையை சொல்ல தன்னையும் மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றியது எண்ணி சந்தோஷமடைகிறார் .


பின் இருபது வருடங்களுக்கு பின் இளைஞன் ஆன ஜார்ஜ் பெயிலி கல்லூரி மேற்படிப்புக்கு செல்ல ஆயுத்தமாகின்றான் .இந்த நிலையில் வெளியூர் படிக்க செல்லும் முன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறான் அங்கு தன் சிறு வயது தோழியான மேரியை சந்திக்கிறான் அவள் மீது காதல் கொள்கின்றான் .

இந்நிலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன் ஜார்ஜ்ஜின் தந்தை  எதிர்பாராத முறையில் இறந்து விட வேறு வழி இல்லாமல் ஜார்ஜ் தன் தந்தை பார்த்த வியாபாரத்தை எடுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .பின் ஜார்ஜ்க்கு பதில் ஜார்ஜின் தம்பி கல்லூரி மேற்படிப்பு செல்கிறான் .

ஜார்ஜ் உள்ளுரிலே தந்தை கம்பெனியை பார்த்து கொள்ள அந்த கம்பெனிக்கு எப்போதும் அந்த ஊரிலே இருக்கும் பெரிய செல்வந்தரான பாட்டர் என்பவர் எப்போதுமே ஜார்ஜிற்கு வியாபாரத்தில் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறார் .

பின் கல்லூரி படிப்பை தம்பி முடித்து வந்த உடன் சிறிது காலம் தம்பியிடம் வியாபாரத்தை கொடுத்து விட்டு சிறிது காலம் நாமும் மேற்படிப்பு படிக்கலாம் என ஜார்ஜ் நினைக்க படிப்பை முடித்து விட்டு வரும் ஜார்ஜின் தம்பி திருமணம் செய்து கொண்டு வருகிறான் .மேலும் அவன் எனக்கு சொந்த தொழில் பார்க்க விருப்பம் இல்லை மனைவியோடு நகரத்திலே இருக்க போகிறேன் என சொல்ல ஜார்ஜெ மீண்டும் வியாபாரத்தை பார்க்கும் நிலை ஏற்படுகிறது .


இதற்கு இடையே ஜார்ஜ் தன் காதலி மேரியை திருமணம் செய்து கொள்கிறான் .திருமணம் செய்த பின் ஜார்ஜ் அவனுக்கு என்று வைத்து இருந்த பணத்தை கொண்டு ஒரு சிறிய வீட்டிற்கு மேரியோடு வசிக்க நினைத்த ஜார்ஜ்ஜிற்கு பாட்டரின் தூண்டுதலால் ஜார்ஜ் தொழிலார்கள் அனைவரும் ஊதிய உயர்வு கேட்க ஜார்ஜ் தான் தனியாக குடி போகவும் புது வீடு வாங்கவும் வைத்து இருந்த பணத்தை ஊழியர்களுக்கு தந்து விட்டு மேரியுடன் ஒரு பழைய வீட்டிற்கு செல்கிறான் .மேரியோடு அமைதியான எளிய  வாழ்வை  வாழ்ந்து வருகிறான் .


இருப்பினும் பாட்டர் எப்பொழுதும் ஜார்ஜ்ஜிற்கு தொல்லை தந்து கொண்டே இருக்கிறார் .அவர் ஜார்ஜின் கம்பெனியை தன்னுடன் இணைத்து விட்டு ஜார்ஜ்ம்  உதவியாளனாக சேர சொல்கிறார் ஆனால் ஜார்ஜ் தன் அப்பாவின் கம்பெனியின் பெயர் என்றும் போய் விடக்கூடாது என மறுக்கிறான்




இந்நிலையில் உலக போர் வர அதற்கு அமெரிக்கா சார்பில் நிறைய ஆண்கள் போருக்கு செல்ல ஜார்ஜ்ற்கும் போரில் சென்று நாட்டிற்கு சேவை செய்தார் போலவும் மேலும் அரசு வருமானம் மூலம் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் ராணுவம் போக நினைக்கிறான்

ஆனால் ஜார்ஜின்  இடது செவி திறன் கேட்கும் குறைபாடு உள்ளதால் உடல் தகுதி அடிப்படையில் ஜார்ஜால் ராணுவத்தில் சேர இயலாமல் போகிறது . மீண்டும்  ஜார்ஜிற்கு ஒரு ஏமாற்றம் வருகிறது .அதே நேரம் ஜார்ஜின் தம்பி ராணுவத்தில் சேர்ந்து 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீர்ரகள் உயிரை காப்பாற்றியதால் அவனுக்கு அரசு பதக்கம் வழங்குகிறது  மேலும் எல்லாரும் அவனை  ஒரு பெரிய ஹீரோவாக பார்க்கின்றனர் .


இந்நிலையில் ஜார்ஜிற்கு வியாபரம் ஓரளவு லாபம் தர அதன் மூலம் வங்கியில் வாங்கி இருக்கும் கடன்களை அடைக்க நினைக்கிறான் .ஆனால் எதிர்பாராத விதமாக வங்கியில் ஜார்ஜின் மாமா பணத்தை இழந்து விட விடிந்தால் கிறிஸ்துமஸ் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்திற்க்காக சிறை செல்ல போவதை நினைத்து ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து போகிறான் .


இதனால் சக ஊழியர்கள் மனைவி குழந்தை என எல்லாரையும் திட்டி விட்டு  மிகுந்த மன வருத்தத்தோடு வெளியே செல்லும் ஜார்ஜ் வாழ்க்கையில் தோல்விகளும் ஏமாற்றமும் இருக்கிறதே  நம் வாழ்ந்து என்ன பயன் என ஆற்றில் குதித்து தற்கொலை பண்ண நினைக்கும் போது விண்ணில் இருக்கும் சிறகு இல்லாத தேவ தூதன் கிளாரன்ஸ் மனித உருவில்  குதிக்க ஜார்ஜ்  அவரை காப்பற்ற தான் தற்கொலை முயற்சி எண்ணத்தை மறந்து விடுகிறான் .

பின்னர் அவரிடிம் உன்னால் தான் நான் தற்கொலை பண்ண முடியமால் போயி விட்டது என ஜார்ஜ் சொல்ல கிளார்ன்ஸ்ம் ஒரு வயது முதிர்ந்து முதியவர் போல தற்கொலை வேண்டாம் தவறு அப்படி இப்படி என அறிவுரை சொல்லியும் ஜார்ஜ் எதையும் கேட்கமால் நான் பிறந்து என்ன பயன் ஒன்றும் இல்லை எதையும் சாதிக்கவில்லை  இதற்கு நான் பிறக்கமாலே இருந்து இருக்கலாம் என ஜார்ஜ் சொல்ல

அதையே கிளாரன்ஸ் பிடித்து கொண்டு ஜார்ஜ் இல்லாத உலகத்தை ஜார்ஜ்ஜிற்கு காட்டுகிறார் .ஜார்ஜ் இல்லாத உலகம் எப்படி பட்டது ஜார்ஜ் திருந்தினானா தற்கொலை எண்ணத்தை விட்டானா என்பதை எல்லாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் .


சரி இந்த படத்தை பற்றி

இட்ஸ் ஏ வொண்டர்புல் லைப் படத்தை  பற்றி பார்க்கும் போது இது ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் .இதில் சிட்டிசன் கென் போன்று தொழில் நுட்பத்திற்காக  பார்க்க வேண்டிய படம் இல்லை .

இதன் திரைக்கதைக்காக பார்க்க வேண்டிய படம் இதன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வரும் ஒரு காட்சிகளும் தேவை இல்லாத காட்சிகளோ தேவை இல்லாத கதாபாத்திரங்களோ இதில் இல்லை .


இப்படத்தை முதன் முதலில் பார்க்கும் எவருக்கும் முதல் ஒரு அரை மணி நேரம் பார்க்கும் போது ஏதோ சாதாராண படம் போலவும் மெதுவாக செல்வது போலவும் தோன்றி படத்தை பாதியில் நிறுத்தலாம் .ஆனால் முழுதாக பார்க்கும் போது தான் ஒவ்வொரு காட்சியும் எதற்காக வைத்து இருக்கிறார் படத்தின் ஆரம்ப காட்சிகளை இறுதியில் கிளைமாக்சிற்கு எப்படி பயன்படுத்தி உள்ளார் என திரைக்கதை எழுத நினைக்கும் எவரும் இதை வைத்து கற்று கொள்ளலாம் .மேலும் சஸ்பென்ஸ் இல்லமால் ஒரு படத்தை எப்படி சுவாரசியமாக கொண்டு செல்வது என்பதையும் இதில் இருந்து கற்று கொள்ளலாம் .


இப்படத்தை இயக்கிவர் பிராங்க் கேப்ரா இந்த படம் பார்த்த பின்பு இவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன் .இவரின் படங்கள் அனைத்துமே நேர்மறை எண்ணங்களை  விதைப்பவையாக இருக்கும் .இவர் படங்களின் சாயல்கள் ஆரம்ப கால எம் ஜி ஆர் படங்களில் காணலாம் மேலும் இவரை முழுமையாக பின்பற்றி தான் விக்ரமன் அவர்களின் படங்கள் எல்லாம் இருக்கும் .


சரி இப்படத்தை தனியாக எடுத்து ஒரு  பாடமாக கூட முழுவதுமாக ஆராய்ச்சி செய்யலாம் அந்த அளவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போல உள்ள படம் இது .நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது அல்ல நம்மோடு பலரையும் சார்ந்து உள்ளது இதை நான் இப்படி பிளாக்கில் சொல்வதை விட இப்படத்தை முழுமையாக பார்க்கும் போது நமக்கே சரி நாம் ஏதோ ஒரு விதத்தில் யாருக்கோ பயன்பட்டு இருக்கிறோம் என உணர்த்தும்



 எனவே  இப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .பார்த்ததோடு மட்டும் அல்லமால் மற்றவர்களையும் பார்க்க சொல்லுங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதன் கதையை மட்டுமாவது சொல்லுங்கள் .


ஏன் என்றால் நம்மில் பலரும் நாம் பிறந்து இருக்கவே வேண்டாம் நம்மால் யாருக்கு என்ன லாபம் என நினைக்கிறோம் ஆனால் நம் எங்காவது யாருக்காவது செய்த சிறிய உதவி கூட மிக பெரிய பலனை அவருக்கு தந்து இருக்க கூடும் .அதே போல் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் இந்த படத்தை விட வேறு எதுவும் சிறப்பாக சொல்லிவிட முடியாது


முடிவாக நான் ஏற்கனவே little miss sunshine படத்தை பற்றி சொல்லும் போது நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் இரண்டு என சொல்லி இருந்தேன் அதில் ஒன்று little miss sunshine இன்னொன்று its a wonderful life .


இந்த இரண்டு படங்களுமே என்னை ஓரளவு நடமாட வைத்து கொண்டு இருக்கின்றன .நீங்களும் உடனே இந்த படத்தை முழுமையாக பாருங்கள் வாழ்க்கை சிக்கல்கள் இருந்தாலும் அதில் நம் இடத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள்