சனி, 11 பிப்ரவரி, 2017

it's a wonderful life(1946) ( ஹாலிவுட் ) வாழ்வை வெறுக்காதீர்கள் 






மனிதனாக பிறந்த எல்லாரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏதோ ஒரு தோல்வியோ ஏமாற்றோமோ அவனை தற்கொலைக்கு தூண்டுவது உண்டு எல்லாரும் தற்கொலை முயற்சி செய்யாவிட்டாலும் அந்த எண்ணத்தை மனதிலாவது நினைத்து பார்த்து இருப்பார்கள் .

என்னடா வாழ்க்கை இது இப்படி தோற்கிறமே நமக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது நம் பிறந்து என்ன பயன் இருந்து என்ன பயன் வாழ்ந்து என்ன பயன் நம் இருப்பதால் யாருக்கு என்ன லாபம் நாம இல்லாமலே போயிடுவோம் என்று ஒரு எதிர்மறை எண்ணம் நம்மில் பல பேருக்கு தோன்றுவது உன்டு அப்படி தோன்றாதவார்கள் அதிர்ஷ்டசாலிகள் .


சரி அப்படி பட்ட எண்ணம்  உங்களில் யாருக்குமெனில் இருந்தால் இல்லை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இப்படி எண்ணம் வைத்து இருந்தால் உடனே இந்த படத்தை காட்டுங்கள் .

சரி இட்ஸ் வொண்டர்புல் லைப்பின் கதையை பற்றி பார்ப்போம்

கதை 


1945ல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் உலகெமெ கிறிஸ்துமஸை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராக உள்ள நிலையில் அமெரிக்காவின் பெட் போர்ட் பால்ஸ் எனும் சிறிய நகரத்தில் உள்ள மக்கள் மட்டும் எல்லாரும் ஜார்ஜை காப்பாற்றுங்கள் ஜார்ஜை காப்பாற்றுங்கள் அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் அவன் எதுவும் செய்து கொள்ளாமல் அவனை காப்பாற்றுங்கள் என்று வருத்தத்தோடு கடவுளிடிம் பிரார்த்தனை செய்ய 

கடவுளும் ஜார்ஜை காப்பாற்ற  கிளாரன்ஸ் எனும் தேவ தூதனை அழைக்கிறார் .கிளாரன்ஸ் ஜார்ஜை காப்பற்றினால் தேவதை போல் இறக்கைகள் கிடைக்கும் என்பதால் உடனே செல்ல முற்பட அவரை தடுத்து கடவுள் கிளாரன்ஸ்க்கு ஜார்ஜ் பெயிலியின் வாழ்க்கையை விவரிக்க அதன் மூலம் நமக்கு ஜார்ஜின் வாழ்க்கை காட்சி படுத்த படுகிறது .

12 வயதில் சிறுவனாக நாயகன் ஜார்ஜ் பெயிலி இருக்கும் போது நண்பர்களோடும் தன் தம்பி ஹாரி பெயிலியோடும் பனி சறுக்கில் விளையாடும் போது எதிர்பாராவிதமாக பனி உடைந்து அதில் தம்பி ஹாரி விழுந்து உயிருக்கு போராட  ஜார்ஜ் அந்த பனிக்குளத்தில் குதித்து தன் தம்பியை காப்பாற்றுகிறான் .ஆனால் நீண்ட நேரம் பனிக்குளத்தில் இருந்ததால் ஜார்ஜின் ஒரு பக்க காது முழுதுமாக பழுது அடைந்து விட ஜார்ஜால் ஒரு காதால் மட்டும் கேட்கும் நிலை ஏற்படுகிறது .


அதன் பின் சிறுவன் ஜார்ஜ் பெயிலி பகுதி நேர ஊழியனாக ஒரு மருந்து கடையில் வேலை பார்க்கிறான் .ஒரு நாள் அந்த கடையின் முதலாளியின் மகன் போரில் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டு அவர் மனமுடைந்து இருக்கிறார் இந்த நிலையில் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் ஒரு மருந்து அவசரமாக கொண்டு வர சொல்கிறார் வருத்தத்தில் இருந்த அவர் மருந்திற்கு பதிலாக அவர் வைத்து இருந்த விஷத்தை மாற்றி பேக் பண்ண அதை ஜார்ஜ் பார்த்து சொல்ல அப்பொழுது அவர் அதை கேட்கும் நிலையில் இல்லை .

ஆனால் ஜார்ஜ் அந்த மருந்தை வீட்டிற்கு கொடுக்க செல்லமாலே அந்த மருந்தை வைத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல்  தெருவில்  சுற்றி விட்டு வர அவனின் முதலாளி ஏன் இன்னும் மருந்தை கொடுக்க வில்லை என்று அவனை அடிக்க அப்போது ஜார்ஜ் அழுது கொண்டே உண்மையை சொல்ல தன்னையும் மேலும் இரண்டு உயிர்களை காப்பாற்றியது எண்ணி சந்தோஷமடைகிறார் .


பின் இருபது வருடங்களுக்கு பின் இளைஞன் ஆன ஜார்ஜ் பெயிலி கல்லூரி மேற்படிப்புக்கு செல்ல ஆயுத்தமாகின்றான் .இந்த நிலையில் வெளியூர் படிக்க செல்லும் முன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறான் அங்கு தன் சிறு வயது தோழியான மேரியை சந்திக்கிறான் அவள் மீது காதல் கொள்கின்றான் .

இந்நிலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன் ஜார்ஜ்ஜின் தந்தை  எதிர்பாராத முறையில் இறந்து விட வேறு வழி இல்லாமல் ஜார்ஜ் தன் தந்தை பார்த்த வியாபாரத்தை எடுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .பின் ஜார்ஜ்க்கு பதில் ஜார்ஜின் தம்பி கல்லூரி மேற்படிப்பு செல்கிறான் .

ஜார்ஜ் உள்ளுரிலே தந்தை கம்பெனியை பார்த்து கொள்ள அந்த கம்பெனிக்கு எப்போதும் அந்த ஊரிலே இருக்கும் பெரிய செல்வந்தரான பாட்டர் என்பவர் எப்போதுமே ஜார்ஜிற்கு வியாபாரத்தில் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறார் .

பின் கல்லூரி படிப்பை தம்பி முடித்து வந்த உடன் சிறிது காலம் தம்பியிடம் வியாபாரத்தை கொடுத்து விட்டு சிறிது காலம் நாமும் மேற்படிப்பு படிக்கலாம் என ஜார்ஜ் நினைக்க படிப்பை முடித்து விட்டு வரும் ஜார்ஜின் தம்பி திருமணம் செய்து கொண்டு வருகிறான் .மேலும் அவன் எனக்கு சொந்த தொழில் பார்க்க விருப்பம் இல்லை மனைவியோடு நகரத்திலே இருக்க போகிறேன் என சொல்ல ஜார்ஜெ மீண்டும் வியாபாரத்தை பார்க்கும் நிலை ஏற்படுகிறது .


இதற்கு இடையே ஜார்ஜ் தன் காதலி மேரியை திருமணம் செய்து கொள்கிறான் .திருமணம் செய்த பின் ஜார்ஜ் அவனுக்கு என்று வைத்து இருந்த பணத்தை கொண்டு ஒரு சிறிய வீட்டிற்கு மேரியோடு வசிக்க நினைத்த ஜார்ஜ்ஜிற்கு பாட்டரின் தூண்டுதலால் ஜார்ஜ் தொழிலார்கள் அனைவரும் ஊதிய உயர்வு கேட்க ஜார்ஜ் தான் தனியாக குடி போகவும் புது வீடு வாங்கவும் வைத்து இருந்த பணத்தை ஊழியர்களுக்கு தந்து விட்டு மேரியுடன் ஒரு பழைய வீட்டிற்கு செல்கிறான் .மேரியோடு அமைதியான எளிய  வாழ்வை  வாழ்ந்து வருகிறான் .


இருப்பினும் பாட்டர் எப்பொழுதும் ஜார்ஜ்ஜிற்கு தொல்லை தந்து கொண்டே இருக்கிறார் .அவர் ஜார்ஜின் கம்பெனியை தன்னுடன் இணைத்து விட்டு ஜார்ஜ்ம்  உதவியாளனாக சேர சொல்கிறார் ஆனால் ஜார்ஜ் தன் அப்பாவின் கம்பெனியின் பெயர் என்றும் போய் விடக்கூடாது என மறுக்கிறான்




இந்நிலையில் உலக போர் வர அதற்கு அமெரிக்கா சார்பில் நிறைய ஆண்கள் போருக்கு செல்ல ஜார்ஜ்ற்கும் போரில் சென்று நாட்டிற்கு சேவை செய்தார் போலவும் மேலும் அரசு வருமானம் மூலம் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் ராணுவம் போக நினைக்கிறான்

ஆனால் ஜார்ஜின்  இடது செவி திறன் கேட்கும் குறைபாடு உள்ளதால் உடல் தகுதி அடிப்படையில் ஜார்ஜால் ராணுவத்தில் சேர இயலாமல் போகிறது . மீண்டும்  ஜார்ஜிற்கு ஒரு ஏமாற்றம் வருகிறது .அதே நேரம் ஜார்ஜின் தம்பி ராணுவத்தில் சேர்ந்து 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீர்ரகள் உயிரை காப்பாற்றியதால் அவனுக்கு அரசு பதக்கம் வழங்குகிறது  மேலும் எல்லாரும் அவனை  ஒரு பெரிய ஹீரோவாக பார்க்கின்றனர் .


இந்நிலையில் ஜார்ஜிற்கு வியாபரம் ஓரளவு லாபம் தர அதன் மூலம் வங்கியில் வாங்கி இருக்கும் கடன்களை அடைக்க நினைக்கிறான் .ஆனால் எதிர்பாராத விதமாக வங்கியில் ஜார்ஜின் மாமா பணத்தை இழந்து விட விடிந்தால் கிறிஸ்துமஸ் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்திற்க்காக சிறை செல்ல போவதை நினைத்து ஜார்ஜ் மிகவும் மனமுடைந்து போகிறான் .


இதனால் சக ஊழியர்கள் மனைவி குழந்தை என எல்லாரையும் திட்டி விட்டு  மிகுந்த மன வருத்தத்தோடு வெளியே செல்லும் ஜார்ஜ் வாழ்க்கையில் தோல்விகளும் ஏமாற்றமும் இருக்கிறதே  நம் வாழ்ந்து என்ன பயன் என ஆற்றில் குதித்து தற்கொலை பண்ண நினைக்கும் போது விண்ணில் இருக்கும் சிறகு இல்லாத தேவ தூதன் கிளாரன்ஸ் மனித உருவில்  குதிக்க ஜார்ஜ்  அவரை காப்பற்ற தான் தற்கொலை முயற்சி எண்ணத்தை மறந்து விடுகிறான் .

பின்னர் அவரிடிம் உன்னால் தான் நான் தற்கொலை பண்ண முடியமால் போயி விட்டது என ஜார்ஜ் சொல்ல கிளார்ன்ஸ்ம் ஒரு வயது முதிர்ந்து முதியவர் போல தற்கொலை வேண்டாம் தவறு அப்படி இப்படி என அறிவுரை சொல்லியும் ஜார்ஜ் எதையும் கேட்கமால் நான் பிறந்து என்ன பயன் ஒன்றும் இல்லை எதையும் சாதிக்கவில்லை  இதற்கு நான் பிறக்கமாலே இருந்து இருக்கலாம் என ஜார்ஜ் சொல்ல

அதையே கிளாரன்ஸ் பிடித்து கொண்டு ஜார்ஜ் இல்லாத உலகத்தை ஜார்ஜ்ஜிற்கு காட்டுகிறார் .ஜார்ஜ் இல்லாத உலகம் எப்படி பட்டது ஜார்ஜ் திருந்தினானா தற்கொலை எண்ணத்தை விட்டானா என்பதை எல்லாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் .


சரி இந்த படத்தை பற்றி

இட்ஸ் ஏ வொண்டர்புல் லைப் படத்தை  பற்றி பார்க்கும் போது இது ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் .இதில் சிட்டிசன் கென் போன்று தொழில் நுட்பத்திற்காக  பார்க்க வேண்டிய படம் இல்லை .

இதன் திரைக்கதைக்காக பார்க்க வேண்டிய படம் இதன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வரும் ஒரு காட்சிகளும் தேவை இல்லாத காட்சிகளோ தேவை இல்லாத கதாபாத்திரங்களோ இதில் இல்லை .


இப்படத்தை முதன் முதலில் பார்க்கும் எவருக்கும் முதல் ஒரு அரை மணி நேரம் பார்க்கும் போது ஏதோ சாதாராண படம் போலவும் மெதுவாக செல்வது போலவும் தோன்றி படத்தை பாதியில் நிறுத்தலாம் .ஆனால் முழுதாக பார்க்கும் போது தான் ஒவ்வொரு காட்சியும் எதற்காக வைத்து இருக்கிறார் படத்தின் ஆரம்ப காட்சிகளை இறுதியில் கிளைமாக்சிற்கு எப்படி பயன்படுத்தி உள்ளார் என திரைக்கதை எழுத நினைக்கும் எவரும் இதை வைத்து கற்று கொள்ளலாம் .மேலும் சஸ்பென்ஸ் இல்லமால் ஒரு படத்தை எப்படி சுவாரசியமாக கொண்டு செல்வது என்பதையும் இதில் இருந்து கற்று கொள்ளலாம் .


இப்படத்தை இயக்கிவர் பிராங்க் கேப்ரா இந்த படம் பார்த்த பின்பு இவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன் .இவரின் படங்கள் அனைத்துமே நேர்மறை எண்ணங்களை  விதைப்பவையாக இருக்கும் .இவர் படங்களின் சாயல்கள் ஆரம்ப கால எம் ஜி ஆர் படங்களில் காணலாம் மேலும் இவரை முழுமையாக பின்பற்றி தான் விக்ரமன் அவர்களின் படங்கள் எல்லாம் இருக்கும் .


சரி இப்படத்தை தனியாக எடுத்து ஒரு  பாடமாக கூட முழுவதுமாக ஆராய்ச்சி செய்யலாம் அந்த அளவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போல உள்ள படம் இது .நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது அல்ல நம்மோடு பலரையும் சார்ந்து உள்ளது இதை நான் இப்படி பிளாக்கில் சொல்வதை விட இப்படத்தை முழுமையாக பார்க்கும் போது நமக்கே சரி நாம் ஏதோ ஒரு விதத்தில் யாருக்கோ பயன்பட்டு இருக்கிறோம் என உணர்த்தும்



 எனவே  இப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன் .பார்த்ததோடு மட்டும் அல்லமால் மற்றவர்களையும் பார்க்க சொல்லுங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதன் கதையை மட்டுமாவது சொல்லுங்கள் .


ஏன் என்றால் நம்மில் பலரும் நாம் பிறந்து இருக்கவே வேண்டாம் நம்மால் யாருக்கு என்ன லாபம் என நினைக்கிறோம் ஆனால் நம் எங்காவது யாருக்காவது செய்த சிறிய உதவி கூட மிக பெரிய பலனை அவருக்கு தந்து இருக்க கூடும் .அதே போல் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் இந்த படத்தை விட வேறு எதுவும் சிறப்பாக சொல்லிவிட முடியாது


முடிவாக நான் ஏற்கனவே little miss sunshine படத்தை பற்றி சொல்லும் போது நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் இரண்டு என சொல்லி இருந்தேன் அதில் ஒன்று little miss sunshine இன்னொன்று its a wonderful life .


இந்த இரண்டு படங்களுமே என்னை ஓரளவு நடமாட வைத்து கொண்டு இருக்கின்றன .நீங்களும் உடனே இந்த படத்தை முழுமையாக பாருங்கள் வாழ்க்கை சிக்கல்கள் இருந்தாலும் அதில் நம் இடத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக